• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சாத்திரம் ஏனடா..!-32

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Rishaba

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Jan 8, 2021
Messages
478
Reaction score
695
Location
Theni
1714355910474.png

சாத்திரம் ஏனடா..!-32



இருகை விரல்களும் ஒன்றோடொன்று மோதிக் கொண்டு இருக்க, வெற்று மேனியில் வெறும் டிராக் பேன்ட்டை அதன் ஜோடி இல்லாமல் தனித்து அணிந்திருந்தான். அவனின் முறுக்கிய தோள்களே அவன் தீவிர யோசனையில் இருப்பதை சாட்சியாக எடுத்துக் காட்டியது. அவன் அருகில் இருந்த திறன்பேசி பலமுறை அடிப்பதும்... துண்டிப்பதுமாய் ஓய்ந்துபோய் படுத்துக் கிடந்தது.

இம்முறை பளீரென கண்முழித்த திறன்பேசி உற்ற தோழனைப் போல் நய்..நய்.. என்று இம்சை செய்து அவனை தன்பால் ஈர்த்தது. அதில் திரும்பி ஒளிர்ந்த பெயரைக் கண்டவன், நெற்றியை அழுத்தி தேய்த்துவிட்டவாரே திறன்பேசிக்கு பதிலளித்தான்.

“.....”

“இல்ல..”

“நானும்.. உன்கூட பேசணும், இடத்தை எனக்கு மெசேஜ் பண்ணிரு.. வித் இன் ஒன் அவர்ல மீட் பண்ணலாம்”

அம்முகவரி வந்த இடத்திற்கு வந்து சேர்ந்தான் அகிலன். அவனைக் கண்டவளின் வதனம் அத்தனை பிரகாசமாய் ஒளிர்ந்தது. ஆனால் அகிலனின் முகம்தான் இரண்டு நாட்களாக வழிக்காத தாடியுடன் ராஜ்ஜியத்தை இழந்த அரசனைப் போல் சிரத்தையின்றி ஏதோ கைக்கு சிக்கிய உடையைப் போட்டுக் கொண்டு வந்திருந்தான்.

“ஹய்.. ஹானி“ சாஸ்ருதி வரவேற்கையில் நுனி முதல் அடி வரை அகிலனை அளவிட்டாள்.

“ஹாய்...” சிரத்தையின்றி அகிலனிடம் இருந்து பதில் வந்தது,

“என்னாச்சுபா, இவ்வளவு டல்லா இருக்க, உடம்புக்கு முடியலையா? ஆபிஸ்கூட வராம இருக்க..!”

‘உடம்புக்கு ஒன்றும் இல்ல, மனசுக்குதான்’ நினைத்ததை எல்லாம் பேச்சாக கடத்திவிட முடியுமா என்ன? அவள் கேட்டதற்கு ஆம் என்று தலையை மேலும் கீழும் ஆட்டிவைத்தான்.

“அச்சோ.. அப்ப போன் பண்ணப்பவே சொல்லியிருந்தா நம்ம இன்னொரு நாள் மீட் பண்ணிருக்கலாமேபா..”

“அதெல்லாம் பரவாயில்ல.. நவ் ஐம் ஆல்ரைட்”

“உன்ன பார்க்காம ஏதோ மாதிரி இருந்துச்சுபா.. ஆபீஸ்ல முடிக்க வேண்டிய வேலை அதிகமா வேற இருந்துச்சா… முடியவும் உன்ன இன்னைக்கு கண்டிப்பா மீட் பண்ணலாம்னு வரச்சொல்லிட்டேன்”

“ஓ..” வாய் ஒயாமல் பேசி தள்ளுபவன், ஒவ்வொரு வார்த்தையையும் சிரமமாக கொடுத்தான்.

அவனின் உடல் நிலையை பொருட்படுத்தாமல் அழைத்தவுடனேயே தனக்காக வந்துவிட்டான் என பெருமிதமாக எண்ணியவளுக்கு அவனின் சோர்வற்ற பதில்கள் உறுத்தவில்லை.

“என்ன சாப்பிடற.. விச் வெரைட்டி ஆப் காபி யூ லைக்?”

“உனக்கு ஆர்டர் பண்றதே எனக்கும் சொல்லிரு..” மெனு கார்ட்டை அவள் பக்கமாக நகட்டினான்.

“அன்னைக்கு உனக்கு பிடிச்சத சாப்பிட வச்சதுக்கு பதிலா இன்னைக்கு என் சாய்ஸ்க்கு விட்டுக்கொடுக்குறியா..?” மெல்லிய இடைவெளியில் பற்கள் தெரிவதை வைத்து சிரிக்கிறானே என எண்ணிக்கொள்ளலாம் அவ்வளவே! அவனது சிரிப்பு காட்டியது.

மனதிற்கு தோன்றிய அனைத்தையும் பேசிக் கொண்டே இருந்தவள், மறந்தது தனது நிபந்தனையை. சாஸ்ருதி அவளின் காதலை பட்டவர்த்தனமாக காட்டும் முன்னே, “நெக்ஸ்ட் டைம் நம்ம மீட் பண்றப்ப கண்டிப்பா அபிய அழைச்சிட்டு வா.. ஸ்ரேயா அவளுக்காக நியூ மாடல் டிரஸ் டிசைன் பண்றேன்னு சொல்லியிருக்கா” அந்த நொடி தனது சுயம் தெளிந்தவன். அவள் பேசிக்கொண்டே இருப்பதை பொருட்படுத்தாமல், “லெட்ஸ் பிரேக் அப்..”

அவள் புரியாமல் அகிலனைப் பார்க்க, “இது நமக்குள் செட் ஆகும்னு நம்பிக்கையில்ல.. சோ பிரேக் அப் பண்ணிக்கலாம். இத சொல்லதான் வந்தேன்..” என எழ போனவனை கை பிடித்து நிறுத்தி, “என்னாச்சு உடம்பு சரியில்லைன்னு சொன்ன.. ஆனா வந்ததுல இருந்து வியர்டா பிகேவ் பண்ற.. எதுக்கு இப்ப தீடீர்னு பிரேக் அப்.. எனக்குப் புரியல?” எப்படி எடுத்துரைப்பது என விழித்துக் கொண்டு இருந்தவனைக் கண்டவள், “ஓ.. நான் சொன்ன கன்டிஷனாலயா.. இட்ஸ் ஓகே, உடனே எந்த ரெஸ்பான்சும் பண்ண வேண்டாம், இப்ப ஸ்மூத்தா போற மாதிரி போகட்டும். நத்திங் இஸ்யூஸ்..”

“வாட்.. நத்திங் இஸ்யூஸ்..ஆ.. இப்படி சொல்லி என்னோட ஒட்டிக்கிட்டே இருந்துட்டு.. கடைசியில அத வச்சு கார்னர் பண்ணலாம்னு டிரை பண்றியா? என்னைய பார்த்தா இதுக்கு அலையிற மாதிரியா இருக்க?” தரம் தாழ்ந்து வீசிய வார்த்தைகளைவிட கடைசியில் இளக்காரமான அவனது பார்வையில் மொத்தமாக சிறகு உடைந்து வெறுமனே உட்கார்ந்துவிட்டாள். அவனின் மீது வைத்திருந்த மலையளவு நம்பிக்கையும் சிதறி மண்ணாக மாறியது.

‘அடுத்து என்ன பேசுவது என சிந்திக்கவும் தோன்றாமல் மூளை வேலை நிறுத்தத்தை துவங்கியது’

அகிலன் அவள் மீது காட்டிய அக்கறை, நேர்மையான பார்வை, அவனின் சிறு தொடுகை அனைத்தையும் மனம் விரும்பியது. ஆண்மையின் பரிவை இந்த சில நாட்களில் காண்பித்துவிட்டு, அதில் பேதை மனம் ஏங்க தொடங்கையில் அவளை உதாசீனப்படுத்திய வார்த்தைகளை கிரகித்துக் கொள்ள இயலவில்லை அவளால்.

வெறித்துப் பார்த்தவாறே இருந்தவளுக்கு இன்னும் அவன் பேசியதை நம்பவும் இயலவில்லை, ஏதாவது பேசிய ஆக வேண்டும் என குரலை செருமியவளுக்கு நெஞ்சில் ஏறிய பாரம் குரலை அடைக்க வெறுமனே எழுந்தவள், அவன் கன்னத்தில் ஆழமாக இதழ் ஒற்றியெடுத்தாள்.

“இதுக்கும் ஏதாவது... வார்த்தைய தயவு செஞ்சு விட்றாத ப்..ளிஸ்..” கண்களை மூடியவளின் விழிகளில் கண்ணீர் கரை புரண்டது. அவனிடம் பேசி இருக்கலாம் இந்த கன்டிஷன் எதுவும் வேண்டாம் என்று, ஆனால் அப்படி அவனிடம் இறங்கிப் போக மனம் முரண்டியது. சில நாட்கள் பழகிய இவனுக்காக தான் கடந்து வந்த வழித்தடத்தை மறக்கவேண்டுமா! பிரிதுயர் சந்திக்கையில் அந்த வலி எத்தனை கொடியது என்றும் அதற்கு மருந்து இட வேண்டியது அவசியம் எனவும் உணர்வாள்.

வீட்டிற்கு திரும்பியவன், “சே..ச்..சே..” என கையை சுவற்றில் குத்திவிட்டே ஓய்ந்தான். அவளின் மனம் கொய்யும் பார்வை வீச்சு அத்தனை குற்றஉணர்ச்சியைக் கொடுத்தது. அவளைவிட்டு பிரிந்ததால் அல்ல! பேசிய வார்த்தைகளுக்காக.. கொட்டிவிட்டான்.. அள்ளமுடியாமல் திணருகிறான். ஆம்.. எதற்கும் இவன் பொருக்கவில்லை. ஆக்கவும் பொருக்கவில்லை.. ஆறவும் பொருமையில்லை.. பார்த்தவுடனேயே காதலை சொன்னான்.. சில தினங்களே கடந்த காதலை வெட்டியும் விட்டான். தனது நிலையை விளக்கி சாஸ்ருதியுடன் காதலை ஆயுள் முழுவதும் நீட்டியிருக்கலாம், அதற்கும் அவகாசம் தர நினைக்கவில்லை.

அப்ஸராவை விடுத்து எதையும் யோசிக்கவும் மாட்டான், யோசித்தாலும் அவள் பக்கமே நியாய தராசை நகற்றும் வித்தைக்காரன். தன் அம்மா, தங்கை என்று வந்தாலுமே அபியின் அரணாக நிற்பவன். திடீர் காதலியாக எண்ணும் சாஸ்ருதிக்காக தன் தோழியின் வாழ்க்கையில் எந்த வில்லங்கத்தையும் இழுத்துவிட மாட்டான்.

அன்று விஸ்வா வீட்டில் அவன் அம்மாவை சந்தித்துவிட்டு வந்த இரண்டு நாட்களும் எந்த தொய்வுமின்றி கடத்தியவள். இவளை சந்திக்க வந்த விஸ்வாவைக் கண்டபின் காதலற்று போனேனோ..! என சிந்திக்கத் தொடங்கினாள்.

காதலின் வாக்கியமே இரு உள்ளங்களும் உற்றவரோடு சேர்வதுதானே..! எங்கு தன் காதல் பெற்றோரிடம் இருந்து தன்னை பிரித்துவிடுமோ என்ற ஐயத்தின் அறிசுவடி அறியாதவளுக்கு, அந்த அச்சத்தைக் கற்றுத் தர துவங்கியது காலம்!

சுமித்ரா மீது எந்த சுணக்கமும் வரவில்லை, ஒரு மகனைப் பெற்ற தாயின் நடைமுறையில் உள்ள எதிர்பார்ப்பே என முதலில் யோசித்த மனம், மறுபக்கம் அவர் பேசியதை நினைத்துப் பார்த்து நொந்து போகவும் செய்தது.

அது எப்படி? தன் மகனை முன்நிறுத்தி என் உணர்வுகளை அவரின் கட்டுக்குள் வைக்க இயலும்.. பொம்மையை காண்பித்து சிறுமியை ஏமாற்றி தூங்கவைப்பது போல், எனது விருப்பு, வெறுப்புகளை மறந்து தன்னவனை பொம்மையாகப் பாவித்து என் உணர்வுகளை உறங்க வைக்க இயலுமா..?

அன்றோடு விஸ்வாவின் சந்திப்பை முற்றிலுமாய் தவிர்த்தாள், அவளை புண்படுத்த விரும்பாதவன் மனதில் ஆயிரம் ஏக்கங்கள் இருந்தாலும் விலகி இருந்து கண்காணிக்க தொடங்கினான். அவள் செல்லும் கோவிலுக்கு சென்று காத்திருப்பான், அவனின் வருகை அறிந்தவள் வேறு கோவிலுக்கு பாதையை மாற்றுவாள். மனதிசையை மாற்றாமல் எப்பாதை வழியாக சென்றாலும் அடுத்த நிலைக்கு செல்ல இயலாது என்பதை அவனின் கண்மணி மறந்தேவிட்டாள்.

விஸ்வாவின் வதங்கிய தோற்றத்தைக் காணும் போதெல்லாம் அவளின் தவிப்பான புலம்பல் அகிலனிடம் வந்தே முடியும்.

‘இவங்க பையன கலாச்சாரம் தெரிஞ்சு ஒழுக்கமா வளர்த்து இருக்கலாம். அதுக்காக கலாச்சாரத்தில முங்கிப் போனவங்க மட்டுமே ஒழுக்கமானவங்களா இருக்கணும்னு அவசியமில்லையே! ஆண், பெண் நட்புல என்ன கலாச்சார சீர்கேட பார்த்துட்டாங்க. இவங்க கலாச்சாரத்துக்கு கொடுக்கிற டெபினிஷன்படி பார்த்தா நான் ஒழுக்கம் இல்லாத பொண்ணா இருக்கேனா? இப்படி பேச்சல்லாம் வரக்கூடாதுனு அம்மா என்கிட்ட இப்படி இரு, அப்படி பண்ணாதன்னு சொல்லிக்கிட்டே இருந்தங்களா...? எனக்குப் பிடிச்ச வேலை செய்யுறேன், விருப்பமான உடையை போட்டுக்கிறேன், இப்படி எனக்கு பிடிச்ச மாதிரி இருக்கவே கூடாதா..?

இதுல எங்க விஸ்வாக்கு தகுந்த பொண்ணா நான் இல்ல.. அவங்க நேரடியா சொல்லல அவ்வளவுதான். ஆனா விஸ்வா அம்மா பேசுன விதம் அவனுக்கு நான் பொருத்தமானவள இல்லைங்குறதுதான். நான் நல்லா பொண்ணு இல்லையாடா..!?’ அகிலன் தோள் சாய்ந்து கலங்குபவளை மீட்கும் வழி அறியாமல், இதற்கு மேலும் அபிக்கு எந்த இடையூரும் வராமல் இருக்க சாஸ்ருதியின் காதல் நிபந்தனையை முடிவுக்கு கொண்டு வந்தான்.

அப்ஸராவின் சங்கடம் உணர்ந்தாலும், அவளைக் காண ஏங்கும் விஸ்வாவிற்காக கோவிலில் சந்திக்க வைக்க ஏற்பாடு செய்திருந்தான். அகிலனின் போக்கைக் கண்டவள் கோவிலின் திசை மாற்றினாள். விஸ்வாவிடம் இருந்து விலகி இருக்க முடிவு செய்தாள். ஏனெனில் அவளின் மனப்போக்கை அவளே புரிந்து கொள்ளாத போது எங்கனம் காதலைக் காக்க போராடுவாள். அவளின் பிடிவாதத்தையும் மீறி வீட்டில் சந்திக்க வந்தவனை விரட்டத் தோன்றாமல், அவனை சந்தித்துவிட்ட திருப்தியில் நிறைவான தன் காதலை மெச்சிக் கொண்டாள்.



‘உன் நினைவில் பனியாக

உருகும் இதயத்தை,

வேதியல் மாற்றம் நிகழ்த்தி

திடமாக மாற்று,

மறுப்பு சொன்னால்

நீராக மாறி

எங்கனம் செல்வேன்..!’

 




Rishaba

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Jan 8, 2021
Messages
478
Reaction score
695
Location
Theni

AkilaMathan

முதலமைச்சர்
Joined
Feb 27, 2018
Messages
9,552
Reaction score
8,875
Location
Chennai

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top