• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

uruvamilla oru uravu 9 (the end)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
அத்தியாயம் – 9

இதுவரை இப்படி ஒரு வேகத்தில், அவன் வண்டியை ஒட்டியது இல்லை. அந்த அளவிற்கு, அவன் தன் காரை வேகமாக ப்ரீத்தியின் வீட்டிற்க்கு செலுத்திக் கொண்டு இருந்தான்.

“அவ, அப்படி ஒரு காரியத்தை செஞ்சு இருக்க கூடாது, இப்போ. கடவுளே! தயவு செய்து என்னோட இந்த வேண்டுதலை நிறைவேற்றி வைங்க” என்று ஒரு வேண்டுதலுடன், அவளின் வீட்டை நெருங்கினான்.

வீட்டின் முன் பெரும் சத்தத்துடன் நின்றது, அவனின் கார். கதவை தட்டும் அவசியமின்றி, அவனின் கார் சத்தத்தில் கதவை திறந்தாள் ப்ரீத்தி.

அந்த நேரத்தில், அவனை எதிர்பார்க்காதளால் அவனை வரவேற்க கூட முடியாமல் திகைத்து நின்றாள். அவனோ, வந்த வேகத்தில் அவளை தள்ளிக் கொண்டு வீட்டினுள் நுழைந்து இருந்தான்.

மேஜையில், அவன் நினைத்தது போல் அவளின் ராஜினாமா கடிதம் இருக்கவும், கோபத்துடன் அவளை பார்த்து முறைத்தான்.

“என்னது இது? இதுக்கு தான் உங்க பாட்டி, உன்னை அவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வளர்த்தாங்களா?”.

“ஆமா, உனக்கு இப்போ என்ன பிரச்சனை? தூக்க மாத்திரை உனக்கு எதுக்கு? என்னமோ குடியே முழுங்கி போன மாதிரி, உலகத்தை விட்டே போகணும்ன்னு ஏன் நினைச்ச?”.

“எனக்கு இப்போ பதில் வேணும், உண்மையை சொல்லு. அன்னைக்கு நான் இங்க வந்துட்டு போன பின்னாடி, உனக்கும் இந்த வீடியோ வந்து இருக்கும்ன்னு சந்தேகம் வந்தது”.

“அதனால, வீட்டுக்கு பின்னாடி காரை நிறுத்திட்டு, நான் பின் பக்க வழியா வந்து உன் ரூம்க்கு தான் போனேன். அங்க தான் நீ அப்போ யார் கிட்டையோ பேசிகிட்டு இருந்த, வேலையை ரிசைன் பண்ண போறதை பத்தி”.

“வேற இடத்துல வேலை கிடைச்சு இருக்கும்ன்னு, நான் ஒரு நிமிஷம் நினைச்சேன். ஆனா நீ அப்போ அழுதுகிட்டு திரும்பும் பொழுது தான், வேற ஏதோன்னு புரிஞ்சது”.

“அப்புறம் பேசலாம் நினைச்சேன், ஆனா அதுக்குள்ள என்ன என்னமோ நடந்திடுச்சு. இப்போ சொல்லு, என்ன பிரச்சனை உனக்கு?” என்று அழுத்தி கேட்டான் வருண்.

என்ன பதில் சொல்லுவாள்? உன்னை மறக்க, வேறு வழி இல்லை என்றா? அல்லது, அந்த வீடியோவில் கூறியது போல், இவனுக்காக நானே சஞ்சனாவை கொன்றேன் என்று என்னை மறந்து உன்னை காதலித்த விஷயம் கூறினால், நீ அப்படி சந்தேகம் கொள்வாயோ என்ற கோபம் வருமே என்றா?

எப்படி இருந்தாலும், அவள் அவனை காதலித்த விஷயம் அவனுக்கு தெரியவே கூடாது என்று ஸ்திரமாக எண்ணினாள்.

“இங்க பாருங்க, சஞ்சனா என் பெஸ்ட் friend. உங்களுக்கே தெரியும், அவளுக்காக தான் நான் இதை எல்லாம் செய்தேன்னு. இப்போ நான் எடுத்து இருக்கிற முடிவு, என் சம்மந்தப்பட்டது, ப்ளீஸ் இதுல நீங்க வராதீங்க” என்று கூறிவிட்டு அறையினுள் திரும்ப போனவளை, கையை பிடித்து இழுத்தான்.

அவன் இழுத்த இழுப்பிற்க்கு, அவள் அவன் மேல் மோதி நின்றாள். முறைத்து பார்த்தவள் முன்பு, அவன் கையில் உள்ள டைரி அவளை திகைக்க வைத்தது.

“இது எப்படி உங்க கையில், அது என்னோடது” என்று அதை அவனிடம் இருந்து, கிட்டத்தட்ட பிடுங்க முயன்றாள்.

“எப்போ என் கைக்கு கிடைச்சதோ, அப்போவே இது என்னோடது ஆகிடுச்சு” என்று கூறி அவளிடம் இருந்து நகர்ந்து வந்து, சோபாவில் அமர்ந்து, படிக்க தொடங்கினான்.

“பார்க்க ஹீரோ மாதிரியே இருக்காங்க, அந்த அண்ணா” என்று பக்கத்தின் முதல் எழுத்தை வாசித்த பொழுது, அவனுக்கு சிரிப்பு வந்தது என்றால், அவளுக்கு கடுப்பாக இருந்தது.

“இப்போ கொடுக்க போறீங்களா, இல்லையா?” என்று அவனிடம் எகிறிக் கொண்டு இருந்தாள் ப்ரீத்தி.

“அந்த அண்ணா கிட்ட பேச, எனக்கு அவ்வளவு ஆசையா இருக்கு. ஆனா எப்படி பேச? என்ன பேச? பயமா இருக்கே!” என்று படித்தவுடன் குபீர் சிரிப்பு அவனுக்கு.

“பயமா! உனக்கா! ஹா ஹா! உன்னை பார்த்த முதல் நாள் ல இருந்து, நீ என்னை ஆட்டி வச்சுக்கிட்டு தான் இருக்க. உனக்கு பயம் என்னை பார்த்து சொன்னா, செம காமெடியா இருக்கு” என்று சிரித்தான்.

“அப்போ உள்ள நிலைமை அது, இப்போ தாங்க என் கிட்ட” என்றாள்.

“திரும்ப அந்த அண்ணாவை, இரண்டு வருஷம் கழிச்சு பார்த்தேன். அப்போ விட இன்னும் சூப்பரா இருந்தாங்க, பேச தோனுச்சு. உடனே, கூட்டத்தோட கூட்டமா போனேன் அவங்க கிட்ட பேச”.

“பாஸ்கட் பால் வின் பண்ணினதுக்கு, வாழ்த்துக்கள் சொன்னேன். சிரிச்சிகிட்டே தேங்க்ஸ் சொன்னாங்க, சொல்லிட்டு என் பாப் கட்டிங் பார்த்து நல்லா இருக்கு சொன்னாங்க” என்று அவன் வாசித்துக் கொண்டே, டைரி அவள் கைக்கு சிக்காமல் பார்த்துக் கொண்டான்.

“ஒ! அதான் அந்த போட்டோ பார்த்த உடனே, எனக்கு எங்கேயோ பார்த்த பீல் வந்ததா. ஆமா, இப்போ ஏன் முடி இவ்வளவு பெருசா வளர்த்து வச்சு இருக்க, அப்படியே பாப் கட்டிங்கே வச்சு இருக்கலாமே” என்றவனை பார்த்து இப்பொழுது அடிக்கலாமா என்று யோசித்தாள்.

“ஒழுங்கு மரியாதையா, டைரியை கொடுத்துடு டா எருமை. இல்லைனா, அடிக்க வந்திடுவேன் பார்த்துக்கோ” என்று மரியாதையை கைவிட்டு மிரட்ட தொடங்கினாள்.

“இப்போ எல்லாம், அந்த அண்ணா என் கனவுல அடிக்கடி வராங்க ஏன்னு தெரியல, ஆனா பிடிச்சு இருக்கு எனக்கு” என்று அவன் வாசித்த பின், இதற்கு மேல் படித்தால் ஆபத்து என்று உணர்ந்தவளாக, அவளுக்கு போக்கு காட்டிக் கொண்டு இருந்தவனை பிடிக்க ஓடினாள்.

அவளிடம் இருந்து தப்பிக்க, அவன் ஒரு பக்கம் ஓட, இவள் ஒரு பக்கம் ஓட என்று ஓடிக் கொண்டு இருந்தவர்கள், ஒரு கட்டத்தில் இருவரும் மோதிக் கொண்டு மூச்சு வாங்க சோபாவில் விழுந்தனர்.

அவனின் மேல் இருந்த ப்ரீத்தி, அவனிடம் இருந்து விலக நினைக்கையில் அவன் அவளை விலக விடாமல் பிடித்து இருந்தான்.

“டைரி ல படிக்கிறதை விட, நீயா சொன்னா நல்லது. ப்ளீஸ் சொல்லு, நான் தெரிஞ்சிக்க விரும்புறேன்” என்றான் அவள் கண்களை பார்த்து.

அவன் அப்படி கேட்ட பிறகு, அவளுக்கு முதல் முதலில் அவனை பார்த்த நாள் நினைவுக்கு வந்தது.

ஒன்பதாம் வகுப்பு முடிந்து, பத்தாம் வகுப்பு ஸ்பெஷல் கிளாஸ் ஆரம்பித்தது. அன்று காலை, ஸ்பெஷல் கிளாஸ்காக அவள் சீக்கிரம் பள்ளிக்கு வந்துவிட்டாள். அங்கு இவளுக்கு முன்பு, இவளது வகுப்பு தோழிகள் சிலர் வந்து இருந்தனர்.

எப்பொழுதும், பார்த்தால் ஒரு ஹாய் சொல்லிவிடும் அவர்கள் இன்று அது ஏதும் சொல்லாமல், அவர்கள் பார்வையை வகுப்பு ஜன்னலுக்கு வெளியே பதித்து எதையோ மும்முரமாக பார்த்துக் கொண்டு இருந்தனர்.

அப்படி என்ன மும்முரமாக பார்க்கின்றனர் என்று, இவள் அந்த ஜன்னல் வழியே எட்டி பார்த்தாள். அங்கே கல்லூரி மாணவர்கள் சிலர், கூடை பந்து பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்தனர்.

அதுவும் அங்கு இருப்பவர்கள் பார்க்க, நாங்கள் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லியது அவர்களின் தோற்றம். அதில் சற்று உயரமாக, வாட்டசாட்டமாக நம்மூர் பையன் போல் இருந்த வருண் தான் அவளுக்கு ஹீரோ போல் தெரிந்தான்.

வகுப்பு ஆரம்பிக்க கிளாஸ் டீச்சர் உள்ளே நுழைந்த பிறகு தான், அந்த ஜன்னல் கம்பிகளுக்கு விடுதலை கொடுத்து உள்ளே அவர்கள் இடத்தில் வந்து அமர்ந்தனர் எல்லோரும்.

வகுப்பு ஆரம்பித்தும், அவள் கண்கள் ஏனோ அன்று ஜன்னல் பக்கம் அடிக்கடி சென்று மீன்டது. அந்த பத்து நாட்கள் ஸ்பெஷல் கிளாஸ் இருக்கும் நாட்களில், அவள் சீக்கிரம் பள்ளிக்கு வந்து, ஜன்னல் வழியே அவனை வேடிக்கை பார்ப்பதை வழக்கமாக வைத்து இருந்தாள்.

அதன் பிறகு பாடம், அவளை இழுத்துக் கொள்ளவும், சற்று அவனை மறந்து போனாள். அதன் பிறகு மீண்டும் அவனை, அவள் பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்து அந்த லீவில் பாட்டியுடன் ஊரில் உள்ள ஒரு கல்லூரி அருகே, சிறிய பூ கடை போட்டு இருக்கும் பொழுது தான் அவனை சந்தித்தாள்.

அந்த கல்லூரியில், கூடை பந்து போட்டி ஒன்றிற்காக அவன் வந்து இருந்தான் அப்பொழுது. அவள் பாட்டியுடன் சேர்ந்து, பூ கடையை கவனித்துக் கொண்டு இருந்தவள், அப்பொழுது ஒரு பெண்மணி பாட்டியிடம் தனியாக பேச வேண்டும் என்று வந்தார்.

“நீ கொஞ்ச நேரம், அந்த காலேஜ்குள்ள இரு. அப்புறம் ஒரு அரை மணி நேரம் கழிச்சு வா, சரியா” என்று அவளை அங்கு அனுப்பி வைத்தார்.

கல்லூரிக்குள் நுழைந்தவுடன், சத்தம் வந்த திசையை நோக்கி சென்றாள் முதலில்.
அங்கே சென்றவள், பெண்கள் அதிகம் இருக்குமிடம் நோக்கி சென்று அங்கே நின்று கொண்டு, அந்த விளையாட்டை காண தொடங்கினாள்.


விளையாட்டில் கவனம் வைக்காமல், பார்வை முழுவதும் அப்பொழுது அவன் மீது மட்டுமே வைத்து இருந்தாள்.

“அப்போ விட இன்னும் கொஞ்சம் அழகாகிட்டாங்களே, அந்த அண்ணா” என்று வியந்து பார்த்துக் கொண்டு இருந்தாள் ப்ரீத்தி.

போட்டியில் அவர்கள் அணி வெற்றி பெறவும், இவள் அவனிடம் வாழ்த்து கூற எண்ணினாள். ஆனால் மனதிலோ சிறு பயம் வேறு, எப்படி வாழ்த்து தெரிவிக்க என்று அவள் எண்ணி இருந்த நேரம், அவனை சுற்றி பெண்கள் கூட்டம் கூட தொடங்கியது.

கூட்டத்தோடு, கூட்டமாக சென்று வாழ்த்து தெரிவித்து வரலாம் என்று அவள் அவனை நெருங்கினாள்.

“வாழ்த்துக்கள் அண்ணா” என்று இவள் தெரிவிக்க அவன் தேங்க்ஸ் என்றான்.
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
“இந்த பாப் கட்டிங் நல்லா இருக்கு உனக்கு” என்று அவன் கூறிவிட்டு செல்லவும், அவள் அப்படியே வானத்தில் பறந்தாள்.

அதன் பிறகு அவள் அவனை பார்க்கவில்லை என்றாலும், அவளது கனவில் அடிக்கடி வர தொடங்கினான். அவனை அண்ணா என்ற ஸ்தானத்தில், இப்பொழுது அவளால் பார்க்க முடியவில்லை.

ஏனோ, அவளும் அவனும் மணகோலத்தில் நிற்பது போல் கனவில் தோன்றி அவளுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சியை கொடுத்தது. இது ஈர்ப்பு என்று அந்த வயதில், அவளுக்கு அப்பொழுது புரியவில்லை.

அதன் பிறகு கல்லூரியில் சஞ்சனா நட்பு, அவளுக்கு பிடித்து இருந்தது. அவள் சென்ற பின், தனக்கு பாட்டி மட்டும் தான் இனி என்ற முடிவிற்கு அப்பொழுது வந்தாள்.

அவ்வபொழுது, கனவில் அவன் தோன்றினாலும் அவனை மறக்க எண்ணினாள். வாழ்வின் நிதர்சனம், அவளை அவ்வாறு நினைக்க வைத்தது.

இதற்கிடையில் மும்பையில் வேலை கிடைத்த பொழுது, அவளுக்கு ஒரு ஓரத்தில் ஒரு சிறிய நப்பாசை. அவனும் மும்பை என்று அறிந்து வைத்து இருந்தாள், அங்கே சென்று தோழி மூலம் அவனை கண்டுபிடித்தால் என்ன என்றும் தோன்றியது.

ஆனால் அடுத்து பாட்டியின் இறப்பு, அவளை அடுத்து தனக்குள் ஒரு வட்டத்தை போட வைத்தது. அதன் பிறகு, சஞ்சனா இறந்த பின் அவள் மூலம் தான் மீண்டும் இவனை காண நேர்ந்தது.

அவனை, அவள் அப்படி ஒரு கோலத்தில் எதிர்பார்க்கவில்லை. ஆளே, முழுவதுமாக மாறி இருந்தான். அவனிற்கு அந்த தாடி, நன்றாக இருந்தாலும் ஏனோ அவளால் அவனை அப்படி பார்க்க முடியவில்லை.

மேலும், அவனின் பழக்க வழக்கம் அவளை அதிர்ச்சியின் உச்சிக்கு எடுத்து சென்றது. சஞ்சனாவுக்காக என்றாலும், மனதின் ஓரத்தில் அவன் மீது அவள் ஏற்கனவே கொண்ட ஈர்ப்பு அவனை சரி செய்ய தூண்டியது.

ஒவ்வொரு முறையும் அவனை பார்க்கும் பொழுது, அவளுக்கு அவன் மீது நீ கொண்டது ஈர்ப்பு அல்ல காதல் என்று மனசாட்சி அவளுக்கு மண்டையில் கொட்டு வைத்தது.

அதிலும், அந்த வீடியோ வந்த பிறகு எக்காரணம் கொண்டும் அவனுக்கு, தான் அவன் மீது கொண்ட நேசத்தை தெரியப்படுத்த கூடாது என்று எண்ணி இருந்தாள்.

இதை எல்லாம் கூறி முடித்த பின், அவளால் அவனை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. ஏனோ, மாட்டிக் கொண்ட உணர்வு அவளுக்கு ஒரு வித அவஸ்தையை கொடுத்தது.

“ம்.. புரியுது! இப்போ ஏன் நீ இப்படி ஒரு முடிவை எடுத்த அப்படின்னு. ஆனா, இது சுத்த முட்டாள்தனம்ன்னு உனக்கு ஏன் புரியல” என்று இப்பொழுது கோபமாக கேட்டான்.

“அது எல்லாம் புரிஞ்சது, ஆனா என்னமோ எதையோ இழந்த மாதிரி ஒரு பீல், அதான் இப்படி” எனவும், அவன் தலையில் அடித்துக் கொண்டான்.

“இந்த காதல் ஆனாலும், இப்படி ஒருத்தனை முட்டாள் ஆக்கிகிட்டு வருது பாரேன். நான் குடிச்சு, குடிச்சே எங்க அம்மா, அப்பாவை வதைச்சேன்”.

“இப்போ, நீ ஒரேடியா போக பிளான் போட்டுக்கிட்டு இருக்க. ஏன் உனக்காக வாழ மாட்டியா? என்னை மாதிரி எத்தனையோ பேர் இருக்காங்க தானே, அவங்களை எல்லாம் சரி செய்ய மாட்டியா?”.

“இப்படி ஒரேடியா போக முடிவு பண்ணுறியே, உன்னை இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு வளர்த்த பாட்டிக்கு, நீ என்ன செஞ்ச?” என்று அவன் அப்பொழுது கேட்கவும், முகத்தில் யாரோ செம்மட்டியாக அடித்தது போல் உணர்ந்தாள்.

ஆம், அவளது பாட்டியின் கனவு அவளை மணகோலத்தில் காண்பது. அவள் நன்றாக கணவன், பிள்ளைகள் என்று சந்தோஷமாக வாழ வேண்டும் என்பது தான்.

இப்பொழுது, அவள் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து விட்டது. முடிந்த அளவிற்கு அவனை மறக்க வேண்டும், பின் நல்ல வரன் அமைந்தால் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

ஆனால், அவளால் அவனை மறக்க முடியுமா என்றால்? முயன்று பார்க்க எண்ணினாள், அவனை மறக்க. இப்பொழுது தெளிவாக நிமிர்ந்து, அவனை பார்த்து சிரித்தாள்.

அவள் சற்று தெளிந்து விட்டாள் என்று தெரிந்த பின், சிறிது நேரம் பேசிவிட்டு இனி நண்பர்கள் என்று கை குலுக்கி விடை பெற்றான்.

“என்ன சஞ்சு இது? இதுங்க இப்படி இருக்காங்க? நாம கஷ்டப்பட்டு, அவனுக்கு அவளோட டைரி எடுத்துக் கொடுத்தது வேஸ்ட் ஆகிடுச்சா அப்போ” என்று கவலையாக கேட்டுக் கொண்டு இருந்தாள் சாஹித்யா.

“அது எல்லாம் வேஸ்ட் இல்லை சாஹி. இனி ரெண்டு பேரையும், அடிக்கடி மீட் பண்ண வைக்கணும் நாம” என்று கூறிய சஞ்சனாவை பார்த்து சிரித்தாள் சாஹி.

“ஒகே அப்போ mission ஸ்டார்ட் பண்ணிடலாம்” என்று குஷியானாள் சாஹித்யா.

அன்று அவளிடம் பேசிவிட்டு, தந்தையுடன் மும்பை பறந்தவன் அங்கேயே சில நாட்கள் இருந்து தந்தையின் தொழிலை கவனித்துக் கொண்டான்.

அவன் தந்தை அவனுக்கு திருமணம் செய்து வைக்க நினைக்க, அவனோ மறுத்தான். தான் இன்னும் சஞ்சனாவை மறக்கவில்லை, மறந்தால் நிச்சயம் நல்ல பெண்ணை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறிவிட்டான்.

இதற்கிடையில், ஆஷிக் தன்னுடைய குடும்பத்தை ஹைதராபாத்திற்கு ஷிப்ட் செய்து கொண்டான். அவனும், அங்கேயே தொழில் தொடங்க போவதாக கூறி, வருணிடம் கம்பெனியை ஒப்படைத்து விட்டு சென்றான்.

வருணிற்கு, இப்பொழுது அங்கே சஷாங்கை அனுப்பினால் என்ன என்று தோன்றியது. அதை குறித்து அவனிடம் பேசினால், அவன் மும்பையில் நான் பார்த்துக் கொள்கிறேன்.

எனக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது, குடும்பத்தை அங்கு மாற்ற இயலாது என்று கூறி பின் வாங்கினான். வேறு வழியின்றி, அவன் மீண்டும் இங்கு வந்தான்.

அவனின் இருப்பிடத்திற்கு வந்து அமரும் பொழுது, அவனிற்கு அப்பொழுது சஞ்சனா நினைவிற்கு வரவில்லை. அவனை எதிர்த்து, சட்டமாக அங்கே அமர்ந்து இருந்த ப்ரீத்தி தான் நினைவுக்கு வந்தாள்.

“என்னது இது? அந்த பாப்பி ஏன் நியாபகத்துக்கு வரணும்? ஒவ்வொரு முறையும், அவளையே நான் ஏன் நினைக்கணும்?” என்று புலம்ப தொடங்கினான்.

திரும்பவும், மும்பை செல்லலாமா என்று அவன் நினைக்க, அது அவனுக்கே பைத்தியகாரத்தனமாக தோன்றியது.

அங்கு வீட்டிலும், அவளை வெறும் துண்டுடன் பார்த்தது வேறு நினைவுக்கு வந்து இம்சை படுத்த தொடங்கியது.

“ஹையோ! என்ன நடக்குது எனக்கு?” என்று புலம்ப தொடங்கி விட்டான்.

அவனுக்கு இருந்த டென்ஷனில், கையில் சிகரட் தேடினான். அவன் இருக்கும் டென்ஷன் அறிந்து, அப்பொழுது சஞ்சனா ஒரு பேப்பரில் எழுதி, அதை அவன் முன் நீட்டினாள்.

திடிரென்று பேப்பர் கண் முன் ஆடவும், பயந்து அம்மா என்று அலறி கீழே விழுந்தான். கூடவே அந்த பேப்பரும் அவன் மேல் விழுந்தது.

 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
“டேய்! ப்ரீத்தி உன் மனசுக்குள்ள வந்துட்டா. அவளை இனி நீ தான் கண் கலங்காம பார்த்துக்கணும், சும்மா என்னை மறக்க முடியலைன்னு, உன்னை நீயே எமத்திக்காத இனி” என்று சஞ்சனா எழுதிய பேப்பர் கையில் கிடைக்கவும், கண்களில் நீர் வழிய சஞ்சனா என்றான்.

மீண்டும் ஒரு பேப்பர், அவன் முன் ஆடியாது. இப்பொழுது, பயம் இல்லை அவனுக்கு.

“என் ஆசை இது தான், அவளை கல்யாணம் பண்ணிக்கோ, நானே உங்களுக்கு மகளா வரேன்” என்று எழுதி இருந்தது.

மனம் சற்று அதிர்ந்தாலும், நிதர்சனம் அவனுக்கு புரிய வைத்தது. தெளிந்த முகத்தோடு, அவன் ப்ரீத்தியை சந்திக்க சென்றான்.

அங்கே ப்ரீத்தி, பெரும் கோபத்தில் இருந்தாள். அவனை மறக்க வேண்டும் என்று நினைக்க, நினைக்க ஒவ்வொரு முறையும் அவனை தான் அதிகமாக நினைத்துக் கொண்டு இருந்தாள்.

அவளால், ஒரு வேலையை கூட நிதானமாக செய்ய முடியவில்லை. எல்லா நேரமும், அவனுடன் இருந்த பொழுதுகள் கண் முன் தோன்றி, அவளை கடுப்பேற்றிக் கொண்டு இருந்தது.

அன்று மருத்துவமனையில் வேலை ஓடாமல், வீட்டிற்கு சீக்கிரம் வந்தவள், அங்கே இருந்த அவனின் உருவ பொம்மை மேல், கத்தியை வீசிக் கொண்டு இருந்தாள்.

அவள் அப்படி வீசிக் கொண்டு இருக்கும் பொழுது தான், அவன் உள்ளே வந்தான். அங்கே இருந்ததை பார்த்து, அவன் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றான்.

“வா டா வா! உன்னை தான் தேடிகிட்டு இருந்தேன்” என்று கூறி கத்தியோடு அவள், அவனை துறத்த தொடங்கினாள்.

“நான் என்ன பண்ணேன் உன்னை, எதுக்கு உனக்கு இந்த கொலைவெறி” என்று ஓடிக் கொண்டே கேட்டான்.

“என்ன பண்ணியா? உன்னை மறக்கலாம் நினைச்சா, கனவுல வந்து இம்சை படுத்திகிட்டே இருக்கியே! நானும் என் பாட்டி ஆசையை நிறைவேத்தலாம் பார்த்தா, முடியுதா என்னால” என்று அவளின் நிலைமையை எடுத்துக் கூறவும், அவன் நின்று விட்டான்.

நின்றதோடு மட்டும் இல்லாமல், அவளையும் பிடித்து நிறுத்தினான்.

“மறக்க முடியலை அப்படினா, என்னை கல்யாணம் பண்ணிக்கோ” என்று கூறி கண் சிமிட்டினான்.

“விளையாடாத! நீ சஞ்சுவை எப்படி விரும்பின எல்லாம், எனக்கு தெரியும். நீ இருந்த நிலைமையே அதுக்கு சாட்சி, சும்மா உளராம போ” என்று கூறி எரிச்சல் அடைந்தாள்.

“எரிச்சல் படாம, இப்போ நான் சொல்லுறதை நீ கேளு. இன்னைக்கு தான் நான் மும்பையில் இருந்து வந்தேன். ஆபிஸ் போனேன், அங்க நீ தான் தெரிஞ்ச”.

“வீட்டுக்கு போனேன், நீ எனக்கு கொடுத்த காட்சி இன்னும் என் கண்ணுக்குள்ள நிக்குது. எல்லா நேரமும், இங்க நான் உன்னை பத்தி மட்டுமே நினைச்சேன்”.

“அவ்வளவு ஏன், இங்க வர நான் முதல தயங்கினேன். காரணம் எங்க, உன்னை நான் பார்த்து மீண்டும் உனக்கு என்னோட நினைப்பு அதிகமானா”.

“அப்போ கூட உன்னை பத்தி தான் நினைச்சு இருக்கேன், இப்போ இங்க வந்த பிறகு தான் தெரிஞ்சது. சஞ்சனா இப்போ இல்லை, அவ என்னோட கடந்த காலம்”.

“ஆனா, நீ இப்போ நிகழ்காலம். ஐ லவ் யூ ப்ரீத்தி, எப்படி எல்லாம் தெரியல, ஆனா ஏதோ ஒரு விதத்தில் நீ என்னை ரொம்ப பாதிச்சு இருக்க” என்று கூறினான் வருண்.

இதைக் கேட்டவள், இதற்காக தானே இத்தனை நாள் காத்து இருந்தோம் என்ற நினைவு தான் முதலில் வந்தது அவளுக்கு. கனவு நிஜமாக போவதை நம்ப முடியாமல், அவன் கையை கிள்ளி விட்டாள்.

“ஏன் இப்படி ?” என்று அலறினான்.

“சும்மா, கனவா, இல்லை நிஜமான்னு டெஸ்ட் பண்ணேன்” என்றவளை இழுத்து, உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டான்.

இதை பார்த்த, சஞ்சனாவும், சாஹித்யாவும் சந்தோசம் அடைந்தனர். தங்கள் வேலை முடிந்தது என்பது போல், இருவரும் முக்தி வேண்டி மேலே சென்றனர்.

ஒரு வருடம் கழித்து:

“ஜோ, ஜோ! அழ கூடாது சாஹி, அம்மா பக்கத்துல தான இருக்கேன். தூங்குங்க செல்லம், ஜோ! ஜோ!” என்று தட்டிக் கொடுத்துக் கொண்டு இருந்தாள் ப்ரீத்தி.

“பாரு டா சஞ்சு, அம்மா சாஹிக்கு தான் இப்போ எல்லாம் அதிக செல்லம் கொடுக்கிறாங்க, நம்மள கண்டுக்கவே மாட்டேங்குறாங்க” என்று கூறிய வருணை முறைத்தாள் ப்ரீத்தி.

“பிள்ளைக்கு தப்பு தப்பா சொல்லிக் கொடுக்காதீங்க. எத்தனை தடவை சொல்லுறது, சாஹி தான் என்னோட ஒரே உறவா கூடவே இருந்தா அப்படின்னு”.

“இந்த வீட்டை சுத்தி, பாட்டி ஆயிறேதெட்டு மந்திரம் போட்டு வச்சு இருந்தாலும், ஒரு பயம் இருந்துகிட்டே இருக்கும் எனக்கு, பாட்டி இறந்த பிறகு”.

“சாஹி என் கூட தங்கின பிறகு தான் , திரும்ப நான் பயமில்லாம தூங்கினேன். அதனால, உருவமே இல்லாம என் கூட எனக்கு ஆறுதலா இருந்த சாஹி, எனக்கு ஸ்பெஷல் தான்”.

“அதுக்குன்னு உங்களை ஒதுகிட்டேன், ஸ்பெஷல் கவனிப்பு கொடுக்கலன்னு பொய் சொல்ல கூடாது. ரெண்டு பேருக்கும், என்ன பிடிக்கும்ன்னு என்னை தவிர யாருக்கு தெரியும்” என்று கூறியவளை காதல் பார்வை பார்த்து வைத்தான்.

அந்த பார்வையில், எப்பொழுதும் போல் முகம் சிவந்து போனாள் ப்ரீத்தி. இவர்களை பாட்டி, மேலிருந்து ஆசிர்வதித்தார்.

நிறைந்தது..
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
hi friends,
thanks a lot for ur support..
oru valiya thirupthiyaga intha kathaiyai mudithu vitten..
2 epi thara plan panni irunthen.. but konjam udambu mudiyala
so ore epiyil story mudikka vendiya situation
happy diwali to u and ur family members..
keep supporting..
aduthu thuruva kathal 16th appuram start pannuren friends..

anbudan,
uma deepak
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
உமா தீபக் டியர்
 




Last edited:

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Nice ending Uma... will miss sanjana and saahithyaa...
Eagerly waiting for Dhuruva kaathal????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top