• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vaazhkaiyin Varnajalam 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 1
இருள் கொஞ்சம் கொஞ்சம் விலகி வானம் நிறம் மாறி நீல வானம் சிவப்புவண்ண பட்டுடுத்த வெள்ளை மேகங்கள் வானில் உலா வர கிழக்கே தனது பணியினைத் தொடங்கினான் கதிரவன்...!
திருப்பூர் மாவட்டம்.. இங்கே இருக்கும் மக்கள் ஒரு ஊரை சேர்ந்தவர்கள் கிடையாது.. இந்தியாவின் எந்த மாநிலத்து மக்களையும் வா என்று அரவணைத்துக் கொள்ளும்.. சொல்ல போனால், “வந்தோரை வாழ வைக்கும் தமிழ்நாடு!” என்ற பெயர்க்கு சின்ன எடுத்துக்காட்டு இந்த திருப்பூர் மாவட்டம்.. இந்த ஊரில் ஆண், பெண் இருவரும் சரிக்கு சமமாக வேலை செய்ய கூடியவர்கள்..
ஆனால் அந்த காலை வேளையிலேயே பரபரப்புடன் காணப்பட்டது வெள்ளியாங்காடு.. திருப்பூர் மாவட்டத்தில் தெற்கில் காணப்படும் ஒரு சின்ன வார்டு.. ஆனால் இங்கே பனியன் கம்பெனிகளுக்கு பஞ்சம் இல்லை.. அதே போல இங்கே கிடைக்காத பொருட்களும் இல்லை..
பல மாநிலத்து மக்கள், பலவிதமான ஜாதிகள், பலவிதமான கொள்கைகள் உள்ள மக்கள் ஒன்றாக இணைப்பது இந்த பனியன் தொழிற்சாலையே..! இவர்கள் வாழும் இந்த இடத்தில் தான் வாழ்கின்றனர் பிரதீபனும், பாரதியும்..! அந்த காலைப்பொழுதில் மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது அந்த இனியனின் புதிய இல்லம்..!
இந்த இல்லத்தில் இன்னும் சற்று நேரத்தில் கிரகபிரவேசம் நடக்க போகிறது.. அதற்குள் இந்த இல்லத்தில் இருக்கும் நபர்கள் பற்றி அறிந்துக் கொள்ள என்னுடன் வாங்க..
இது தான் இவர்கள் தங்கி இருக்கும் வாடகை வீடு.. வாங்க உள்ளே என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்..
“அம்மா இன்னும் உள்ளே என்ன பண்ணிட்டு இருக்கீங்க..? வெளியே வாங்க..” என்று அறையில் உள்ளே குரல் கொடுத்த படியே தனது வேலையைத் தொடர்ந்தாள் உதயா,
“எதுக்கு இப்படி கத்துவா..? கொஞ்சம் மெதுவாக பேசிப்பழகு என்று உன்னிடம் எத்தனை முறை சொல்வது..?” என்று அறையில் இருந்து குரல் கொடுத்தார் பாரதி..
“காலையிலேயே ஆரமித்து விட்டார்கள்..” என்று உதயா முணுமுணுக்க, “என்ன அங்க வாய்க்குள் முணகுவது போல தெரிகிறது..?” என்றார் பாரதி.
“ஒன்னும் முணுமுணுக்க வில்லை..” என்றவள் தனது வேலையைத் தொடர, அவளின் எதிரே வந்த இனியன், “சத்தியமாக சொல்லு நீ முணகவே இல்லை..” என்று கேட்க,
“நான் முணகவே இல்லை..” என்று சொல்ல, “வரவர நீ நிறையாக பொய் சொல்கிறாய்..” என்று இனியன் சொல்ல,
“அம்மா..” என்று கத்தினாள் உதயா.. “ஐயோ கத்த ஆரமித்துவிட்டாள்..” என்று இனியன் காதை அடைத்துக் கொள்ள,
“இவர்கள் இருவருக்கும் இதே வேலையாக போய்விட்டது..” என்று திட்டியவர், அறையை விட்டு வெளியே வந்து, “எதுக்கு இப்படி கத்துகிறாய்..?” என்று மகளிடம் கேட்டார்..
“என்னை வம்புக்கு இழுக்கிறான்..” என்று தம்பியைப் பற்றி புகார் வாசித்தாள் பெரியவள்..
“நீ எதுக்குடா அவளிடம் வம்புக்கு நிற்கிறாய்..?” என்று மகனிடம் கேட்டார் பாரதி..
“இவள் முனகியதைக் கேட்டது என்னுடைய தவறா..?” என்றவன் கோபமாக எழுந்து செல்ல, “நீ அவனை விட ஐந்து வருடம் பெரியவள் தானே, எதற்கு அவனிடம் வம்பிற்கு நிற்கிறாய்..” என்றவர்..
“இனியா நீ இவளை விட ஐந்து வருடம் சிறியவன், அவளுக்குத் தான் படித்தும் புத்தியே இல்லை” என்று சொல்லி சமாதானம் செய்தார்..
“அப்பாவை இங்கே அழைத்துவாடா..” என்று உதயா சொல்ல, “அவருக்கு இங்கே வர விருப்பம் இல்லையாம்..” என்று இனியன் சோகமாக சொல்ல,
“இவருக்கு இதே வேலைதான்..” என்று பாரதி தனது காலை மண்டகப்படியை ஆரமிக்க, “என்ன யாருக்கு மண்டகப்படி நடக்கிறது..?” என்ற கேள்வியுடன் அங்கே வந்து சேர்ந்தார் பிரதீபன்..
“ம்ம் வழக்கம் போல உங்களுக்கு தான்..” என்று உதயா சிரித்தபடியே சொல்ல,
“எனக்குதானே நடந்திருக்கும்.. இவளுக்கு என்னை பேசவில்லை என்றால் தூக்கமே வராது..” என்று பிள்ளைகளிடம் மனைவியை பேச,
“ஆமாம்! நீங்கள் நான் பேசும் படியே தான் நடக்கிறீங்க..?” என்று பாரதி, பிரதீபனைப் பார்த்து கேட்டார்..
“பாரதி நீ சொல்வது போல என்னால் நடக்க முடியாது.. நான் என் விருப்பபடி தான் இருப்பேன்!” என்று சொன்னார்
“நீங்கள் திருந்தி விட்டால், உலகமே அழிந்துவிடும்..” என்று பாரதி கோபமாக சொன்னார்..
“நான் என்ன திருந்தாமல் இருக்கிறேன்..? நீ என்ன திருத்த வந்து விட்டாய்..?” என்று பிரதீபன் சண்டைக்கு தயாராக, அதுவரையில் இருந்த விளையாட்டு மாறி, “அப்பா வாங்க அக்கா நீ அம்மாவை உள்ளே அழைத்துச் செல்..” என்று இனியன் கூறினான்..
“அம்மா வாங்க..” என்று அழைத்துச் சென்றாள் மகள்..
“இவர்கள் இருவரும் ஒரு இடத்தில் பத்து நிமிடம் இருந்தால், சண்டை வருவது நிச்சயம்..” என்று சொன்னான் இனியன்,
“அம்மா இன்னும் எதுக்கு இங்கே நிக்கிறீங்க.. வாங்க அம்மா இன்று நமது வீட்டில் கிரகபிரவேசம் அது உங்களின் எண்ணத்தில் இருக்கிறதா..?” என்று பாரதியை அறையின் உள்ளே அழைத்துச் சென்றாள் உதயா..
“அப்பா என்னப்பா நீங்க அவங்களைப் பற்றி தெரிந்தும் இன்னைக்கும் உங்களின் சண்டையை ஆரமித்து விட்டீர்களா..?” என்று இனியன் கேட்டான்
“நானா ஆரமித்தேன் அவள் தான் ஆரமித்தாள்..” என்று மனைவியைப் பற்றி மகனிடம் புகார் பத்திரம் வாசித்தார் தந்தை
“அப்பா நீங்க வயதில் தான் பெரியவர்.. ஆனால் பண்ணுவதைப் பார்த்தால், ஸ்கூல் பிள்ளைகளைவிட மோசம்!” என்று கூற
“நான் என்ன பண்ணினேன்..?” என்று மகனைப் பார்த்துக் கேட்டவர், அறையின் பக்கம் “உதயா இவன் லக்சர் எடுக்கிறான்..” என்று கூறினான்
“அவன் லக்சர் எடுத்த படித்து பாஸ் பண்ணுங்க.. இப்போ முதியோர் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்..” என்று கூற, அதைக்கேட்டு பிரதீபன் முகம் ஒருவிதமாக மாற அதைப்பார்த்து இனியன் சிரிக்க,
அறையின் உள்ளே இருந்த பாரதிக்கு சிரிப்புதான் வந்தது, “உன்னோட அப்பா மட்டும் படித்திருந்தால், நான் அவ்வளவு தான் உதயா.. நம்மளை திருப்பூர் பக்கமே வரதே என்று சொல்லி விடுவார்..” என்று சொல்லி சிரிக்க அவருடன் சேர்ந்து சிரித்தாள் உதயா..
“அப்பா வீட்டைப் பூட்டி விட்டு வந்தீர்களா...?” என்று கேட்டாள் உதயா..
“ம்ம் பூட்டி விட்டுதான் வந்தேன் உதயா..” என்றார் பிரதீபன்..
“என்ன உதயா அதிசயமாக இருக்கிறது..? வெளியே மழை வருகிறதா..? என்று பார்..” என்று கூறி சிரிக்க, அன்னையைப் பத்திரம் காட்டினாள் மகள்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
இதுதான் இவர்களின் குடும்பம்.. பிரதீபன் வயது 42. ஐந்தரை அடிக்கும் சற்றி உயரம் அதிகம்.. மாநிறம், அலையலையாக கேசம், எப்பொழுது சிவப்பாக இருக்கும் கண்கள், கூர்மையான நாசி, செதுக்கப்பட்ட உதடு, ஒல்லியான உடல்வாகுக் கொண்ட ஒரு நடுத்தர வயதுக் கொண்டவர்.. ஒரு குடும்ப தலைவன்.. (என்ன வயது 42 ஆ! என்று நீங்கள் கேட்பது புரிகிறது.. ஆனால் நீங்கள் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும் இவர் அறிமுகம் முடியவில்லை..)
பாரதி வயது 45. பிரதீபனின் மனைவி.. ஐந்தடி உயரம் சிவந்த நிறம், இடுப்பு வரையில் கூந்தல், அடர்த்தியான புருவம், பார்ப்பவரை நொடியில் அளவிடும் கண்கள், கூர்மையான நாசி, ரோஜா இதழ்கள், ரொம்ப ஒல்லியும் இல்லை, ரொம்ப குண்டும் இல்லை சரியான உடல்வாகு கொண்டவர். குடும்பத்தலைவி..( இவர் குணம் பற்றி பிறகு சொல்கிறேன்.. இவர் அறிமுகம் முடியவில்லை..)
இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள்.. முதலில் பெண் உதயா. இரண்டாவது ஆண் இனியன்.. முதலில் உதயா பற்றி தெரிந்துக் கொள்வோம்..
உதயா வயது 2௦. கல்லூரி முடித்துவிட்டு வீட்டில் இருக்கிறாள்.. அளவான கூந்தல், நேர்த்தியான நெற்றி, வில்லேன புருவம், ஒருவரின் பார்வையை வைத்தே மனதை கணித்து விடும் அவளின் கண்கள், நேரான நாசி, சிவந்த இதழ்கள், ஒல்லியான உடல்வாகு உயரம் ஐந்தரை அடி.. வாய் மட்டும் கொஞ்சம் அதிகம்..
இனியன் வயது 16. பள்ளியில் பத்தாவது முடித்துவிட்டு வேலைக்கு செல்கிறான்.. அப்படியே அன்னை போலவே இருப்பான்.. எப்பொழுது சிரித்த வண்ணம் இருப்பான்.. அவனின் முகத்தில் சிரிப்புக்கு பஞ்சம் இல்லை.. எல்லோருக்கும் அவனின் புன்னகை பிடிக்கும்..
ஆகமொத்தம் நான்கு பெரும் ஒரு இடத்தில் இருந்தால், சிரிப்புக்கும் பஞ்சம் இருக்காது.. சண்டை வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.. யார் இடையே சண்டை வரும் என்று நினைக்கிறீங்க, நம் பிரதீபனுக்கும் பாரதிக்கும் தான் சண்டை வரும்.. அதுதான் சமாதானம் செய்ய இருவர் இருக்கின்றனரே..!
அன்னையும், தந்தையும் தனித்தனி வீட்டில் இருந்தாலும் கூட இருவரின் மீதும் பாசமாக இருக்கும் பிள்ளைகள்..! இனியனும், உதயாவும்..!
பிள்ளைகள் தங்களைப் புரித்துக் கொண்டனர் என்று தங்களின் வாழ்க்கையை அவர்களுக்கு என்று தனித்தனி பாதையை உருவாக்கிக் கொண்டு, அந்த பாதையில் சந்தோசமாக தங்களின் சுதந்திரத்தை அனுபவித்து வாழும் தம்பதிகள்!
இவர்கள் இப்படி பிரித்து வாழ காரணம் தான் என்ன..? இவர்கள் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று நாம் கொஞ்சம் கடந்த காலம் வரையில் சென்று பார்ப்போம்!
பாரதி பிறந்தது பொள்ளாச்சி. சுந்தரம் – மீனாட்சி தம்பதிகளின் கடைசி மகள்.. சுந்தரம் – மீனாட்சிக்கு மொத்தம் ஆறு பிள்ளைகள். மூன்று ஆண்கள், மூன்று பெண்கள்..அவர்களின் குடும்ப தொழில் மரவேலை செய்யும் ஆசாரி தொழில்..
இவளுக்கு சின்ன வயதாக இருக்கும் பொழுதே இவளின் முதல் அக்கா பாக்கியம் திருமணம் செய்து நாமக்கலில் இருக்கின்றனர்.. பாரதியின் இரண்டாவது அண்ணன் கண்ணன், அப்பா செய்யும் தொழிலை செய்துக் கொண்டிருக்கிறார்.. இன்னும் திருமணம் ஆகவில்லை.. இவளின் மூன்றாவது அக்கா பிரபாவதி, அடுத்து வீட்டில் திருமணத்திற்கு ரெடியாக இருக்கிறார்.. நாலாவது வாசுதேவன் பாரதியின் இரண்டாவது அண்ணன் படித்துக் கொண்டிருக்கிறான்.. ஐந்தாவது சுதாகர் பாரதியின் ஐந்தாவது அண்ணன் அவனும் படிக்கிறான்..
பாரதி பெயருக்கு ஏற்றார் போல படு சுட்டியான பெண்.. படிப்பிலும் அப்படியே..! ஒரு ஆண் என்ன வேலை செய்தாலும் அவனுக்கு நிகராக வேலை செய்வதில் இவளை அடித்துக் கொள்ள ஆள் கிடையாது..
இவளின் அப்பா இவளை ஒரு மகனை வளர்ப்பது போலத்தான் வளர்த்தார். கஷ்டம் அதிகம் பட்டாலும் பிள்ளைகளே அவர்களின் உலகம்.. பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொண்டுதான் வீட்டிற்கு வருவார்.. மற்ற மக்களை விடவும் பாரதியின் மேல் அதிகம் பாசம் கொண்டவர்..
“டேய் உனக்கு அந்த சிட்டுக்குருவி தானே வேண்டும்..?” என்று உண்டிக்கோலை வைத்துக் குறிப்பார்த்துக் கொண்டு கேட்டாள் பாரதி
“ம்ம் ஆமா அக்கா..” என்று சொல்ல, அந்த சிட்டுக்குருவியை அடித்தால், அது சரியாக சிட்டுக்குருவியின் மேல் பட்டு குருவி கீழே விழ,
“போய் எடுத்துக்கொள்..” என்று பக்கத்தில் நின்ற ஐந்து வயது பையனிடம் சொல்ல,
“ஏய் பாரதி என்னோட கோலிகுண்டு எங்கே..?” என்று கேட்டான் அவளின் மூன்றாவது அண்ணன் சுதாகர்
“என்ன சுதா கோலிகுண்டை காணவில்லையா..?” என்று ஒரு புருவம் உயர்த்தி கேட்டாள் பாரதி
“அப்போ உன்னிடம் தான் இருக்கிறது.. எங்கே வைத்திருக்கிறாய்..?” என்றுக் கேட்டான் சுதா
“என்னை நேற்று ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்றாய்.. அதுதான் அந்த கோலிகுண்டு இருந்தால் தானே விளையாடுவாய்..? என்று எடுத்து அப்பாவிடம் கொடுத்துவிட்டேன்.. உனக்கு வேண்டும் என்றால் அப்பாவிடம் கேட்டு வாங்கிக் கொள் சுதா..” என்று பாரதின் சாதாரணமாக கூற, அவளின் கண்களில் தெரித்த கேலியை வைத்தே சுதாரித்து விட்டான் சுதா..
“உன்னிடம் தான் இருக்கிறது என்னுடைய கோலிகுண்டை கொடு..” என்றான் சுதா.. அவனின் பின்னே பார்த்து, “அப்பா சுதாவின் கோலிக்குண்டு உங்களிடம் கொடுத்து விட்டேன் தானே..?” என்றாள் மகள்
அவள் சுதாவை ஒரு பார்வைப் பார்த்துக் கொண்டு கேட்க, “ஐயோ அப்பாவிடம் மாட்டி விடுகிறாள் ராச்சசி..” என்று மெதுவாகத் திரும்பிப் பார்க்க, அங்கே அவனின் அப்பா இருந்தாள் தானே..
“கொஞ்ச நேரத்தில் என்னை நடுங்க வைத்துவிட்டால் இந்த பாரதி” என்று கூறியவன் திரும்பிப் பார்க்க,
அவள், “கோலிக்குண்டு என்னிடம் தான் இருக்கிறது கொடுக்க முடியாது சுதா..” என்று சொல்லியவள் ஓடிவிட, அவள் ஒரு வீதியில் புகுந்து ஓட, அவள் ஓடிய வீதியின் அடுத்த வீதியில் ஓட்டிய சுதா
அவளை வழிமறிக்க அவன் வந்த வழிக்கு பதில் வேறொரு வீதியில் ஓடியவள் அந்த வீதியில் தனது தந்தை வருவதைப் பார்த்து, “இவர் வீட்டிற்கு போவதற்குள் நான் வீட்டிற்கு போக வேண்டும்..” என்றவள்,
பக்கத்தில் இருந்த வீட்டின் வராண்டாவில் புகுந்து ஓடியவள், தனது வீட்டின் பின் வாசல் வழியாக உள்ளே சென்று கைகால்களை கழுவிக் கொண்டு வீட்டின் உள்ளே சென்றாள்.. அவளின் அன்னை அவளைப் பார்த்து, “போய் படி குட்டி..” என்று சொல்ல
“ம்ம் சரிம்மா..” என்றவள் புத்தகத்தை எடுத்து படிக்க அமரயும் அவளின் தந்தை உள்ளே வரவும் சரியாக இருந்தது..
“என்ன குட்டி படிக்கிறாயா..?” என்று கேட்க, “ஆமாம் அப்பா..” என்று சொன்னாள்.. “நீ படிம்மா அப்பா குளித்துவிட்டு வருகிறேன்..” என்று உள்ளே சென்றார்
அப்பாவின் பின்னே வீட்டின் உள்ளே நுழைந்தான் சுதாவும், வாசுவும்.. “வாசுவும், சுதாவும் எங்கே மீனாட்சி..?” அவரின் அப்பாவின் குரல் கேட்டு,
வாசுவின் பக்கம் குனிந்த சுதா, “டேய் வாசு எல்லா வேலையும் செய்துவிட்டு ஒன்னும் தெரியாத பிள்ளை போல அமர்ந்திருக்கிறது பார் குட்டி சாத்தான்..” என்று கூறினான்
“இவளை நாளை பார்த்துக் கொள்ளலாம் சுதா..” என்றவர்கள் இருவரும் முகம் கழுவ சென்றனர்.. இவர்கள் மூவருக்கும் காபி கொடுத்தாள் பிரபா..
பாரதியின் விளையாடும் விளையாட்டு எல்லாம் ஆண்கள் விளையாடும் விளையாட்டுகள்.. கில்லி அடித்தல், கோலிகுண்டு வைத்து விளையாடுவது, ஒடக்கான், குருவி அடித்தல், கபடி விளையாடுதல்..
இவளைப் பார்த்து இவளின் அண்ணன் இருவரையும் கேலி செய்வர் அவர்களின் நண்பர்கள்.. மொத்தத்தில் பிறப்பில் மட்டும் தான் பெண்..
அவர்கள் குடும்பம் பற்றி அவளின் தந்தையிடம் கேட்டால், “எனக்கு இரண்டு பெண்கள், நான்கு மகன்கள் என்று தான் சொல்வர்..” சொல்வார்..
அப்பா வீட்டில் வேலை செய்தால், அவரின் அருகில் அமர்ந்து அவர் கேட்க வேண்டும் என்று நினைக்கும் பொழுதே அதை அவளின் கையில் கொடுப்பாள் பாரதி..
அக்காவிற்கு கடிதம் எழுத வேண்டும் என்று சொன்னால் போதும், அந்த வீட்டில் வாழும் அனைவரையும் விசாரித்து, இந்த கடிதம் எழுத காரணம், கடைசியில் முகவரி வரையில் எழுதி தந்தையின் கையில் கொடுப்பாள் மகள்..
அவள் பத்து வயதில் இவ்வளவு அறிவாக இருப்பதைப் பார்த்து பெற்றோருக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்..
இதுதான் பாரதியின் குடும்பம். இவர்கள் வாழ்க்கை இதுதான்.. வறுமை என்று தெரிந்தாலும், பிள்ளைகள் விரும்புவதை வாங்கிக் கொடுக்க கஷ்டம் படுவது சுந்தரம் வேலை என்றால், அவர்கள் கேட்டதை செய்து தருவது மீனாட்சியின் வேலை.!.
 




Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Hi Thozhikale,
Itho enathu muthal episode padiththuviddu thanagalin karuththukalai pathividavum...
Ippadikku
Ungalin anbu thozhi
Sandhiya Sri
 




Priya tl

நாட்டாமை
Joined
Feb 6, 2018
Messages
92
Reaction score
94
Location
Tiruppur
அருமை தோழயே ........
Yea renu perum thaniyaka irukanum ego va ???????:unsure::unsure::unsure::unsure:
Bharathi rombavum chutti Pen pola ...... :eek:
Pavam udan piranthavargal ??????? :eek::eek:
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
bharathi& pratheban sandai kozhingala sis:unsure::unsure::unsure::unsure:..... she is found to be elder.........bharati nameku etrar pola so sweet nice start sis(y)(y)(y).
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆரம்பமே, செம அசத்தலாகயிருக்கு,
சந்தியா ஸ்ரீ டியர்
பாரதியம்மா, சின்ன வயதில்
படுசுட்டியாக
இருந்திருக்கிறாளே பா?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹா... ஹா... ஹா................
சுதாகரின் கோலிகுண்டை
கடைசி வரை, அவனிடம்
பாரதி, கொடுக்கலை போலவே,
சந்தியா ஸ்ரீ செல்லம்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பாரதியை விட பிரதீபன்,
மூன்று வயது இளையவர், ஓகே
ஆனால், கணவனும், மனைவியும்
ஏன், தனித்தனி வீட்டில்
இருக்க வேண்டும், சந்தியா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பெற்றோர் பார்த்து,
செய்து வைத்த
திருமணம்தானே,
சந்தியா ஸ்ரீ டியர்?
என்ன கொடுமைடா
சரவணா, இது?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஒருவேளை பாரதியை,
பிரதீபனுக்குப் பிடிக்கலையா பா?
இல்லை, பாரதிக்கு பிரதீபனை,
பிடிக்கலையா?
ஆனால், பிடிக்காமல் எப்படி,
இரண்டு குழந்தைகள் வந்தனர்?
எங்கேயோ இடிக்குதே,
சந்தியா ஸ்ரீ டியர்?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top