• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

uruvamilla oru uravu - 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
அத்தியாயம் – 8

வருண் அவளை இறக்கிவிட்டு வீட்டிற்கு வந்தவன், நண்பர்கள் இருவரும் அவனை முறைத்துக் கொண்டு இருப்பதை பார்த்தான். அவர்களுக்கு என்ன நடந்து கொண்டு இருக்கிறது, என்று புரியவில்லை.

எல்லாவற்றிற்கும் மேலே, ஆஷிக்கிற்க்கு தன் தந்தையின் மறுபக்கம் தெரிந்ததில் கோபமும், வருத்தமும் வந்தது. இத்தனை நாட்கள் அப்பொழுது அவர் வாழ்ந்த வாழ்க்கை, யாருக்காக அவருக்காக மட்டுமா என்று தான் தோன்றியது.

“டேய் வருண்! என்ன தான் நடக்குது இங்க? இப்போ நீ எல்லாத்தையும் சொல்லி தான் ஆகணும், எங்க கிட்ட. ஏற்கனவே ஆஷிக் நீ ட்ரீட்மென்ட் போறன்னு சொன்னான், அப்போ சந்தோஷப்பட்டேன்”.

“ஆனா இப்போ, நீ நீயா இருக்கியான்னு எனக்கு சந்தேகமா இருக்கு டா” என்று மிகவும் வருந்தினான் சஷாங்.

“இப்போ நான் ஒரு வீடியோ ஷேர் செய்றேன் உங்களுக்கு, பார்த்துட்டு சொல்லுங்க என்ன புரியுதுன்னு” என்று கூறிவிட்டு அதை ஷேர் செய்தான் வருண்.

அதை பார்த்தவர்கள், அதிர்ந்து போனார்கள். சஷாங் வீடியோ பார்த்த அதிர்ச்சியில் போனை தவற விட்டான். ஆஷிக் இப்பொழுது, வருணை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தான்.

“சொல்லுறேன் டா, அதுக்கு முன்னாடி எங்க அப்பாவுக்கு போன் போட்டு இங்க வர சொல்லு ஆஷிக்” என்று கூறினான் வருண்.

அவனும் உடனே வருணின் தந்தைக்கு கால் செய்து, வருண் அழைத்ததாக கூறி உடனே கிளம்பி வர கூறினான். அவரும் இத்தனை நாட்கள், மகன் அழைக்க மாட்டானா தன்னை என்று காத்து இருந்தவர், உடனே கிளம்பி வருவதாக கூறினார்.

அதை அவன் வருனிடம் உரைத்துவிட்டு, சோபாவில் சஷாங் உடன் அமர்ந்தான்.

“ரொம்ப ரொம்ப சாரி டா, என்னோட நண்பர்களா நீங்க இருந்ததற்கு உங்களுக்கு இப்படி ஒரு பழி வந்து இருக்க வேண்டாம் டா. ஆஷிக் இன்னைக்கு டாக்டர் ப்ரீத்தி சொன்னதை கேட்ட தான, அது தான் உண்மை டா”.

“இந்த வீடியோ பார்த்து எனக்கும் ஷாக், அதனால இன்னைக்கு காலையில் நான் டாக்டர் ப்ரீத்தி வீட்டுக்கு போனேன் டா. அங்க அந்த ரூம் ல, வீடியோ ல இருந்த மாதிரியே உங்க ரெண்டு பேரோட போட்டோ சேர்த்து டாக்டர் போட்டோவும் இருந்தது”.

“அதுலயும், சஷாங் உன்னையும் டாக்டரையும் அப்படி இது பண்ணி இருக்க வேண்டாம். நானும் சஞ்சனாவும் இருந்த போட்டோ ல, அவ தலையை வெட்டி எடுத்த மாதிரியும், என் போட்டோ பக்கத்துல டாக்டர் இருக்கிற மாதிரியும்” என்று அவனால் அதற்க்கு மேல் கூற முடியவில்லை.

பார்த்த விஷயங்கள் அப்படி, அவனுக்கே இப்படி என்றால் வீட்டில் இப்பொழுது ப்ரீத்தி எந்த நிலைமையில் இருக்கிறாள் என்று அவனுக்கு புரியவில்லை.

இங்கு நண்பர்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்ததால், அவன் திரும்பும் படியாகியது.

“சோ எங்க அப்பா, சஷாங் வச்சு மட்டும் கிடையாது, நம்ம எல்லோரையும் வச்சு கேம் ப்ளே பண்ணி இருக்கார். இதுல எனக்கு ஒரு டவுட், உனக்கும் அப்பாவுக்கும் பகைன்னு புரியுது, ஆனா டாக்டர்க்கும் அப்பாவுக்கும் என்ன லிங்க்?” என்று கேட்டான் ஆஷிக்.

“சஞ்சனா, டாக்டருக்கு உயிர் தோழி. பேய், பிசாசுன்னு இந்த காலத்தில் போய் பினாத்துற சொன்னியே. டாக்டர் கண்ணுக்கு பேய் எல்லாம் கண்ணுக்கு தெரியும், அப்படி தான் சஞ்சனா தெரிஞ்சா டாக்டர் கண்ணுக்கு”.

“நாலு வருஷத்துக்கு முன்னாடியே, சஞ்சனா டாக்டரை பார்த்து எல்லா உண்மையும் சொல்லி இருக்கா. டாக்டர் கிட்ட தான் இனி கேட்கணும், உங்க அப்பாவை எப்படி தெரியும்ன்னு” என்று பெருமூச்சு விட்டான் வருண்.

“சரி, இப்போ அடுத்து என்ன செய்யணும்?” என்று கேட்டான் சஷாங்.

“ம்ம்.. எங்க அப்பா வரட்டும், எல்லா உண்மையும் சொல்லுவோம் அப்புறம் என்ன செய்றதுன்னு பார்க்கலாம்” என்று கூறினான் வருண்.

அவர்களுக்கும் அது தான் சரி என்று தோன்றவும், அங்கேயே அவனோடு கூடவே இருந்தனர்.

இங்கே ஆஷிக்கின் தந்தை வக்கீல், வீட்டிற்கு வந்தவர் பெட்டி எடுத்து வைத்து அதில் துணி அடுக்க தொடங்கினார். இதை பார்த்த அவரின் மனைவி, வேலை விஷயமாக செல்ல போகிறார் போலும் என்று எண்ணி, அவரிடம் எங்கு என்று கேட்டார்.

“வாயை மூடு! எப்போ பார்த்தாலும், எங்க எங்கன்னு கேட்டுட்டு. நான் திரும்பி வர நாளாகும், உன் பையன் ஆஷிக் வந்தா அவன் துணி எல்லாத்தையும் மூட்டை கட்டிட்டு வெளியேற சொல்லு”.

“இனி அவன் இந்த வீட்டில் இருக்க கூடாது, நான் போயிட்டு வரதுக்குள்ள எந்த கிறுக்குத்தனமும் பண்ணாத புரியுதா” என்று மனைவியை மிரட்டிவிட்டு சென்றார்.

டிரைவரை அனுப்பிவிட்டு, இவரே காரை எடுத்துக் கொண்டு அவரது தனிப்பட்ட மாளிகை நோக்கி சென்று கொண்டு இருந்தார். அதில் எல்லா வசதிகளும், அவருக்கு தகுந்த மாதிரி வைத்துக் கொண்டு இருந்தார்.

இந்த இடத்தை பற்றி அவர் யாருக்கும் மூச்சு விடவில்லை, அவர் தனிகாட்டு ராஜாவாக இருந்தார் இந்த இடத்துக்கு. ஆகையால், இங்கு சிறிது நாட்கள் பதுங்கிக் கொள்ள விரும்பி காரை எடுத்துக் கொண்டு அங்கே விரைந்தார்.

“சஞ்சு, இப்போ அந்த ஆள் கார் ல போயிகிட்டு இருக்கும் பொழுதே பிடிச்சு இழுப்போமா” என்று கேட்டாள் சாஹி, சஞ்சுவிடம்.

“அப்படி இழுத்தா, ஒரேடியா போய் சேர்ந்திடுவார். அவர் அப்படி போக கூடாது, கொஞ்ச கொஞ்சமா ஏன் இருக்கோம்ன்னு நினைச்சு நினைச்சே சாகனும்”.

“கொஞ்ச நேரத்துல அவர் தங்க போற இடம் வந்திடும், அங்க ஒரு ஈ, காக்கா கூட வராது. அந்த இடம் தான் நமக்கு வசதி, அந்த ஆளை போட்டு தள்ள”.

“ரெடியா சாஹி நீ, விளையாட” என்று சஞ்சு கேட்கவும், சாஹித்யா சிரித்துக் கொண்டே, ரெடி என்றாள்.

வண்டியை நிறுத்திவிட்டு, அருகில் வந்த காவலாளியிடம் உணவு வாங்க அனுப்பிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தார். சோபாவில் அக்கடா என்று அமர்ந்தவர் முன், சஞ்சு அவருக்கு கேட்கும்படியாக சாஹியிடம், அந்த ஆள் சாப்பிட்ட பின் விளையாடலாமா, இல்லை இப்போவே விளையாடுவோமா என்று கேட்டாள்.

தான் மட்டுமே இருக்கும் இடத்தில், யாரோ இரண்டு பேர் பேசுவது காதில் விழவும் அதிர்ந்தார். சுற்றும் முற்றும் பார்த்தவர், யாரும் இல்லை எனவும் தன் மன பிரம்மை என்று எண்ணி பெருமூச்சு விட்டார். அதற்குள் காவலாளி சாப்பாடு வாங்கி வந்து, அவரிடம் கொடுக்கவும் அதை வாங்கிக் கொண்டு வீட்டு கதவை அடைத்தார்.

சாப்பிட உட்கார்ந்தவர், ஒரு வாய் எடுத்து வைக்கும் பொழுது மீண்டும் பேச்சுக்குரல் கேட்டு அதிர்ந்தார்.

“அந்த சாப்பாடு ல, மனுஷங்க ரத்தம் கலந்து இருக்கு போல. எப்படி சாப்பிடுறார் மனுஷன் பாரேன், கொலையும் செய்துகிட்டு” என்று சாஹி, சஞ்சனாவிடம் கூறிக் கொண்டு இருந்தாள்.

“சும்மாவா கிரிமினல் லாயரா ல இருக்கார், அதனால கொலை செஞ்சு தப்பிக்கலாம்ன்னு பார்க்கிறார் போல” என்று சஞ்சனா கூறினாள்.

“சரி! இப்போ எனக்கு தண்ணி தாகம் எடுக்குது, தண்ணி குடிக்கலாமா இங்க” என்று பேசிக் கொண்டே அவர் அருகில் இருந்த பாட்டிலை தூக்கவும், அந்தரத்தில் தொங்கிய பாட்டிலை பார்த்து பயத்தில் அலறினார்.

காவலாளியை அழைக்க நினைக்கும் பொழுது, அவரது குரல் அவருக்கு ஒத்துழைக்கவில்லை. வீட்டை விட்டு வெளியே செல்ல கூட முடியாத சுழலில், அவர் அங்கே மாட்டிக் கொண்டார்.

“என்ன பா இதுக்கே, இவர் இப்படி ஆகிட்டார். இன்னும் நாம ஆரம்பிக்கவே இல்லையே, டூ பாட்” என்று சாஹித்யா சலிக்கவும், சஞ்சனா அங்கு இருந்த ஸ்டூலை தட்டி விட்டாள்.

அதில் மேலும் அதிர்ந்தவர், உதவிக்கு கத்த கூட முடியாமல் இருக்கும் தன் நிலையை வெறுத்தார்.

“சாஹி! கேம் விளையாடுவோமா!” என்று கேட்டாள் சஞ்சனா.

“வாவ் விளையாடுவோமே சஞ்சு” என்று ஆர்வமுடன் இருந்தாள் சாஹி.

“கேம் என்னன்னா, யாரு அவரை அதிகமா பயப்பட வைக்குறாங்களோ அவங்க தான் வின்னர். முதல நான் ஆரம்பிக்கிறேன், அப்புறம் நீ சரியா” என்றாள் சஞ்சு.

ஒகே டன் என்பது போல், கையை தம்ப்ஸ் அப் வைத்தாள் சாஹி.

அலுவலக அறையில், செல்பில் பதுங்கி அமர்ந்து இருந்தவரை நோக்கி சென்றாள் சஞ்சு. அப்பட்டமாக தெரிந்த அவரின் பயத்தை பார்த்து, மனதிற்குள் குதுகளித்தாள்.

அந்த செல்பை, படபடவென்று தட்டி அவர் அமர்ந்து இருந்த பகுதிக்கு நேராக கத்தியை பாய்ச்சினாள். சரியாக, இதயத்திற்கு நேராக இருந்த கத்தியை பார்த்து அதிர்ந்தார்.
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648

“நீ வெளியே வரலை இப்போ, இந்த கத்தியை நேரா உன் இதயத்துல சொருகிடுவேன்” என்று மிரட்டினாள்.


அந்த சிறிய வெளிச்சத்திலும், கத்தியை கண்டு மிரண்டவர் எங்கே தன் மீது பாய்ந்திடுமோ என்று அஞ்சி, வெளியே வந்தார். அவர் கண்ணுக்கு அங்கே ஒன்றும் புலப்படவில்லை, ஆனால் தான் ஆபத்தில் இருக்கிறோம் என்பதை மட்டும் உணர்ந்தே இருந்தார்.

பேயின் ஆசை என்னவென்று கேட்டு நிறைவேற்றினால், அது தன்னை அடுத்து ஒன்றும் செய்யாது என்று எதிலோ படித்து இருப்பது, அப்பொழுது அவருக்கு நியாபகம் வந்தது.

இப்பொழுது, அதை செய்தால் என்ன என்று அவருக்கு தோன்றவும், அதை செயல்படுத்த ஹாலிற்கு வந்தார் மெதுவாக.

“யார் நீங்க? உங்களுக்கு என்ன வேணும்? சொல்லுங்க நான் செய்றேன். என்னை தயவு செய்து உயிரோட விடுங்க, உங்க ஆசை எதுவோ அதை நிறைவேத்திடுறேன்” என்று அவர் பவ்யமுடனும், பயத்துடனும் கேட்டார்.

“சார் டீலிங் பேசுறார் பா, இது சரி கிடையாதே” என்றாள் சாஹி.

சஞ்சனாவோ சற்று யோசித்துவிட்டு, டீல் போட ஒத்துக் கொண்டாள். சாஹிக்கு, அவள் ஏதோ பிளான் செய்துவிட்டாள் என்று புரிந்தது, ஆகையால் வேடிக்கை பார்க்க தயாரானாள்.

“உங்க பையன் ஆஷிக்கிற்கு, அவரே சம்பாதிச்சு உங்க குடும்பத்தை காப்பாத்த தெம்பு இருக்கு. இருந்தாலும், நீங்க சம்பாதிச்சதை எல்லாம் பொண்ணுக்கு மட்டும் தான கொடுத்து இருக்கீங்க”.

“இப்போ என்ன செய்றீங்க, அத்தனையும் உங்க மனைவி பேர்லயும், உங்க மகன் பேர்லயும் எழுதி கையெழுத்து போடுறீங்க. எல்லாம் முடிச்சிட்டு அப்படியே அதை உங்க பையனுக்கு, நீங்க fax பண்ணுறீங்க”.

“இதை எல்லாம் செய்து முடிங்க முதல, அப்புறம் அடுத்த டாஸ்க் சொல்லுறேன்” எனவும் அவரும் முதலில் அதை முடிக்க அலுவலக அறை விரைந்தார்.

“சஞ்சு, இப்போ இது முக்கியமா!” என்று கேட்டாள் சாஹி.

“ம்ம்.. ரொம்ப முக்கியம் தான் சாஹி, அடுத்து நம்ம ப்ரீத்திக்கு ஒரு பெரிய ரிலீப் கொடுக்கிற ஒரு விஷயம் தான் செய்ய போறோம். அந்த ஆள் கொஞ்சம் மக்கர் பண்ணாலும், மண்டையில் நாலு போடு போட்டுடு” என்று சஞ்சு கூறவும், சாஹியும் சரி என்றாள்.

fax அனுப்பி முடித்தவுடன், அவர் அடுத்து என்னவென்று கேட்டார். இதற்காக தானே காத்துக் கொண்டு இருந்தாள், அவள் விஷயத்தை கூறவும் அவர் முடியாது என்றார்.

“நான் தான் முதலிலே சொன்னேனே, இவர் டீலிங்க்கு எல்லாம் சரியா வர மாட்டார்ன்னு. பேசாம, நாம போட்டு தள்ளிடலாம்” என்று சாஹி கூறவும் அவர் மிரண்டு போனார்.

இல்லை, இல்லை நான் செய்றேன். என்னை ஒன்னும் செஞ்சிடாதீங்க, இப்போவே செய்றேன் என்று அவர் அதை செயல்படுத்த தொடங்கினார்.

அவர் அதை செய்து முடிக்கவும், இருவரும் அவரை வைத்து மீண்டும் விளையாடி, மரண பயத்தில் இரவே ஹார்ட் அட்டாக் வந்து உயிர் துறந்தார்.

மறுநாள் காலை பத்து மணி போல், காவலாளி வந்து கதவை தட்டவும், கதவு தானாக திறந்து கொண்டது. என்னவென்று புரியாமல், கூப்பிட்டு கூப்பிட்டு பார்க்கவும், பதில் இல்லை எனவும், உள்ளே சென்று பார்த்தார்.

ஹாலில் இறந்து கிடந்தவரை பார்த்து அதிர்ந்து, வீட்டின் வெளியே வந்து அடுத்து உடனே ஆஷிக்கிற்கு தான் அழைத்தார். இப்படி இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே, மகனின் எண்ணிற்கு அழைக்க அவர் நம்பர் கொடுத்து இருந்தார், சில வருடங்களுக்கு முன்.

காவலாளி கூறிய விஷயங்கள் கேட்டு, அதிர்ச்சியில் இருந்தான் ஆஷிக். அவன் காதிற்கு, நேற்று ப்ரீத்தி கூறிய விஷயங்களும், வருண் கூறியதும் தான் ஓடியது.

“அவரை அவங்க ரெண்டு பேரும் பார்த்துப்பாங்க, உண்மையிலே பேய் இருக்கு டா ” என்று மண்டைக்குள் அதுவே ஓடிக் கொண்டு இருந்தது.

அவனின் போன் அலறும் பொழுதே, மற்ற இருவரும் அவனோடு சேர்ந்து எழுந்தனர். அவனின் முகத்தில் தெரிந்த மாற்றம், ஏதோ சரியில்லை எனவும் என்னவென்று கேட்டான் வருண்.

ஆஷிக் விஷயத்தை கூறவும், சஷாங் அதிர்ந்த அளவுக்கு வருண் அதிரவில்லை. அவனுக்கு தான் தெரியுமே, இப்படி நடக்கும் என்று. அப்பொழுது வருணின் செல்லிற்கு, ப்ரீத்தியின் கால் வந்தது.

“நியூஸ் சேனல் பாருங்க, ஆஷிக் சார் அப்பா இறந்ததற்கு என் வருத்தத்தை அவருக்கு சொல்லிடுங்க” என்று மட்டும் பேசிவிட்டு வைத்தாள்.

எதற்கு நியூஸ் பார்க்க சொல்லுகிறாள் என்று புரியாமல், அங்கே இருந்த டிவியை ஆன் செய்தான். அதில் ஓடிய காட்சிகளை பார்த்து, மேலும் அதிர்ந்தனர்.

“சாஹித்யா பொண்ணு எங்கேயும் ஓடி போகல, நான் அவளை கொன்னுட்டேன். என்னை பத்தி முழுசா அவளுக்கு தெரிஞ்சிடுச்சு, அதனால கொல்ல வேண்டியதா போச்சு”.

“இந்த தப்பை மறைக்க தான், நான் பொய் சொல்லி எல்லோரையும் நம்ப வச்சேன். என்னோட தனிப்பட்ட பகைக்காக, நான் ஒரு கொலை செய்தேன் முதலில், அதை மறைக்க அடுத்த அடுத்த கொலை செய்துட்டேன்”.

“இது நான் சுயநினைவோட கொடுக்கிற வாக்குமூலம், யாரும் என்னை சொல்ல சொல்லல. என் மனசுக்கு சரின்னு பட்டதை, இப்போ சொல்ல தோனுதுன்னு சொல்லிட்டேன், என்னை மன்னிச்சிடுங்க” என்று அந்த வீடியோ எல்லா சேனல்களிலும் ஒளிப்பரப்பாகிக் கொண்டு இருந்தது.

“ஆஷிக்! வா கிளம்பலாம், நமக்கு நிறைய வேலை இருக்கு. முதல உன் தங்கச்சிக்கு போன் போட்டு, உங்க அம்மாவுக்கு பக்குவமா விஷயத்தை சொல்ல சொல்லு”.

“சஷாங்! நீ அவன் கூடவே இரு. நான், என் அப்பாவை கூட்டிட்டு அங்க வந்திடுறேன். ஏதும் தேவைன்னா, உடனே எனக்கு கூப்பிடு டா” என்று இருவரிடமும் கூறிவிட்டு, அவன் முதலில் தன் காரை எடுத்துக் கொண்டு ஏர்போர்ட் விரைந்தான்.

இதற்குள், தந்தைக்கு விஷயம் தெரிந்து இருக்கும். இருந்தாலும், இவன் தான் முழு விஷயத்தையும் பக்குவமாக கூற வேண்டும்.

என்ன தான் அவனின் அன்னையை, மறைமுகமாக ஆஷிகின் தந்தை கொன்று இருந்தாலும், அதில் பாதி தவறு அவனது அல்லவா. அதற்க்கு அவன் என்ன விளக்கம் கூறினாலும், அதை தந்தை ஏற்றுக் கொள்ளுவாரா? நிச்சயம் மாட்டார்.

முதலில் அவர் எந்த மனநிலையில் இருக்கிறார், என்று தெரியாமல் அவன் ஒன்றும் கூற போவதில்லை. ஏர்போர்ட் வெளியே நின்று இருந்தவன், அவன் தந்தை வருவதை பார்த்த உடன், இத்தனை வருடங்கள் அவரை பிரிந்து இருந்த ஏக்கம் அவரை தாவி அணைக்க வைத்தது அவனை.

மகனின் செயலை கண்டு, அவர் உள்ளம் குளிர்ந்து போனது. இத்தனை ஆண்டுகள் இதற்காக தானே காத்து இருந்தார், மகனின் இந்த மாற்றம் அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.

“பேட்டா! போதும்! போதும்! வா போகலாம், அங்க ஆஷிக் உன்னை தேடுவான்” என்று கூறி அவனுக்கு நியாபகப் படுத்தினார்.

அவனும், உடனே அவரை அழைத்துக் கொண்டு காரில் ஏறினான். காரில், அவனுக்கு அவரிடம் எப்படி சொல்ல என்று தெரியாமல் திணறிக் கொண்டு இருந்தான்.

அவன் திணறலுக்கு அவசியமே இல்லாமல், அவரே தனக்கு எல்லாம் தெரியும் என்று கூறினார். எப்படி என்று கேட்டதற்கு, ஒற்றை வார்த்தையாக டாக்டர் ப்ரீத்தி என்றார்.

அவனுக்கு அப்பொழுது தான், முதன் முதலில் தன்னை சந்திக்க ப்ரீத்தி தந்தை மூலம் வந்தது நினைவில் வந்தது.

“நாலு வருஷம் முன்னாடியே, அவ என்னை சந்திக்க முயற்சி செஞ்சா. அப்போ இருந்த மனநிலையில், என்னால அப்போ அவளை பார்க்க முடியல”.

“அப்புறம் போன வருஷம் திரும்ப வந்தா, வந்து எல்லா உண்மையும் சொன்னா. அப்புறம் தான் மெதுவா என் கிட்ட அவ பிளான் சொன்னா, எனக்கும் அது சரின்னு பட்டுச்சு”.

“பொறுமையா ஒரு வருஷம் காத்து இருந்தோம், வக்கீல் வெளிநாட்டில் இருந்து வர. அவர் வந்து இறங்கின உடனே, டாக்டர் ப்ரீத்தி உன்னை சந்திக்க ஏற்பாடு செய்தேன்”.

“உன்னை யார் எல்லாம் சந்திக்குரா எல்லாம் கண்காணிக்க, அந்த வக்கீல் சஷாங்கை அவனுக்கே தெரியாம, அவனை நல்லா உபயோகப்படுத்தி வச்சு இருந்தார்”.

“எங்க பிளான் படி, அவர் மெதுவா வெளியே வர ஆரம்பிச்சார். உச்சகட்டமா அந்த வீடியோ வரவும், உடனே சஞ்சனா, சஞ்சு கிட்ட அவ கேட்டது இந்த வாக்குமூலம் அவர் கிட்ட வாங்க வேண்டும் என்பது தான்”.

“இப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கு, இன்னும் ஒரு விஷயம் நல்ல படியா நடந்தா நல்லா இருக்கும். ஆனா அது நடக்கிறது கடவுள் கையில் தான் இருக்கு, உனக்கு இப்போ எல்லா கேள்விக்கும் விடை கிடைச்சதா வருண்” என்று அவன் தந்தை தவான் கியான் கேட்கவும், அவனால் பதில் சொல்ல முடியவில்லை.

எப்படி ஆஷிக் வீட்டிற்கு வந்து சேர்ந்தான், என்று தெரியவில்லை. அவனின் மனம் முழுவதும், தனக்கு தெரியாமல் பின்னாடி இவ்வளவு விஷயம் நடந்து இருக்கிறது என்பதை அவனால் நம்ப முடியவில்லை.

ஆனால், நம்பி தான் ஆகணும். நடக்கும் விஷயங்கள், அவை நிஜம் என்று அல்லவா அவனுக்கு கட்டியம் கூறியது. அங்கே ஆஷிக் வீட்டில், அவனுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் இப்பொழுது என்று எண்ணியவன், மற்ற சிந்தனைகளை ஒதுக்கி வைத்தான்.

மூன்று நாட்கள், அவனுடன் இருந்து அவனை சற்று தேற்றி ஆபிஸ் அனுப்பி வைத்தவன், முதலில் நேராக சென்றது ப்ரீத்தியின் வீட்டிற்கு தான்.

அங்கே அவள் இவனை எதிர்பார்க்காததால், அவனை அழைக்க கூட முடியாமல் நின்று இருந்தாள். அவனோ, அவள் அருகே வந்து, அன்று கேட்ட கேள்விக்கு விடை கூற கூறினான்.

அவளோ, அன்று போல் இன்றும் விடை கொடுக்க முடியாமல் விக்கித்து நின்றாள்.

தொடரும்...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நானும் வந்துட்டேன்,
உமா தீபக் டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
உமா தீபக் டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top