• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vetriyaa Tholviyaa - Chapter 3 Part 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijiya lakshmi jagan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
193
Reaction score
4,743
Hi friends,

3rd chapter - part 1 inga kuduthuruken. Padichitu unga comments sollunga.

அத்தியாயம்----3
“செல்லம்மாவை தெரியாதா…..? என்று அதிசயத்து கேட்கும் தந்தையைய் இப்போது யோசனையுடன் பார்த்தான் மனிஷ்.
தண்ணி போட்ட நானே தெளிவா பேசுறேன். இவர் ஏன் இப்படி குழப்புறாரு….என்று மனதில் நினைதவன்.
“செல்லம்மா என்ன ப்ரைம் மினிஸ்ட்டரா…?இல்ல சீப் மினிஸ்ட்டரா…..? எனக்கு தெரியாது என்றதும் இப்படி அதிசயத்து போக.” என்று நக்கலுடன் பேசியவனின் வாயில் இருந்த வந்த வாசனையின் முகம் சுளித்த சாருகேஷ்.
“என்னடா இது பழக்கம். எப்ப விட போற….போன இரண்டு தடவை கேட்டதுக்கு ஒர்க் டென்ஷன் என்று சொல்லிட்டு கொஞ்சம் கொஞ்சமா விடுறேன்னு சொன்ன.
ஆனா போக போக பழக்கம் கூடி தான் போகுதே ஒழிய குறையற மாதிரி தெரியல. இதுக்கு தான் அந்த பெரிய மனுஷர் உனக்கு பொண்ணு கொடுக்க மாட்டேன்னு சொன்னாரோ…..?”
“அப்பா அந்த பேச்சை விடுங்க.” என்று சொல்லிய மகனை முறைத்து பார்த்தவர்.
“எதடா விட சொல்ற….இது மாதிரி நீ கெட்டு சீர் அழிவதை பார்த்து கண்டும் காணம போக சொல்றியா….?”
அந்த வீட்டை சுற்றி காமித்தவர்.”தோ நீ இவ்வளவு பெரிய பங்களா கட்டி கொடுத்து இருக்கியே இந்த வசதி பார்த்து நீ எப்படி போனா பரவாயில்லைன்னு என்னால விட முடியாது.” என்று அதட்டிய தந்தையிடம்.
“ கொஞ்சம் கொஞ்சமா விட்டுடறேன்பா…. டைமாயிடுச்சி பாருங்க. சித்திக்கு கண்ண கட்டுது தூங்க போங்க. எனக்கும் ரொம்ப டையடா இருக்கு தூங்க போறேன்.” என்று சொல்லி போகும் மகனின் முதுகை பார்த்து.
“இனி செல்லாமாவுக்காக அந்த குடும்பத்தை டிஸ்ட்டப் பண்ண மாட்டியே….?”
திரும்பி தன் தந்தையைய் பார்த்த மனிஷ் “ஓ அந்த பொண்ணு பேரு செல்லம்மாவா….பேரே இவ்வளவு கர்நாடகமா இருக்க. அப்போ ஆளு எப்படி இருப்பா…..? அவளுக்காகவா அந்த பெரிய மனுஷர் கிட்ட அவமான பட்டிங்க.
சின்ன வயசுல எங்க தமிழ் சாரு ஒன்னு சொல்லுவாரு. முயலை வேட்டையாடி வெல்வதை விட. யானையைய் வேட்டையாடி விரும்பி தோற்றல் எவ்வளவோ மேல் என்று.
அவமானம் பட்டது தான் பட்டிங்க. ஒரு அழகனா பெண்ணுக்கு பட்டு இருக்கலாம்லே….” எப்போதும் தன் தந்தையிடம் அதிகம் பேசாதவன். மதுவின் உபயோகத்தில் வார்த்தையைய் அதிகம் விட.
“ அந்த பொண்ணு பத்தி ஏதாவது சொன்ன எனக்கு கோபம் வரும். செல்லம்மா என்ற பேருக்கு என்னடா குறச்சல்….? என்ன பொறுத்தவரை அந்த பெண்ணை கட்டிக்க உனக்கு கொடுப்பினை இல்லேன்னு தான் சொல்லுவேன். பார்க்க அப்ப….” அதற்க்கு மேல் என்ன சொல்லி இருப்பாரோ….
“என்னங்க… தம்பி தான் அப்பவே தூக்கம் வருதுன்னு சொல்லிச்சிலே…..எது என்றாலும் காலையில் பேசிக்கலாம்.” என்று ஒரு கண் ஜாடையுடன் கணவனிடம் பேசிய ரஜினி பாய்.
மனிஷை பார்த்து….”நீ தூங்க போப்பா….” என்று அவன் போனதும்.
தன் கணவனை பார்த்து முறைத்தவராய்…. “இப்போ எதுக்கு அந்த பொண்ணை பத்தி பேசிட்டு இருக்கிங்க.” என்று அதட்டியதுக்கு.
“நான் என்னடி பேசினேன். அவன் தானே பேசினான். பேரு கர்நாடகம். அந்த பொண்ணை பாக்காமலேயே அந்த பொண்ணை குறை சொல்வதை.” என்று தன் பக்க நியாயத்தை எடுத்து சொன்னவரை இன்னும் பலமாக முறைத்தவாரே…..
“அதுக்கு அந்த பொண்ணை பத்தி ஏத்தி சொல்வீங்களா….? அந்த பொண்ண அவங்க கல்யாணம் பண்ணிக் கொடுக்க ஒத்துக்குன்னு இருந்தா பரவாயில்லை. நீங்க சொல்வது வாஸ்த்தவம்.
அவங்க தான் பண்ணி கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்கலே...அதுக்கு அப்புறம் ஏன் அந்த பெண்ணை பத்தி பெருமையா பேசனும்.” என்ற மனைவியின் பேச்சை இடை மறித்த சாருகேஷ்.
“ பொண்ணு பாக்க மகாலஷ்மி மாதிரி இருந்தாடி…..அந்த பொண்ணை போய் இப்படி பேசுறானே….?நியாயம் ஒன்னு இருக்குல ரஜினி.”
“என்னத்த நியாயம் இருக்கு…?என்னத்த நியாயம் இருக்குன்னு கேக்குறேன். பொண்ணு கொடுக்கலேன்னா முடியாதுன்னு சொல்லனும்.
அதை விட்டுட்டு எல்லோர் முன்னாடியும் உங்களை அப்படி பேசலாமா….?அந்த பெரிய மனுஷர். அதுவும் இல்லாது அந்த பொண்ணு இந்த வீட்டுக்கு வரப்போறது இல்ல. அப்படி இருக்கும் போது அந்த பொண்ணை பத்தி மனிஷ் எதிரில் ஆ..ஓஓன்னு பேசினா.
அவன் மனசுல ஆசை வராதா…..?அந்த பெண்ணை பத்தி ஒன்னும் தெரியத அப்பவே அந்த வீட்டு பையனை இப்படி பண்ணி வெச்சி இருக்கான்.
அப்படி இருக்கும் போது இன்னும் சொல்லி அந்த பெண்ணை ஏதாவது செய்துட்டா…..?” தன் பயத்தை தன் கணவரிடம் பகிர.
“சேச்சே...என் பையன் அது மாதிரி எல்லாம் இல்ல.” என்று தந்தையாய் தன் மகனின் மீது நம்பிக்கை வைத்து பேசி விட்டு செல்லும் தன் கணவரை பார்த்து ஒரு பெரும் மூச்சு தான் விட முடிந்தது ரஜினி பாயால்…
ஒரு வருடம் முன் வரை அவரும் கணவரை போல் மனிஷ் மீது அதிக நம்பிக்கை வைத்து தான் இருந்தார்.
மது பழக்கம் கூட அப்போது அவருக்கு தெரியாமல் தான் இருந்தது. போன வருடம் வருமானவரிக்கா ஒரு பிராப்பர்ட்டியைய் தன் பெயரில் வாங்க போன் செய்து “சித்தி கார் ட்ரைவர் கிட்ட ஒரு டாக்குமென்ஸ் கொடுத்து விடுறேன் சைன் போட்டு கொடுங்க.” என்று சொல்லி விட்டு போனை வைத்தவனிடம் எதுவும் பேசாது ட்ரைவர் எடுத்துக் கொண்டு வந்த பேப்பரில் கைய்யெப்பம் இட்ட ரஜினி பாய். அதை கொடுத்து அனுப்பாது.
“நானும் மனிஷ் கடை பக்கத்தில் இருக்கும் சிவன் கோயிலுக்கு போகனும். உன் கூடவே வந்துடுறேன்.” என்று மனிஷ் ஆபிசுக்கு போன போது தான் மனிஷின் மறுப்பக்கத்தை ரஜினி பாயால் பார்க்க முடிந்தது.
மனிஷிடம் டாகுமென்ஸை கொடுத்து விட்டு “அப்போ நான் கிளம்புறேன் மனிஷ்.” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே…
மனிஷின் பி.ஏ கதவை தட்டாது உள் நுழைந்தவள். “ம…என்று ஆராம்பித்து சர்.” என்று அழைத்தவள்.
“உங்களுக்கு காபி டைமாச்சேன்னு….” என்று அந்த மூன்று எழுத்து பேசுவதற்க்குள் அந்த உதட்டை மூன்னூறு தடவை இழுத்து பேசியவளை பார்த்த உடன் ரஜினி பாய்க்கு பிடிக்காது போய் விட்டது.
அதுவும் மனிஷ் தான் கொடுத்த டாகுமென்ஸை கொடுத்து…. “கப்போடில் வைத்து விடு.” என்றதும்.
மனிஷ் அருகில் நெருங்கிய வாரு நின்று…. “மேடம் எல்லாத்திலும் சைன் பண்ணியாச்சா….” என்று கேட்டுக் கொண்டே குனிந்ததை பார்த்து அப்படியே இழுத்து வெச்சி கன்னம் கன்னமாய் அடிக்க தோன்றியது. இருந்தும் தன்னை அடக்கியவராய் அந்த இடத்தை விட்டு வெளியேறியவருக்கு ஒன்று மட்டும் நிச்சயம்.இவளின் இந்த செயலுக்கு மனிஷும் ஒரு காரணம் என்று.
கணவன் அறைக்கு வருவது போல் கதவை தட்டாது வந்ததும் இல்லாமல் ஒரு சாரி கூட கேட்காது சாதரணமாக பேசி விட்டு சென்றது. இது எப்போதும் நடப்பது தான் என்று சொல்லாமல் சொன்னது போல் இருந்தது.
ஒரு சித்தியாய் கண்டும் காணமல் வர தான் முடிந்தது ரஜினி பாயால். ஒரு தாயாய் இருந்து இருந்தால் கண்டித்து இருக்கலாமோ….?என்னவோ….?
அதுவும் இல்லாது தோளுக்கு மேல் வளர்ந்த மகனிடம் இதை பற்றி பேசவா முடியும் என்று கோயிலுக்கு கூட போகாது வீட்டுக்கு வந்தவர் தான்.
கணவனிடம் கூட இதை பற்றி ஏதூம் சொல்லாது. “ சீக்கிரம் மகனுக்கு பொண்ணு பாருங்க.” என்று சொன்னதுக்கு.
“என்ன ரஜினி திடிரென்று பையனின் கல்யாணத்தை பற்றி எல்லாம் பேசுற….?” என்று கேட்டதுக்கு.
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
மனிஷின் பழக்கவழக்கம் சித்திக்கு ஒரு வருடம் முன்பே தெரிந்து விட்டதா:(:(பேரா பாத்த கர்நாடகமா இருக்குதாமா ithu ellam konjam overa theriyala manishku......... nice ud sis(y)(y)
 




Vijiya lakshmi jagan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
193
Reaction score
4,743
மனிஷின் பழக்கவழக்கம் சித்திக்கு ஒரு வருடம் முன்பே தெரிந்து விட்டதா:(:(பேரா பாத்த கர்நாடகமா இருக்குதாமா ithu ellam konjam overa theriyala manishku......... nice ud sis(y)(y)
நன்றி தேவி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top