• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Unathu Vizhiyil Tholainthen Penne! - 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 18
ரயிலில் ஏறியவள் அவனைப் பார்த்த படியே சீட்டில் அமர்ந்து அவனைப் பார்த்தவள் விழிகளில் கண்ணீர் முத்துகள் அவளின் கன்னத்தோடு உறவாட, அதைப் பார்த்தவன் மனமும் சேர்ந்து கலங்கவே செய்தது..

இருவரும் ஒருவரை விட்டு ஒருவரை காணாமல் இருந்தாலும் வருடங்கள் பல கடந்தாலும் அவளின் விழிகள் சொன்னது அவனின் மீது வைத்திருக்கும் பாசம் மற்றும் உயிர் நேசத்தையும்..!

அவளின் விழிகளைப் பார்த்தவன் அவளின் கண்களில் கண்ணீரைப் பார்த்த மறுநொடியே,

உனது விழிகள் என்னிடம் பேசும்

மொழிகளை மற்றவர் அறிய முடியாது..

அந்த விழிகள் சொல்லும் மொழி

இருமனமும் இணைத்தே இருக்கும்

நமக்கு மட்டுமே தெரியும்..!

மௌனமொழி பேசுபவர்களுக்கு கூட

சந்தேகங்கள் ஏக்கங்கள் இருக்கும்..

எனக்கு இந்த இரண்டுமே

இன்று வரை இருந்ததில்லை..

இன்று உனது விழியில் இருந்து

வழியும் கண்ணீரில் உணர்கிறேன்

உனது மனதில் இருக்கும்

நமது பிரிவின் வலியை! என்று நினைத்தவன் அவளின் விழிகளைப் பார்க்க, அவன் தன்னை கவனிப்பதை உணர்ந்து விழிகளை அவள் தாழ்த்த அதில் சிதறிய கண்ணீர் துளிகள் அவனை உலுக்கியது..

இவை எல்லாம் நொடி பொழுதில் நடந்து முடிய ரயில் கிளம்பியது அவன் மெளனமாக நிற்க அவனிடம் விழியால் விடைபெற்று சென்றாள் அவனின் நினைவுகளை சுமந்த வண்ணம்..

அவளை அனுப்பிவிட்டு வந்தவனுக்கு அவளின் நினைவுகளே மனதில் எழ அவன் காரை கடற்கரையில் நிறுத்தி யோசிக்க அது அவள் எதார்த்தமாக சொன்ன வார்த்தை என்பது அவனின் அறிவுக்கு எட்டினாலும் கூட மனம் அந்த கருத்தை ஏற்க மறுத்தது..

சிறிது நேரம் கடற்கரையில் தனியாக நின்றவன் மனம் ஏதோ போல இருக்க கடல் காற்றை சுவாசித்தவன் மனம் சிறிது லேசாக மாறி காற்றில் பறக்க அந்த நிலையை மாற்றாமல் காரில் ஏறிச் சென்றான் அன்பரசன்..

அன்று மாலை அவள் திண்டுக்கல் ரயில் நிலையத்தை விட்டு தங்களின் ஊருக்கு பஸில் வந்தவள் பஸ் ஸ்டாப்பில் இறங்கி நடந்துவர அவளின் மனம் என்னமோ போல இருக்க நடந்தே வந்தவள் அமைதியாக நடந்து வந்தாள்..

அவளின் அமைதியை புரிந்த இயற்கை கூட அவளின் மனதிற்கு இதம் அளிக்கும் விதமாக தென்றாலாக மாறி அவளை வருடிச் சென்றது..

என்றும் இயற்கையை ரசித்த வண்ணம் வருபவள் முதல் முதலாக தனது மனதில் இருக்கும் அவனின் எண்ணங்களுடன் உறவாடிய வண்ணம் வந்தாள்..

வீட்டின் முன்னே விளையாடிக் கொண்டிருந்தாள் மஞ்சரி.. இரண்டு நாட்களாக அக்காவைப் பார்க்காமல் இருந்தவள் அவளைப் பார்த்த மறுநொடி, “அக்கா..” என்று பாசத்துடன் வந்து அவளின் காலைக் கட்டிக்கொள்ள எழிலுக்கு மறத்து எல்லாம் மறந்தே போனது..

அவளின் காலைப் பாசத்துடன் வந்து கட்டிக் கொண்ட தங்கையைப் பார்த்து, “என்னோட மஞ்சு குட்டி இரண்டு நாளாக எப்படி இருந்தீங்க..” என்று கேட்டவள் அவளுக்கு என்று வாங்கி வந்த பொருளை அவளுக்கு கொடுக்க, “நான் சமத்து பொண்ணாக இருந்தேன்..” என்று கூறியவள்,

எழில் ஊரில் இல்லாத இரண்டு நாளில் ஊரில் என்னனென்ன நடந்தது என்று அக்காவிடம் கதையளக்க, அவளும் தங்கையிடம் கதை கேட்ட படியே குளித்துவிட்டு வந்து வீட்டின் வேலைகளை முடித்து சமையலும் செய்து தங்கைக்கு ஊட்டிவிட அவளும் சாப்பிட்டாள்..

“அக்கா உனக்கு ஒரு விஷயம் தெரியுமா..?” என்று கேட்டாள் மஞ்சரி..

“என்ன விஷயம் அக்காவுக்கு தெரியாதுமா நீயே சொல்லுடா..” என்று கேட்டதும், “அண்ணாவைப் போலீஸ் பிடிச்சுட்டுப் போயிட்டாங்க..” என்று விளையாட்டு தனத்துடன் தங்கை சொல்ல இவளுக்கு தூக்கி வாரிப்போட்டது..

கடைசியில் அவள் நினைத்தது போலவே அவனின் அண்ணனை போலீஸ் பிடித்து சென்றுவிட்டது என்பதில் மன நிம்மதி அடையாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்..

தன்னோட வேலைகளை முடித்துவிட்டு மஞ்சரியைப் பார்க்க வந்த தனம் எழிலைப் பார்த்தும், “எழில் எப்பொழுது ஊரில் இருந்து வந்தாய்..? போன விஷயம் என்ன ஆச்சு..?!” என்று சாதாரணமாகக் கேட்டார்..

‘இது பற்றி அண்ணியிடம் கேட்கலாமா..? இல்ல வேண்டாமா..?’ என்று யோசித்தவள் அண்ணியின் கேள்விக்கும் பதில் சொல்ல மறக்கவில்லை..

“அதெல்லாம் நான் சாயந்திரமே வந்துவிட்டேன் அண்ணி..” என்று அவள் ஏதோ போல சொல்ல அவளின் அருகில் அமர்ந்த தனம், “என்னம்மா ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்..?” என்று கேட்டார்..

“ஏன் அண்ணி உங்களிடம் நான் ஒன்று கேட்டால் என்னைத் தப்பாக நினைக்க மாட்டீர்களே..” என்று தான் மனதில் நினைத்தை கேட்டு விட நினைத்தவள் வாய்விட்டு கேட்க எழிலைப் புரியாமல் பார்த்தாள் தனம்..

“அண்ணாவை நீங்க ஏன் அண்ணி திருத்திக் கொண்டு வரவில்லை..?” என்று கேட்டதும், ‘அவள் எது பற்றி பேசுகிறாள்..’ என்று புரிந்துக் கொண்ட தனம்,

“உன்னோட அண்ணாவைத் திருத்த நான் என்ன மகானா..?!” என்று கேட்டதும் அண்ணியைப் புரியாமல் பார்த்தாள் எழில்..

“என்னம்மா இப்படி பார்க்கிறாய்..? என்னடா அண்ணி இப்படி பேசறாங்க என்று யோசிக்கிறாயா..? நானும் மற்றவர்களைப் போலத்தான் பல கனவுகளுடன் இந்த வீட்டிற்கு வந்தேன்.. உன்னோட அண்ணா ரொம்ப நல்லவர் என்று நம்பி வந்தேன்..” என்று கூறியவர்,

“என்னோட கனவுகள் எல்லாம் கனவாகவே போனததுதான் மிச்சம்.. அவரை திருத்தத்தான் நினைத்தேன் ஆனால் முடியல.. இப்பொழுதும் அவரைப் பிரிந்து போக எனக்கு மனசு வரலடா.. அதுதான் நான் இங்கேயே இருக்கிறேன்..” என்று சொல்ல தனத்தை வியப்புடன் பார்த்தாள் எழில்..

“அண்ணி..” என்று அவளின் கைகளை எழில் பற்றிக் கொள்ள, “எந்த பெண்களும் பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு வந்தவள் அவள் தன்னை மாற்றிக் கொள்வாள்.. அதே போல கணவரும் எல்லாவிதத்திலும் மாறனும் என்று நாம் எதிர்ப்பார்க்க கூடாது.. ஆனால் நமக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது அவர்கள் சில விசயங்களை மாற்றிக் கொண்டால் எல்லா வீட்டிலும் பிரச்சனையே வராது..” என்று கூறியவர்,

“போன காரியம் என்ன ஆச்சு..?” என்று கேட்டதும், “அது நல்ல படியாக முடிந்தது அண்ணி.. வக்கீல் ஆஜர் ஆகிறேன் என்று சொல்லிவிட்டார்..” என்று சொல்லவும், “இந்த ஆஷா விளையாட்டு போல இருந்தாலும் காரியத்தில் படுசுட்டியாக இருக்கிறாள்.. சொன்னது போலவே வேலையை முடித்துவிட்டால் பாரு..” என்று வியந்தவர்,

“நீ சாப்பிட்டாயா எழில்.. மஞ்சு எங்கே..?” என்று கேட்டதும், “ம்ம் சாப்பிட்டேன் அண்ணி.. மஞ்சு பின்னாடி தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறாள்..” என்று கூறினாள்.. எழில் அதன்பிறகு தனம் பேசியதைக் கவனிக்கவே இல்லை..

தனம் அவளைக் கவனிக்காமல் அவளிடம் பேசிக் கொண்டிருந்தாள், “ஜெயந்திம்மா ஊரில் இருந்து வந்ததும் உன்னைத்தான் கேட்டாங்க எழில்.. நம்ம இனியாவுக்கு நல்ல வரன் அமைத்திருக்கிறது.. இன்னும் மூன்று மாதத்தில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருக்காங்க..” என்று சொன்னவர் அப்பொழுதுதான் அவளைக் கவனிக்க, அவள் ஏதோ யோசனையில் இருப்பது கண்டு,

“ஏய் எழில் என்ன நினைவில் இருக்கிறாய்..” என்று அவளை பிடித்து உலுக்க, “என்ன அண்ணி சொல்லிட்டு இருந்தீங்க..?” என்று கேட்டதும்,

“உன்னை எதற்கோ ஜெயந்திம்மா பார்க்க வேண்டும் என்று சொன்னாங்க..” என்று சொல்லவும் தான் எழிலுக்கு ஜெயந்திம்மா தன்னிடம் கேட்ட விஷயத்திற்கு நாம் இன்னும் பதில் சொல்லவில்லை என்ற நினைவே வந்தது.. கொஞ்சம் முன்னாடியே கவனித்திருந்தால் இனியாவின் திருமணம் பற்றிய விஷயம் இவளுக்கு தெரிந்திருக்கும்.

அன்றைய இரவு பல யோசனையில் மனதைப் போட்டு குழப்பிக் கொண்ட எழில் நேரம் சென்றபிறகே உறங்க சென்றாள்.. மறுநாள் காலையில் மனதின் அமைதிக்காக பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்றாள்..

காலையில் எழுந்ததும் இனியாவிற்கு போன் வர, ‘யார்..?’ என்று எடுத்து பார்த்தவள், “சொல்லு இளா..” என்று கூறியதும், “நீ முதலில் கிளம்பி அம்மன் கோவில் குளத்தின் அருகே வா இனியா.. நான் உன்னிடம் கொஞ்சம் பேசவேண்டும்..” என்று கூறினான் இளா என்று அழைக்கப்படும் இளமாறன் இனியாவின் காதலன்..

“இரு நான் பாட்டியுடம் சொல்லிவிட்டு வருகிறேன்..” என்று கூறியவள் அவனது அழைப்பை துண்டித்து, “பாட்டி நான் கோவிலுக்கு போய்ட்டு வரும் வழியில் எழில் வீட்டுக்கு போயிட்டு வருகிறேன்..” என்று சொல்லிவிட்டு செல்ல,

அவள் கூறியதைக் கேட்டவர், “நீ வரும் பொழுது அவளையும் இங்கே அழைத்து வா இனியா அவளிடம் ஒரு விசயமாக பேச வேண்டும்..” என்று ஜெயந்திம்மா சொல்ல, “சரிங்க பாட்டி...” என்று சொன்னவள் கோவிலுக்கு சென்றாள்..

இனியாவிற்கு விவரம் தெரிந்த நாள் முதலாக அவள் இளமாறனை விரும்பி வருகிறாள்.. தனது ஸ்கூல் காலத்தில் இருந்து காதலித்தால் தான் அவள் சென்னை போக மறுத்தே..!

அன்று அன்பு பட்ட சந்தேகம் உண்மையே.. பாட்டியை காரணமாகக் கூறியவள் இங்கே இருந்து இளமாறனைக் காதலிக்க ஆரமித்தாள்.. அவள் காதலிப்பது அவனுக்கு தெரியாமல் இருந்தது.. அவள் அவன் படிக்கும் இஞ்சினியரிங் கல்லூரியில் சேர்ந்து படிக்க அவனின் பார்வை அவளின் மீது பட்டது..

இவளின் விளையாட்டு தனமும் குறும்பும் அவனை வெகுவாக கவர அவனும் அவளைக் காதலிக்க ஆரமித்தான்.. இந்த நேரத்தில் அவன் கல்லூரி படிப்பை முடித்துவிட்டுச் சென்றவன், மேலும் படித்து நல்ல இடத்தில் வேலையுடன் வந்து சேர்ந்த மகனுக்கு வரன் பார்க்க ஆரமித்தனர் அவனின் பெற்றோர்.. அது பற்றி பேசவே அவளை கோவிலுக்கு வரச்சொல்லி இருந்தான் இளமாறன்..

இவள் வருவதற்கு முன்னாடியே கோவிலுக்குள் வந்த எழில் அம்மன் சந்நிதி முன் நின்று, ‘அம்மா என்னோட மனதில் என்ன இருக்கிறது என்று எனக்கும் தெரியும்.. உனக்கும் தெரியும்.. ஆனால் ஆசைபடவும் ஒரு அளவு இருக்கு.. என்னோட மனதில் இருப்பது என்னோடு இருக்கட்டும்.. நடப்பது நல்லபடியாக நடக்கட்டும்..’ என்று வேண்டிக் கொண்டு வெளியே வரவும், இனியா இளாவை சந்திக்க வரவும் சரியாக இருந்தது..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
“ஹாய் மாறன் என்னை எதுக்கு இப்பொழுது இங்கே வரச்சொன்னாய்..?” என்று கேட்டு அம்மன் கோவில் குளத்தின் அருகே இருவரும் அமர்ந்தனர்.

ஏதோ ஒரு முடிவில் நிமிர்ந்தவன், “இனியா எனக்கு வேலை கிடைத்துவிட்டது எங்கள் வீட்டில் எனக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது..” என்று சொல்ல

அவள் அப்பொழுதும் விளையாட்டாக, “அப்படியா மாறா.. சரி நீ அவளையே திருமணம் பண்ணிக்கோ..” என்று கூற, கோவிலை விட்டு வெளியே வந்த எழில் இனியாவின் குரல் கேட்டு பிரேக் அடித்து போல அதே இடத்தில் நின்றாள்.

அவள் கூறிய விஷயம் மாறனுக்கு கோபத்தை கிளப்ப, “அப்படியே விட்டேன் என்றால் தெரியும்.. உன்னோட மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்..” என்று அவன் திட்டவும் அவளுக்கு உண்மை புரிந்தது.. இவர்கள் இருவரும் பேசுவதை நின்று கவனித்த எழில் அவர்களை நோக்கி செல்ல,

“என்னை என்ன பண்ண சொல்கிறாய்.. என்னோட பாட்டியிடம் போய் உன்னை காதலிக்கிறேன் என்று சொன்னதும் இங்கிருந்து சென்னைக்கு போன் போகும்.. என்னோட இரண்டு அண்ணாவும் வந்து என்னை இங்கிருந்து அழைத்து சென்றுவிடுவாங்க..” என்று இனியா கூறியது, அன்புவையும், அறிவுவையும் என்னவோ வில்லன் ரேஞ்சில் கற்பனை பண்ணி சொல்லிக் கொண்டிருந்தாள்..

அவள் சொல்வதைக் கேட்டு அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.. இவளுக்கு விருப்பம் என்று தான் அனைத்தையும் பார்த்து பார்த்து செய்யும் இவளின் அண்ணன்கள் கண்டிப்பாக எங்களின் காதலுக்கு எதிரியாக இருக்க மாட்டார்கள் என்றே இளமாறன் நினைத்தான்.. அந்த நேரம் அங்கே வந்து நின்ற எழிலைப் பார்த்து இருவரும் பயத்துடன் எழுந்து நின்றனர்.

இனியாவைப் பார்த்த எழில், “இனியா என்ன நடக்கிறது இங்கே..? இவர் யாரு..?” என்று அவனுக்கு மரியாதைக் கொடுத்து கேட்டதும்,

“எழில் நான் இவரை எட்டு வருடமாக காதலிக்கிறேன்.. இவரும் என்னை காதலிக்கின்றார்.. இப்பொழுது இவர் நல்ல கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை செய்கிறார்.. இப்பொழுது இவர்கள் வீட்டில் இவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்கின்றனர்..” என்று சொல்ல இளமாறனை பார்வையால் அளந்தவள் இனியாவிற்கும், இளமாறனுக்கும் உள்ள ஜோடி பொருத்தத்தைப் பார்த்தாள்..

‘இனியாவிற்கு இதைவிட அழகான மாப்பிள்ளையை அவர்கள் வீட்டில் யாராலும் பார்க்க முடியாது’ என்று மனதில் நினைத்த எழில், ஜெயந்திம்மா தனக்கு செய்த நன்மைகளையும் ஒரு நொடி நினைத்துப் பார்த்தாள்..

பிறகு ஒரு முடிவுடன் இளாவின் பக்கம் திரும்பியவள், “இங்கே பாருங்க எங்கள் எல்லோருக்கும் இனியாவை ரொம்ப பிடிக்கும்.. அவளுக்கு விருப்பம் என்பதை மட்டும் செய்பவர்கள் தான் அவளின் குடும்பத்தினர். இவளை காதல் திருமணம் செய்ய நினைப்பது சத்தியமாக நடக்காது..” என்று சொல்ல இருவரின் முகமும் வாடிப் போனது..

“உங்களுக்கு இவள் வேண்டும் என்றால் இவளின் வீட்டில் சென்று பெண் கேட்டு ஊரறிய திருமணம் செய்து கொள்ளுங்கள்.. அதுதான் உங்களுக்கும், உங்களின் காதலுக்கும் காத்திருப்புக்கும் மரியாதை..” என்று சொல்லியவள்,

இனியாவின் பக்கம் திரும்பி, “ரொம்ப நேரம் இங்கே அமர்ந்து பேசாதீங்க.. என்னை போல மற்றவர்கள் பார்த்தால் சும்மா போக மாட்டார்கள் ஜெயந்திம்மாவிடம் விஷயம் போனால் அடுத்து நடப்பதற்கு நான் பொறுப்பல்ல..” என்று சொல்லிவிட்டுச் சென்றாள்..

அவள் சொன்னதைக் கேட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, இளா மட்டும் எழிலை அழைத்தான்.. “ஒரு நிமிஷம் சிஸ்டர்..” என்று சொல்ல எழில் நின்று திரும்பிப் பார்த்தாள்..

“நீங்க சொன்னது போலவே நான் என்னோட அப்பா, அம்மாவிடம் பேசி இனியாவின் வீட்டிற்கு வந்து பெண் கேட்கிறேன்.. இவளை உங்களோடு அழைத்துச் செல்லுங்கள்..” என்று சொல்ல அவனைப் புன்னகையுடன் பார்த்த எழில் இனியாவை அழைத்து வந்தாள்..

அவன் அவனது வழியைப் பார்த்து செல்ல இனியாவை அழைத்துக் கொண்டு யோசனையிலேயே வந்தாள் எழில். அவளின் யோசனையில் இருந்தது முழுக்க முழுக்க அன்பு மட்டுமே!

எழில் வீடு வந்ததும், “இனியா நீ தனியாக போகிறாயா..? இல்லை நானும் உன்னுடன் வரவா..?” என்று கேட்டாள்..

அப்பொழுதுதான் இனியாவிற்கு பாட்டி சொன்னது ஞாபகம் வர, “பாட்டி உங்களைப் பார்க்க வேண்டும் என்று சொன்னாங்க..” என்று கூறினாள் இனியா..

அவள் சொன்னதைக் கேட்டு, “ம்ம் இரு வருகிறேன்..” என்று வீட்டின் உள்ளே சென்றவள் மறுபடியும் வந்து இனியாவை அழைத்துக் கொண்டு ஜெயந்திம்மாவின் வீடு நோக்கி சென்றாள்..

எழில் எப்பொழுது அமைதியாக இருப்பாள் அது எல்லோருக்கும் தெரியும்.. இன்று இனியாவும் அமைதியாக வந்தாள்.. அவளின் அமைதியைக் கண்ட எழில் தனது மனதில் இருப்பதை மறந்துவிட்டு, “எல்லாம் நல்லபடியாக நடக்கும் இனியா கவலைப்பாடாதே..” என்று அவளைத் தேற்றியவள் அவளை அழைத்துக் கொண்டு வர,

இவர்களின் வரவை எதிர்பார்த்த வண்ணம் வாசலில் அமர்ந்திருந்தார் ஜெயந்திம்மா.. அவர்களை பார்த்தும் எழில் கவலைகள் எல்லாம் மாயம் போல மறந்து போக,

“ஜெயந்திம்மா..” என்று ஓடிச்சென்று அவர்களைக் கட்டிக் கொண்டவள், “எப்படி இருக்கீங்க..? ஊருக்குச் சென்றால் சீக்கிரம் வீட்டிற்கு வர வேண்டும் பிள்ளை ஒருத்தி நம்மளைத் தேடுவாள் என்ற எண்ணமே உங்களுக்கு இல்லையா..?!” என்று புன்னகையுடன் கேட்டதும்,

“நீதான் வீட்டில் இருக்கும் பிள்ளையா..? எங்கயோ வக்கீலைப் பார்க்க சென்னை வரையில் சென்றதாக கேள்விப்பட்டேன்..” என்று அவளைப் பற்றி விசாரிக்க அவரை விட்டு விலகியவள் நடந்ததைக் கூற,

“என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் என்னோட பேரனையே வாதட வைத்திருப்பேனே எழில்.. இதுக்கு நீ இந்த அளவுக்கு அலைய வேண்டுமா..? இதெல்லாம் உன்னோட உயிர் தோழி ஆஷாவின் வேலையா..?” என்று கேட்டார்..

“ம்ம் அவள் தான் ஜெயந்திம்மா..” என்று புன்னகையுடன் கூறினாள்.. இவர்கள் பேசிக்கொண்டிருக்க இனியா வீட்டின் உள்ளே சென்றுவிட்டாள்..

அவள் உள்ளே சென்றதும், “எழில் உன்னிடம் இது பற்றி பேச வேண்டும் என்று நினைத்தேன்.” என்று சொல்ல அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க அவரே தொடர்ந்தார்..

“இனியாவிற்கு நல்ல இடத்தில் இருந்து மாப்பிள்ளை வந்திருக்கிறது.. பையனும் இந்த ஊர் தான் எனக்கு அவர்கள் குடும்பத்தை மிகவும் பிடித்திருக்கிறது.. அதனால் என்னோட மகன் மருமகளிடம் பேசிவிட்டு சொல்வதாக சொல்லி இருக்கிறேன்..” என்று எழிலிடம் சொல்ல அவளுக்கு திக்கென்று ஆனது..

அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டவள், “என்ன ஜெயந்திம்மா இது எப்பொழுது நடந்தது..? என்று சாதாரணமாகக் கேட்பது போல பதட்டத்துடன் கேட்டாள் எழில்..

அவளை புன்னகையுடன் நோக்கிய ஜெயந்திம்மா, “நானும், இனியாவும் போனவாரம் ஒரு திருமணத்திற்கு சென்ற பொழுது இது நடந்தது..” என்று சொல்ல,

“எனக்கு புரியவில்லை ஜெயந்திம்மா தெளிவாக சொல்லுங்கள்..” என்று ஒருவிதமான மன சஞ்சலத்துடன் கேட்டாள் எழில்..

“நாங்கள் சென்ற திருமணத்தில் இனியாவைப் பார்த்த ஒரு தம்பதியினருக்கு இனியாவை மிகவும் பிடித்துப் போனது.. அவர்கள் என்னிடம் வந்து இனியாவை அவர்களின் மகனுக்கு பெண் கேட்டார்கள்..” என்றவர்,

“ரொம்ப நல்ல இடத்தில் இருந்து வந்து இவளை பெண் கேட்டதும் எனக்கு மறுக்க மனம் வரவில்லை.. அதுதான், ‘என்னோட மகனும், மருமகளும் சென்னையில் இருக்காங்க.. அவங்களை சந்தித்து விவரத்தை சொல்லிவிட்டு அவர்களின் விருப்பம் இருந்தால் மற்றவற்றை பேசலாம்..’ என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறேன் எழில்..” என்று மகிழ்ச்சியுடன் சொல்ல அவரின் மகிழ்ச்சியை பார்த்து அவளின் மனம்,

‘ஐயோ ஜெயந்திம்மா இனியா வேறொரு நபரை காதலிக்கிறாள்.. இதை நான் எப்படி உங்களிடம் சொல்வேன்..’ என்று மனதால் அவள் தவிக்க, ஏதோ நினைவில் வீட்டுக்குள் சென்ற இனியா சரியாக வெளியே வர, ஜெயந்திம்மா சொன்னது அனைத்தையும் கேட்டுவிட்டு தனது அறைக்கு வந்தவள் கட்டிலில் படுத்துக் கொண்டு சத்தம் இல்லாமல் அழுதுக் கொண்டிருந்தாள் இனியா..

அவளின் நினைவுகள் முழுக்க முழுக்க அவனையே சுற்றிவர, “இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்..?” என்று தனக்கு தானே கேள்விக் கேட்டுக் கொண்டு மனதின் வலியைத் தாங்க முடியாமல் அழுதுக் கொண்டிருந்தாள் இனியா..

இனியாவை சந்தித்துவிட்டு வீடு வந்த இளாவிற்கு அவர்கள் பெற்றோர், “இளா உனக்கு ஒரு பொண்ணு பார்த்திருக்கிறோம் கண்ணா.. அவர்கள் வீட்டிலும் பேசிவிட்டோம்.. அவர்கள் எல்லோரும் சரியென்று சொன்னால் அடுத்த முகூர்த்ததில் உனக்கு அந்த பெண்ணிற்கும் திருமணம்..” என்று அவனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தனர்..

“அம்மா நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்..” என்று சொல்ல, “எல்லாம் எங்களுக்கு தெரியும்.. நீ போய் உன்னோட வேலையைப் பாரு..” என்று சொல்ல வந்த கோபத்தில் அதில் அவனுக்கு மறைமுகமாக கூறிய செய்தியைக் கவனிக்க மறந்தான் இளமாறன்..

எழில், இனியா, இளமாறன் மூவரும் சரியான குழப்பத்தில் இருந்தனர்.. இந்த குழப்பத்திற்கு விடைகள் அவரவரின் கைகளில் இருப்பது தெரியாமல் இருந்தனர்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Hai sis..

Ela familyla partha ponnu Iniyathana... pavam sis.. nxt epi la serthu vachurunga...
Nama pugunthu vilayada Anbu and Ezhil irukanga...
சிஸ்டர் இது ரொம்ப ஓவர்.. எழிலன்பு இருவரின் காதலும் உங்களுக்கு விளையாட்டா..?! அவங்க விளையாட்டை ஆட தான் மூவர் இருக்கின்றனரே அதை மறந்திட்டிங்க போல..? ஆதி, ஆஷா, அறிவு... இவங்க மூவரும் இருக்கும் பொழுது விளையாட்டுக்கு என்ன பஞ்சம்..?! ம்ம்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சந்தியா ஸ்ரீ டியர்
தேங்க்ஸ் பானும்மா...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹய்யோ, ஹய்யோ?
இளமாறனுக்கு பெற்றோர்
பார்த்த பெண், இனியா?
இனியாவுக்கு பாட்டி
ஜெயந்திம்மா பார்த்த
மாப்பிள்ளை, இளமாறன்?
Am I correct, சந்தியா ஸ்ரீ டியர்?
ஹேய், எனக்கு தெரிந்து
விட்டதே,
ஆனால், எழில்விழிக்குத்தான்
தெரியலையே?
இனியாவிடம், ஜெயந்தி விளையாடுகிறாரோ?
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top