• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

uruvamilla oru uravu 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
அத்தியாயம் – 2

மருத்துவமனையில் op முடித்துவிட்டு, அவள் இடத்தில் வந்து அமர்ந்த ப்ரீத்தியை பிடித்துக் கொண்டாள் சாஹித்யா. அங்கு அவனிடம் என்ன பேசினாள், என்று அவளுக்கு தெரிய வேண்டி இருந்தது.

“சாஹி, patient வருண் பத்தின டிடைல்ஸ் இது போதாது, இன்னும் சில விபரம் எல்லாம் வேணும். நாளைக்கு காலை 10 மணிக்கு அவர் இங்க வந்திடுவார், அதுக்குள்ள எனக்கு எல்லா விபரமும் வேணும்” என்று கூறியவளை பார்த்து வாயை பிளந்தாள்.

“நிஜமாவா! நாளைக்கு ட்ரீட்மென்ட் வர ஒத்துகிட்டாரா! ப்ளீஸ் டி அப்படி என்ன டி சொன்ன, இப்படி உடனே வர ஒத்துகிட்டார்” என்று ஆர்வம் மேலோங்க கேட்டாள் சாஹித்யா.

“சஞ்சனா, உங்க பின்னாடி தான் இருக்கிறான்னு சொன்னேன். அதுக்கு அப்புறம் ஒரு வார்த்தை பேசல மனுஷன், பேஸ்து அடிச்சா மாதிரி நின்னுட்டார்”.

“இன்னும் கொஞ்ச நேரத்துல, நாளைக்கு வரேன் ட்ரீட்மென்ட்க்கு அவரே சொல்லுவார். நீ இப்போ போய் நான் சொன்ன வேலையை பார்த்துட்டு வா” என்று கூறியவளை பார்த்து முறைத்தாள் சாஹித்யா.


“ஏண்டி! உனக்கு பேய் கண்ணுக்கு தெரியும்ன்னு, எனக்கு தெரியும். ஆனா, அதுக்குன்னு ஒரு patient கிட்ட போய் இதை சொல்லலாமா டி லூசு” என்று பதிலுக்கு திட்டினாள் சாஹித்யா.

“சாஹி! உனக்கு நல்லா தெரியும், இதை நான் எங்கேயும் யார் கிட்டயும் சொன்னதில்லை. சொல்ல வேண்டிய சூழல் வரும் பொழுது மட்டும் தான், நான் வாயை திறந்து சொல்லி இருக்கேன். உனக்கு என் மேல நம்பிக்கை இருக்கா? இல்லையா?” என்று அவளை பார்த்து அழுத்தமாக கேட்டாள் ப்ரீத்தி.

“நம்பிக்கை இல்லாம தான், உன் கூட இருக்கேனா நானு. அது எல்லாம் நிறைய நம்பிக்கை இருக்கு, சரி நான் கிளம்புறேன்” என்று கூறிவிட்டு சென்றாள் சாஹித்யா.

அவள் சென்ற சிறிது நேரத்தில், வருண் இவளுக்கு கால் செய்து நாளை வருவதாக கூறினான். அவள் முகத்தில் சிறிது புன்னகை பூத்தது, முதல் அடியை வெற்றிகரமாக முடித்த திருப்தி புன்னகைக்க செய்தது.

காரில் வெகு தூரம் பயணித்த வருண், அவனின் காதலி சஞ்சனா பற்றி நினைத்துக் கொண்டு இருந்தான். முதன் முதலில், சென்னை பார்க் ஹோட்டலில் தான் அவன் சஞ்சனாவை சந்தித்தான்.

அன்று அவன் நண்பன் சந்தீப் திருமண ரிசெப்ஷன், பார்க் ஹோட்டலில் வைத்து. மும்பையில் வேலையை முடித்துக் கொண்டு, flight பிடித்து சென்னை வந்து இறங்கினான் அன்று மாலை ஆறு மணிக்கு.

ஏர்போர்டில், இவனை வரவேற்க அவனின் மற்ற நண்பர்கள் வந்து இருந்தனர். அவர்களோடு, இங்கே பார்க் ஹோட்டல் அறைக்கு வந்து ரெப்ரெஷ் செய்துவிட்டு, கீழே ஹாலில் நடைபெறும் விழாவுக்கு நண்பர்கள் சூழ சென்றான்.

ஹாலில், அங்கு இருந்த பெண்களை எல்லாம் நண்பர்கள் தங்களுக்குள் கலாய்க்க, இவன் மட்டும் அங்கு ஒரு சிறுமி செய்யும் சேட்டையை கவனித்துக் கொண்டு இருந்தான்.

கொழுக் மொளுக் கன்னம் வைத்து, அந்த சிறுமி பார்க்க கொள்ளை அழகாக இருந்தாள். தாய்க்கு தெரியாமல், அவள் எடுத்த மிட்டாயை நைசாக அவள் தாயின் பையிலே போட்டுவிட்டு, எடுத்த மிட்டாயை மட்டும் தன் தம்பியுடன் சேர்ந்து சாப்பிட்டாள் அந்த சிறுமி.

அதை தன் செல்பேசியில் பதியும் பொழுது தான், சஞ்சனாவை முதல் முறையாக பார்த்தான்.

“பாப்பு! மிட்டாய் அதிகமா சாப்பிட்டா பல் வலி வரும், அப்புறம் வயிறு ல புழு கடிக்கும் தெரியும் தான பாப்புக்கு. அப்புறம் ஏன் இப்படி நிறைய மிட்டாய் சாபிடுற பேபி?” என்று அந்த சிறுமியை கொஞ்சிக் கொண்டே கேட்டாள் சஞ்சனா.

அவளின் அழகும், அந்த குரலும் தான் அவனை முதலில் வசீகரித்தது. காதில் இருக்கும் அந்த தொங்கட்டான், அவள் அசைவுக்கு ஏற்ப ஆடிக் கொண்டே இருந்தது.

ஏனோ, முதல் பார்வையிலே அவள் அவனை ஈர்த்தாள் என்று சொன்னால் அது மிகவும் சரி. அவள் அங்கு இருந்து சென்ற பிறகு தான், தான் செய்து கொண்டு இருந்த செயல் அவனை திடுக்கிட வைத்தது.

“ச! இப்படியா அந்த பொண்ணுக்கு தெரியாம படம் பிடிப்போம், மாட்டினா அவ்வளவு தான், கம்பி எண்ணனும். முதல அதை டெலிட் செய்வோம், இல்லைனா மாட்டிப்போம்” என்று எண்ணிக் கொண்டே அந்த புகைப்படத்தை ஒவ்வொன்றாக அழித்துக் கொண்டே வந்தான்.

குறிப்பிட்ட ஒரு புகைப்படம் வரும் பொழுது அவனால், அதை அழிக்க முடியவில்லை. சிறுமியோடு, சிறுமியாக அந்த புகைபடத்தில் அவள் அவ்வளவு அழகாக இருந்தாள்.

அதை அழிக்க மனம் வராமல், அதை மட்டும் வைத்துக் கொண்டான். பின்பு அன்று விழா முடியவும், அவன் மறுநாள் நண்பர்களிடம் சொல்லிக் கொண்டு மும்பை பறந்தான்.

அவ்வப்பொழுது நினைவில், அவள் முகம் தோன்றினாலும் அதை சற்று சிரமத்துடன் ஒதுக்கி வைத்துவிட்டு, வேலையில் கவனத்தை திருப்பினான். என்ன தான் அவன், அவள் நினைவை ஒதுக்கி வைக்க முயன்றாலும் விதி அவனை சும்மா விடவில்லை.

அடுத்த மாதத்திலே, சஞ்சனா அவனின் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து இருந்தாள், அதுவும் அவனின் செயலாளராக.

“சார்! உங்களுக்கு செயலாளர் பதவிக்கு ஆள் கேட்டு இருந்தீங்களே, மேடம் மிஸ் சஞ்சனாவை செலக்ட் செய்து அனுப்பி இருக்காங்க சார்” என்று கூறி சஞ்சனாவை அறிமுகப்படுத்தினான் சஷாங், வருணின் தாய் அனன்யாவின் வலது கை.

சஞ்சனாவை பார்த்த வருண், முதலில் திடுகிட்டாலும் பின் சுதாரித்துக் கொண்டான்.

“வெல்கம் மிஸ் சஞ்சனா! ஐ அம் வருண் கியான், நைஸ் மீட்டிங் யூ” என்று கூறி கையை குலுக்க கை நீட்டினான்.

“ஹலோ சார்! ஐ அம் சஞ்சனா!” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

“வெல்! நீங்க இன்னைக்கே வேலை ஆரம்பிக்கலாம். சஷாங், மிஸ் பார்வதியை வர சொல்லுங்க” என்று அவன் கூறினான்.

“உங்களை பத்தி சுருக்கமா சொல்லுங்க, மிஸ் சஞ்சனா” என்று அவளை பற்றி தெரிந்து கொள்ள கேட்டான்.

தான் இங்கு இல்லாத நேரத்தில், தன் தாய் அனன்யா தான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வது. தந்தையும் அடிக்கடி, இவனை போல் பிசினஸ் டூர் செல்வதால், அவன் தன் தாயிடம் தான் ஒப்படைத்து செல்வான்.

அப்படி அவன் இல்லாத சமயத்தில் தான், அவனின் அன்னை அவனுக்கு செயலாளர் தேர்ந்தெடுத்து இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டான். தன் மனதை கொள்ளை கொண்டவளே, தனக்கு செயலாளராக வந்த சந்தோசம் அவன் முகத்தில்
அப்பட்டமாக தெரிந்தது.


இதுவரை, அவளை பற்றி ஏதும் தெரியாததால் அவளிடமே அவளை பற்றி கேட்டான். இத்தனைக்கும், இரண்டு நாள் முன்பே அவனின் தாய் அவனுக்கு அவளை பற்றி எல்லா விபரமும் தெரிவித்து இருந்தார், மின்னஞ்சல் மூலம்.

ஆனால், அதை அவன் அப்பொழுது திறந்து பார்க்கவில்லை. ஆகையால், அவள் மூலமே தெரிந்து கொள்ள துடித்தான்.

“என் பெயர் சஞ்சனா. என் அப்பா, அம்மா professors சென்னை ஜெயா எஞ்சினீரிங் காலேஜ் ல. நான் B.B.A. முடிச்சிட்டு, செக்ரட்டரி கோர்ஸ் முடிச்சு இருக்கேன். சொந்த ஊர் சென்னை, ஆனா அப்பா, அம்மா இன்னும் கொஞ்ச நாள் ல ரிடையராகி, இங்க மும்பை ல என் அண்ணா பாமிலியோட செட்டிலாக போறாங்க”.

“அதான் நான் என் ஜாப், இங்க மும்பை ல தேடி இப்போ இங்க வந்து இருக்கேன்” என்று தன்னை பற்றி சுருக்கமாகவும், தெளிவான ஆங்கிலத்திலும் பேசிய அவளை பார்த்து மனதிற்குள் பாராட்டிக் கொண்டான்.

அப்பொழுது, அவன் அழைத்து வர சொன்ன பார்வதி அங்கே வரவும், அவளை பார்வதிக்கு அறிமுகப்படுத்தி விட்டு, சஞ்சனாவுக்கு வேலைகளை கற்று தர கூறினான்.

அவர்கள் சென்ற பிறகு, தன் தாய் அனுப்பிய மின்னஞ்சலை திறந்து பார்த்தான். அதில் சஞ்சனா கூறிய விஷயங்களோடு, அவள் ஏற்கனவே இந்த வேலையில் அனுபவம் வாய்ந்தவள் என்று குறிப்பிட்டு இருந்தது.

 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
அப்பொழுது தான், அவன் அவள் வயதை கவனித்தான். அவனை விட எழு வயது சிறியவள், அவன் பிறந்த தேதியும் அவளுடையதும் ஒன்று என்று அதில் இருக்கவும், மனது துள்ளி குதித்தது.

“சஞ்சனா – வருண், பெயர் பொருத்தம் நல்லா இருக்கே. ம்ம்.. இனி பேசி பார்த்திட்டு, பிடிச்சு இருந்தா கல்யாணம் தான். முதல அம்மாவுக்கு போன் பண்ணுவோம், அப்படியே லைட்டா விஷயத்தை சொல்லிடுவோம்” என்று எண்ணிக் கொண்டே அவன் அன்னைக்கு அழைத்தான்.

“என்ன டா கண்ணா, சஞ்சனா வந்துட்டாளா?” என்று அவர் எடுத்த உடனே கேட்கவும், அவன் சிரித்தான்.

“ம்ம்.. உங்க மருமக வந்துட்டா மா, இனி நீங்க உங்க பையனை பத்தி கவலை பட தேவையில்லை” என்று அவனும், தாயிடம் இத்தனை நாள் திருமணத்திற்கு நோ சொல்லிக் கொண்டு இருந்தவன், இப்பொழுது ரெடி என்று பச்சை கொடி காட்டிவிட்டான்.

“நிஜமாவா வருண்! உன் போன் ல அவ போட்டோ பார்த்த உடனே, நான் நினைச்சேன். அதான், அவ இங்க இன்டர்வியூ வரும் பொழுது நல்லா அவளை தெரிஞ்சிகிட்டு உடனே உனக்கு பி.ஏ வா போட்டுட்டேன்” என்று அவனின் அன்னை கூறவும் முழித்தான்.


“எம்மா! நான் என் போன் எடுக்க கூடாதுன்னு, எத்தனை தடவை சொல்லி இருக்கேன். நீங்க ஏன் எடுத்தீங்க?” என்று போனை எடுத்ததற்கு சிடுசிடுத்துக் கொண்டான் தாயிடம்.

“அப்படி எடுக்க போய் தான், உன் மனம் கவர்ந்தவளை கண்டு பிடிக்க முடிஞ்சது பார்த்துக்கோ. சும்மா அம்மா கிட்ட இப்படி சிடுசிடுக்கிற வேலை எல்லாம் வைக்காத, சொல்லிட்டேன்” என்று அவர் அவனின் தாய் நான் என்பதை நிருபித்தார்.

“சரி, சரி மா இனி நான் ஒன்னும் சொல்லல. இப்போ தான் பெயர் தெரிஞ்சு இருக்கு, அவ எப்படி, அவளுக்கு என்னை பிடிக்குமா? இல்லை அவ தமிழ் பையனை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு, சொல்லிடுவாளா?”

“இப்படி ஒன்னும் தெரியாம இருக்கேன், நான் இப்போ. அதனால நான் நல்லா பழகி பார்த்துட்டு, எனக்கு இன்னும் அவளை பிடிச்சு இருந்தா, அவளை எப்படி இந்த ஹிந்திகாரனை கல்யாணம் செய்ய வைக்குறதுன்னு நல்லா தெரியும் எனக்கு”.

“இப்போதைக்கு நமக்குள்ள மட்டும் இருக்கட்டும், அவளும் கிரீன் சிக்னல் காட்டிட்டா, அடுத்து கல்யாணம் தான்” என்று அவன் கூறவும், அங்கே அவன் தாய்க்கு இப்பொழுதே அவனை திருமண கோலத்தில் பார்த்த திருப்தி ஏற்பட்டது.

இப்படியே இன்னும் சிறிது நேரம் தாயும், மகனும் பேசிவிட்டு போனை வைத்தனர். தாயிடம் பேசிய பிறகு, மனதில் சிறு உற்சாகம் முளைத்து அடுத்த வேலையை செய்ய வைத்தது.

நாட்கள் நகர, நகர சஞ்சனாவுக்கும், வருனுக்கும் பாஸ், பி.ஏ. என்ற நிலை தாண்டி இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு சிறிது, சிறிதாக அடுத்த நிலைக்கு(காதல்) அவர்களை எடுத்து சென்றது.

அன்று இருவரும், மும்பையில் உள்ள பீச் ஒன்றிற்கு சென்றனர். uran beach என்றழைக்கப்படும் இந்த பீச்சில், தென் மும்பை முழுவதையும், அந்த இரவு நேரத்தில் லைட் ஹௌஸ் ஏறி நின்று பார்க்கலாம்.

இப்பொழுது இருவரும், அங்கே தான் நின்று கொண்டு இருந்தனர். அந்த இரவு பொழுதில், மனதிற்கு பிடித்தவளுடன் அங்கே நிற்பது அவனுக்கு பிடித்து இருந்தது.

அந்த இடத்தில் மௌனமாக கழிந்த அந்த நிமிடங்கள், ஒரு ஏகாந்தத்தை அவர்களுக்கு தந்தது. அந்த மௌனத்தை உடைத்து, அவன் முதலில் பேச தொடங்கினான்.

“சஞ்சு! நாம சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம், இதுக்கு மேல என்னால உன் கிட்ட இருந்து தள்ளி நிக்க முடியாதுன்னு தோணுது” என்று கூறிக் கொண்டே, அவளை அருகில் இழுத்து நிறுத்தி அனைத்துக் கொண்டான்.

சஞ்சனா, அவனின் அணைப்பில் சிறிது நடுங்கினாலும், அவளுக்கும் அவன் மீது சாய்ந்து இருப்பது, பிடித்து இருந்தது. அத்தோடு, ஒரு வித பாதுகாப்பு உணர்வை உணர்ந்தாள், அவளின் அன்னையின் அணைப்பில் இருந்தது போல்.

அவளது நடுக்கம் உணர்ந்து, அவன் தன்னை சமன் செய்துக் கொண்டு, அவளை தன்னிடம் இருந்து பிரித்து எடுத்து, அவள் கைகளை பிடித்துக் கொண்டான்.

இனி, உன்னை விட மாட்டேன் என்பது போல் இருந்தது அவன் கையை பிடித்து அழுத்திய விதத்தில். அவளும் அதை புரிந்து கொண்டு, அவன் கையை இறுக்க பிடித்துக் கொண்டாள்.

ஆனால் விதி, இவர்களை பார்த்து கையை கட்டி சிரித்தது. இவர்கள் இனி சேரவே முடியாதபடி, அது தன் வேலையை அடுத்த இரண்டு தினங்களில் காட்டியது.

கார் ஹார்ன் அருகில் பலமாக கேட்கவும், தன் கடந்த கால நினைவில் இருந்து திரும்பி வந்தான். இப்பொழுது, அவனின் நினைவு எல்லாம் ப்ரீத்தி கூறியது உண்மையா என்று தெரிய வேண்டி இருந்தது.

“நீ சொன்னது பொய்ன்னு மட்டும் தெரிஞ்சது, அப்புறம் இந்த வருண் தான் உனக்கு வில்லன்” என்று மனதிற்குள் ப்ரீத்தியை அர்ச்சித்துக் கொண்டு இருந்தான்.

ப்ரீத்தி, மருத்துவமனையில் தன் வேலையை முடித்துக் கொண்டு நேராக தன் வீட்டிற்கு சென்றாள். அங்கே ஏற்கனவே, சாஹித்யா, அவளின் வருகைக்காக காத்துக் கொண்டு இருந்தாள்.

“என்ன மேடம், போன் வந்ததா!” என்று கேட்டாள் சாஹி.

“ம்ம்.. வந்துச்சு, வந்துச்சு. நான் கேட்டது என்ன ஆச்சு?” என்று கேட்டாள்.

அவளுக்கு எல்லா விபரமும் அளித்தவள், நாளை பார்க்கலாம் என்று கூறிவிட்டு சென்றாள். ப்ரீத்தியோ, அவள் கொடுத்த விபரங்கள் எல்லாம் வைத்து, நாளை அவனுக்கு கொடுக்க வேண்டிய ட்ரீட்மென்ட் முறையை எழுத தொடங்கினாள்.

எழுதி முடித்தவுடன், அதை படித்து சரி பார்த்து அதில் திருப்தி ஏற்படவும் தான் அதை பத்திரப்படுத்தி வைத்துவிட்டு, படுக்க சென்றாள்.

மறுநாள் காலை எப்பொழுதும் போல் ஆறு மணிக்கு விழித்தவள், முதலில் கண்டது கோபத்துடன் அங்கு நின்ற சாஹித்யாவை தான்.

“என்ன சாஹி! ஏன் இப்படி கோபமா இருக்க? என்ன ஆச்சு உனக்கு?” என்று வினவினாள்.

“பத்து மணிக்கு தான ட்ரீட்மென்ட் சொன்ன, அப்புறம் ஏன் அவர் இங்க வந்து இருக்கார் இப்போ?” என்று கேட்டாள் சாஹித்யா.

“யாருன்னு சொன்னா தான டி தெரியும், யாரு வந்து இருக்கா?” என்று கொட்டாவி விட்டபடியே கேட்டாள் ப்ரீத்தி.

“மிஸ்டர் வருண் கியான்” என்று அழுத்தமாக கூறவும், ப்ரீத்தி அதிர்ந்து விட்டாள்.

“என்ன! இங்கேயா! ஏய் சாஹி, முதல எப்படியாவது, அவரை இந்த இடத்தை காலி பண்ண வை டி, போ” என்று அவளை துரத்தினாள் ப்ரீத்தி.

“நான் சொன்ன உடனே , அப்படியே கேட்டுட்ட மாதிரி ஓடிடுவாரா என்ன. நீ தான் போகணும், அதுவும் இப்போவே போ” என்று சாஹித்யா அவளை விரட்டினாள்.

ஜன்னல் வழியாக பார்த்தவள், அவன் காரில் சாய்ந்து கொண்டு, ஒரு கையை பான்ட் பாக்கெட்டில் விட்டு வீட்டையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்து கோபம் கொண்டாள்.

“ஹாஸ்பிடல்க்கு வர சொன்னா, இங்க வந்து இருக்கான் இடியட்” என்று அதுவரை அவனை மரியாதையோடு விழித்தவள், இப்பொழுது அதை கை விட்டு இருந்தாள்.

இரவு உடையுடன், கதவை திறந்து வெளியே வந்தவள் நேராக அவன் முன்னே சென்று நின்று, அவனை நன்றாக முறைத்தாள். அவனோ, அவள் வந்து நின்ற கோலத்தை கண்டு சிரிக்க தொடங்கினான்.

அவன் சிரிப்பதை பார்த்து, வீட்டின் உள்ளே இருந்த சாஹித்யா ஆவென்று வாயை பிளந்து கொண்டு பார்த்தாள். ப்ரீத்தியோ, எரிச்சல் அடைந்து, கையை கட்டிக் கொண்டு அவனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தாள்.

“சாரி! குருவி கூடு மாதிரி உன் கொண்டை இந்த டிரஸ்க்கு பொருத்தமா இருக்கவும், சிரிப்பு வந்திடுச்சு” என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு வருண் கூறவும், மேலும் முறைத்தாள்.

“எதுக்கு இப்போ இங்க வந்தீங்க? ஹாஸ்பிடல்க்கு வாங்க, அதான் பத்து மணிக்கு வர சொன்னேனே உங்களை அங்க, இங்க வர வேண்டாம் நீங்க புரிஞ்சதா” என்று அழுத்தமாக உரைத்தாள் அவனிடம்.

அதுவரை ஒரு இலகு தன்மையுடன் இருந்தவன், இரும்பென இருகினான்.

“சஞ்சனாவை கொன்னுட்டாங்க சொன்னியே, யார்ன்னு சொல்லு. நான் அதை தெரிஞ்சிக்க தான் வந்தேன் இங்க, உன்னை பார்க்க இல்லை” என்று அழுத்தத்துடன் உரைக்கவும், அவள் புன்னகைத்தாள்.

“நினைச்சேன், இதுக்கு தான் வந்து இருப்பீங்கன்னு, சாரி எனக்கு கொலை செய்யப்பட்டு இருக்கா மட்டும் தான் தெரியும். யார் என்னனு, நீங்க ட்ரீட்மென்ட் எடுத்துகிட்டா மட்டும் தான் சொல்லுவேன் சொல்லிட்டா” என்று கூறிவிட்டு, அவ்வளவு தான் பேச்சு முடிந்தது என்பது போல் வீட்டை நோக்கி நடந்தாள்.

அவளின் இந்த பதிலில், அவன் கொதிநிலைக்கே சென்றான். அவளின் வழியை மறித்து, அவள் கண்கள் மீது அழுத்தமாக தன் பார்வையை பதித்து, மீண்டும் அதே கேள்வியை கேட்டான்.

அவளோ, அவனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அவன் பின்னே சோகமே உருவாக நின்று இருந்த சஞ்சனாவை பார்த்தாள். சஞ்சனா, அவளிடம் கூறாதே என்பது போல் தலையை இரண்டு பக்கமும் ஆட்டவும், அவள் அப்பொழுது கூறிய அதே பதிலை கூறிவிட்டு வீட்டின் உள்ளே சென்று கதவை அடைத்தாள்.

“உன் கிட்ட இருந்து, எப்படி உண்மையை வாங்கனும்ன்னு எனக்கு தெரியும். பேய் இருக்குன்னு, நீ சும்மா கதை தான் சுத்துறன்னு ப்ரூவ் பண்ணுறேன்”.

“உனக்கும், சஞ்சுவுக்கும் கண்டிப்பா ஏதோ ஒரு லிங்க் இருக்கு, என்னனு நான் கண்டு பிடிக்கிறேன். மிஸ் ப்ரீத்தி, எப்படி என்னை ட்ரீட் பண்ண போறன்னு நான் பார்க்கிறேன்” என்று மனதில் அவளை கருவிக் கொண்டே, வண்டியை எடுத்துக் கொண்டு பறந்தான்.

தொடரும் ...
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
ஹாய் ஹாய் மக்களே.. தாமதத்திற்கு மன்னிக்கவும், திடீர்ன்னு விருந்தினர் வருகை, அப்புறம் நான் function போக, என் பையன் activity வொர்க் கவனிக்க.. எல்லாத்துக்கும் மேல, அவன் தூங்கிய பிறகு தான் லாப் எடுக்கவே முடியுது. அதுக்குள்ள எனக்கு தூக்கம் வந்திடுது..

ரொம்ப தாமதம் செய்யாமல் கண்டிப்பா அடுத்த ud ரெடி செய்து கொண்டு வரேன்.. ஏகப்பட்ட correction இருக்கு.. முதல் பதிவிற்கு நீங்கள் கொடுத்த ஆதரவை பார்த்து, கண்ணில் அருவி மழை..

தேங்க்ஸ் எ லாட் மக்களே.. கீப் சப்போர்டிங்..
பேய் வரும் யா..

அன்புடன்
உமா தீபக்..
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
ஹாய் ஹாய் மக்களே.. தாமதத்திற்கு மன்னிக்கவும், திடீர்ன்னு விருந்தினர் வருகை, அப்புறம் நான் function போக, என் பையன் activity வொர்க் கவனிக்க.. எல்லாத்துக்கும் மேல, அவன் தூங்கிய பிறகு தான் லாப் எடுக்கவே முடியுது. அதுக்குள்ள எனக்கு தூக்கம் வந்திடுது..

ரொம்ப தாமதம் செய்யாமல் கண்டிப்பா அடுத்த ud ரெடி செய்து கொண்டு வரேன்.. ஏகப்பட்ட correction இருக்கு.. முதல் பதிவிற்கு நீங்கள் கொடுத்த ஆதரவை பார்த்து, கண்ணில் அருவி மழை..

தேங்க்ஸ் எ லாட் மக்களே.. கீப் சப்போர்டிங்..
பேய் வரும் யா..

அன்புடன்
உமா தீபக்..
Pei kaaga wait panna vachiteengalae ka...???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top