Vetriyaa Tholviyaa - Chapter 6 Part 1

#1
Hi friends,

Chapter 6 kizha post paniruken, padichitu ungal comments post seiyavum.

அத்தியாம்----6

தன் மொபைலில் ஒரு கண்ணும் கோயில் வாசலில் ஒரு கண்ணும் வைத்திருந்த மனிஷின் கண் கோயில் வாசலை விட போனில் உள்ள பெண்ணின் எழில் அந்த போனிலேயே நிலை பெற வைத்து விட.
செல்லம்மாவின் முக வடிவை தடவிய வாரே…. “கல்யாணம் என்றாலே கால தூரம் ஓடியவனை பார்த்த செகன்டில் எப்போ கல்யாணம் வைப்பாங்கான்னு ஏங்க வெச்சிட்டியே…..? என்று போனில் செல்லம்மாவின் போட்டோவையே பார்த்திருந்தவன்.
செல்லம்மா பக்கத்தில் ஒரு மூலையில் இருந்த மற்றொரு பெண்ணை பார்த்து “மாப்பிள்ளைக்கு அனுப்பும் போட்டோவில் பெண் மட்டும் இருக்கும் போட்டாவை அனுப்பாம கூடவே ஒரு கொடுக்கு மாதிரி பெண்ணோடு அனுப்பி இருக்காங்க பாரு…..?” தனக்கு போட்டோவை அனுப்பியது பெண்ணின் பெரியப்பா என்று நினைத்து அவரை மனதுள் திட்டிக் கொண்டு இருந்தவனுக்கு…
நேற்று இந்நேரம் தன் சித்தியிடன் வாதாடியது மனதில் வந்து போனது. ஒரு மாதமாகவே சித்தி தனக்காக தீவிரமாக பெண் தேடும் படலத்தில் இறங்கி இருக்கிறார்கள் என்று தெரிந்தும் கண்டும் காணாது இருந்து விட்டான்.
பைனல் நம்ம தானே பண்ணி ஆகனும். அப்போது பெண்ணை பிடிக்கவில்லை என்று சொல்லி விடலாம் என்று அசால்ட்டாய் விட்டு விட.
எப்போதும் தொடர்பு கொள்ளாத சித்தி நேற்று போனில்…. “தம்பி இன்னும் கொஞ்ச நேரத்துல ஒரு பெண் போட்டோ வரும் பார்த்து பிடிச்சி இருந்தா எனக்கு போன் போடு…” மனிஷின் பதிலை கேட்காது வைத்து விட.
வர வர சித்தி சரியில்ல. ரொம்ப தான் பண்றாங்க என்று மனதில் தன் சித்தியைய் வைய்தவன். திரும்ப தன் சித்திக்கு தானே அழைக்க.
“என்ன மனிஷ் போட்டோவை பார்த்தாச்சா…..? பிடிச்சிருக்கா….” என்று சித்தி கேட்டதுக்கு இப்போது தான் பதில் அளிக்காது.
“ சித்தி நான் இப்போ தொழில் விஷயமா கொல்கத்தாவுக்கு வந்து இருக்கேன்…..” என்று சொல்ல.
“தெரியும் தம்பி.” என்றதுக்கு.
“தெரிஞ்சும் எதுக்கு இப்போ என்னை டிஸ்ட்டப் பண்றிங்க….? நாளைக்கு ஒரு மீட்டிங் இருக்கு….” என்றவனிடம்.
“நாளை மீட்டிங்குக்கு ஏன்பா முன்னவே போயிட்ட….?” என்ற சித்தியின் கேள்விக்கு ஒரு நிமிஷம் பதில் சொல்லாது அமைதி காத்தவனிடம்.
“மன்னிச்சிக்கப்பா….தெரியாம கேட்டேன்.” தன்னிடம் மன்னிப்பு கேட்கும் சித்தியைய் பற்றி மனதில் யோசனை ஓடினாலும்….
“மன்னிப்புன்னு பெரிய வார்த்தை எல்லாம் வேண்டாம் சித்தி.” என்றவன்.
அவர் கேட்ட கேள்வியான “கொஞ்சம் தொழில் சம்மந்தம்மா வேலை இருந்தது. அது தான் முன்னவே வந்துட்டேன் சித்தி.” இது வரை கம்பீரமாய் ஒலித்த அவன் குரல் கடைசியில் பொய் சொல்லும் போது குரலில் அழுத்தம் குறைந்து கேட்க.
அவன் குரலிலேயே பொய் சொல்கிறான் என்று புரிந்தாலும் மேலும் அதை பற்றி பேசாது. “பொண்ணு கொல்கத்தாவில் அவள் பெரியப்பா வீட்டில் தான் இருக்கு தம்பி. போட்டோவில் பிடித்து இருந்தா…..அடுத்தது பேசலாம்.” என்று சொல்லோடு தன் பேச்சி முடித்துக் கொண்டார்.
வாட்சாப்பில் போட்டோ வந்தது தெரிந்தும் அதை ஓபன் செய்து பார்க்காது தான் இருந்தான். ஆனால் பக்கத்தில் இவை அனைத்தும் கேட்டுக் கொண்டு இருந்த மீனலோச்சனி அவன் சித்தி அவனுக்கு பெண் தேடுகிறார்களா…..?
அன்று ஆபிசில் தான் சிரித்தும் முறைத்துக் கொண்டு சென்றவரை மீனசோச்சனிக்கும் பிடிக்காது போய் விட.
மனிஷ்க்கு ரஜினி பாய் சித்தி தானே என்ற எண்ணத்தில்…. “ இந்த பொண்ணு அவங்க சொந்தமா தான் இருக்கும் மனிஷ். “ என்ற அவள் பேச்சிலேயே ஏதோ வில்லங்கமாய் தான் சொல்ல போகிறாள் என்று தெரிந்தே….
“எத வெச்சி சொல்ற…..? என்று கேட்க.
“அப்போ தானே அந்த பொண்ணை கைய் கீழே போட்டுட்டு இப்போ இருக்குற மாதிரி சொகுசா வாழலாம். நீங்க கொடுக்குற இந்த வசதி செருப்பு விக்குற அவங்க கணவன் கொடுக்க முடியுமா……?” என்று கேட்டவளை அடிக்க கைய் ஓங்கியவன் பின் என்ன நினைத்தானோ….
“ ரூமை விட்டு போ…..” என்றதும்.
அடிக்க கைய் ஓங்கியதிலேயே அவனின் கோபம் புரிந்த மீனா. அவன் வெளியில் போ என்றதும்.”இல்ல மனிஷ் உன் நல்லதுக்கு…..” என்று மேலும் என்ன சொல்லி இருப்பாளோ….
“என் நல்லதை பார்க்க என் அப்பா இருக்காரு...என் சித்தி இருக்காங்க. அதனால நீ அதை பத்தி எல்லாம் கவலை படாது. உனக்கு பிளைட் டிக்கட்டுக்கு ஏற்பாடு செய்யிறேன் சென்னை போற வழிய பாரு.” என்று சொல்லியவனை கொஞ்சலில் சரிக்கட்ட எண்ணி அவன் பக்கத்தில் செல்லும் போதே…
அவளின் எண்ணம் புரிந்தவனாய்…. “சீக்கிரம் உன் லக்கேஜை பேக் செய். “ என்று சொல்லிக் கொண்டே…
தன் செக் புக்கை எடுத்தவன் மட மட வென்று ஒரு தொகையைய் எழுதி கைய்யெப்பம் இட்டு அவளிடன் நீட்ட.
இவ்வளவு நேரம் சென்னைக்கு தனியா போகனுமா என்று வருத்தத்தில் இருந்தவள். அவன் செக்கை நீட்டியதும் மகிழ்ந்து போய் அவனிடம் வாங்கி அதன் தொகையைய் பார்க்கும் போதே…
மனிஷ் “உன்னோட மூனு மாசம் சம்பளத்தோட என்னோட கடையில் இருந்து உன்னை விலக்குறேன்.” என்ற வார்த்தையில்.
“மனிஷ்….” என்று ஏதோ பேச வந்தவளை கைய் காட்டி தடுத்தவன்.
“நீ எதுக்கு என்னிடம் பழகின. நான் எதுக்கு உன்னிடம் பழகினேன்னு இரண்டு பேருக்கும் நல்லா தெரியும். ஆனா கொஞ்ச நாளா நீ அதுக்கு மேல ஆசை படுறியோன்னு தோனிட்டே இருந்தது. இப்போ அது கன்பாம் ஆயிடுச்சி. இனியும் உன்னை என் கூட வெச்சி இருக்க நான் முட்டாள் இல்ல.” என்று சொல்லி அவளை கிளம்ப சொல்ல.
“முதலுக்கே மோசம் வந்துடுச்சே….” என்று வருந்தியவளாய். “நான் உங்க சித்தியைய் அப்படி பேசியது தப்பு தான் மனிஷ். இனி பேச மாட்டேன்.” என்று மன்னிப்பு கேட்டும்.
“நான் இத வெச்சி மட்டும் உன்னை வேலையில் இருந்து நீக்கல. என் பர்சனல்ல இப்போ எல்லாம் நீ ரொம்ப தலையிடுற….
என் பர்சனல்ல என் அப்பா தலையிட்டாலே எனக்கு பிடிக்காது அப்படி இருக்கும் போது நீ…..” என்று கேள்வியோடு அவளை பார்க்க.
“இனி….” பேச வந்தவளை தடுத்த மனிஷ். போகலாம் என்பது போல் கைய் காட்ட. இதற்க்கு மேல் இவனை சமாதானப்படுத்த நம்மால் முடியாது.
இனி வேறு ஒரு பெரிய கைய் பார்த்து போக வேண்டியது தான் என்று எண்ணும் போதே...இவன் இவ்வளவு சீக்கிரம் கழட்டி விட்டுட்டுவான் என்று தெரிந்து இருந்தா….
அந்த பாரம்பரரியகாரனையே பிடித்து இருக்கலாம் என்ற பெரும் மூச்சோடு அந்த இடத்தை விட்டு அவள் அகன்றதும்.
ஏதோ ஒரு உந்துதலில் வாட்சாப்பில் வந்த போட்டோவை ஓப்பன் செய்து பார்த்தவனுக்கு கண்ணை அந்த போட்டோவில் இருந்து நகர்த்த முடியாது போய் விட்டது.
பின் என்ன….?சித்தியைய் அழைத்தவள். “ சித்தி பெண் பெயர் என்ன…..? என்ற மனிஷின் கேள்வியிலேயே…
பெண்ணை மனிஷிக்கு பிடித்து விட்டது என்று மகிழ்ந்து “பெண்ணை பிடிச்சி இருக்கா தம்பி.” என்று எதிர் பார்ப்போடு கேட்க.
“ஏதோ பரவாயில்லையா இருக்கா.” என்று சொன்னவன். திரும்பவும் பெண்ணின் பெயர் அறியும் ஆவலில் பெயர் கேட்க.
மனிஷை வெறுப்பு ஏற்றும் பொருட்டு…. “என்னது பொண்ணு சுமாரா இருக்கா!!!!!!.அந்த பெண்ணோட பெரியப்பன் என் பொண்ணு ஆ..ஓ...ஓன்னு பீத்திக்கிட்டாரு. பொண்ணு சுமாரா இருந்தா வேண்டாம் தம்பி. உனக்கு வேறு பொண்ணை பாக்குறேன்.” என்று சொன்னது தான்.
அவசரமாக…….” வேண்டாம். வேண்டாம் இந்த பொண்ணையே முடிச்சிடலாம்.” என்று சொன்னதும் அந்த பக்கம் சிரித்த சித்தி. இப்போது பாசத்துடன்.
“பெண்ணை பிடிச்சி இருக்கா தம்பி…..?” என்று கேட்டதுக்கு.
“பிடிச்சி இருக்கு சித்தி.” என்ற பதிலில்.
“சந்தோஷம் தம்பி. இப்போ தான் என் பாதி பாராம் குறஞ்சா மாதிரி இருக்கு.”
எப்போதும் ஒரு அழுத்தத்துடன் இருக்கும் மனிஷ் இப்போது அந்த அழுத்தம் குறைந்தவனாய்…
“நான் பாரமா சித்தி.” என்றது தான்.
“அய்யோ நான் அப்படி சொல்லலே தம்பி.”என்று பதட்டத்துடம் சொல்ல.
“சித்தி நான் தாமாஷா தான் சொன்னேன். அதை போய் இப்படி சீரியசா எடுத்துக்கிட்டு.”
“நீ தமாஷா சொன்னாலும் நான் சீரியசா சொல்றேன் தம்பி. இப்போ தான் என் பாராம் குறஞ்சா மாதிரி இருக்கு. நான் என்ன தான் உன்ன நல்ல படியா கவனிச்சாலும் நான் உன் அம்மாவா ஆகிட முடியாது தானே…..?” வருத்தத்துடன் சொல்ல.
“சித்தி…..” என்றவனுக்கு அடுத்த பேச்சு வரவில்லை.
ரஜினி பாய் சொன்னது முற்றிலும் உண்மை தான். சித்தி நல்லவர்கள் தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவரை அன்னை ஸ்தானத்தில் வைக்க அவனால் தான் முடியவில்லை.
சிறுவயதில் இதை பற்றி பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை தான். ஆனால் கொஞ்ச காலமாய் தனக்கு ஏன் சித்தியிடம் ஒரு ஒட்டுதல் வரவில்லை….?
சின்ன வயதில் இருந்து நன்றாக தானே பார்த்துக் கொண்டார்கள் என்ற எண்ணம் வந்து போய் கொண்டு தான் இருந்தது. ஏன் அவர்களை ஏற்க மனம் வரவில்லை என்று கேள்விக்கு விடை மட்டும் அவனுக்கு கிடைக்காது இருக்க.
அதற்க்கு விடையாய்….”உங்க அம்மா உன்ன விட்டுட்டு போகும் போது. நீ குழந்தை இல்ல மனிஷ் வளர்ந்தும் வளராத இரண்டு கெட்டான் நிலை. உங்க அம்மா பாசத்தை முழுமையா அனுபவிச்சவன். குழந்தையா இருந்து இருந்தா….ஈஸியா என்னை ஏத்திட்டு இருப்ப. இல்ல பக்குவமான வயதா இருந்தா நிலமை புரிஞ்சி இருக்கும். அப்பாவோடு அம்மாவை பார்த்த உனக்கு.
அவரோடு என்னை பார்க்க முடியாது போயிடுச்சி….அம்மா இடத்தில் வேறு ஒருத்தரா….? அதை ஏத்துக்க உன்னால முடியல. அது உன் மேல தப்பு இல்ல மனிஷ்.” அவன் நிலையைய் தெள்ள தெளிவாக ரஜினிபாய் விளக்க.
 

Sairam

Well-known member
#6
செல்லம்மா சொல்லம்மா யாரை சரிகட்டி உன் போட்டோவை அவணுக்கு மாற்றி அனுப்பினே.n ice epi.
 

Maha

Author
Author
SM Exclusive Author
#9
Chitthee ku jai ho ????Indha madhiri nalla chithee kuda natula erukaga ?kadaseaya andha meena lo sani vilaghe ducha enimay manish ku nalla kalam dhan ud suprrrrrrrrrrrr
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top