கனவை களவாடிய அனேகனே - Teaser 1

#1
ஹாய் மக்களே..
சொன்ன மாதிரியே வந்துட்டேன் உங்கள் கண்ணம்மா..

கதையின் பெயர் : கனவை களவாடிய அனேகனே..
ஹீரோ : அனேகன்
ஹீரோயின் : அம்ரிதா

eiILOJN75604.jpg

இதுவும் ஒரு காதல் கதை தான். ஆனால் சில மர்மங்கள், மனித ஜென்மங்கள் போன்றவைகளை தழுவி வரும் கதை. அடுத்த மாதம் 14 -ஆம் தேதி கதை ஆரம்பமாகும் மக்களே. இப்போது கதையில் இருந்து ஒரு சில பகுதிகளை கொடுத்திருக்கிறேன். கதை எந்த மாதிரியான மர்மங்கள் சுமந்து வரும்னு யோசிச்சிட்டே இருங்க.. விரைவிலேயே சந்திப்போம்..

**************************************

ரொம்ப சீக்கிரமா கால் பண்ணி தொந்தரவு பண்ணுறேனா..? “

“ நோ மை டியர்.. ஏன் ரொம்ப அஃபீசியலா பேசுற..? நீ எப்ப வேணும்னாலும் எனக்கு கால் பண்ணலாம்.. நான் தான் சொல்லியிருக்கேனே.. “

“ இல்லை சார்.. தங்கச்சி தூங்கிட்டு இருக்கா.. அவ எழுந்துட்டா நாம பேச முடியாதுல.. அதான் அவ எழுந்துக்க முன்னாடியே கால் பண்ணேன்.. “

“ சரி மா.. நேத்து பேசினது போல இன்னைக்கு டென் ஓ க்ளாக்குக்கே க்ளீனிக் வந்திரு..”

“ சரிங்க சார்.. வந்திடுறேன்.. “
**************************************
பாதி கண்களையும் பாதி முதுகு தண்டினையும் குடைசாய்த்துக் கொண்டு மெத்தையில் அமர்ந்திருந்தவளது காதுகளை துளைத்தது அடுத்த அழைப்பு.

” எவ்வளவு நேரமா கத்திக்கிட்டு இருக்க.. சீக்கிரம் எழுந்திரு டி.. மணிய பாரு 10 ஆகுது.. வர வர உனக்கு ஏந்தான் லீவ் விடுறாங்கனு தோனுது..” என்று அடுப்பங்கறையில் இருந்து குரல் கொடுத்துக்கிட்டு இருந்த அம்மாவை சென்றடைந்தாள் அச்சு.

” அம்மா.. காபி கொடும்மா.. தலை ரொம்ப வலிக்குது.. ” என்றாள்.

“ இப்படி 10 மணி வர தூங்கினா தலை வலிக்காம என்ன செய்யும்..? பல்ல தேய்சிட்டு வா முதல்ல..”

**************************************
ஓர் வயதான பாட்டி தன்னையே கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருப்பதை கண்டாள். சிறிது நேரம் அவளும் அந்த பாட்டியை நோட்டமிட, பாட்டி தன் பார்வையை திருப்புவதாய் இல்லை.

” என்ன டி.. கிளம்பலாமா .. ” என்று அம்மாவின் குரல்.

“ ம்ம்ம்.. போகலாம் மா.. “ என்று சொல்லி எழுந்து வாசலுக்கு நடந்தாள். செருப்பை காலில் மாட்டுகையில் பளார் என முதுகில் ஓர் அடி. வலி தாங்காமல் ’ ஆஆஆ…. ‘ என கத்திக்கொண்டே அம்மாவை பார்த்து,

” ஏன் மா இப்படி அடிக்கிற.. அதுவும் நடு ரோட்டுல.. நான் என்ன சின்ன குழந்தையா..? “ என்றாள்.

“ அதையேதான் டி நானும் கேட்குற.. சின்ன புள்ளையா நீ..? ஒரு இடத்துல இருக்க மாட்டியா..? இவ்வளவு வேகமா எழுந்து எங்க ஓடுற..? கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன்.. காது கேட்கலையா..? உன் வேகத்துக்கு என்னால ஓடியாற முடியுமா…?? ” என்று கோவத்தில் பொறிந்தாள் அம்மா.

” நீதான மா போகலாம்னு சொன்ன.. அதனால தான நான் எழுந்து வந்த ..!?” என்று அம்மாவிடம் சிணுங்கினாள்.

**************************************
அவர் சுப்பு மாதிரி இல்லை. குழந்தை இல்லா பொன்னம்மாவுக்கு அம்மு மற்றும் அச்சு மீது அதீத பாசம் உண்டு.

தினமும் காலை ஒன்பது மணிக்கு வரும் பொன்னம்மா காலை உணவு தயாரிப்பதில் தொடங்கி இரவு ஏழு மணிக்கு இரவு உணவை தயார் செய்து வைப்பது வரை எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு எட்டு மணிக்குள்ளாக தன் வீட்டிற்கு சென்றுவிடுவார்.

ஒரு வருடத்திற்கு முன் தன் கணவனை இழந்த பிறகு இங்கேயே தங்கிவிடுமாறு கூறிய அம்முவின் பேச்சுக்கு மறுப்புக் கூறவில்லை பொன்னம்மா. வயது முதிர்ந்த காலத்தில் மானம் ரோசம் பார்க்காமல் அன்புக்கும் பாசத்துக்கும் மட்டும் தானே ஏங்கும் பேதை நெஞ்சம்.

*******************************************
பச்சை தாவணியில் இருந்து எட்டிப் பார்த்து மின்னிக்கொண்டிருந்த தங்க நிற இடுப்பை இமையாது வெகுண்டு நோக்கிக் கொண்டிருந்தது ஒரு ஹெல்மட் அணிந்த முகத்தின் கண்கள்.

**************************************
அவன் தனது கர்ஜனை முகத்தை மாற்றிக் கொள்ளாமல் அவள் எடுத்து வைத்திருந்த இரண்டு அடியை சமன் செய்து இருவருக்கும் இடையேயான தூரத்தை பூஜியமாக்கினான். அவனது அந்த ஆஜானுபாகுவான உடல் வாகைக் கண்டு பயத்தில் கை கால்கள் நடுக்கமெடுக்க கண்கள் பட படத்தவாறு அவனை பார்த்தாள்.

“ ஷட் யுவர் மவுத் அண்ட் கம் வித் மீ.. “ என்று அவள் விழிகளை நோக்கி கத்தியை விட கூர்மையாய் கூறியவன் வேகமாக நடந்து க்ளீனிக்கின் உள்ளே சென்றான்.
*************************************
 
Last edited:

srinavee

Author
Author
SM Exclusive Author
#2
அருமையான டீசெர் ... மொத்த கதைக்கும் சேர்த்தே ஒரு டீசெர் குடுத்தாச்சா authorji... ரெண்டு நாள்ல போட்ற udkke promo போட்டா எங்க மண்டைல கொண்டை வளர்ற அளவுக்கு யோசிச்சு வைப்போம். இது தாங்க முடியாது :eek::eek:இப்படி இருபது நாள் கழிச்சு வர போற கதைக்கு இப்போவே டீசெர் குடுத்தா நாங்க எப்படி தாங்குவோம்:unsure::unsure: குட்டி குட்டி டீசெர் குடுத்து அப்போப்பா எங்களை ஆறுதல் படுத்துங்க:p:D
 
#3
அருமையான டீசெர் ... மொத்த கதைக்கும் சேர்த்தே ஒரு டீசெர் குடுத்தாச்சா authorji... ரெண்டு நாள்ல போட்ற udkke promo போட்டா எங்க மண்டைல கொண்டை வளர்ற அளவுக்கு யோசிச்சு வைப்போம். இது தாங்க முடியாது :eek::eek:இப்படி இருபது நாள் கழிச்சு வர போற கதைக்கு இப்போவே டீசெர் குடுத்தா நாங்க எப்படி தாங்குவோம்:unsure::unsure: குட்டி குட்டி டீசெர் குடுத்து அப்போப்பா எங்களை ஆறுதல் படுத்துங்க:p:D
🙈🙈🙈🙈 Apadiyaaaaa... Mudinja weekly oru teaser podura srika 😍😍😍
 

Sponsored

Advertisements

Top