• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Unathu Vizhiyil Tholaithen Penne! - 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
ஏற்கனேவே அண்ணனுக்கு பயந்தவள், இப்பொழுது அண்ணனுக்கு திருமணம் நடந்து அண்ணி வந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று மிகவும் பயந்து போயிருந்தாள் எழில்விழி..

ஆனால் தனம் அப்படி ஒன்றும் பெரிய கொடுமை பண்ணும் அண்ணி கிடையாது என்பதை வந்த ஒரே வாரத்தில் அறிந்துக் கொண்டாள்..

தனம் அந்த வீட்டில் முதலில் அடியெடுத்து வைத்த அன்று, அவளின் கணவன் சொன்ன சொல் தான் அவளின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது..

அவள் திருமணம் ஆகி வந்ததும் அவன் சொன்ன ஒரே விஷயம், “நீ எக்காரணத்தைக் கொண்டும் என்னோட தங்கை இருவரையும் கொடுமை செய்ய கூடாது..” என்று கூறியதும் அவனை நிமிர்ந்து பார்த்தாள் தனலக்ஷ்மி,

“என்னைப் பார்த்தால் கொடுமை செய்வது போலவா இருக்கிறது உங்களுக்கு..?” என்று கேட்டதும் அவளை நிமிர்ந்துப் பார்த்த முத்துக்குமார்,

“நான் உன்னை கொடுமை செய்ய வேண்டாம் என்று சொன்னது என்னோட தங்கைகள் மீது நான் வைத்திருக்கும் பாசத்திற்காக அல்ல.. இந்த ஐந்து ஏக்கர் நிலமும் எனக்கு மட்டும் வரவேண்டும்.. அதுக்காகத்தான் கூறினேன்..” என்று சொல்லவும் அவனைப் புரியாமல் பார்த்தாள் தனம்..

அவளின் பார்வையைப் புரிந்துக் கொண்டவன், “என்னம்மா புரியலையா..? நீ அவர்களை நல்ல பார்த்துக் கொண்டால் என்னோட அப்பா என்னை நம்பி இவர்கள் இருவரையும் அவர்களுடன் சேர்த்து நிலத்தையும் எனக்கு கொடுப்பார்..” என்று சொல்ல

“இப்பொழுதும் எனக்கு புரியலங்க..” என்று கூறினாள்..

“தெளிவாக சொல்கிறேன் என்னோட அப்பாவின் சொத்தை நான் யாருக்கும் தர விரும்பல.. அது என்னோட தங்கைகள் என்றாலும் கூட.. எனக்கு நான் மட்டும் நல்ல இருக்கணும் மற்ற யாரைப் பற்றியும் இப்பொழுது மட்டும் அல்ல எப்பொழுது அக்கறை கிடையாது..” என்று அவன் சொல்ல,

தாலி கட்டிய அன்றே அவனின் குணத்தை அறிந்துக் கொண்ட தனலஷ்மி, ‘இனி அந்த பிள்ளைகள் இருவரையும் இவனிடம் இருந்து பாதுகாக்க வேண்டும்.. இவன் பணத்திற்காக எது வேண்டும் என்றாலும் செய்வான்..’ என்று மனதில் நினைத்தவள்,

“நீங்க சொல்வது போலவே நடந்துக் கொள்கிறேன்..” என்று அவள் பணிவாகக் கூறவே, அவளைப் பார்த்துக் கர்வத்துடன் சிரித்தான் முத்துக்குமார்..

அவளின், ‘ஐயோ பாவம் தாய் இல்லாத பிள்ளைகள் இருவரும்.. இரண்டுக்கும் வயது வித்தியாசம் பதினைத்து வருடம்.. மடுவுக்கும், மலைக்கும் உள்ள வித்தியாசம்.. எழில்விழி பாவம் வெளி உலகம் தெரியாத பொண்ணு.. அதுவும் பருவத்தில் இருக்கும் பெண்..’ என்று நினைத்தவள் மனம் படபடவென்று அடித்துக் கொண்டது..

அடுத்த ஒருவாரத்தில் முத்துக்குமார் அனைத்து நடவடிக்கையும் அவளுக்கு அத்துபடியாக அந்த இரு மலருக்கும் தாயாக மாறினாள் தனலஷ்மி..

அவள் தான் எழில்விழியை மேல் படிப்பிற்கு போராடி அனுப்பினாள்.. இப்பொழுது பிள்ளைகள் பன்னிரண்டாம் வகுப்பு கூட முடிக்கவில்லை என்றால் யாரும் மதிக்க மாட்டார்கள் என்று போராட்டியே அவளை பன்னிரண்டாம் வகுப்பு வரையில் படிக்க வைத்தாள்..

இந்த போராட்டத்தில் கணவனுக்கே எதிரியாக மாறிப்போனாள் தனலஷ்மி.. அதுக்கு அவள் கவலைப்படவும் இல்லை.. அவளுக்கும் பாசம் என்றால் என்ன என்று அவளுக்கு நன்றாக தெரியும்..

தனலஷ்மி வந்த பிறகு குழந்தையை அவள் பராமரிக்க அப்பாவுடன் சேர்ந்து கொஞ்சம் வயல் வேலைகளையும் கற்றுக் கொண்டாள் எழில்விழி..

எதுக்கும் அவள் கலங்கவில்லை.. மனதில் ஒரு வைராக்கியம்.. தனக்காக அன்னை போலவே அண்ணி ஒருத்தி இருக்கிறாள் என்பதில் மனம் துவளாமல் படித்தவள் படிப்பை முடித்துவிட்டு வயலில் கால்பதித்தாள் இதில் இரண்டு வருடம் காற்றாக சென்று மறைய எழில்விழி தங்கை மஞ்சரி நடக்க ஆரமித்தாள்..

சென்னையில் இவர்கள் வாழ்க்கையும் தெளிந்த நீரோடையாக செல்ல, ஒருநாள் அன்புவின் அறைக்கு வந்த அறிவு அண்ணனின் அருகில் வந்து அமர, அவனை நிமிர்ந்து பார்த்த அன்பரசன், “என்ன அறிவு..?” என்று தம்பியைப் பார்த்துக் கேட்டான்..

“அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் அண்ணா..?” என்று கேட்டதும், “எந்த பாடத்தில் உனக்கு சந்தேகம்..?” என்று கேட்டான் அன்பு..

“எனக்கு பாடத்தில் சந்தேகம் இல்லை அண்ணா..” என்று அறிவு அண்ணனைப் பார்த்து சொல்ல அவனைப் பார்த்து கேள்வியாக புருவம் உயர்த்தினான் அன்பரசன்..

“உன்னோட டிப்பன் பாக்ஸ் திருடும் அந்த வினோத மிருகத்தை கண்டுபிடித்தாயா அண்ணா..? ஏன் கேட்கிறேன் என்றால் நீ பள்ளிக்கூடத்தின் கடைசியாக இருந்த நான்கு மாதமும் இரண்டு டிப்பன் பாக்ஸ் எடுத்துச் சென்றாய் அதுதான் கேட்டேன்..” என்று அவன் தயங்கித் தயங்கிக் கேட்டதும்,

“இந்த சந்தேகமா..? அது ஒரு பொண்ணுடா.. அவளுக்கு அம்மா இல்ல.. அவள் நம்ம வீட்டு சாப்பாடு சாப்பிட்டுவிட்டு அவளின் அம்மாவின் கைப்பக்குவம் பிடித்த காரணத்தால் இந்த மாதிரி செய்திருக்கிறாள்..” என்று சொல்ல,

“இந்த உண்மையை உனக்கு யார் சொன்னது..?” என்று அவன் கேட்டதும், “எனக்கு ரொம்பவே வேண்டப்பட்டவங்க ஒருத்தங்க சொன்னாங்க..” என்று சிரிப்புடன் சொன்னவன்,

அண்ணனின் முகம் பார்த்தவன், “அது யாரு அண்ணா..?” என்று கேட்டதும், “போடா போய் வேலையைப் பாரு.. நானே ஒருநாள் கண்டிப்பாக உனக்கு சொல்கிறேன்..” என்று சொல்லவும் அவனின் முகத்தை உற்று நோக்கியவன் அவனின் வேலையைக் கவனிக்க சென்றுவிட்டான்..

அடுத்த கல்லூரி வாழ்க்கை அவனின் மனதை மிகவும் கவரவே அதில் திசை மாறிய மனம், அவளின் நினைவுகள் அவனின் மனதின் அடி ஆழத்தில் சென்று மறைய அவளை சுத்தமாக மறந்தே போனான் அன்பரசன்..

அவனது கல்லூரி வாழ்க்கையும் அவனுக்கும் ஒரு புதிரை வைத்தே காத்திருந்தது.. இவன் இவனின் வேலைகளைக் கவனிக்க நாட்கள் பறந்தோடிச் சென்றது.. இப்படியே நாட்கள் கழிய இரண்டு வருடம் மயமாக சென்று மறைந்தது..

இருவரும் தங்களின் மனதை அறிந்துக் கொள்ளாமல் இருக்க, இவர்கள் வாழ்க்கையில் அடுத்த சந்திப்பும் வந்தது.. சந்திப்பு எப்படி இருக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்..
en ipd suyanalama irukanga oru sila characters ipd than athum kuda pirantha chanthukalave irukunga ????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top