• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vetriyaa Tholviyaa - Chapter 5 Part 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijiya lakshmi jagan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
193
Reaction score
4,743
Chapter - 5 Continuation

தலையைய் உலுக்கி தன்நிலைக்கு வந்தவன். “ஓ இது வேறா….? ஏம்மா உன் காதலை சம்மந்த பட்டவங்க கிட்ட முதல்ல சொல்லுமா….” என்று சொன்னவனிடமே…
“ஐ .லவ். சுகன்.” தன் கையில் பெரும் விரலில் மாட்டி இருந்த மோதிரத்தை கழட்டி சுகனின் கையில் மாட்டி விட்ட வாரே சொல்ல.
அவலையும், மோதிரத்தையும் . புரியாது மாறி மாறி பார்த்துக் கொண்டு இருந்த சுகனின் தோளில் கைய் வைத்த செல்லம்மா.
“என்ன அண்ணா மோதிரம் பிடிக்கலையா….? “ என்ற செல்லம்மா கேள்விக்கு. ஜெயந்தியோ… “யம்மா உன் அண்ணா நகை கடையில் வேலை பாக்குறவரு. அவரு ஆயிரெத்தெட்டு டிசைன் பார்த்து இருப்பாரு. அவருக்கு இந்த மோதிரம் இலப்பமா தான் தெரியும். ஆனா என் கிட்ட இருக்குறதிலேயே நல்ல டிசைனா பார்த்து தான் நான் எடுத்துட்டு வந்தேன்.” என்று கழுத்தை சிலுப்பிக் கொண்டு சொல்ல.
அவளின் பேச்சை ரசித்துக் கொண்டு இருந்த சுகன். அதே சமயம் “தான் நகை கடையில் வேலை பார்ப்பது இவளுக்கு எப்படி தெரியும்……? தெரிய வந்தால் செல்லம்மா தான் சொல்லி இருப்பா...அப்போ இரண்டு பேர் என்னை பத்தி பேசி இருப்பாங்கலா….?எதுக்கு….?இப்படி ஆயிரெத்தெட்டு கேள்வி அவன் மனதில் உதித்த அதே வேளயில். இப்போது ஜெயந்தியைய் பெண் பார்க்க வந்தவர்கள் கோயிலில் காத்துக் கொண்டு இருப்பார்களே….? என்று நினைவு வந்தவுடன்.
செல்லம்மாவை பார்த்து “எனக்கு ஜெயந்தியைய் தெரியும் என்று உனக்கு எப்படி தெரியும்….?” என்று நேரிடையாகவே கேட்டு விட.
“உங்களுக்கு ஜெயந்திய தெரியுமா….? அதிர்ச்சி குரலில் இருந்தாலும். கண்ணில் குறும்பு தெரிய.
“பாப்பா….” வாட்சை பார்த்துக் கொண்டே…. “டைமாயிடுச்சி பாப்பா. ரெண்டு பேரும் சேர்ந்து என்ன காரியம் செய்து வெச்சி இருக்கிங்கன்னு சொன்னா தான் நான் என்ன செய்யனும் என்ற முடிவுக்கு வர முடியும்.” என்ற அவன் பேச்சே அனைத்தும் சொல் என்று சொல்ல.
செல்லம்மாவும் தன் விளையாட்டு பேச்சை விட்டு விட்டு “ பத்து நாள் முன்ன சஞ்சய் அண்ணாக்கு கொஞ்சம் ரிலேக்ஸ் தேவை என்று வண்டலூர் ஜூ போய் இருந்தப்ப நாம மூனு பேரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட செல்பியை வாட்சப்பில் போட்டேன். அதை பார்த்த அடுத்த செகண்ட் அம்மாணி போன் செய்து நீங்க யாருன்னு நேரிடையா கேட்க முடியாம ஏதோ ஏதோ பேசி கழுத்தை அறுத்து தள்ளிட்டா… பேச்சு முழுவதும் அந்த போட்டோவை பத்தி தான் . அப்போ தான் விஷயம் அந்த போட்டோவில் இருக்க உன்னை பத்தியோ...இல்ல சஞ்சய் அண்ணா பத்தியோ தெரிஞ்சக்க தான் இப்படி சுத்தி வளச்சி பேசுறான்னு.
முதல்ல சஞ்சய் அண்னாவை பத்தி தெரியனுமான்னு கேட்டேன். அதுக்கு இவ என் கிட்டயே உன் அண்ணா பத்தி தெரிஞ்சி எனக்கு என்ன ஆவ போகுது என்ற பேச்சில்.
ஓ அம்மணி உங்கள பத்தி தெரிஞ்ச்சிக்க ஆசை படுறான்னு எல்லாம் சொன்னேன். அப்புறம் அவ கிட்ட சுகன் அண்ணாவை எப்படி தெரியும் என்று கேட்டதுக்கு….மயக்கதில் பார்த்தேன். பார்த்தது பத்து நிமிடம் தான். ஆனா என் அப்பா அம்மா இறந்தப்ப அவர் என் பக்கத்தில் இருந்தா நல்லா இருக்குமே என்று நினைக்க தோனுச்சி என்று சொன்னா….” செல்லம்மா ஜெயந்தியின் பெற்றோர் இறந்த என்ற பேச்சு வந்த போது தான் ஜெயந்தியின் பெற்றோர் மறைவுக்கு வர.
செல்லம்மா இருப்பதை கூட பொருட்படுத்தாது. ஜெயந்தியின் அருகில் சென்றவன். அவன் கைய் பிடித்த வாரே…
“அ…ன்னிக்கு அன்…னிக்கு .?” தன் நிலையைய் சொல்ல வார்த்தை வராமல் திக்கி திக்கி பேச.
ஜெயந்தியும் அப்போது தான் தன் பெற்றோரை பறி கொடுத்தது போல் தேம்பி தேம்பி அழுதவள்.சலுகையுடன் அவன் மார்பில் குத்திய வாரே…
“அப்போ ஏன் என்னை விட்டுட்டு போனிங்க…..?என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாது. தன் மார்பில் அவள் முகத்தை பதித்தவன் அவள் தலையைய் வருடி கொண்டே…
“சாரி குட்டிம்மா...” என்று ஆறுதல் படுத்தியன். அந்த நாள் நினைவில் ஆழ்ந்து போனான். கணக்கில் வராத தங்க கட்டிகளை சஞ்சையும். சுகனும், எப்போது காரில் எல்லாம் எடுத்துக் கொண்டு செல்ல மாட்டார்கள்.
சாதரண ஒரு பேகில்… அதோடு ஒரு சாதரண டூ வீலரில் தான் எடுத்துக் கொண்டு போவார்கள். அப்படி ஒரு நாள் இரவு பத்து மணிக்கு செங்கல் பட்டு பைபாசில் போகும் போது தான் ஒரு கார் ஆக்ஸிடெண்ட் ஆகி இருப்பதும் பக்கத்தில் ஒருவர் கையைய் பிசைந்து நின்றுக் கொண்டு இருப்பதையும் பார்த்து வண்டியைய் நிறுத்தலாமா…..? வேண்டாமா….? என்ற பட்டி மன்றத்தில் மனிதாபிமானம் வென்று விட.
வண்டியைய் ஓரத்தில் நிறுத்தியன் தன் பேகை முன் பக்கம் வரும் மாறு மாட்டிக் கொண்டு காரின் அருகில் செல்லும் போது காரில் இருந்து ஒரு கைய் அசைப்பதை பார்த்து ஓடி போய் கார் கதவை திறக்க பார்க்க.
கையைய் பிசைந்து நின்றுக் கொண்டு இருந்த அந்த மனிதர்.
“வேண்டாம் தம்பி போலீசுக்கு போன் செய்து இருக்கேன். இப்போ வந்துடுவாங்க. நீங்க கைய் வெச்சிடாதிங்க.” அவன் போலீஸ் என்ற அந்த வார்த்தையில் கொஞ்சம் ஜர்க் ஆகினாலும்….
தயங்காது கார் கதவை உடைத்து அந்த கையுக்கு உரியவரை வெளியில் இழுக்க. வெளியில் வந்ததோ அழகான இளம் பெண்.
அந்த முகத்தில் அழகோடு….வலி, வேதனை,அதோடு மீறிய பயம் தெரிய. வாய் தன்னால்…”பயப்படாதே குட்டிம்மா உனக்கு ஒன்னும் ஆகாது.” என்ற அவன் வார்த்தையில் ஒரு நிமிடம் சிரித்தாளோ...என்று நினைக்கும் வகையாக அவளின் முகத்தில் ஒரு மலர்ச்சி வந்து போக.
பின் என்ன நினைத்தாளோ...தன் கையைய் கார் பக்கம் நீட்டி….ஏதோ சொல்ல வாய் திறந்தவளுக்கு வார்த்தை வராது அப்படியே மயங்கி சரியவும் காவல் வண்டி வரும் சத்தம் அருகில் கேட்கவும் சரியாக இருந்தது.
இதற்க்கு மேல் இங்கு இருப்பது சரியில்லை. தன் கையில் உள்ளதை போலீஸ் பார்த்து விட்டால்...கடை பெயரோடு நம் சஞ்ய் பேரும் அடிபடும் என்று நினைத்தவன் அந்த இடத்தை விட்டு போகும் போது கடைசியாக அந்த பெண்ணின் முகத்தை பார்த்து விட்டு சென்றான்.
மறு நாளே…..தூபாய் போக வேண்டி முன்னவே பிளைட் டிக்கெட் எடுத்து வைத்து இருப்பதால்...விடிய காலையிலே தூபாய்க்கு பறந்து விட்டான்.
அங்கு இருந்த பதினைந்து நாளும் அந்த பெண்ணின் முகமே கண் முன் வந்தது. சென்னைக்கு வந்த உடன் அவன் செய்த முதல் வேலை காவல் நிலையத்தில்
அந்த ஆக்ஸிடெண்ட் பற்றி விசாரித்தது தான்.
கேட்டறிந்தது அப்பெண்ணின் தாய் தகப்பன் இறந்து விட்டார் என்றதும் மனது பதற.
“அப்..பெண்….” என்ன பதில் வருமோ...என்று பயத்துடன் கேட்டதுக்கு.
“பிழைத்து விட்டாள்.” என்ற செய்தியில் ஆசுவாசம் அடைந்தவன். கைய்யோடு அவர்கள் வீட்டு முகவாரி வாங்கி போய் விசாரித்ததில் வீடு பூட்டி கிடக்க.
பக்கத்து வீட்டு பெண். “பெரியங்க போன பிறகு வயசு பொண்ணு எப்படி ஒத்தையில் இருக்கும். அது தான் அவங்க பெரியப்பா கையோடு ஊருக்கு கூட்டிட்டு போயிட்டாரு.” என்ற பதிலில் எந்த ஊரு பெண்ணின் பெயர் எதுவும் கேட்காது வந்து விட்டான்.
ஆனால் அவளை பார்ப்போம் என்ற மனது மட்டும் அடித்து சொன்னது. அவன் மனது பேச்சு பொய் ஆகாது இதோ இவளை பார்த்ததோடு அவளின் விருப்பத்தையும் அறிந்ததுக் கொண்டதில் மகிழ்ச்சி என்றாலும்….
இந்த பெண் பார்க்கும் விஷயத்தை எப்படி கையால்வது என்று தெரியாது குழம்பி போய் நிற்க்கும் அதே வேளயில். தன் செல்லில் ஜெயந்தி அனுப்பி இருந்த போட்டோவை பார்த்துக் கொண்டே கோயிலின் வாசலில் மனிஷ் செல்லம்மாவுக்காக காத்துக் கொண்டு இருந்தான்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top