• Please register and if already registered, log in! Read the stories and always share your opinions. Writers expect only your opinions. Thanks

General Audience இனி ஒளிரும் மணிகள்.

Messages
1
Likes
3
Points
1
Age
30
Location
திருநெல்வேலி
#1
இனி ஒளிரும் மணிகள்


அந்த நெடுஞ்சாலை கொஞ்சம் பரபரப்பாக தான் இருந்தது. வாகனங்கள் விரைந்து செல்கிறது. சிலர் சாலையை கடக்க வாகனம் வரும் திசையை பார்த்தபடி சாலை கடக்கின்றனர். அந்த இடத்தில் சிவப்பு பச்சை மஞ்சள் விளக்குகள் எரியாத படி ஒரு சிக்கலான சாலையும் கூட.ஆளோடு ஆளாக அந்த சிறுவர்களும் கடந்து செல்கின்றன வச்சர்.தங்க முத்து 12 வயது சிறுவன்.அண்ணமுத்து 9 வயது சிறுவன். அங்கிருந்த பெரியவர்களோடு அவர்களும் கடந்து சென்றனர்.


அவர்கள் வந்த பின் சமுத்திரம் மட்டும் கடைசியாக சாலையை கடக்க வந்தான். அதற்குள்ளாகவே வாகனங்கள் இடம் கொடுக்காது செல்ல ஆரம்பித்தது. கொஞ்ச நேரம் அங்கேயே நிற்க வேண்டிய சூழல். எப்படியோ ஒரு ஒரு வண்டியாக கை காட்டி சாலையை கடந்து வந்துவிட்டான். சிறுவர்கள் போன பாதையில் போக ஆரம்பித்தான்.


சமுத்திரம் வெளியூரில் வெலை பார்த்து விடுமுறைக்காக ஊர் வந்தவன். அதிகம் படித்தவன். நீதி நேர்மை என்று வாழ கூடியவன். அன்று அவன் எதிரே போன சிறுவர்கள் பின்னே செல்ல வேண்டிய பயணம்.


நெடுஞ்சாலையில் இருந்து அந்த சிறுவர்கள் செல்லும் பாதை ஒரு கிராமபுறத்தை சேர்ந்தது. போகின்ற வழியில் அந்த சிறுவர்கள் உடைந்து போன கட்டிடத்தில் ஒட்டப்ப போஸ்டர்களை பார்த்தவாறு நின்றனர்.


"டேய் சிவா தான்டா super singer ல win பண்ணுவான் பாரு.


இல்லடா மேகா தான் தான் win பண்ணுவா" என்று பேசி சென்றனர்


இதனை கேட்டு வந்த சமுத்திரம் "நாடு எப்படி கெட்டு கிடங்கு பாரு.இந்த நிகழ்ச்சியால சமுதாயத்துக்கு ஒரு பிரயோஜனம் இல்ல. படிக்குற பிள்ளையல இப்படி பாட விட்டு இருக்குற கூமுட்டைங்க ஒருபக்கம் படிக்குற பயலுங்க டிவி பார்த்து கெட்டு போக வைக்கிறது ஒரு பக்கம்" என்று நினைத்தபடியே நடந்தான்.


சிறு தூரம் சென்றதும் சிறுவர் ஒரு ஹோட்டலில் சப்ளையராகவும் காய்கறி வெட்டவும் இருந்தனர். இதனை பார்த்த சமுத்திரம் அவர்களையும் அவர்கள் வேலை செய்யும் ஹோட்டலையும் ஒரு படம் பிடித்து கொண்டான். சிறுவர்கள் அங்கு டிவி பார்த்தவாறு வேலையும் செய்தனர்.


மறுநாள் அதே போல் சிறுவர்கள் வேலைக்கு வந்தனர். போலீஸ் காரர்கள் ஹோட்டல் முதலாளியை கைது செய்து ஆட்டோவில் கூட்டி சென்றனர்


இருவரும் அதே போல் சாலையை கடந்து வீடு வந்து சேர்ந்தனர். வீட்டில் போலீஸ் காரர் ஒருவர் அவர்களது அம்மாவை திட்டி எச்சரிக்கை செய்கிறார். சிறுவர்கள் அம்மாவின் பின் மறைந்து கொண்டு வேடிக்கை பார்க்கின்றனர். அவர்கள் வேலைக்கு செல்வது தவறு என்று சொல்கின்றார்


அந்த அம்மாவுக்கு பெண் குழந்தை இரண்டாவது ஆண் குழந்தை பேச ஆரம்பிக்கும் போது உறவுகளால் ஒதுக்க பட்டவர்.மூன்றாவது ஆண்குழந்தை பிறந்ததும் கட்டிட வேலை செய்யும் போது கணவர் இறந்துவிடுகிறார்.


சாலையோரம் இருக்கும் வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்தார் அந்த தாய். பெரியவள் 15 வயது போலியோவால் பாதிக்கப்பட்ட உடல். எப்போதும் வாயில் எச்சில் வடிக்கும் முகம். இரண்டு முறை கரு கலைக்கப்பட சிறுமியும் கூட. அவளுக்கு அடுத்த படியே தங்கமுத்து அண்ண முத்து. அந்த தாய் வருமானம் மகளின் மருத்துவச் செலவுக்கு காணாது என்பதால் ஹோட்டல் நடத்தும் அந்த முதாலாளியிடம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார் அந்த அம்மா.


கடனை அடைக்க முடியாத போது அந்த முதாலாளியே போய் '"பசங்கள சாயந்திரம் நேரம் மட்டும் கடைக்கு வேலைக்கு அனுப்பு மாசம் 3000 கழிச்சிகுறேன்" என்று கூற அந்த அம்மாவும் சம்மதிக்கிறாள்


அதன் படியே அந்த சிறுவர்களும் பள்ளி முடிந்ததும் வேலைக்கு செல்கின்றனர்

அவரும் சிறுவர்களுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்.


மறுநாள் காலை ஹோட்டல் திறக்கப்படுகிறது. "எப்படி இந்த ஆள் வெளிய வந்தான்" என்றெண்ணி சமுத்திரம் அந்த இடத்தை கடந்தது போகிறான். முதலாளி கூப்பிடுகிறார். நக்கல் தோரணையில் சமுத்திரம் உதட்டு சிரிப்போடு வருகிறான்.தோலில் பையுடன் கடைக்கு வந்தான்.


"தம்பி ஊருக்கு போறீங்க போல? நீங்க ரொம்ப நேர்மையானவர். நான் 10 வயசுல ஒரு ஹோட்டல்ல வேலை பார்த்து டீ மாஸ்டர் பரோட்டா மாஸ்டர் அந்த மாஸ்டர் இந்த மாஸ்டர்னு முன்னேறி இப்ப என் 45 வயசுல ஹோட்டல் முதலாளியை ஆயிருக்கேன். 8 பேருக்கு வேலை கொடுத்து வேலையும் பார்க்குறேன். உன்ன மாதிரி ஒரு ஆள் அப்பவே என்ன பார்த்துருந்தா உங்க அப்பன் மாதிரி ரோட்டு ஓரத்துல குடிச்சிட்டு விழுந்து கிடந்துருப்பேன். நீ என்ன சம்பளம் வாங்குற 20000 ரூ தான எனக்கு மாதம் 30000 இலாபம் மட்டும் வருது. அந்த பசங்க வீட்டுல 80000 ரூ கடன் வாங்கிருக்கா அவங்க அம்மா. கடனை அடைக்க வழி இல்லை. எனக்கும் வசுல் பண்ண வழி இல்லை. அந்த பசங்க நம்ம ஊர் பள்ளிகூடந்துல தான் பிடிக்குதுங்க. அவங்க படிப்பு செலவு நோட்டு புக்குனு நான் தான் வாங்கி கொடுக்குறேன். பள்ளிகூடம் இல்லாத நேரத்துல இங்க வந்து வேலை பார்க்குறாங்க. இனியும் இங்க வேலை பார்ப்பாங்க. உன்ன விட அதிகமாக அவங்க பெரிய ஆளாக வருவாங்க. இதெல்லாம் உனக்கு புரியாது. நீ போற வழியில தான் அந்த பசங்க வீடு இருக்கு பார்த்துட்டு ஊருக்கு போ" என்று கூறி முடிக்க சமுத்திரம் முகம் அரண்டு போனது நடந்தான்.


அந்த ஓட்டு வீடு ஊரின் பழைய சத்திரம் போல் சிறிதாக இருந்தது. அந்த 15 வயது சிறுமி வாசலில் பாதி உடலும் வீட்டுக்குள் பாதி உடலும் படுத்திருந்தால். சிறுவர்கள் இல்லை அவர்களது பிஞ்சு போன செருப்பு மட்டுமே அவனுக்கு தரிசனம் தந்தது. வீட்டிற்குள் இருந்து புகை மட்டும் வந்தது. அடுப்பு வேலை நடக்கிறது என்று புரிந்து கொண்டு நடக்க ஆரம்பித்தான். தான் வைத்துருந்த உயர்ந்த ரக செல்போன் தரமாக தெரியவில்லை. விலை கூடிய சட்டை தெரியவில்லை. சிறுவர்களின் பிஞ்சு போன செருப்பு மட்டுமே விலை உயர்ந்ததாக தெரிந்தது.
 
Last edited:

Advertisement

Latest Episodes

Advertisements

Top