• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Unathu Vizhiyil Tholainthen Penne! - 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் - 8

ஆஷாவைத் துரத்திக்கொண்டு அவர்களின் வயலுக்கு வந்த மகளின் முகத்தில் இருந்த புன்னகையைப் பார்த்த சுந்தரம் மனம் சந்தோசம் கொள்ள, “என்னம்மா உன்னோட தோழி வந்தும் அவ்வளவு சந்தோசமாக இருக்கிறாய்..?” என்று கேட்டதும் சிரித்தவளைப் பார்த்தவர்,

“இப்படியே இரும்மா.. எப்பொழுதும் சந்தோசமாக எதுவாக இருந்தாலும் அப்பா நான் பார்த்துக் கொள்கிறேன்..” என்று கூறியவர், மஞ்சுவை அவளின் கையில் கொடுக்க, அவளைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தனர் ஆஷாவும், எழில்விழியும்!

அவள் வீட்டிற்குள் நுழைத்தும் தான் அவளுக்கு ஜெயந்திம்மா கொடுத்துவிட்ட துணி ஞாபகம் வர, “ஆஷா நீ மஞ்சுவைக் கொஞ்சம் பார்த்துக் கொள் இதோ வருகிறேன்..” என்று கூறியவள் தென்னந்தோப்பில் தங்கள் வந்த வழியில் பையைத் தவற விட்டதைத் தேடி வந்தவள்,

அது எப்படியும் ஜெயந்திம்மா வீட்டில் இருக்கும் என்று அங்கே சென்று அதை வாங்கிக் கொண்டு விரைவாக வீட்டிற்கு வந்தாள்.. வீட்டிற்குள் வந்தும் ஒடிவந்து தண்ணீரைக் குடித்தவள்,

“ஸ்ஸ் இன்னைக்கு என்ன என்ன ஓட்டம் ஓடவைத்துவிட்டாய்..” என்று ஆஷாவின் அருகில் அமர்ந்தாள்..

அவளோ எழில் முகத்தைப் பார்த்துவிட்டு மஞ்சரிக்கு தட்டிக் கொடுக்க அவள் அவளின் மடியில் படுத்து உறங்கியதும் மஞ்சுவை கயிற்றுக்கட்டிலில் படுக்க வைத்த ஆஷா, எழில் அருகில் வந்தாள்..

அவளைப் பார்த்தும், “ஆஷா வா சாப்பிடலாம்..” என்று அழைக்க அவளோ மெளனமாக அவளின் கையைப் பிடித்து அவர்கள் வீட்டின் பின்னே இருந்த தோட்டத்திற்கு அழைத்துச் சென்றாள்..

அங்கே சென்று மாமரத்தின் அடியில் இருந்த கட்டிலில் அமர்ந்த இருவரின் மௌனம் கண்டு தென்றல் கூட அமைதியாக அவர்களை வருடிச் சென்றது அந்த மதியான வேளையில்...!

“எழில் நீ எப்படி இருக்கிறாய்..?” என்று மௌனத்தை முதலில் கலைத்தாள் ஆஷா..

அவளின் முகத்தை நிமிர்ந்து பார்த்த எழில், “எனக்கு என்ன ஆஷா..? மனதில் நினைப்பதை சொல்லாமலே வாங்கித் தர அப்பாவும், என்மேல் உயிரையே வைத்திருக்கும் அண்ணியும், அடுத்து மஞ்சு குட்டி என்று என்னோட வாழ்க்கை அப்படியே போகிறது..” என்று சிரித்தவள் எழில்விழி.. ஆஷாவிற்கு சொல்லாமல் சொல்லியது எழில்விழி படும் துன்பங்களை கூறியது அவளின் முகத்தில் இருந்த புன்னகை...!

அவளை தனது மடியில் படுக்க வைத்துக் கொண்ட ஆஷா, “உன்னோட சோகம் எனக்கு தெரியும் டா.. உன்னோட அந்த புன்னகை சொல்லிய சோகம் எனக்கு தெரியாத என்ன..?” என்று கேட்டவள்

அவளின் கூந்தலை வருடிக் கொடுக்க கண்கள் கலங்கிய எழில்விழி, “ஆஷா நீ போன பிறகு என்னோட வாழ்க்கையில் என்னென்னமோ நடந்துவிட்டது..” என்று கூறியவள்,

“அண்ணா எப்படிப்பட்டவன் என்பதை நான் முழுவதும் அறித்துக் கொண்டேன்.. அண்ணி ரொம்ப நல்லவங்க ஆஷா எனக்காக எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு அமைதியாக இருக்கிறாங்க..” என்று அவளிடம் நடந்தது அனைத்தையும் கூறியவள்,

அவளின் மடியில் படுத்து அழுக அவளைத் தாயாக மடிதாங்கினாள் ஆஷா.. அவளது கதறலை நிறுத்தாமல் தொடர அவளின் கதறல் பார்த்து அமைதியாக அமர்ந்திருந்தாள் ஆஷா..

இந்த கதறல் இரண்டு வருடம் இதயத்தில் அடக்கி வைத்திருந்தது.. மனதில் இருக்கும் சோகத்தை நமக்கு பிடித்தவர்களிடம் மட்டும் சொல்ல நினைக்கும் பொழுது அவர்கள் அதை நிராகரிக்கின்றனர்..

எல்லோரும் தனக்கு ஒரு தோழி இருந்தால் தனக்கு ஒரு தோழன் இருந்தால் என்று நினைப்பதை விடுத்து நானும் ஒரு தோழியே என்று மாறும் வேளையில் தான் அவள் அப்பா, அம்மா, இருவரையும் தாண்டிய ஒரு சொந்தமாக மாறுகிறாள்.. இது தான் தோழமை..

அந்த புரிதல் அனைவரிடமும் வராது.. நாம் யாரிடம் அதிகம் சண்டை போடுகிறோமோ அவர்கள் மீதும், ஒரு துக்கம் வந்த வேலை நமது மனம் முதலில் நினைப்பது தனது தோழன் அல்லது தோழியையே..!

ஏன் என்றால் அவளுக்கு தான் நம்மைப் பற்றி முழுவதும் தெரியும்.. காதலில் கூட சில இடத்தில் உண்மையை சொல்லாமல் மறக்க நினைக்கும் மனம், தோழமையில் என்று வந்தால் மனம் திறக்கவே நினைக்கும்..

அந்த புரிதல் தான் இவர்களைச் சேர்த்து வைத்திருக்கிறது.. இந்த இரண்டு வருடம் இருவர் வாழ்க்கையிலும் என்ன நடந்தது என்று இருவரும் அறியாமல் இருந்தாலும் கூட, தோழியின் சிரிப்பை வைத்தே அவளின் துக்கம் எத்தகையது என்று கண்டுகொள்ளும் தோழமை பலருக்கு கிடைப்பதில்லை..

அவள் கதறி முடித்தும், “எழில் இதெல்லாம் முதலில் அனுபவிக்கும் நீ ரொம்பவே லக்கி.. இதெல்லாம் பிறந்த வீட்டோடு முடிந்துவிடும் புகுந்த வீட்டில் உனக்கு சந்தோசம் என்ற சொர்க்க கதவுகள் திறக்க காத்திருக்கிறது..” என்று அவளிடம் சொல்லி அவளைத் தேற்றினாள் ஆஷா..

அவள் அப்படி கூறியதும் அவளின் மடியில் இருந்து எழுந்து, “புகுந்த வீடா..? எனக்கா..?” எழில்விழி முகத்தில் ஒரு கசப்பான புன்னகை தோன்றி மறந்தது..

“ஏன் எழில் தவறாக நினைக்கிறாய்.. உனக்கும் திருமணம் ஆகும்.. உனக்கும் ஒரு நல்ல குடும்பம் அமையும் அதுவரை காத்திரு..” என்று ஆஷா சொல்ல,

“என்னோட அண்ணி எவ்வளவு கனவுகளுடன் வந்திருப்பாங்க.. அவர்கள் நினைத்தா நடந்தது..?” என்று எதிர் கேள்வி கேட்டாள் எழில்விழி..

“உன்னோட வாழ்க்கையில் மற்றவரை வைத்து ஒப்பிடு பழகாதே.. அது கணக்கு வழக்குக்கு மட்டும் தான் சரிப்படும்.. நிஜ வாழ்க்கைக்கு எதுவும் சரிவராது.. உன்னோட எதிர்காலம் நல்ல படியாக அமையும் என்று நினைவில் வைத்துகொள் அது போதும்.. மற்றது தானாக நடக்கும்..” என்று கூறினாள் ஆஷா..

“ஆஷா உன்னிடம் ஒன்று கேட்கணும் என்று நினைத்தேன்.. என்னை இரண்டு வருடம் பார்க்காமல் இப்பொழுது எப்படி அடையாளம் கண்டுகொண்டாய்..?” என்று கேட்டாள் எழில்விழி..

“அது உன்னோட உனது விழிதான் எனக்கு உன்னை காட்டிக் கொடுத்தது..” என்று அவளின் கண்களைப் பார்த்துக் கூறியவள், “இந்த விழியில் தொலையப்போகும் அந்த அதிர்ஷ்டசாலி யார் என்று தான் தெரியவில்லை..” என்று குறும்பாகக் கூறினாள் ஆஷா..

அந்த கேலியில் முகம் சிவந்த எழில், “இப்பொழுது எங்கே இருக்கிறாய் ஆஷா..? அப்பா எப்படி இருக்கிறார்..?” என்று ஆஷாவிடம் கேட்டாள் எழில்விழி..

“சென்னையில் இருக்கிறோம் எழில்.. அப்பா ரொம்ப நல்ல இருக்கிறார்..” என்று கூறியவளின் முகம் பார்த்த எழில், “அடுத்து என்ன படிக்க போகிறாய்..?” என்று கேட்டதும், அவளைப் பார்த்து புன்னகை புரிந்தவள்,

“வக்கீலுக்கு படிக்கலாம் என்று இருக்கிறேன் எழில்..” என்று சொல்லவும் அவளின் மனத்திரையில் அன்புவின் முகம் மின்னி மறந்தது..

“எழில் நான் உன்னோட அண்ணியைப் பார்க்கலாமா..?” என்று கேட்பதற்கும் தனம் அவர்களை நோக்கி வரவும் சரியாக இருக்க,

“என்ன என்னோட பெயர் அடிபடுது..?” என்று கேட்ட தனத்தின் முகத்தைப் பார்த்த ஆஷா,

“அண்ணி..” என்று இடத்தை விட்டு எழுந்தவள் ஓடிவந்து தனத்தைக் கட்டிக் கொள்ள, “என்னம்மா..” என்று பாசமாகக் கேட்டார் தனம்..

அவரிடம் இருந்து விலகியவள், “எழில் அனைத்தையும் சொன்னாள்.. இவளுக்கு இன்னும் வெளி உலகம் தெரியாது.. இவளை இவ்வளவு கஷ்டத்திலும் பத்திரமாகப் பாதுகாக்கும் உங்களுக்கு ரொம்ப நன்றி..” என்று கூறியவளைப் பார்த்து,

“அவள் என்னோட மகள் ஆஷா.. என்ன கொஞ்சம் கொஞ்சம் வளர்ந்துவிட்டாள்.. அவளை நான் பார்த்துக் கொள்ள நீ எதுக்கு நன்றி என்று பெரிய வார்த்தை எல்லாம் சொல்கிறாய்..?” என்று கேட்டார்..

அவரின் முகத்தைப் பார்த்து, “நீங்க தப்ப நினைக்கவில்லை என்றால் நான் உங்களை அம்மா என்று கூப்பிடவா..?!” என்று கேட்டவளை இழுத்து தோளோடு அணைத்துக் கொண்டார் தனம்..

அவளின் தோழமையும் அவள் எழில்மேல் வைத்திருக்கும் பாசமும் கண்டு தனத்திற்கு மனம் நிறைந்து போனது.. “எனக்கு நீயும் மகள்தாண்டா..” என்று அவளின் உச்சியில் முத்தம் பதித்தவர்,

“இருவரும் வாங்க சாப்பிடலாம்..” என்று சொல்ல, “அம்மாவின் கைப்பக்குவம் சாப்பிட்டு வருடம் இரண்டு ஆகிறது..” என்று கூறியதில் மறுபடியும் எழில் மனதில் அன்புவின் முகம் மின்னி மறந்தது..

தோழிகள் இருவரும் சாப்பிட, தனம் அவர்களுக்கு பார்த்து பார்த்துப் பரிமாற வயிறார சாப்பிட்டவர்கள் முகம் பார்த்து தனத்தின் முகம் மலர்ந்தது..

அவர்கள் இருவரும் தங்களின் பள்ளி காலத்தைப் பற்றி பேசிகொண்டிருக்க அனைத்தும் எடுத்து வைத்த தனம், “ஆஷா நீ இங்கே இரும்மா ஊரில் திருவிழா முடிந்ததும் போகலாம்..” என்று தனம் சொல்ல,

“இல்லம்மா அப்பாவிடம் நாளை வருவதாக சொல்லி இருக்கிறேன்.. இங்கே என்னோட மாமா வீடு இருக்கு அவங்களைப் பார்க்க வருவதாக சொல்லிட்டு வந்தேன்.. அவங்க இன்னைக்கு ஊரில் இல்லமா.. அதுதான் இவளைப் பார்த்துவிட்டு அங்கே போகலாம் என்று இங்கேயே வந்துவிட்டேன்..” என்று கூறினாள் ஆஷா

அவளைப் பார்த்து சிரித்த தனம், “சரிம்மா நீ இங்கே இரு நான் வருகிறேன்..” என்று சொல்லிவிட்டு அவர்கள் வீடு நோக்கிச் சென்றாள்..

அவர்கள் வீட்டிற்கு அதிகம் தொலைவு இல்லை என்பதால் அடிக்கடி வந்து மஞ்சுவையும், எழிலையும் பார்த்து செல்வாள் தனம்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
இங்கே இவர்கள் அரட்டை அடித்துக் கொண்டிருக்க, அங்கே தங்கையின் அறையில் அமர்ந்திருந்தான் அன்பரசன்.. அவளின் முகத்தில் இருந்து அவனால் எதையும் சொல்லமுடியவில்லை..

“எதுக்கு என்னைப் பார்க்க வேண்டும் என்று கூறினாய் இனியா..?” என்று அன்பு கேட்டதும், “நான் உன்னைப் பார்க்க வேண்டும் என்று தான் அழைத்தேன்..” என்று சமாளித்தாள் இனியா

“இல்ல இனியா நீ பொய் சொல்கிறாய்.. என்ன விஷயம் சொல்லு..” என்று அதட்ட, “அண்ணா நான் இங்கேயே இருக்கிறேன்.. பத்தாம் வகுப்பு முடித்ததும் அப்பா என்னை சென்னை வர சொல்லி இருக்கிறார்.. எனக்கு சென்னை வர விருப்பம் இல்லை..” என்று கூறிய தங்கையின் முகத்தைக் கூர்ந்து கவனித்தவன்,

“நீ இங்கே படிக்கிறேன் என்று சொல்வதற்கு இது மட்டும் தான் காரணமா..?” என்று கேட்டவனின் முகத்தைப் பார்த்தவள், “இது மட்டும் காரணம் அல்ல..” என்று அவள் சொல்லி நிறுத்திய இனியாவின் முகத்தைக் கேள்வியாகப் பார்த்தான் அன்பரசன்..

அவனின் பார்வை புரிந்து, “அண்ணா நான் உன்னிடம் ஒரு பொண்ணு பற்றி சொல்வேன் இல்ல..” என்று கூறியவள் முகத்தில் பயம் தெரிந்தது..

அவளின் முகம் பார்த்தவன், “சொல்லு இனியா.. அவங்களுக்கு என்ன..?” என்று கேட்டான்.. அவனின் குரல் கோபத்தை உள்ளாடக்கி இருந்தது..

“நீ அவங்களைத் திருமணம் செய்துக்கொள்ள நான் இங்கே இருந்தால் தான் சரியாக இருக்கும்..” என்று பெரியவள் போல கூறிய தங்கை அவன் கண்களுக்கு இன்னமும் குழந்தையாகவே தெரிந்தாள்..

“உனக்கு என்ன வயசு ஆச்சு..? நீ எதுக்கு என்னோட திருமணம் பற்றி இப்பொழுது பேசுகிறாய்..” என்று கோபத்தில் அவளை அதட்டினான் அன்பரசன்..

அவனின் அதட்டலில் அவளின் முகம் வாடிவிட, அவளின் அருகில் சென்றவன், “இங்கே பாரும்மா நான் இன்னும் படிக்கணும்.. பாட்டி தான் இப்படி சொல்றாங்க என்று பார்த்தால் நீயும் அவங்களைப் போல பண்ணுகிறாய்..” என்று கோபத்தில் கேட்டான்..

“அவங்களுக்கு என்ன குறை உனக்கு பிடித்தாலும் பிடிக்காமல் போனாலும் அவங்கதான் எனக்கு அண்ணியாக வரணும்..” என்று அவள் பிடிவாதமாகச் சொல்வதைப் பார்த்து அவளை அப்படியே இரண்டு அடி விடலாம் போல இருந்தது அன்புவிற்கு..!

இருந்தாலும் கைகளை கட்டுப்படுத்திக்கொண்டு, “உனக்கு என்ன அவங்களைப் பிடித்திருக்கிறதா..?” என்று கேட்டதும் அவள் ஆமாம் என்று தலையசைத்து,

“எனக்கு அவங்களை ரொம்பப்பிடிக்கும்..” என்று குழந்தை போல சிணுங்கியவளைப் பார்த்து, அவளின் முகத்தை பார்த்தவன் யோசிக்க ஆரமித்தான்..

சிறிது நேரத்தில் தங்கை பக்கம் திரும்பியவன், “இன்றிலிருந்து இன்னும் சரியாக ஆறு வருடம் என்னிடம் திருமணம் பற்றி பேசாதே இனியா..” என்று கேட்டதும் அவள் யோசனையோடு,

“ஆறு வருடம் போன பிறகு நான் இவங்களைப் பற்றி பேசி நீ இவங்களை வேண்டாம் என்று சொன்னால் நான் என்ன பண்ண..?” என்று கேட்டாள்

“இந்த ஆறு வருடத்தில் எனக்கு யார் மேலும் காதல் வராமல் இருந்தால் மட்டும் தான் இவங்களை அதாவது நீ சொல்லும் பெண்ணை நான் திருமணம் செய்வேன்..” என்று அழுத்தமாக கூறியதும்,

“காதல் வந்தால் நீ அவங்களைத் திருமணம் செய்ய மாட்டாய் இல்லையா..?” என்று கேட்டாள் இனியா.. [இவன் சொல்லும் அந்த காதலி நம்ம எழிலா..?]

“ம்ம் எனக்கு காதல் வந்தால் கண்டிப்பாக இந்த பெண்ணை நான் திருமணம் செய்ய மாட்டேன்..” என்று அவன் சொல்லவும்,

அவளும் சிறிது நேரம் யோசித்துவிட்டு, “சரிங்க அண்ணா,, ஆனால் ஆறு வருடம் கழித்தும் நீ என்னிடம் இதே பதிலைச் சொன்னால் அடிதான் வாங்குவாய்..” என்று அவள் மிரட்டவும்

அவளைப் பார்த்து சிரித்தவன், “இது உனக்கும் எனக்கும் இடையில் இருக்கும் ஒப்பந்தம் ஓகே இது மற்ற யாருக்கும் தெரிய கூடாது..” என்று அவன் சொல்லவும், சரியென்று புன்னகை பூத்தாள் அன்புவின் தங்கை இனியா..

அவள் சொல்லும் பெண் எழில் என்று தெரிந்திருந்தால் அவளைப் பார்க்க நேரில் சென்றிருப்பானோ..? இல்லை வேறு பெண்ணின் மேல் காதல் வரும் என்று சொல்லி இருப்பானா..?

“அண்ணா இந்த டீல் ல நான் சொன்னதை நீ மறக்காதீங்க.. அப்பாவிடம் பேசி பர்மிஷன் வாங்க வேண்டியது உங்களின் பொறுப்பு..” என்று கூறிய தங்கையைப் புரியாமல் பார்த்தான்..

“எது பற்றி அப்பாவிடம் பர்மிஷன் வாங்கணும்..” என்று அவன் கேட்டதும், “அண்ணா..” என்று கத்தினாள் இனியா..

“எதுக்கு இப்பொழுது கத்துகிறாய்..” என்று இரண்டு காதையும் கைகளில் அடைத்துக் கொண்டு விளையாட்டு போல தங்கைச் சீண்டினான்..

“விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பானா..? என்று கேட்பது போல கேட்கிறாயா..?” என்று கேட்டாள்..

“இனியா நல்ல பழமொழி சொல்கிறாய்.. எல்லாம் பாட்டியோட ட்ரைனிங் ஆ..” என்று கேட்டதும், அவனுக்கு அவள் கொடுத்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் காற்றில் பறக்க,

“டேய் உன்னை என்ன செய்கிறேன் என்று பாரு..” என்று அவளின் படுக்கையில் இருந்த தலையணையை அவனின் மீது தூக்கி எறிய அவளின் கோபம் கண்டு புன்னகை செய்தவன்,

“ஓகே.. ஓகே.. அப்பாவிடம் பேசி பர்மிஷன் வாங்கித் தருகிறேன்.. நீ ருத்ர தாண்டவம் ஆடாதே..” என்று சொல்ல அவள் அவனை அடிக்க துரத்த அதற்கு மேல் அங்கே நிற்காமல் ஓடிவிட்டான் அன்பரசன்..

இனியாவிடம் பேசிவிட்டு அவனின் அறைக்கு வந்தவன் மெல்ல யோசிக்க ஆரமித்தான்.. காலையில் இருந்து அவன் நினைக்காதது எல்லாம் நடக்க, ‘எழிலை மட்டும் பார்க்க முடியவில்லையே..’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்..

‘ஏன் நான் இனியாவிடம் அப்படி சொன்னேன்..?! என்னோட மனதில் எழில் இருக்கிறாளா..?!’ என்று அவனின் மனதிடம் அவன் கேள்வி எழுப்பினான்..

அவனின் கேள்விக்கு பதிலாக அவளின் விழிகளே அவனின் மனதில் ஓவியம் போல வரவே, ‘அவளின் அந்த விழிகளில் தன்னை தொலைத்துவிட்டேனா...?’ என்று தனக்கு தானே கேட்டான்..

அதற்கு அவனின் மனம் அமைதியாக இருக்க, ‘என்ன அமைதியாக இருக்கிறாய்..? எனக்கு பதில் சொல்லு..’ என்று அவன் கேட்டதும்,

அவனின் மனம், ‘ எனக்கு அதற்கு உண்டான பதில் நல்ல தெரியும்.. ஆனால் நான் அதை சொல்லமாட்டேன்.. இதை நீயே உணராமல் என்னிடம் இது காதலா..? என்று கேட்டால் எனக்கு எப்படி விடை தெரியும்.. நீ காதல் என்று உணர்ந்தால் தானே நான் உனக்கு வந்திருப்பது காதல் தான் என்று அடித்து பேச முடியும்..’ என்று அவனை குழப்பியது..

அவன் குழப்பத்தில் தலையைப் பிடித்து படுகையில் அமர, ‘இப்படி நீ போய் பிரச்சனையில் மாட்டிவிட்டாயே அன்பு..’ என்று மனம் சிரிப்புடன் கேட்டதும்

அன்பு தனது மனதிடம், “அவள் சின்ன பொண்ணு அவளுக்கு என்ன தெரியும் குழந்தை போல சொல்கிறாள்.. அவளிடம் இது பற்றி விளக்கமா கொடுக்க முடியும்..? அப்படியே விளக்கம் கொடுத்தாலும் அதை புரிந்து கொள்ளும் வயதா அவளுக்கு..?” என்று கேட்டான்..

அவனின் மனம் அமைதியாக இருக்க, ‘என்னோட தங்கை இப்பொழுது சின்னப்பெண்.. அவள் வளர்ந்தால் அவள் மாறிவிடுவாள்.. அவளை அவளின் போக்கில் விடுவதுதான் சரி..’ என்று கூறியவன்

‘இதுவே நாளை உன்னோட வாழ்க்கையில் வரும் பிரச்சனையின் ஆரம்ப புள்ளியாக இருக்கும்.. அதனால் முதலில் நல்ல முடிவாக எடு.. இல்லையென்றால் உன்னோட வாழ்க்கையே திசை மாறிவிடும்..’ என்று அவனின் மனம் அவனுக்கு அறிவுரை வழங்கியது..

‘நீ நினைப்பது போல எதுவும் நடக்காது.. அதற்குள் அந்த பெண்ணிற்கு வேறொரு இடத்தில் திருமணம் நடந்தே தீரும்..’ என்று சொல்ல, அவனின் மனம் அமைதியடைய படுக்கையில் படுத்தவன்

அவளை முதலில் சந்தித்த நாளில் இருந்து நினைத்துப் பார்க்க, அவனின் முகம் தானாக மலர “ஏய் எழில்விழி எங்கே இருக்கிறாய்..?” என்று வாய்விட்டு கேட்டான் அன்பரசன்..

இவன் நினைப்பது போல நடந்தால் இவனின் எழில் இவனுக்கு கிடைக்க மாட்டாள் என்ற உண்மை புரியாமல் இருக்கிறான் அன்பரசன்..

அந்தபெயர் அவனின் அடிமனதில் இருந்து வந்தது.. அவன் வரும் பொழுதே வந்து அவனின் மீது மோதியது அவனின் எழில்தான் என்று அறியாதவன்.. அவளின் பிறந்த நாளையும் அறியாமல் தான் போனான்..

இந்த உண்மை அவனுக்கு புரியுமா..? இல்லை கடைசிவரை புதிராகவே இருக்குமா..? எழில்விழியை அன்பரசன் சந்திப்பானா..? பொருத்திருந்து பார்ப்போம்..!
 




Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
அருமையான பதிவு சந்தியா? நட்பின் பெருமைய அழகா சொல்லியிருந்தீங்க.. எழில் அழும் போது ரொம்பவே பாவமா இருந்தது.. எப்போ தான் எழிலன்பு பார்பார்களோ? அந்த நாளும் விரைவில் வாராதோ ?
 




GREENY31

மண்டலாதிபதி
Joined
Apr 12, 2018
Messages
284
Reaction score
545
Location
Sattur
Hai sis,

Romba arumaiyannae Pathivu Sis. ..
Aasa and ezhil irruvarrin friendship very nice pa. ....aasa and anbu irruvarrum inni meet seivangallo? ...
eagerly waiting for ur nxt update sis. ...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top