• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Unathu Vizhiyil Tholainthen Penne! - 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 4

எழில் வராத இந்த ஒருவாரத்தில் பள்ளிக்கூடத்தில் இரு மாற்றங்கள் நிகழ்ந்தது.. ஒன்று பள்ளிக்கூடத்திற்கு இரண்டு டிப்பன் பாக்ஸை எடுத்து வந்தான் அன்பரசன்..

இரண்டாவது மாற்றம், ஆஷாவின் தப்பை ஆதரிக்கவும் இல்லாமல் காட்டிக்கொடுத்து தண்டனை வாங்கித் தருவதற்கு பதிலாக அவளே மன்னிப்பும் கேட்டு, அதற்கு தீர்வும் சொன்னவளின் நினைவுகள் அவனின் ஆழ்மனதில் அழுத்தமாக பதிந்தது..

ஆஷா விடைத்தேடி அலைய, எழிலைத் தேட ஆரமித்தான் அன்பரசன். அவன் அம்மா கையில் அவன் மதிய உணவு சாப்பிட்டு கிட்டதட்ட மூன்று வருடம் ஆகிறது..

அவளின் மீது இருந்த ஒருவகை பாசம் அவளைப் பார்க்க வேண்டும் என்று சொல்ல, அவளை விழிகளால் தேட ஆரமித்தான் அன்பரசன்..

அவளைப் பார்த்து ஒரு ‘தேங்க்ஸ்’ சொன்னால் போதும் தன்னுடைய மனம் திருப்தி அடையும் என்று நினைக்க அவளிடம் அவனுக்கு இன்னொரு விளக்கம் தேவையாக இருந்தது..

ஆனால் அவளோ அவனின் கண்ணில் படவே இல்லை.. ஆஷா முன்னைவிட, எழிலைத் தேட ஆரமித்தாள் தன்னுடைய சந்தோசத்தை அவளிடம் பகிர்ந்துக் கொள்ள அவளைத் தேடினாள்..

சரியாக ஒருவாரம் சென்ற பிறகு எழிலைப் பார்த்த ஆஷா ஓட்டிவந்து அவளைக் கட்டிக்கொண்டாள்.. தனது தோழியைப் பார்த்த சந்தோஷத்தில் எழிலும் அவளைக் கட்டிக்கொள்ள,

“என்னடி இப்படி ஒருவாரம் லீவ் எடுத்துவிட்டாய்..?! உன்னைப் பார்க்காமல் எனக்கு ஏதோ மாதிரியே இருந்தது..” என்று அவளிடம் கூறியதும், எழில் சந்தோசத்துடன்,

“அதுதான் நான் வந்துவிட்டேனே.. இன்னும் என்ன வருத்தம்..?” என்று விளையாட்டு போல சிரித்துக் கொண்டே அவளை விட்டு விலகியவள், ஆஷாவின் கைகளைக் கோர்த்துக்கொண்டு வகுப்பறைக்குள் சென்று தங்களின் இடத்தில் அமர்ந்தனர்..

எழில்விழி அருகில் அமர்ந்த ஆஷா, “ஏன் எழில் ஒரு வாரம் லீவ் எடுத்தாய்..?” என்று ஆஷா கேட்டதும், எழில் மனத்தில் அன்று நடந்தது படமாக ஓட வாயில் வார்த்தைகள் வராமல் கண்கலங்கினாள்..

அவளைப் பார்த்த ஆஷா, ‘ச்சே நான் வேற அவளிடம் கேட்டு அவளின் மனத்தைக் காயப்படுத்திவிட்டேன் போல..?!’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள் எழில் பக்கம் திரும்பி,

“ஸாரி டா நான் ஏதாவது தப்பாக கேட்டுவிட்டேனா..?” என்று கேட்டவள், “நீ எதுவும் சொல்ல வேண்டாம் நீ எதுக்கும் கண்கலங்காதே..” என்று அவளின் கண்களைத் துடைத்துவிட்டாள்..

“ஏய் உன்னிடம் சொல்ல வந்த விஷயத்தையே மறந்துவிட்டேன் பாரு..” என்று கூறியவளைப் புரியாமல் பார்த்தாள் எழில்..

“நீ ஸ்கூல் வராத இந்த ஒரு வாரத்தில் என்னென்னமோ நடந்தது..” என்று ஆஷா கண்களைச் சிமிட்டி பாவனையோடு சொல்ல, அவளுக்கு எல்லாம் புரிந்தும் புரியாதது போல,

“என்னடி நடந்தது..?” என்று இவளும் கண்களில் அபிநயம் பிடிக்க அவளின் கண்களையே பார்த்த ஆஷா,

“உன்னோட கண்ணை மட்டும் யாராவது நேருக்கு நேர் பார்த்தால் அதில் விழுந்தவன் கடைசி வரையில் எழுதிரிக்கவே மாட்டான்..” என்று சீரியசாக சொல்ல,

அதை விளையாட்டு போல எடுத்துக் கொண்ட எழில், “உன்னோட விளையாட்டையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு சொல்ல வந்த விஷயத்தை சொல்லு..” என்று கூறினாள் எழில்.

“நான் எப்பொழுது போல அவனின் டிப்பனை எடுத்து வந்து விட்டேன்..” என்று ஆஷா சொல்லவும் அவளின் பக்கம் திரும்பி அமர்ந்தவள்,

“ம்ம் அடுத்து என்ன நடந்தது..?” என்று கதை கேட்டாள் எழில்விழி..

“அடுத்து என்ன நடந்ததா..? அவனும் ஒரு டிப்பனில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்..” என்று அவள் சொல்ல, எழில்விழிக்கு ஏன் என்று அறியாமல் மனதில் ஒரு சந்தோசம் தானாக மலர்ந்தது..

‘ஹப்பாடி அவர் இவளுக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்து வந்திருக்கின்றார்..’ என்று அவள் மனம் சந்தோசம் அடைய, ‘அது மட்டும் தான் காரணமா..?’ என்று அவளின் மனம் கேள்வி கேட்டது..

அதற்கு பதில் சொல்லாமல், “உனக்கு தூக்கி வாரிப்போட்டிருக்கணுமே!” என்று எழில் ஆஷாவுடன் பேச்சைத் தொடர்ந்தாள்..

“ஏய் எப்படி கண்டு பிடித்தாய்..?” என்று திகைப்புடன் கேட்டதும், “இதுதானே எல்லோரும் ரெகுலராக சொல்றாங்க..” என்று சொல்ல,

“என்னோடு சேர்ந்து உனக்கும் கொழுப்பு அதிகம் ஆகிவிட்டது..” என்று ஆஷா சிரிப்புடன் சொல்லவும்,

“ம்ம் இப்பொழுது சொன்னாயே இது சரியான வாக்கியம்.. உன்னோட சேர்ந்து எனக்கும் கொழுப்பு தலைக்கு ஏறிவிட்டது..” என்று அவள் அபிநயத்தோடு கூறினாள் எழில்விழி..

அவள் சொல்லும் விதத்தில் தான் சொல்ல வந்ததை மறந்து சிரிக்க ஆரமித்த ஆஷா, “பார்க்கத்தான் நீ பக்க சைலன்ட் ஆனால் சரியான ஆளுதான்..” என்று சிரித்தவள்,

“ஹையோ உன்னால் சொல்ல வந்ததையே மறந்துவிட்டேன் பாரு..” என்று தலையில் அடித்துக் கொண்டவளைப் பார்த்து கலகலவென்று சலங்கை ஒலிபோல சிரித்தாள் எழில்விழி..

“ம்ம் நீ சொல்லு..” என்று சொல்ல, “அடுத்து என்ன அன்று மதியம் அவன் வீட்டில் இருந்துக் கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிட்டான்.. எனக்கு ஒரே சந்தேகமாக இருந்தது எழில்..” என்று கூறினாள்..

தனது வலது கரத்தை தனது வலது கன்னத்தில் வைத்துக் கொண்டவள், “சந்தேகம் தீர்ந்ததா..? இல்லையா..?” என்று அவள் கேட்டதும்,

“ம்ம் தீர்த்தது.. போனவாரம் வெள்ளிக்கிழமை அன்று அவனுக்கு பிறந்தநாள் அதனால் அவனின் அம்மா செய்த கேசரியை எடுத்துவர போனேன்..” என்று சொல்லி அவள் நிறுத்த அவளைப் பார்த்தாள் எழில்விழி..

அவளைப் பார்த்து கண்சிமிட்டிய ஆஷா, “அந்த கேசரியுடன் ஒரு கடிதம் இருந்தது அதைப் பிரித்துப் படித்தால், ‘உனக்காகவே தனியாக ஒரு டிப்பன் கொண்டு வருகிறேன்.. என்னோட சாப்பாட்டையும் எடுத்து செல்லாதே..’ என்று எழுதி இருந்தது..” என்று கூறியவள் தலையைக் குனிந்துகொண்டு,

“எனக்கு அப்பொழுதுதான் ஒன்று புரிந்தது..” என்று ஆஷா அவளிடம் சொல்ல அவளோ ஆஷாவைக் கேள்வியாகப் பார்த்தாள்..

“என்னால் அவன் எத்தனை நாள் சாப்பிடாமல் இருந்திருப்பான்.. நீ என்னைத் திட்டியது தவறே இல்லை எழில்..” என்று வருத்ததுடன் சொல்ல,

“உன்னை யாரும் என்னிடம் தப்பாக சொல்லக் கூடாது என்று தான் நான் உன்னைத் திட்டினேன் ஆஷா.. மற்றபடி வேற எந்த காரணமும் இல்ல..” என்று கூறினாள் எழில்விழி

“என்ன நடந்தாலும் என்னோட தோழியை நான் விட்டுக் கொடுக்க முடியாது இல்லையா..?!” என்று கேட்டதும் அந்த நொடி அவளைப் பார்த்தவள் கண்களுக்கு தனது தாயின் புகைப்படமே மனதில் தோன்றியது..

ஆஷாவின் மனம், ‘என்னோட அம்மா உன்னோட ரூபத்தில் என்னுடன் இருக்காங்க எழில்..’ என்று நினைத்தவள்,

“எனக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கிறது.. அவனின் சாப்பாட்டை எடுத்து சாப்பிட்டவள் நான்! எனக்காக அவன் சாப்பாடு எடுத்து வருகிறான்..” என்று வருத்ததுடன் சொன்னாள் ஆஷா.

அவளின் வருத்தம் காணப்பிடிக்காமல் எழில் ஏதோ சொல்லவர, அதற்குள் இடையில் புகுந்த ஆஷா, “நான் யார்..?, என்னோட பெயர் எதுவும் அவனுக்கு தெரியாது போல அதுதான் கடிதம் எழுதி வைத்திருக்கிறான்..” என்று அவள் சிரிப்புடன் சொல்ல எழிலுக்கும் சிரிப்புதான் வந்தது..

நொடிக்கு ஒருமுறை எண்ணங்களை மாற்றி பயணிக்கும் ஆஷாவின் செயலில் மகிழ்ச்சி கொண்டாள் எழில்விழி.. துன்பம் என்றும் உடன் இருப்பது இல்லை.. அது வரும் வந்த வழியும் தெரியாது போகும் இடமும் தெரியாது..

அதேபோல தான் ஆஷாவின் வருத்தமும், வந்த வழியும் தெரியல.. போகும் வழியும் புரியல.. இப்படி இருப்பவர்கள் மனம் என்று சந்தோசமாக இருக்கும்..

அஷாவைப் பார்த்துக் கொண்டே மனதில் இவற்றை எல்லாம் நினைத்தாள் எழில்விழி.. ஆனால் அடுத்த நொடியே மனம் ஆஷா சொன்ன விஷயத்தில் செல்ல, ‘உன்னைப் பற்றி அவனுக்கா தெரியாது.. அவனுக்கு எல்லாம் தெரியும்..’ என்று அவளைப் பார்த்து புன்னகைப் பூத்தாள்..

அவளின் புன்னகைக்கு அர்த்தம் புரியாமல் விழித்தாள் ஆஷா.. ஆனால் அவளிடம் சொன்னபடியே அவளுக்கும் சாப்பாடு எடுத்து வந்த காரணத்தால் எழிலின் ஆழ்மனதிலும் அவனின் மீதான நினைவுகள் நிழலாக பதிந்தது..

“இப்பொழுது எதற்கு சிரிக்கிறாய்..?” என்று ஆஷா கேட்டதும்,

“இல்ல நடப்பதெல்லாம் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது..” என்று சொல்லி அவளைக் குழப்பிவிட்டு எழுந்து வகுப்பறையை விட்டு வெளியே சென்றாள் எழில்விழி..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அடுத்தடுத்த நாட்கள் சென்று மறைய, எழிலைச் சுத்தமாக மறந்தவன் படிப்பில் தனது முழு கவனத்தையும் செலுத்த பப்ளிக் எக்ஸாம் நல்லபடியாக முடிந்தது.. பள்ளிக்கூடத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது..

அப்பொழுது ஒரு நாள் காலை நேரம் தனது சைக்கிளில் பாட்டி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தவன், அவளைப் பார்த்து சைக்கிளை நிறுத்த, எப்பொழுதும் போல அவளின் செய்கை இன்றும் அவனின் மனதைக் கவர்ந்தது..

ஒருகையில் பாவடையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு தலைவாரி அதில் மல்லிகை பூவைச் சூடி, காலில் செருப்பு இல்லாமல் அந்த சின்ன வரப்பில் மிகுந்த கவனத்துடன் வந்தவள் மேடேறும் இடத்தில் சைக்கிளில் நின்றிருந்தான் அன்பரசன்..

அவனை நிமிர்ந்து பார்த்தவள், “கொஞ்சம் நகர்ந்து நின்றால் நான் மேலே வருவதற்கு சரியாக இருக்கும்..” என்று அவள் கூறவே அவளுக்கு வழிவிட்டு நின்றான்..

அந்த காலைவேளையில் சூரியனின் செங்கதிர் ஒளி பட்டு வயல்வெளி பச்சை நிறத்தில் மினுமினுக்க அந்த பச்சை நிறமும், அவள் அணிந்திருந்த ஆரஞ்சு நின்ற பாவாடை சட்டையும் அந்த இடத்தில் அவளின் முகம் பார்க்க ஆழகாக இருந்தது..

அவள் வயலை விட்டு மேலே வந்ததும், எதுவும் பேசாமல் அமைதியாக தலைக் குனிந்துக் கொண்டே, “எக்ஸாம் எப்படி எழுதி இருக்கீங்க..?” என்று கேட்டாள்..

அவளின் கேள்வியில் திகைத்தவன், “ம்ம் நல்ல எழுதி இருக்கேன்.. ம்ம் உன்னோட முழுப்பெயர் என்ன..?” என்று கேட்டான்..

“என்னோட பெயர் எழில்விழி..” என்று சொல்லவும் அவளின் பெயரை மனதிற்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டவன் முகத்தில் புதிதாக தோன்றியப் புன்னகையுடன்!

“அடுத்து பத்தாம் வகுப்பு இல்ல..?! நல்ல படி..” என்று அவனே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்ல சரி என்று தலையசைத்தவள்,

“நீங்க அடுத்து என்ன படிக்க போறீங்க..?!” என்று கேட்டதும், “வக்கீலுக்கு படிக்க போகிறேன்..” என்று சொல்லவும், அவனை நிமிர்ந்து பார்த்தவள்,

அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே, “அங்கையாவது குற்றவாளியைச் சரியாக கண்டுபிடிங்க..” என்று முணுமுணுக்க, அவள் சொன்னது அவனின் காதில் சரியாக விழுந்தது..

“ம்ம் நல்லாவே பேசுகிறாய்..” என்று அவன் குறுஞ்சிரிப்புடன்! எப்பொழுதும் போல ‘ஹையையோ..’ கையை உதறினாள்.. அவளின் அந்த சைகை கூட அவனுக்கு மிகவும் பிடித்தது..

“நான் குற்றவாளியைக் கண்டு பிடிப்பது இருக்கட்டும்.. நீ நல்ல படி..” என்று சொல்ல, “நீ அடுத்து என்ன படிக்க போகிறாய்..?” என்று கேட்டதும், “நானா..?” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள்..

அவள் அதிர்ச்சியைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்தவன், “ம்ம் நீதான்..” என்றான்

“இல்லங்க.. எங்க வீட்டில் படிக்க வைப்பாங்களா என்று தெரியல.. அண்ணா இதற்கு எல்லாம் செலவு பண்ண மாட்டான்.. பண்ணிரண்டாம் வகுப்பு வரையில் படிப்பேன் அதுக்கு மேல் தெரியல..” என்று சொல்ல, அவளின் முகத்தைப் பார்த்தவன்,

“அண்ணாவிடம் கேளு..” என்று சொல்ல அவனைப் பார்த்து மெல்ல இதழ்களை விரித்து சிரித்தவள்,

“போனமுறை உங்களிடம் பேசியதற்கு என்னோட அண்ணா அடி வெளுத்துவிட்டான்.. இதில் நான் மேலே படிக்கணும் என்று சொன்னால் எனக்கு சமாதியே கட்டிவிடுவான்..” என்று கூறினாள்

அவள் கூறியது கேட்டு அவனுக்கு மனம் வலிக்க அவளே மீண்டும் தொடர்ந்தாள்..

“என்னோட படிப்பு என்ன ஆனால் என்ன..? நீங்க நல்ல படிங்க..” என்று சொல்லிவிட்டு அவளின் வழியைப் பார்த்து செல்ல, “ஆஷா என்ன படிக்க போகிறாள்..?” என்று கேட்டதும் நடந்துக் கொண்டிருந்தவள் நின்று அவனைத் திரும்பிப் பார்த்து,

“ஆஷாயும் பள்ளிக்கூடம் மாறிவிட்டாள்.. அவளோட அப்பாவிற்கு டிரான்ஸ்பர் வந்திருப்பதால் டி.சி. வாங்கிவிட்டாள்.. அடுத்த முறை ஊருக்கு வந்தால் வந்து பார்க்கிறேன் என்று சொல்லி இருக்க..” என்று சொல்ல அவனும் சரியென்று தலையசைத்து விட்டு தன்னுடைய வழியைப் பார்த்து நடக்க,

அவள் அடிவாங்கினால் என்று கூறியது அன்புவின் மனதில், ‘இவளை அடிக்கும் அளவிற்கு இவள் ஒரு தப்பும் செய்யவில்லையே.. பாவம் ரொம்ப பலமாக அடித்துவிட்டான் போல..’ என்று நினைத்தவன்,

அவளின் பக்கம் திரும்பி, “ஸாரி என்னால் தானே நீ அடிவாங்கினாய்..” என்று கூறியதும் நடந்து கொண்டிருந்தவள் நின்று அவனைத் திரும்பிப் பார்த்தாள்..

அவன் ஸாரி கேட்டதும் அவளின் மனதில் தயக்கம் சூழ, “என்னங்க என்னிடம் எல்லாம் மன்னிப்பு கேட்கிறீங்க..?!” என்று தரையைப் பார்த்துக் கொண்டே கூறினாள்..

“மன்னிப்பு அவ்வளவு பெரிய வார்த்தையா..?” என்று அவளிடம் கேட்டான்..

“ம்ம் என்னோட அப்பா அப்படித்தான் சொல்வாங்க..” என்று அவள் சொல்லவும், “நீ ஆஷாவிற்காக என்னிடம் கேட்டதும் மன்னிப்புதானே..? அப்போ அது பெரிய வார்த்தையா உனக்கு தோணலையா..?” என்று கேட்டான்..

அவனை ஒரு நொடி நிமிர்ந்து நோக்கியவள், இல்லை என்று தலையசைக்க அவளின் செய்கை எல்லாம் அவனின் மனம் அவளிடம் தொலைய காரணமானது..

அவளின் அமைதி அவனின் மனதை மிகவும் கவர்ந்தது.. அவனை நிமிர்ந்து பார்த்தவள், திரும்பி தன்வழியில் நடக்க, அவனும் அவனின் பாட்டியின் வீட்டை நோக்கி சைக்கிளில் சென்றான்..

அடுத்து அவனுக்கு ரிசல்ட் வர அதில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தான் அன்பரசன்.. அவனை மேல் படிப்பை மனதில் கொண்டும் தங்களின் தொழிலை விரிவு படுத்தவும் சென்னை செல்வது மிகவும் முக்கியமாக படவே,

தியாகு அவனின் ஜெயந்தியிடம், “அம்மா நாங்க சென்னை போலாம் என்று இருக்கிறோம்.. ஏன் என்றால் அன்புவிற்கு வக்கீலுக்கு படிக்க சென்னை வசதியாக இருக்கும்.. அதுவும் இல்லாமல் என்னோட தொழிலுக்கும் நல்ல ஒரு இடம் சென்னை என்று தோன்றுகிறது..” என்று சொல்ல,

சிறிது நேரம் யோசித்த ஜெயந்தி, “ம்ம் சரிப்பா.. உனக்கு எது சரின்னு படுதோ அதை செய்..” என்று சொல்லிவிட்டு எழுந்ததும் அவர்கள் பேசியதை மறந்து நின்று கேட்ட இனியா,

“அப்பா எனக்கு இங்கே தான் பிடித்திருக்கிறது.. நான் பாட்டிக்கூடவே இருக்கேன்.. நீங்க மாசம் ஒருமுறை என்னை வந்து பார்த்துட்டுப் போங்க..” என்று சொல்ல,

“என்ன இனியா நீ இல்லாமல் நாங்க மட்டும் எப்படிடா..?” என்று கேட்டதும், “தியாகு நானே சொல்லணும் என்று நினைத்தேன் பேத்தி என்னோடு இருக்கட்டும்டா.. நீங்க மட்டும் சென்னை போங்க.. என்னால் இவளைப் பிரிந்து இருக்க முடியாதுப்பா..” என்று சொல்ல,

“சரிம்மா ஆனால் உங்களின் பேரன் இருவரையும் சமாளிக்கும் பொறுப்பு உங்களுடையது..” என்று சொல்லவும் சரியென்று அன்பையும், அறிவையும் சமாளித்து அவர்களை சென்னை அனுப்பி வைத்தார் ஜெயந்தி..

அன்று எழிலைப் பார்த்தவன் அதன்பிறகு அவளை அவன் பார்க்கவே இல்லை.. ஆஷா ஒருபக்கம் சென்றுவிட, அன்பு ஒரு பக்கம் சென்றுவிட, எழிலும் தனது பாதையில் நடந்தாள்..

இவர்கள் மூவரின் சந்திப்பும் இனி எப்படி இருக்கும்..? எழில் தனது மனதை அறிவாளா..? அவளின் விழியில் தன்னை தொலைத்ததை அன்பு அறிவானா..? ஆஷா இவர்கள் இருவரையும் சந்திப்பாளா..? இந்த கேள்விக்கு எல்லாம் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்..
 




vadivelammal

இணை அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
574
Reaction score
1,781
Location
bangalore
hi sandhiya sri
Nice updatema.kalangamillatha anbu manathinarukku privu oru visayamillai. ellam nanmaikke entru ninnaithu kollavendiyathu thaan tharkalika privu niranthara payanthirkku valikaati avalvu thaan
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top