• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vetriyaa Tholviyaa - Chapter 5 Part 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijiya lakshmi jagan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
193
Reaction score
4,743
Hi friends,

5th chapter kizha post paniruken. Please comments pannuga padichitu.

அத்தியாயம்----5​
செல்லம்மா சுகனை பார்த்து ஒரு நமுட்டு சிரிப்பு சிரிக்க. அந்த சிரிப்பு சத்தத்தில் பின் பக்கம் திரும்பி செல்லம்மாவை பார்க்க.
தன்னை பார்த்துக் கொண்டு இருந்த சுகனை பார்த்து செல்லம்மாவுக்கு இன்னும் சிரிப்பு பொங்கிக் கொண்டு வர.
அவளை ஒரு முறை முறைத்த ஜெயந்தி அவளின் கைய் பிடித்து அழுத்தி விட்டவாரே மெல்ல “நீயே காட்டி கொடுத்துடாதடீ…..” என்ற சமிஞ்சையில் தன் சிரிப்பை அடக்கினாலும். அவளின் இதழோரம் துடித்த துடிப்பு அவள் இன்னும் மனதில் சிரித்துக் கொண்டு இருக்கிறாள் என்று விளங்க.
எப்போதும் கேட்கும் கேள்வியான… “பாப்பா நீ என்னிடம் ஏதாவது மறைக்கிறியா…..?” என்று கேள்வி செல்லம்மாவிடம் இருந்தாலும் பார்வை ஜெயந்தியிடம் நிலைப் பெற்று இருந்தது.
ஜெயந்தியும் திருட்டு முழு முழிப்பது போல் இருக்க. இவர்கள் என்னவோ செய்கிறார்கள்….என்று நினைத்துக் கொண்டே இப்போது செல்லம்மாவை பார்த்தவன்,.
“பாப்பா….” என்று அழுத்தம் திருத்தமாக அழைத்தவன். “என்ன செஞ்சி வெச்சி இருக்கிங்க….?” என்று கேட்டவனின் குரலில் இப்போது கோபம் எட்டி பார்க்க.
“அண்ணா…..” என்று ஆராம்பித்தவள்.
ஜெயந்தியைய் காண்பித்து….”இவ ஒருத்தனை லவ் பண்றா…..” என்று சொல்லி சுகன் முகத்தை கூர்ந்து பார்க்க.
“ஓ இது வேறா…..” என்று மனதுக்குள் நினைத்தவள் வெளியில் “அதுக்கு…..?” தன் கோபத்தை குறையாது கேட்டான்.
செல்லம்மாவின் இந்த அதிகப்படியான அலங்காரம் இப்போது ஏனோ விபரிதமாக அவனுக்கு பட்டது.
“அதுக்கு ஒன்னும் இல்ல.இவ காதலிக்கிறது தெரியாம அவ வீட்டில் மாப்பிள்ளை பார்த்துட்டாங்க.”
“அதுக்கு…..?” திரும்பவும் ஒத்த வார்த்தையில் கேள்வி எழுப்பியவனை கொலை வெறியோடு ஒரு பார்வை பார்த்த செல்லம்மா.
“அதுக்கா…. நான் இருக்கும் போட்டோவை மாப்பிள்ளைக்கு அனுப்ப சொல்லிட்டேன். அதுக்கு தான் இப்போ கோயிலுக்கு போறது.”செல்லம்மாவின் பேச்சில் அதிர்ந்த சுகன்.
கார் டிரைவரை பார்த்து “நிறுத்து… நிறுத்து….” என்று கத்தியவன். டிரைவர் நிறுத்தியம். கார் கதவை திறந்து இறங்கியவன். பின் பக்கம் வந்து செல்லம்மா அமர்ந்து இருக்கும் பக்கத்தின் கார் கதவை திறந்து விட்ட வாரே…
“இறங்கு செல்லம்மா…..” எப்போதும் பாப்பா இல்ல செல்லம் என்ற அவன் அழைப்பு காணாமல் போய் அவளின் முழு பெயர் அழைப்பே சுகனின் கோபத்தின் அளவை புரிய செல்லம்மாவுக்கு போது மானதாக இருந்தது.
“அண்ணா….” என்ற அவளின் அழைப்பை காதில் வாங்காது அவளின் கைய் பிடித்து வெளியே இழுத்தவன்.
கார் டிரைவரை பார்த்து….. “இப்போ போப்பா…..” என்று சொல்ல. ஜெயந்தியோ கார் நகரும் முன்னே காரில் இருந்து இறங்கியவள். நேரிடையாக சுகனை முறைத்து பார்க்க.
இவ என்னத்துக்கு இப்போ என்னை முறச்சி பாக்குறா…..? என்று மனதில் நினைத்துக் கொண்டு இருக்கும் போதே…. கார் டிரைவர் “நான் இப்போ வண்டி எடுக்கட்டுமா….வேண்டாமா….? என்று ஒரு வித சலிப்புடன் கேட்டான்.
பின் என்ன...காலையில் நல்ல கிராக்கியாக சீவி சிங்காரிச்சிட்டு ஒரு பெண் தன் வண்டியில் ஏறுதே என்று மகிழ்ந்து போய் வண்டியைய் ஓட்டியவனுக்கு அடுத்த அதிர்ஷ்டமாய் அதை விட சிங்காரிப்பிலும், அழகிலும் . தூக்கலாக மற்றொரு பெண் ஏறியதும் மகிழ்ந்து போய் காரை எடுக்கலாம் என்று இருக்கும் போது வில்லனாய் சுகன் ஏறியதை பார்த்து கடுப்பாகி சரி பிழைப்பையாவது பார்க்கலாம் என்று நினைத்து காரை எடுத்தால்…
அந்த பிழைப்புக்கும் பங்கம் விளைவிக்கும் படி நடு ரோட்டில் நின்று இப்படி தகராறு செய்தால் அவனுக்கு எப்படி இருக்கும்….?” என்று கடுப்புடன் கேட்டவனிடம்.
அதை விட கடுப்பாக சுகன். “இன்னுமா நீ போகல….?” என்ற கேள்வியால் எரியும் தீயில் எண்ணையைய் ஊத்த.
“நல்லா வாயில வருதுயா….. வார்த்தை. ஏறினிங்கலே காலையிலேயே சாவு கிராக்கியா….துட்ட கொடுயா…..நான் போறேன்.” என்றதும் தான் அது வாடகை வண்டி என்பதே அவனுக்கு தெரிந்தது.(அவன் எங்கு வண்டியைய் பார்த்தான்).
“ஓ வாடகை வண்டியா….?” என்று கேட்டுக் கொண்டே தான் கோர்ட் பாக்கெட்டில் கைய் விட்டவனிடம்.
அவனை ஒரு தினுசாக பார்த்துக் கொண்டே….”நீ எங்கே வண்டிய பார்த்த.” என்று இரு பெண்களையும் பார்த்துக் கொண்டே சொல்லியவனுக்கு எடுத்த பணத்தை கொடுக்காது.
“என்னயா பேசுற….?” செல்லமாவை காண்பித்து.
“அவ எனக்கு தங்கச்சியா…..” என்று எரிந்து விழுந்தவனிடம்.
“அப்போ அந்த பொண்ணு…..” ஜெயந்தியைய் காண்பித்து கேட்டதுக்கு. பதில் அளிக்காது கையில் உள்ள பணத்தை கொடுத்தவன்.
“முதல்ல எடத்த காலி பண்ணு.” என்று அவனை விரட்ட.
“போறேன்...போறேன்…. நான் என்ன இங்கேவா இருக்க போறேன்.” என்று சொன்னவன்.
காரை ஸ்டாட் செய்தவன் சுகனை பார்த்து “அந்த பொண்ணு உனக்கு யாருன்னு சொல்லவே இல்ல பார்த்தியா….?ஆனா எனக்கு தெரிஞ்சிடுச்சி. உங்க டாவு தானே….? என்ற சொல்லோடு காரை பறக்க விட்டான்.
அவன் பேசிய பேச்சை மறக்கும் பொருட்டு….”கொல்கத்தாவில் சென்னை பாழை என்னமா தாண்டவமாடுது…..” என்று சொல்லிக் கொண்டே வந்தவனுக்கு அப்போது தான் ஜெயந்தியைய் பெண் பார்க்க வருவதும், செல்லம்மா செய்த செயலும் நினைவுக்கு வந்து.
முதன் முதலாக ஜெயந்தியிடம் நேராக பார்த்து…”தோம்மா உன் பிரச்சனையைய் உன் காதலன் கிட்ட சொல்லி இதுக்கு என்ன செய்யனும் என்று நீயே முடிவு செய். வீணா எங்க வீட்டு பெண்ணை இந்த பிரச்சனையில் இழுத்து விடாதே…” தன் மனதுக்கிணயவளிடம் இது மாதிரி பேசுவது கஷ்டமாக இருந்தாலும், செல்லம்மா எந்த பிரச்சனையிலும் மாட்ட கூடாது என்பதால் மனதை கடினமாக்கி சொல்ல.
அதே பதில் பார்வை பார்த்துக் கொண்டே ஜெயந்தி. “நான் விரும்புவது அவருக்கு தெரியாது. அப்படி இருக்கும் போது அவரிடம் எப்படி நான் உதவி கேட்க முடியும்.” அவள் பேச்சும், பார்வையும் ஏதோ தன்னிடம் சொல்வது போல் இருக்க.
 




Sairam

மண்டலாதிபதி
Joined
Feb 17, 2018
Messages
327
Reaction score
392
Location
Tamilnadu
முதல் இரண்டு எபி சீரியஸாக ஆரம்பித்து விட்டு அப்பறம் விளையாட்டு பெண்ணாக்கி விட்டீர்கள் செல்லம்மாவை.என்னாச்சு மேடம்.
 




Vijiya lakshmi jagan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
193
Reaction score
4,743
முதல் இரண்டு எபி சீரியஸாக ஆரம்பித்து விட்டு அப்பறம் விளையாட்டு பெண்ணாக்கி விட்டீர்கள் செல்லம்மாவை.என்னாச்சு மேடம்.
மனிஷ்க்கு தான் அவள் சீரியஸ். அண்ணா என்று வரும் போது பாசமான தங்கை
 




Vijiya lakshmi jagan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
193
Reaction score
4,743
Hi mam

நன்றாக இருந்தது இப்பகுதி,ஜெயந்தியை பெண் பார்க்க வருவது மனிஷா.

நன்றி
நன்றி மா.ஆம்
 




Vijiya lakshmi jagan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
193
Reaction score
4,743
Kolkata karan kooda davu savu nnu pesarane....
சென்னைகாரன் கொல்கத்தா போய் கூட தன் பேச்சை மாற்றாமல் கருக்கான் சமீரா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top