• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vetriyaa Tholviyaa - Chapter 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijiya lakshmi jagan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
193
Reaction score
4,743
Hi friends,

10th chapter is here. Please read and post ur comments.

அத்தியாயம்----10(1)
டிடெக்டீவ் கொடுத்த ரிப்போர்ட்டை படித்து பார்த்த மனிஷூக்கு தலை வலி வந்தது தான் மிச்சம். திரும்பவும் அந்த டிடெக்டீவ் ஏஜென்ஸிக்கு போன் செய்த மனிஷ்….. “சுரேஷ் நீயே தானே இதை எல்லாம் கலெக்ட் செய்த……?” என்று சந்தேகத்துடன் கேட்க.
“என்ன சார் இப்படி கேட்குறிங்க…..? உங்க விஷயத்துக்கு மட்டும் நான் வேற யாரையும் அனுப்ப மாட்டேன். நானே கலத்துல குதிச்சிடுவேன்னு உங்களுக்கு தெரியாதா சார்…..?” என்று சுரேஷ் சொன்னதும்.
“தெரியும் சுரேஷ்…..இருந்தும் ஏதோ இடிக்குது….” என்று தன் சந்தேகத்தை கைய் விடாதவனாய் சொல்ல.
“என்ன சார் இடிக்குது……?” மனிஷின் சந்தேகத்தை தெளிவு படுத்த கேட்க.
“ஒன்னும் இல்ல ...நானே பார்த்துக்குறேன்….” என்ற அவனின் நானே பார்த்துக்குறேன் என்றதுக்கு வேறு ஏஜென்ஸி பார்த்துக்க போறாரோ…..மத்தவங்கல விட டபுள் பங்கு பேமெண்ட் கொடுப்பாரே…..என்ற பயத்தில்.
“சார் நான் கொடுத்த ரிப்போர்ட் உண்மை சார்.” என்று சத்தியம் செய்யாத குறையாக அடித்து சொல்ல.
“நான் பொய்யுன்னு சொல்லலையே சுரேஷ். எதுக்கு இவ்வளவு பதட்ட படுறே…..” ரொம்ப கூலாக கேட்க.
“இல்ல சார் நானே பார்த்துக்குறேன்னு சொன்னிங்கலே….அது தான்…..” என்று இழுத்து நிறுத்தியவனிடம்.
“ஓ நான் வேறு ஏஜென்ஸி பார்த்துக்க போறேன்னு தப்பா நினச்சிட்டியா…..சேச்சே….உன் ரிப்போர்ட் தப்பு என்று எனக்கு தெரிந்தா தான் நான் வேறு பார்ப்பேன். அதனால கவலைய விடு.” என்று அவனுக்கு நம்பிக்கை கொடுத்தாலும் விடாது.
“அப்போ நீங்க பார்த்துக்குறேன்னு சொன்னது.”
“நானே விசாரிச்சிக்கிறேன்னு அர்த்தம் சுரேஷ்.” என்ற மனிஷின் பேச்சி சுரேஷூக்கு ஆச்சிரியத்தை கொடுத்தது.
“சார் நீங்க புது பிரான்ச்சு உங்க ஊரில் திறப்பதில் பிசியா இருக்க இந்த நேரத்தில் நீங்கலேன்னா…ரொம்ப முக்கியமானவங்களோ……?” வார்த்தையால் தூண்டில் போட்டவனுக்கு சிக்காத மனிஷ்.
“இது என் பர்சனல் சுரேஷ்.” என்று சொன்னவன்.
பின்…..”ஆ உன் தொழிலை என் கிட்ட காட்ட மாட்டேன்னு நினைக்கிறேன். காட்டினா நான் என்ன செய்வேன்னு உனக்கு தெரியாததும் இல்ல.” என்ற வார்னிங்கோடு தன் பேச்சை முடித்தவன்.
திரும்பவும் அந்த ரிப்போர்ட்டை ஒரு புரட்டு புரட்டிக் கொண்டே...செல்லம்மாவுக்கும், தேவிக்கும், இடையே ஏதாவது ஒரு லிங்காவது கிடைக்காதான்னு சொல்லிப் பார்த்துக் கொண்டான்.
“ 1. படிப்பு-----செல்லம்மா எம்.பிஏ..தமிழ் லிட்ரேச்சர்.-----தேவி….பி.ஈ ஆட்டோமொபைல்.
2. தொழில்----செல்லம்மா நகை ...தேவி மெக்கானிக்.
3. ஊரு...செல்லம்மா சமீபத்தில் தான் சென்னை வாசம். தேவி…. பிறந்ததில் இருந்தே சைதாப்பேட்டை குப்பத்தில் வசிப்பவள்.
4. பின் பலத்திலும் ஒரு சம்பந்தமும் இல்லையே….. சரி பாராம்பரியம் வரி விலக்கு சலுகை பெற அரக்கட்டளை மூலம் படிக்க வைக்கும் லிஸ்ட்டில் கூட தேவியின் பெயர் இடம் பெறவில்லை.
வங்கி பரிவர்த்தனை பாராம்பரியம் தங்க நகை மாளிகையில் இருந்தோ…...தனிப்பட்ட செல்லம்மா வங்கியின் மூலமாகவோ….ஏன் அவர்கள் குடும்பத்தில் இருக்கும் யாரின் வங்கி மூலமாகவோ ஒரு பரிவர்த்தனையும் இடம் பெற வில்லை என்ற ரிப்போர்ட்டை படித்தால் மண்டை காயாதா….?இல்லையா……?
விடியற்காலை நான்கு மணியில் இருந்து பார்த்த ரிப்போர்ட்டில் எட்டு மணி கடந்த பின்னும் ஒன்றும் கண்டு பிடிக்க முடியாத ரிப்போர்ட்டை தூரம் வீசியவன்.
ஒரு நாள் விட்டு பார்க்கலாம் ஏதாவது கிடைக்குதா என்று….? ஒன்பது மணி கடைக்கு செல்வதற்க்கு நிதானமாக கிளம்பி கீழே வரும் போது சித்தியின் குரல்...ஆதாங்கத்தோடு…… “ இவனோடு நல்ல மாப்பிள்ளை எவன்….வந்துடுறான்னு நான் பாக்குறேன்.” என்று கோபத்தோடு தந்தையிடம் பேசிக் கொண்டு இருந்தவர்.
தன் காலடி ஓசையில் பேச்சி நிறுத்தியவராய்….. “வாப்பா…..டிபன் எடுத்து வைக்கட்டுமா……?” என்று மனிஷிடம் கேட்டவர்….
வேலைக்கார பெண்ணிடம்….”எல்லாம் எடுத்து வெச்சிட்டியா…..” என்று கேட்டுக் கொண்டே….சாப்பாடு அறை நோக்கி செல்லும் ரஜினி பாயைய் தடுத்து நிறுத்தியது மனிஷின் “பெண் வீட்டில் பேசிட்டிங்கலா…..?” என்ற வார்த்தை.
“ஆ….” என்று தடுமாறியது ஒரு நிமிடம் தான். பின் தன்னை சமாளித்தவராய்….”அது பத்தி தான் உன் அப்பா கிட்ட பேசிட்டு இருந்தேன் தம்பி.” என்று மகனுக்கு பதில் அளிக்க..
“ஓ…..” என்று இழுத்தவன். பின் “எப்போ வர சொன்னாங்க….?” என்ற கேள்வியில் ரஜினி பாய் தான் பதறி துடித்தார்.
“அய்யோ...பெண்ணை மனிஷூக்கு ரொம்ப பிடிச்சிடுச்சின்னு அன்னிக்கி போன் பண்னப்பவே தெரிஞ்சி இருந்தாலும்…...அவனே ஆவளோடு பெண் பார்க்கும் வைபவத்தை பற்றி பேசிய போது.
கடவுளே பெண்ணுக்கு இந்த இடம் பிடிக்கவில்லை என்று எப்படி சொல்வது என்று தயங்கியவர். “அது தான் தம்பி உன் அப்பா கிட்ட பேசிட்டு இருந்தேன். பெண்ணுக்கு கண்ணு வெளியே துருத்திக்கின்னு நிக்குது….மூக்கு அநியாயத்துக்கு உள்ளே போய் கிடக்குது……உனக்கு அந்த பெண்ணை முடிச்சா…..பாக்குறவங்க என்ன சொல்லுவாங்க.
ராஜா மாதிரி இருக்கும் பையனுக்கு இது மாதிரி பொண்ணு பாத்து இருக்காங்கலே….இதுவே அவங்க பெத்த பையனா இருந்தா…..இப்படி முடிச்சி இருப்பாங்களான்னு ஊரு ஜெனம் என்ன தானேப்பா தப்பா பேசும்.” அசல் சினிமா வசனம் போல் பேசி வைக்க.
அதை கேட்ட மனிஷுக்கு சிரிப்பு வந்தாலும், அதை அடக்கியவனாய்….தன் செல்லில் உள்ள செல்லம்மாவை பார்த்துக் கொண்டே….
“எனக்கு ஒன்னும் அப்படி தெரியலையே…..?நல்லா தானே இருக்கா…..?” என்று சொன்னவனிடம்.
அவசரமாக…. “அது இப்போ தான் போட்டோ பிடிச்சி என்ன என்னவோ செய்து அழகா வர மாதிரி செய்துடுறாங்கலே….” அவனே பெண்ணை வேண்டாம் என்று சொன்னால் பிரச்சனை இல்லாமல் போய் விடுமே என்று வழக்காட.
இதற்க்கு மேலும் சித்தியைய் சோதிக்காது “உங்களுக்கு பிடிக்கலேன்னா இந்த சம்பதத்தை விட்டுடலாம் சித்தி. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பிடித்தா தான் நான் தொழிலை நிம்மதியா பாக்க முடியும்.” என்று முடித்தவன்.
பின் தந்தையை பார்த்து ….”உங்களுக்கு செல்லம்மாவை பார்த்ததும் நம்ம வீட்டுக்கு மருமகளாய் ஆக்கிக்கனும் என்று தோனுச்சாப்பா…..?” என்று கேள்வி எழுப்ப.
இவ்வளவு நேரமும் மனைவி மகனின் உரையாடலை யோசனையுடன் கேட்டுக் கொண்டு இருந்த சாருகேஷ்… திடிர் என்று செல்லம்மா பேச்சை எடுத்ததும்….
யோசனை சந்தேகமாய் மாற…...அவன் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காது….”செல்லம்மாவை எங்காவது பார்த்தியா…..?” என்று பதில் கேள்வி கேட்க.
ஒரு நிமிடம் தன் தந்தையைய் ஆழ்ந்து பார்த்தவன்…..பின் சிரிப்புடனே….”இல்லேப்பா உங்களுக்கு பிடித்த பெண்ணையே மருமகளாய் ஆக்கலாமுன்னு தான்.” என்று சொல்லி விட்டு தன் சித்தியைய் பார்க்க.
ஜெயந்தி மறுத்ததை சொல்லாது என்ன என்னவோ பேசி மகனே இந்த இடம் வேண்டாம் என்று சொல்லி விட்டதில் மகிழ்ந்து இருந்த ரஜினி பாய்.
செல்லம்மாவை மருமகளாய் ஆக்கலாம் என்றதில் நெஞ்சை நீவி விட்டவளாய்….”இவன் எனக்கு நெஞ்சி வலி வராம விட மாட்டான் போலவே……” என்று பதறி மனிஷை பார்க்க.
அவனோ கூலாக…. “டிபன் வைக்க போறிங்கலா... ?இல்லே வெளியில் பார்த்துக்கவா….?” என்று பேச்சை மாற்றியவனை புரிந்துக் கொள்ள முடியாது.
“வா….” என்று அழைத்து மகனை அனுப்பி விட்டு கணவனின் யோசனை தவழ்ந்த முகத்தை பார்த்த வாரே….அவர் அருகில் அமர்ந்தவர்…..”என்னங்க யோசனை …...?” என்று கேட்டவளிடம்.
“ஒன்னும் இல்லேம்மா……” என்று மழுப்பலாக பதில் அளிக்க.
“மனிஷ் செல்லம்மா பத்தி பேசியதில் பயந்திட்டிங்கலா…..?” என்று கேட்டவள்.
பின்…”அவன் ஏதோ விளையாட்டுக்கு பேசிட்டு போறான். இதை நினச்சி எல்லாம் பயந்துக்காதிங்க….” என்று தைரியம் சொல்லி சாப்பிட வைத்தாலும். மனிஷின் பேச்சி ரஜினி பாய்க்கு பயத்தையே கொடுத்தது.
வளர்த்த தாய் ஹாலில் பயப்பட…. தங்கள் அறைக்கு சென்ற சாருகேஷூம் மனைவியின் பேச்சுக்கு சிரிப்பை தந்து மனைவி மனதில் பயத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று சாப்பிட்டு விட்டு வந்தவருக்கும் மனிஷின் யோசனை தான்.
ஜெயந்தியைய் ரஜினி வேண்டாம் என்று சொன்னதும் சரி...என்று ஒத்துக் கொண்டதே சாருகேஷூக்கு சந்தேகத்தை விளைவிக்க போதுமானதாக இருந்தது.
அதுவும் நேற்று தான் ஊரில் இருந்து வந்ததும் முக மலர்ச்சியுடன் தன் மனைவி மனிஷ் அந்த பெண்ணை மிகவும் பிடித்து விட்டதாக சொல்லி சொல்லி மாய்ந்ததும் …..சாருகேஷுக்கும் மகிழ்ச்சி ஏற்படவே செய்தது.
அந்த மகிழ்ச்சி நீடிக்காது காலையில் அந்த பெண்ணுக்கு மனிஷை பிடிக்கவில்லையாம் என்று மனைவி சொன்னதில் இருந்தே... மகனின் பிடிவாதத்தை பற்றி தெரிந்தவருக்கு பயப்பந்து உழல ஆராம்பித்து விட்டது.
செல்லம்மாவாவது தனக்கு பிடித்த பெண். ஆனால் இந்த பெண் போட்டோவில் இல்லாது நேரிலும் பார்த்து தன் ஒப்புதலை தெரிவித்து இருக்கிறான். அப்படி இருக்கும் போது அந்த பெண் மறுத்தது தெரிந்தால்….என்ன ஆகுமோ என்று பயந்துக் கொண்டு இருந்தவருக்கு மனிஷின் இந்த செயல்…
புயலுக்கு முன் வரும் அமைதியோ என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போதே...அடுத்து செல்லம்மாவை பற்றி கேட்டதில் விஷயம் தெரிந்து விட்டது செல்லம்மாவை எங்கோ பார்த்து இருக்கிறான் என்று….ஆனாலும் ஜெயந்தியைய் எதுக்கு…….?
சித்தி தந்தையைய் வீட்டில் புலம்ப விட்டவனுக்கு செல்லம்மாவையும் புலம்ப விட மனது துடிக்க. . நேற்றே கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து விட்டாள் என்று அறிந்துக் கொண்டவனுக்கு….
தானே அழைப்பு விடுக்க தன்மானம் இடம் கொடுக்கவில்லை என்றாலும், அவளிடம் பேச மனது துடிக்க…
கடைக்கு வந்ததும் சரி பேசி தான் பார்ப்போமே என்று வடிவேலு பாணியில் நினைத்து செல்லம்மாவுக்கு அழைப்பு விடுக்க… இரண்டு மூன்று தடவை அழைப்பு விடுத்தும் எடுக்காமல் இருக்க...நம்ம நம்பர் தெரிஞ்சுடுச்சோ…?
அதான் எடுக்கலையோ……? என்று சந்தேகம் எழுந்த மறுநொடி சந்தோஷம், வருத்தமும் சேர்ந்து ஒன்றாக தாக்கியது. நம்ப எண்ணையும் தெரிந்து வைத்தி இருக்கிறாளே...என்ற நினைத்து சந்தோஷம் எடுத்த அடுத்த நொடி எடுக்கவில்லையே…..அவளை புலம்ப வைக்க போட்ட போன் அவனை புலம்பலில் ஆழ்த்த.
கல்லூரியில் பாடத்தை கவனித்துக் கொண்டு இருந்த செல்லம்மா சைலன்ட் மோடில் போட்டு வைத்த செல் தொடர்ந்து தொல்லை கொடுக்க.
எவன்டா அவன்….?நானே எப்போ தான் பாடத்தை கவனிப்பேன். அதோட எப்போவோ தான் மேமும் போர் அடிக்காம நடத்துவது இதில் இது வேற...என்று போனில் ஒரு கண்ணும் மேமின் மீது ஒரு கண்ணும் வைத்திருந்த செல்லம்மாவுக்கு அதிக நேரம் அந்த சிரமத்தை கொடுக்காது அந்த வகுப்பு நேரம் முடிவு பெற…..
மேடம் வெளி ஏறுவதற்க்கு முன் வகுப்பை விட்டு வெளியேறிய செல்லம்மா….வந்த எண்ணில் அழைப்பை விடுக்க.
நான்கு முறை அழைத்தும் எடுக்காத கடுப்பில் இருந்த மனிஷ் செல்லம்மாவிடம் இருந்து வந்த அழைப்பில் குளிர்ந்த போனவனாய் போனை எடுத்ததும் தானாக குரல் குழைந்து ….. “செல்லம்……” என்ற அழைப்பு அவளை ஏதோ செய்தது.
.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஜி டியர்
 




Last edited:

Buvani

மண்டலாதிபதி
Joined
Mar 14, 2018
Messages
245
Reaction score
367
Location
Tamilnadu
Chellam ena chellam ipdi paneteengalae.me pavam valikuthu.pls put ud
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
மனீஷ் தான் போனில் என்று தெரியவில்லையா
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Ha ha ha
Appaavaiyum sitthiyaiyum ippadi aniyayaamaa payappaduthuriye, Maneesh chellam?
Jeyanthikkutthaan already Chellammaavoda annan Sanjay irukkaanille
Appuram ethukku enga Maneesh kavalaippadanum Viji dear?
Chellammaa thaane enga target?
Illaiyaa Maneesh dear?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Ada Ada ennaa Ori anbu? Ennaa Oru kuzhaivu?
Chellam nnu Maneesh koopidurathulaiye Chellammaa urugi utkaarnthiduvaa polave, Viji dear?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top