• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Venpani Thoovum Nilave-2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vasumathishiva

நாட்டாமை
Joined
Apr 11, 2019
Messages
62
Reaction score
178
Location
Kumbakonam
சங்கம் வளர்த்த மதுரை மாநகரத்தில் புதிதாக கிளம்பியிருந்த குடியிருப்புகளில் ஒன்று முல்லை நகர்.அங்கேயிருந்த ஒரு அழகிய வீட்டிலிருந்து வீட்டம்மாவின் குரலில் உயர்ந்து கேட்டது.

"நித்தி!இப்ப என்ன தான் சொல்ற? கல்யாணத்துக்கு வரப் போறியா... இல்லையா?"

இதையே அன்று நூறாவது முறைக் கேட்டதில் கடுப்பான நித்திலா தன் அழகிய முகத்தை சுளித்தாள்.

நித்திலா பி.எஸ்.ஸி.முடித்து டீச்சர் ட்ரைனிங்கும் முடித்து அருகிலிருந்த பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றிக் கொண்டிருந்தாள்.கொடி உடலும் தங்க நிறமும் இடைவரை நீண்ட கூந்தலும் எவரையும் மயக்கும் பேரழகி அவள்.ஆனால் அதே சமயம் அஞ்சா நெஞ்சமும் பிடிவாதமும் நிரம்பியவள்.ஒன்றை செய்ய நினைத்து விட்டால் அதை செய்து முடிக்கும் வரை ஓய மாட்டாள்.தன் புத்திசாலித்தனத்தால் கஷ்டமானதையும் சுலபமாக செய்து முடித்துவிடுவாள்.ஆனால் அவளின் புத்திசாலித்தனமெல்லாம் அவள் அன்னை சிவகாமியிடம் எடுப்படாது.சொன்னதையே சொல்லி அவள் சரியென ஒப்பும் வரை விட மாட்டார்.இன்றும் அதே போல் நித்திலாவின் தந்தை மணிவாசகத்தின் தங்கை மீனாட்சியின் மகள் திருமணத்திற்கு குடும்பம் முழுவதுமே செல்ல வேண்டுமென ஒரே பிடியாக நின்றார்.

வேறு எதற்கு வேண்டுமானாலும் நித்திலா எதிராடாமல் சென்றிருப்பாள்... ஆனால் அந்த மீனாட்சி அத்தையின் மகன் ரமேஷை கண்டாலே அவளுக்கு ஆவதில்லை.பின்னே என்ன ஏதோ பெண்ணை அதுவரை காணாதவனைப் போல விஷமமாகப் பார்ப்பதும் வேண்டுமென்றே இடித்துக்‌ கொண்டு செல்வதும் ரசக்குறைவான பாடலை முணுமுணுப்பது என்று நித்திலாவின் பிபியை எகிற வைப்பான்.

சென்ற முறை அவனின் நடவடிக்கை எரிச்சலூட்ட அவன் கன்னத்தில் சரியாக ஒரு அறையை விட்டிருந்தாள்.இப்போது திருமணத்திற்கு சென்று அவன் முகத்தில் விழிப்பதற்கு அவளுக்கு சிறிதும் விருப்பமில்லை.ஆனால் அதையெல்லாம் அன்னையிடம் கூறிவிட முடியாது.நாத்தி மீனாட்சி என்றால் சிவகாமிக்கு உயிர்.நித்திலாவுக்கே ரமேஷைத் தவிர அந்த குடும்பத்தில் எல்லோரையுமே பிடிக்கும்.

"அத்த அவ்ளோ தூரம் கூப்பிட்டு போயிருக்காங்க...நீ என்னடான்னா வர மாட்டேன்னு ஒரே பிடியா நிக்கிறியே...நல்லாவா இருக்கு!"

"அம்மா!அது ஸ்கூல்ல நெறைய வேலை இருக்கும்மா...லீவு போட்டா திட்டுவாங்க..."

"ஆமாமா... அந்த ஸ்கூலையே நீதான் தாங்குற பாரு.... ரெண்டு நாளைக்கு நீ இல்லேன்னா ஒண்ணும் குடி முழுகி போவாது...சும்மா சாக்குப்போக்கு சொல்லாம கிளம்புற வழியப் பாரு"

நித்திலாவுக்கே போனால் என்ன! அப்படி அவன் என்ன செய்து விடுவான்...மீறி வம்பு வளர்த்தால் அத்தையிடம் கூறிவிடுவது எனத் தீர்மானித்தாள்.

"சரிம்மா... நானும் வரேன்...போலாம்"என்று தன் சம்மதத்தைத் தெரிவித்தாள்.அங்கே தனக்காக காத்திருக்கும் விதியை அறிந்தால் சென்றிருக்க மாட்டாளோ?

உறவினர் வீட்டுத் திருமணம் என்பதை விட மணமகன் விக்னேஷ் கார்த்தியின் உயிர் நண்பன்.அதனால் முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பிற்கே வந்துவிட்டிருந்தான்.ஆனால் பெண் வீட்டு நெருங்கிய உறவினராக வந்திருந்த தன் குடும்பத்தவர்களிடம் அன்று ஏதும் வம்பு வளர்க்காமல் நல்ல பிள்ளையாகவே நடந்துக் கொண்டான்.அதில் முத்துசெல்வி அளவில்லா மகிழ்ச்சி அடைந்தார்.

நித்திலாவின் குடும்பம் மண்டபத்தை அடைந்த போது இரவு ஏழு மணி ஆகியிருந்தது.மீனாட்சி அத்தையும் அவர் கணவர் ஜெயந்தனும் உற்சாகமாக இவர்களை வரவேற்றனர்.

அதிசயத்திலும் அதிசயமாக ரமேஷ் அமைதியின் திருவுருவாக அடக்கமாக நடந்துக் கொண்டான்.நித்திலா என்று ஒருவள் அங்கே இருப்பதையே அவன் கண்டுக் கொள்ளவில்லை.

'என்னடா இது பொறுக்கி ரமேஷா இது?!!!எங்கயாவது சீர்திருத்த மையத்துல சரி செஞ்சுடாங்களா இவன'என நித்திலா ஆச்சரியப்பட்டாள்.ஆனால் அந்த விஷப் பாம்போ அவளை கொத்துவதற்கு அன்று நாள் குறித்திருந்தது பாவம் அவளுக்குத் தெரியவில்லை.

தங்களுக்குக் கொடுத்திருந்த மாடி அறையில் குளித்து அழகான மஞ்சள் வண்ணப் பட்டில் தயாரான நித்திலா கீழே இறங்கி வந்த போது சிவகாமி அவரின் ஒன்றுவிட்ட அண்ணன் ராஜமாணிக்கத்தோடும் அவர் மனைவி முத்துசெல்வியோடும் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் அருகில் சென்றாள்.தேவதைப் போல் இருந்த நித்திலாவைக் கண்டு முகம் முழுக்க விரிந்தப் புன்னகையோடு வந்து அவளை அணைத்துக் கொண்டார் முத்துசெல்வி.

"கண்ணு எப்படியிருக்கே ராசாத்தி?பாத்து எம்புட்டு நாளாச்சு! அம்மன் விக்ரகம் மாதிரி இருக்கேடா கண்ணு...என் கண்ணே பட்ரும் போல...அண்ணி வீட்டுக்கு போயி மருமவளுக்கு சுத்திப் போடுங்க..."

"எப்படியிருக்கீங்க அத்த?!மாமா நல்லாயிருக்கீங்களா?"என்று இருவரையும் முறையாக விசாரித்தாள் நித்திலா.

"நாங்க நல்லாயிருக்கும்மா... நீதான் எந்த விசேஷத்துக்கும் வரவேயில்லை.."என்றார் ராஜமாணிக்கம்.

"எங்க மாமா...நேரமேயில்ல ஸ்கூலு விட்டா வீடுன்னு சரியா இருக்கு... அதான் இன்னிக்கு எல்லாரையும் இங்கேயே பாத்துட்டேனே!"

"அப்படி சொல்லி ஏமாத்த முடியாது கண்ணு... நாளைக்கு கல்யாணம் முடிஞ்சு நேரா நம்ம வீட்டுக்கு வந்து ரெண்டு நாள் தங்கிட்டுத்தான் போகனும்..‌..என்ன?!"

"சரி அத்தே!வந்திட்டா போச்சு"என்று அவர் சமாதானத்திற்காக சொல்லி வைத்தாள் அவள்.

மாப்பிள்ளை அழைப்பு முடிந்து அனைவரும் உணவுண்டு மறுநாள் திருமணத்திற்கு வேண்டிய வேலைகளை செய்தபடி சுற்றி வந்தனர்.அப்போது பாதாம் பால் அடங்கிய தட்டை ரமேஷ் கொண்டு வந்து எல்லோருக்கும் கொடுத்தவன் கடைசியாக இருந்த டம்பளரை அங்கே பூக்கட்டிக் கொண்டிருந்த நித்திலாவிடம் நீட்டினான்.வேலைக் கவனத்தில் நிமிர்ந்துப் பாராமல் அதை வாங்கி குடித்தாள் அவள்.அதை ஒருவிதமான பார்வையோடு பார்த்திருந்தவன் மனதிற்குள்

'குடி குடி நல்லா குடி....இப்ப போயி படுத்தா நாள காலம்பர வரைக்கும் உன்ன சுத்தி என்ன நடக்குதுன்னு ஒண்ணுமே உனக்குத் தெரியாது...பால்ல நா போட்ருக்கற தூக்க மாத்திரை அவ்ளோ பவரு...காலைல இத்தனை பேரும் சேந்து உனக்கும் எனக்கும் கல்யாணம் கட்டி வைப்பாங்க....என்னையா அடிச்ச... கல்யாணம் கட்டி உன் திமிர அடக்கறேன்'என்று சூளுரைத்தான்.

பாதி பூக்கட்டும் போதே ஏனோ கண்ணைச் சுற்றிக் கொண்டு வந்தது நித்திலாவிற்கு.என்ன முயன்றும் அழுத்தும் கண்களைத் திறக்க முடியவில்லை.இனி முடியாது என்ற போது தன்னோடு அமர்ந்திருந்த பெண்ணிடம் அவளையேக் கட்டுமாறு கூறி லேசாக தடுமாறியபடி மாடியிலிருந்த தங்கள் அறை அடையாளம் தெரியாமல் மூலையிலிருந்த வேற்றொரு அறைக்குச் சென்று அங்கிருந்த கட்டிலில் தன் நினைவில்லாமல் படுத்துவிட்டாள்.அவள் தூங்குவதை கண்டு மகிழ்ந்த ரமேஷ் அந்த அறையின் கதவை வெளிப்புறமாக சாத்தி தாழிட்டான்.இப்போதே உள்ளே சென்று விடத்தான் அவனுக்கு தோன்றியது.ஆனால் அவன் அன்னை அவனிடம் ஒப்படைத்த ஒன்றிரெண்டு வேலைகள் மீதமிருந்தன....நித்திலாவும் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல முன்பு இவன் இருப்பை உணர்ந்து விட்டால் கத்தி கூச்சல் போடும் அபாயம் இருந்தது.அதனால் வேலையானதும் வேகமாக வந்துவிடலாம் என அங்கிருந்து அகன்றான்.

மாப்பிள்ளை அழைப்பிற்கு முன்பே மணமகன் அறையில் விக்னேஷை ட்ரீட் கேட்டு படுத்திக் கொண்டிருந்தனர் அவன் நண்பர்கள்.

"டேய் வினு!ட்ரீட் எங்கேடா?பெரிசா பத்திரிகை கொடுக்கும் போது வாய்கிழிய ஃபாரின் சரக்கோட என்ஜாய் பண்ணலாம்னுட்டு இப்ப ஒண்ணுமே தெரியாத பச்சபுள்ள மாதிரி இருக்கீயே!"என்றான் முரளி.

"டேய் பொறுங்கடா!விசேஷம் முடிஞ்சு சாப்பிட்டு பெரியவங்க தூங்கட்டும்...அப்புறம் ஆரம்பிங்க கச்சேரிய...."

"அதெல்லாம் முடியாது...இப்பவே வேணும்...நாங்க மொட்ட மாடில வச்சுக்கறோம் கச்சேரிய....நீ வெளிய எடுடா மொதல்ல..."

"சரிடா எடுத்திட்டு போய்த் தொலைங்க...டைடாயி கீழே வந்து அரங்கேற்றம் பண்ணி என் மானத்தை என் வருங்கால பொண்டாட்டி வீட்டுக்காறங்க நடுவுல கப்பல் ஏத்தி விட்றாதீங்க... உங்களுக்கு புண்ணியமா போகும்"என்று கெஞ்சியவாறு மூன்று பாட்டில்களை உள்ளேயிருந்து எடுத்துக் கொடுத்தான்.

"பார்றா!இத்தன நாளு நம்பளோட கச்சேரி நடத்திட்டு இப்ப ஒண்ணுமே தெரியாதவன் மாதிரி வருங்கால பொண்டாட்டிக்கிட்ட சீன் காட்டியிருக்கான்.... நாளைக்கு போகும் போது தங்கச்சி காதுல உன் மேட்டர கொஞ்சம் போட்டு வைக்கறேன்...ஏதோ என்னால முடிஞ்ச சமூக சேவை..."என்றான் சந்திரன்.

"டேய் டேய் ஸ்நேக துரோகிகளா!அப்படி மட்டும் செஞ்சுறாதீங்கடா....அவ என்ன உலக மகா உத்தமன்னு நெனைச்சிருக்கா.... தயவுசெய்து ஏதாவது உளறி குடும்பத்துல கும்மி அடிச்சுடாதீங்கடா..."

"அதுக்கு தான் சொன்னேன்... இந்த கல்யாணம் கழுத்தருப்பெல்லாம் வேண்டாம்னு...கேட்டியா... அதெல்லாம் ஒரு வலடா...அதுல மாட்டினா... வாழ்க்கை பூரா விடுதலையே இல்ல"என்றது வேறு யார் நம் தானைத் தலைவர் கார்த்தியே தான்.

"போதும்டா ராசா!உன் வாழ்க்கை கொள்கையெல்லாம் நீயே வச்சுக்க...இப்ப யாராவது வரத்துக்குள்ள முதல்ல இடத்தை காலி பண்ணுங்க"

நால்வரும் மாடியில் இரண்டு பாட்டில் காலியாகும் வரை முட்டக் குடித்தனர்.தள்ளாடி எழுந்த கார்த்தி மெதுவாக படிகளில் இறங்கி அங்கே முதலில் தெரிந்த அறைக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்து தாழ்ப்பாளைப் போட்டான்.கலங்கிய கண்களில் அங்கே கட்டிலில் ஒரு பெண் படுத்திருப்பது மங்கலாகத் தெரிந்தது.மேல் சட்டையைக் கழட்டியவன் கட்டில் மேல் அமர்ந்து மெல்ல அந்த பெண்ணின் பட்டு கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டவன் போதை அதிகமானதால் மேலே முன்னேற முடியாமல் மயங்கி அவளை அணைத்தபடி படுத்துவிட்டான்.

கீழே வேலைகளை விரைவாக முடித்துக் கொண்டு ரமேஷ் அறை வாயிலுக்கு வந்த போது அதிர்ந்து நின்றுவிட்டான்.அவன் போட்ட தாழ் நீக்கப்பட்டு உள்ளே தாழ் போடப்பட்டிருந்தது.

'கதவ சரியாதானே போட்டேன்...இத யாரு தொறந்தது?இப்ப சத்தமா கதவ தட்ட கூட முடியாதே...ஏய் நித்திலா இந்த வாட்டி தப்பிச்சிட்ட...இன்னோரு சான்ஸ் கெடைக்காமயா போயிரும்...அப்ப பாத்துக்கறேன்டி உன்னை"என்று கருவியவாறு அங்கிருந்து அகன்றான்.

காலை திருமணத்திற்கு அனைவரும் பரபரப்பாக தயாராகிக் கொண்டிருந்தனர்.அப்போது சிவகாமியின் அருகில் பரபரப்பாக வந்த அவரின் இளைய மகள் வந்தனா

"அம்மா!நித்தி அக்காவ காணும்.... ராத்திரி அந்த மூல ரூமுக்கு தான் தூங்க போனா...ஆனா இப்ப போயி எத்தன வாட்டி கதவ தட்டினாலும் தொறக்க மாட்டேங்குறா...நீ வாம்மா... எனக்கு பயமாயிருக்கு..."என்று உரத்தக் குரலில் கத்தியதும் பதறிய சிவகாமியும் முத்துசெல்வியும் அவளோடு அந்த அறைக்கு சென்று கதவை பலமாகத் தட்டினர்.

அதற்குள் ஒரு கூட்டம் கூடி விட்டது அங்கே.ஆளுக்கு ஆள் ஒவ்வொன்றைக் கூறினர்.அப்போது ராஜமாணிக்கத்தோடு மணிவாசகம் ஜெயந்தன் ரமேஷ் மீனாட்சி எல்லோரும் அங்கே வந்தனர்.

"என்னப்பா பேசாம பார்த்துக்கிட்டு இருக்கீங்க கதவ உடைங்க முதல்ல..."என்றார் ராஜமாணிக்கம்.

அதன்படி மூன்று நான்கு பேர் சேர்ந்து கதவை உடைத்து திறந்தனர்.அங்கே உள்ளே கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டது.அங்கே கட்டிலில் தங்களை மறந்து இறுக்கி அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தனர் கார்த்திகேயனும் நித்திலாவும்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top