• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Unathu Vizhiyil Tholainthen Penne! - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
அன்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த எழில்விழி, வீட்டை கூட்டி பாத்திரம் கழுவி வைத்துவிட்டு மாலைப் படிக்க அமர்ந்தவள், இரவு எட்டுமணி அளவில் அந்த இடத்தை விட்டு எழுந்தவள்

அவர்கள் வீட்டின் பின்னாடி அமர்ந்து அப்பாவிடம் தனது புது தோழியைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தவள்.. சிறிது நேரம் தந்தையிடம் பேசிக்கொண்டே அவரின் மடியில் படுத்தவள் அப்படியே உறங்கிவிட, அந்த நிலவொளியில் மகளின் முகத்தைப் பார்த்தவர்,

தன்னுடைய மனைவியிடம், “பார்வதி இவள் இப்படி குழந்தை தனம் மாறாமல் இருக்கிறாள்.. இவளை நல்லபடியாக கரை சேர்க்க வேண்டும்.. இவளுக்கு பிடித்த ஒருவனின் கையில் இவளைப் பத்திரமாக ஒப்படைக்க வேண்டும்..” என்று சொல்ல அவரும் அமைதியாக தலையசைத்தார்..

இவர்கள் இருவருக்கும் முத்துக்குமார் மீது துளியும் நம்பிக்கை கிடையாது.. இப்பொழுதே அவளிடம் ஒரு வில்லன் ரேஞ்சில் நடந்துக் கொள்ளும் மகனை அவர்கள் அறவே வெறுத்தனர்.

அதன்பிறகு எழில்விழி அவனை சந்திக்கவே இல்லை.. அதேபோல அவனுக்கும் அவளின் நினைவு இல்லை.. இப்படியே இவர்கள் பள்ளிகூட நாட்கள் பறந்து சென்றது.. தினமும் எழிலின் கேள்விக்கு ஆஷாவின் பதில் ‘யாருக்கு தெரியும்..?’ என்றும், அன்புவின் டிப்பன் பாக்ஸ் காலியாவதும் சரியாக நடந்தது..

இது யாருக்கு புதிராக இருத்ததோ இல்லையோ, ஆனால் இருவருக்கும் இதில் சந்தேகம் தீரவே இல்லை ஒன்று அன்பரசன், இரண்டு எழில்விழி. இவர்கள் இருவரையும் பாலம் என்று இணைத்தால் ஆஷா.

இப்படி எழில்விழி அந்த பள்ளியில் சேர்ந்து கிட்டதட்ட எட்டு மாதம் முடிந்துவிட்டது.. ஆனாலும் ஆஷாவின் உண்மையான முகத்தை எழிலால் அறிய முடியவில்லை..

அவர்கள் பள்ளியில் அவளைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.. எல்லாவற்றிலும் விளையாட்டாக அதே அளவு மிகுந்த கவனத்துடன் செய்யும் மாணவிகளில் அவளும் ஒருத்தி..

இப்படி இருக்க அவளை சந்தேகப்பட எழிலால் முடியவில்லை.. ஆனாலும் கூட அவளின் கேள்விகளுக்கு விடையறிந்துக் கொள்ள அவளின் பேக்கை எடுத்துப் பார்த்தாள் எழில்விழி

அவள் வந்தும் பார்த்தால் அவளின் பேக்கில் டிப்பன் பாக்ஸ் இல்லை.. அவளும் அமைதியாக அடுத்த வகுப்பைக் கவனிக்க, அடுத்து இன்டர்வெல் முடிந்ததும் அவளின் பேக்கைப் பார்க்க அதில் டிப்பன் பாக்ஸ் இருப்பதைப் பார்த்து முதலில் திகைத்தவள் மதியம் வரையில் பொறுமையாக இருந்தாள்.

மதியம் சாப்பிட அமர்ந்ததும் எப்பொழும் போல, “ஆஷா இன்னைக்கு உன்னோட அம்மா என்ன செஞ்சாங்க..?!” என்று கேட்டதும், அவளும் எப்பொழுதும் போல யாருக்கு தெரியும்..?” என்று சொல்ல,

“உன்னோட அம்மா சமைத்தால் தானே உனக்கு தெரியும்..?” என்று அவள் கோபத்தோடு சொல்ல அவளை நிமிர்ந்துப் பார்த்தாள் ஆஷா..

“என்னோட அம்மா சமைக்காமல் பக்கத்துவீட்டில் இருப்பவர்களா எனக்கு சமைத்து தருவார்கள்..?” என்று கேட்டவள் சாப்பிட துவங்க, அவளை முறைத்தாள் எழில்விழி.

“இப்பொழுது எதற்காக என்னை முறைக்கிறாய் எழில்..?” என்று நேரடியாகக் கேட்டாள்..

“நான் ஏன் முறைக்கிறேன் என்று உனக்கு சத்தியமாகத் தெரியாது..?!” என்று இவளும் நேரடியாகக் கேட்டதும்,

“எனக்கு தெரியல என்று தான் சொல்கிறேன் உனக்கு புரியுதா..? இல்லை..?” என்று ஆஷாவும் சொல்லவே,

“எனக்கு நல்லாவே புரிது.. புரியாமல் இருக்க நான் ஒன்றும் பைத்தியம் கிடையாது.. உன்னோட அம்மா சமைக்கலை என்று எனக்கு நல்லாவே தெரியும்..?” என்று சொன்ன எழிலை நிமிர்ந்து பார்த்தாள் ஆஷா

“உனக்கு எப்படி தெரியும்..?” என்று அவள் கேட்டதும், “உனக்கு அம்மாவே இல்லையே.. இல்லாதவங்க எப்படி உனக்கு சமைத்துக் கொடுக்க முடியும்..?” என்று கேட்டதும், ஆஷாவின் கண்கள் கலங்கியது..

அவள் கண்கலங்குவதைப் பார்த்து எழிலுக்கும் பாவமாக இருந்தாலும் கூட, தன்னுடைய தோழியை யாரும் தவறாக பேசக்கூடாது என்று நினைத்தாள்..

“என்ன ஆஷா பார்க்கிறாய்..? உன்னோட குட்டு எப்படி உடைந்தது என்றா..? உனக்கு அம்மா இல்லை என்று நீ அடிக்கடி என்னிடம் சொல்வது உண்டு.. அதே போல நீ வீட்டில் இருந்து சாப்பாடு எடுத்து வருவதில்லை என்றும் எனக்கு தெரியும்.. அடுத்தவங்க சாப்பாட்டைத் திருடித் சாப்பிடுகிறாயே அது உனக்கு தப்பாகவே தெரியலையா..?” என்று கேட்டாள்..

அவள் கேட்டதும் கண்களில் கண்ணீர் வழிய, “என்னோட அம்மா நான் பிறந்ததும் இறந்துட்டாங்க எழில்.. என்னோட அம்மா சமையலை நான் சாப்பிட்டதே இல்ல.. அதுதான் தினமும் யாராவது ஒருவரின் டிப்பனை எடுத்து சாப்பிடுவேன்..” என்று தன்னுடைய செயலுக்கு விளக்கம் சொல்ல அவளும் அவள் சொல்வதின் அர்த்தம் புரிந்து அமைதியாக இருந்தாள்..

“ஆனால் அவர்களுக்கு என்னோட சாப்பாட்டை வைத்துவிட்டு டிப்பனை எடுத்து வந்து விடுவேன்.. அப்படி ஒருநாள் தான் இங்கே ப்ளஸ் டூ படிக்கும் ஒருவனின் அன்பரசனின் சாப்பாடு எடுத்து சாப்பிட்டேன்.. அது என்னோட அம்மா செய்தது போல இருந்தது.. அதிலிருந்து அவனது டிப்பன் பாக்ஸை எடுத்து வந்துவிடுவேன்..” என்று நடந்ததை அனைத்தும் சொல்ல எழிலுக்கு ஒரு பக்கம் கோபம் வந்தாலும், இன்னோர் பக்கம் அம்மாவின் சமையலுக்கு ஏங்குகிறாள் என்பது புரியவே அவளும் அமைதியாக சாப்பிட,

ஆஷா, “அன்பரசன் ஒன்றும் நம்மை போல நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன் கிடையாது.. அவன் அப்பா பெரிய ஜவுளிகடைக்கு முதலாளி. அதனால் அவனுக்கு பணத்தேவை அதிகம் ஏற்படாது.. அதனால் அவனுக்கு மட்டும் நான் காலியான டிப்பன் பாக்ஸை வைப்பேன்..” என்று சொல்ல எழில்விழிக்கு ஆஷா செய்யும் சேட்டை நினைத்து சிரிப்பாதா..? இல்லை அன்பரசன் நிலை நினைத்து அழுவதா என்றே அவளுக்கு தெரியவில்லை..

ஆஷாவை நினைத்து மனம் கலங்க, அவள் செய்யும் செட்டையில் தினமும் ஒருவன் சாப்பிடாமல் இருக்கிறான் என்பதும் அவளுக்கு புரிய இதை எப்படி சரிசெய்வது என்று யோசிக்க ஆரமித்தாள்..

அவளைப் பார்த்த ஆஷா, “என்னடி ஒரு யோசனையில் இருக்கிறாய்..?” என்று கேட்டுக் கொண்டே சாப்பிட, “அந்த அன்பரசனை என்னிடம் நீ காட்டவே இல்லையே அதுதான் அவன் யார் எப்படி இருப்பான் என்று யோசிக்கிறேன்..” என்று அவளிடமே தூண்டில் போட்டாள் எழில்விழி..

“இதுக்குத்தான் இந்த அளவிற்கு யோசித்தாயா..?” என்று கேட்டவள், “அவன் நமக்கு பக்கத்தில் தான் அமர்ந்திருக்கிறான்..” என்று சொல்ல பள்ளி வளாகத்தை சுற்றிலும் பார்த்தாள் எழில்விழி..

“யார் அது..?” என்று கேட்டுக் கொண்டே எழில்விழி பார்வை சுழற்ற, “அதோ அங்கே இருக்கிறான்..” என்று தனது இடது கைகளில் அன்பரசனைச் சுட்டிக் காட்டினாள் ஆஷா.

அவனைப் பார்த்தவள் மனதில், ‘ஐயோ இவரா..?’ என்று நினைத்தவள், “ஆனாலும் உனக்கு தைரியம் ஜாஸ்திதான்..” என்று அவள் சிரிப்புடன் சொல்ல, அவளின் முகத்தைப் புரியாமல் பார்த்தாள் ஆஷா..

“அவனுக்கே தெரியாமல் அவனின் வீட்டு சாப்பாட்டைத் திருடி அவன் பக்கத்தில் அமர்ந்து சாப்பிடுகிறாயே உனக்கு தைரியம் ஜாஸ்திதான்..” என்று சொல்ல,

“அப்படியே மைக்கு வைத்து எட்டுப்பட்டி ஊருக்கும் சொல்லிட்டு வா..” என்று ஆஷா சிரிப்புடன் சொல்ல, “நீ பண்ணும் திருட்டுத்தனத்தை நான் மைக்கு வைத்து சொல்லணுமா..? எனக்கு ரொம்ப தேவை பாரு..” என்று அவள் சிரிக்க அவளின் சிரிப்பைப் பார்த்த ஆஷா,

“ரொம்ப அழகாக சிரிக்கிறாய் எழில்..” என்று சொல்ல, “ம்ம் சரி நீ சாப்பிடு!” என்று சொல்ல இருவரும் சாப்பிட்டுவிட்டு தங்களின் வகுப்பறையை நோக்கி நடந்தனர்..

அடுத்து என்ன செய்வது என்ற யோசனையுடன் மாலை வீட்டிற்கு சென்றாள் எழில்விழி..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top