• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Veenaiyadi nee enakku (final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ananyathilak

நாட்டாமை
Joined
Jul 27, 2018
Messages
64
Reaction score
223
Location
Chennai
எழுத்தாளர் சுஜாதா ஒரு பேட்டியில் “சில கதைகள் நம்மை அதற்குள் இழுத்து கொள்ளும்” என்று குறிப்பிட்டு இருந்தார்....அப்படி சஷி மேம் மட்டுமல்ல படித்த அனைவரையும் தன்னுள் இழுத்து கொண்ட சுகமான புதைகுழி தான் “வீணையடி நீ எனக்கு”......இன்னும் பலரால் இந்த சுகமான குழியில் இருந்து வெளியில் வர முடியவில்லை....சிலர் வர விரும்பவில்லை.

ஒரு ஜனரஞ்சக கதைக்கு என்ன தேவை.........

தெளிவான எழுத்து நடை....

சிற்பம் போன்று நேர்த்தியாக செதுக்கப்பட்ட கதாபாத்திரங்கள்...

கதையின் தளம் மற்றும் போக்கு....

ஆங்காங்கே வைக்கப்படும் சுவாரஸ்யமான எதிர்பாராத திருப்பங்கள்....

இத்தனை விஷயங்களுடன் சேர்த்து “வீணையடி நீ எனக்கு” அதிரடி ஹிட் அடிக்க காரணம் என்ன???
சமீபத்தில் அர்ஜுன் ரெட்டி என்னும் திரைப்படம் பெரிய ஹிட் அடித்தது....

எனக்கு இந்த இரண்டு வெற்றியும் மனதில் சில விஷயத்தை யோசிக்க வைத்தது. அதை உங்களுடன் பகிர்த்து கொள்கிறேன்...

இந்த இரு கதைகளின் நாயகர்களும் மிகவும் தன்னிச்சையாக சுதந்திரமாக இயல்பாக செயல்படுபவர்கள்....நம் அனைவருக்கும் இது போல இருக்கத்தான் ஆசை ஆனால் நம்மை சுற்றி உள்ள தளைகள் நம்மை அப்படி இருக்க விடுவதில்லை. மற்றவர்கள் என்ன சொல்லி விடுவார்களோ??? என்ன நினைத்து விடுவார்களோ??? இந்த கேள்விக்கான பதிலாய் நாம் நம் வாழ்கையின் பல தருணங்களை தவற விட்டு விடுகிறோம்....பல நேரங்களில் தியாகம் என்று சொல்லி நம்மை ஏமாற்றி கொள்கிறோம்....நம் ஏமாற்றத்தின் வடிகால் தான் இது போன்ற நாயக நாயகிகள் நமக்கு தருகிறார்கள்.....ஷ்யாமும் மஹாவும் செய்த அணைத்து விஷயங்களையும் நாம் செய்ததாக நினைத்து நாம் சந்தோஷப்பட்டோம் வருத்தப்பட்டோம் கோபப்பட்டோம்.....etc...

இது போல கதாபாத்திரங்கள் உருவாக்கி அதில் நம்மை அமர வைத்து சவாரி செய்ய வைப்பதெல்லாம் ரொம்ப கடினமான வேலை ......அது மிக சுலபமாக சஷி மேமுக்கு வருகிறது.....

மேம்....நிச்சயம் “வீணையடி நீ எனக்கு” உங்கள் எழுத்தில் மாஸ்டர் பீஸ் அதில் எந்த சந்தேகமும் இல்லை......ஆனால் பொன்னியின் செல்வன் போன்ற ஒரு கதையும் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்....உங்களது எழுத்து திறமை குறிப்பிட்ட சில ஜார்னரில் மட்டும் இல்லாமல் அணைத்து ஜார்னரிலும் இருக்க ஆசை படுகிறேன்.....உங்களது வேலை பளுவிற்கு நடுவில் நீங்கள் எழுதுவதே பெரிய விஷயம் என்று புரிகிறது....ஆனாலும் எனது ஆசையை சொல்லி விட்டேன்...மனதின் ஒரு ஓரமாக வைத்து கொள்ளுங்கள்.....நேரம் கிடைக்கும் பொழுது கண்டிப்பாக செயல்படுத்துங்க சிஸ்டர்.....
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top