நாங்௧லாம் அப்பவே அப்படி - 1

karthika manoharan

Author
Author
SM Exclusive Author
#1
ஹாய்..ஹாய்.. எங்கடா கதை எழுதறேன்னு சொன்னாளே இன்னும் காணலயேன்னு தேடியிருக்க மாட்டீங்கதான்..ஆனாலும் நான் உண்மைய சொல்லித்தான் ஆகனும்...காலுல சக்கரத்த கட்டி விட்டுட்டாங்க...அதனால என்னால நிக்க முடியல ...நிக்க முடியாததால எழுத முடியல...இப்பதான் நானே வலுக்கட்டாயமா நின்னு இதை எழுதினேன்....சோ சின்ன புள்ளைய மன்னிச்சு...இதோ எபி


"நாங்கலாம் அப்பவே அப்படி"


பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் பெங்களூரு "கெம்பே கவுடா" விமான நிலையம். பலவகையான மனிதர்களை தனக்குள் இருத்தி வைத்திருந்த அந்த பிரமாண்ட கட்டிடத்தில், அடிப்பகுதியில் ஆர்ப்பரித்தாலும் மேற்பகுதியில் தன்னை அமைதியாக காட்டிக்கொள்ளும் ஆழியை போல மனதுக்குள் பல எண்ணங்கள் படையெடுத்தாலும் அமைதியாக அமர்ந்திருந்தார் அஞ்சுகம் பாட்டி. பழுத்த பழம் என்பார்களே அதுபோல தோற்றம், வெள்ளிக்கம்பியாய் மினுமினுத்த கூந்தலை அள்ளி கொண்டையிட்டு, தங்க பிரேமிட்ட மூக்கு கண்ணாடி அதற்குள் இருவிழிகள் எவரையும் துல்லியமாக எடைபோட்டு விடும் தீட்சண்யத்தோடு. எளிமையான காஞ்சி பட்டுடுத்தி ஒரு மகாராணியை போல அமர்ந்திருந்தவரை பார்ப்பவர்கள் நின்று அவரிடம் ஒரு சிறு புன்னகையாவது பூத்து செல்வர்.


ஆம் அவர் மகாராணியாகதான் வாழ்ந்தார் சிறு கவலை கூட இல்லாமல் அவர் கணவர் குமாரபூபதி இருக்கும் வரை.


ஐந்தாண்டுகளுக்கு முன் மகன் பிரபாகர் மருமகள் காஞ்சனாவுடன் நெருங்கிய நண்பரின் இல்ல திருமணத்திற்க்கு சென்ற கணவரை எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்தால் துணியில் சுற்றப்பட்டு பொட்டலமாகதான் கொண்டு வந்தனர். மகன் , மருமகள் நிலமையோ இன்னும் மோசம் சுரண்டிதான் கொண்டுவந்தனர்.


இந்த கோர சம்பவத்தை கேள்விபட்ட பின்னும் தடங்கலில்லாமல் துடித்து கொண்டிருக்கு தன் இதயம் கூட அவருக்கு பாரமாகதான் இருத்தது...கிட்டத்தட்ட மரத்து போன நிலை.இவையனைத்தும் தன் பேரனை காணும் வரை மட்டுமே.


அமெரிக்காவின் டெக்ஸாஸ் யுனிவர்சிட்டியில் தன் MBA மாஸ்டர் டிகிரி படித்துக் கொண்டிருந்தவன் இந்த பேரிழப்பை கேட்டதும் விரைந்து வந்திருந்தான். குடும்பத்தின் மேல் உயிரையே வைத்திருப்பவனாயிற்றே..அவனை கண்டதும்தான் தன் நிலை உணர்ந்து அவனுக்காக தான் செய்ய வேண்டிய கடமையை எண்ணி தன் துக்கத்திலிருந்து மெல்ல மெல்ல மீண்டார்.


இதோ இப்பொழுது இந்த பயணம் கூட அவனுக்காகதான். அவனை நல்ல மனம் கொண்ட மனிதர்களிடத்தில் சேர்த்து விட வேண்டும் என்ற எண்ணம் சமீப காலமாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.


காரணம் இங்கிருக்கும் குள்ளநரிகூட்டம் பற்றி அவர் நன்கறிவார். பேரனின் மேல் நம்பிக்கையில்லாமல் இல்லை. எத்தனுக்கும் எத்தன் அவன், படிப்பை பாதியில் விட்டு வந்தவன் அதன் பிறகு " "ஏகேபி" நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றான், அதிலிருந்து இதுவரை ஏற்றம்.. ஏற்றம் ..ஏற்றம் மட்டுமே.


எதற்கும் அஞ்சாதவன்தான். ஆனால் நேர்நின்று தாக்கும் எதிரிகள் அல்லவே இவர்கள்... பாசத்தை கொண்டு பாழாக்க நினைக்கும் குள்ளநரி கூட்டம். இவற்றையெல்லாம் தன் மனதில் போட்டு அலட்டிக்கொண்டிருந்தவர் கண்களில் மெல்லிய கலக்கம் , சிறு தேடல் என நுழைவாயிலை பார்த்தவாறே அமர்ந்திருந்தார்.


இன்னும் அரைமணி நேரத்தில் உள்ளே செல்ல அறிவிப்பு வந்துவிடும் என நினைத்துக் கொண்டிருக்கும் போதே அட்டகாசமாய் உள்ளே நுழைந்தான் அவன். ஆறடி ஓரங்குல உயர ஆணழகன், புலியின் வேட்டைப் பார்வையை ஒத்த கூர்மையான விழிகள் தன் தேடலை தொடங்க, ஆழ்கடலின் நீல வண்ணத்தில் டீசர்ட் அணிந்திருந்தவன் தன் ஜீன்ஸ் பேண்ட்டின் பாக்கெட்டில் வலது கையை நுழைத்தவாறு மாடல் போல அம்சமாய் இருந்தான். பரந்து விரிந்த "ஏகேபி" நிறுவனத்தின் வாரிசு "கௌதம் பிரபாகர்".


அந்த கோர விபத்திற்க்கு பிறகு எஞ்சியிருக்கும் தன் ஒரே உறவான பாட்டியின் மீது இன்னும் அதிக பாசம் அவனுக்கு.இந்த உலகில் அவன் பணிவது என்றால் அது அவர் ஒருத்தருக்கு மட்டுமே. மற்றபடி அவன் தாத்தாவை போல அனைவருக்கும் சிம்மசொப்பனம்.


இதோ இந்த பயணத்திற்க்கு ஒப்புக்கொண்டு வருவது கூட அவர் வருத்தப்படகூடாது என்ற ஒரே காரணம் தான். அவர் ஊருக்கு அழைத்த போது வரவே முடியாது என மறுத்திருந்தான்.


இன்று காலை பரபரப்பாக தன் வழக்கமான அலுவல் உடை அணிந்து கையில் விலையுயரந்த கைக்கடிகாரத்தை கட்டியவாறே மாடிப்படிகளை தன் வேக நடையுடன் கடந்து வந்துகொண்டிருந்த பேரனை பார்த்த அஞ்சுகம் பாட்டி அவனின் கம்பீரத்தை கண்டு எப்போதும் போல இம்முறையும் ரசித்து பார்த்திருந்தார்.


அவரின் பார்வையை உணர்ந்தவனாக மெல்லிய புன்னகையுடனே இறங்கி வந்தான். அவன் அருகில் வரவும் தன் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு வேறு பக்கம் திரும்பி விட்டார். இதை அறிந்தவன் இன்னும் அதிகமாக புன்னகைத்தவாறே


" குட் மார்னிங் அஞ்சு டார்லிங்"


அவர் வேறு பக்கம் பார்த்துக்கொண்டிருக்க, அருகில் அமர்ந்து அவர் தாடையை பற்றி திருப்பியவன்

"டார்லிங் சாப்டாச்சா"

என சிறு குழந்தையை கொஞ்சுவது போல பேச, அவன் கையை தட்டிவிட்டவர் எழுந்து தன் அறைக்கு செல்ல முயல, அவருக்கு முன் சென்று தடுத்தவாறு நின்றவன்


"டார்லிங் இது சரியில்ல, நீங்கதான் என்னை தனியா விட்டு ஊருக்கு போறீங்க.. நியாயமா பார்த்தா நான்தான் இப்படி கோவிச்சுக்கனும்"


என்று அவரை மாதிரியே முகத்தை உர்ரென்று வைக்க அதை பார்த்த அஞ்சுகம் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட்டார்.

அவன் கன்னத்தை பிடித்து இழுத்தவர் "படவா! உன்கிட்ட கொஞ்ச நேரமாவது கோபமா இருக்க முடியுதா?" என சலித்து கொண்டவரிடம்.


"ம்ம் .. இப்பதான் என்னோட டார்லிங் மாதிரி இருக்கீங்க. எதுக்கு இந்த கோபம் உங்க அண்ணன் வீட்டுக்கு போறீங்க.. அங்க விசேசத்துல கலந்துகிட்டு பத்து நாள்ள இங்க வரப்போறீங்க அப்பறம் என்ன? முகத்தை அண்டார்டிகா வரை நீட்டி வச்சிருக்கீங்க..."


அதத்தான் நானும் சொல்றேன் கண்ணா நீயும் என்கூட வாடா! இங்க தனியாதான இருப்ப, அங்க தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, அம்மு, அரசு இவங்கலாம் இருக்காங்க அவங்களை பார்த்தால் உனக்கும் ஒரு மாறுதலா இருக்கும்.


"நான் அங்க வந்துட்டா இங்க பிஸ்னஸ யாரு பாத்துக்குவாங்க அஞ்சு, சுந்தரேசன் அங்கிள் பாவம் அவரால சமாளிக்க முடியாது.அதுவுமில்லாம நாளைக்கு மறுநாள் முக்கியமான பிஸ்னஸ் டீலிங் இருக்கு..அது மட்டும் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா பலகோடி ருபாய் லாபம் வரும்...அப்பதான் வொர்க்கர்ஸ்க்கும் போனஸ் கொடுக்க முடியும். அதனால நீங்க மட்டும் போய்ட்டு வாங்க" என்று கூறியவன் ஆபீஸிற்க்கு கிளம்பி விட்டான்.


ஆபீஸிற்க்கு வந்துவிட்டானே ஒழிய அவனால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை...பாட்டியின் சோகமான முகமே ஞாபகம் வந்தது...


தாத்தா இறந்த பின்பு தன் அண்ணன் வீட்டை தவிர எங்கும் சென்றதில்லை... அவருக்கு நேரம் ஒதுக்க தவறுகிறோமோ என்று எண்ணியவனின் மனதில் அவரது கலங்கிய முகமே தெரிய, தன் முடிவை மாற்றி தன் ஜி.எம் சுந்தரேசன் அங்கிளை அழைத்தவன் தான் பத்து நாட்கள் இங்கு இருக்க மாட்டேன் என்றும், கணிணி மூலம் தன் வேலைகளை பார்ப்பதாக கூறி மீதி அவசரமாக முடிக்க வேண்டிய வேலைகளை முடிக்குமாறு கூறினான்.


தன் பாட்டி செல்லும் விமானத்திலேயே இரண்டு டிக்கெட்டுகளை பதிவு செய்தவன் ,
பாட்டிம்மாவிற்க்கு சர்ப்ரைஸ்ஸாக இருக்கட்டும் என்று அவர் வீட்டை விட்டு வெளியேறிய பின் வீட்டிற்க்கு சென்றவன் அவசர அவசரமாக கிளம்பி வந்தான்.
 
Last edited:

karthika manoharan

Author
Author
SM Exclusive Author
#2
இங்கு வந்து அவர் எங்கே என தேடியவனின் பார்வை வட்டத்தில் அவர் தென்படவும் இதழ்கடையில் தோன்றிய புன்னகையுடன் தன் பாட்டிம்மாவை நோக்கி வந்தான் கௌதம்.


"ஹாய் அஞ்சு டார்லிங்"


என அவர் அருகில் அமர்ந்தான். அவனை நோக்கி ஒரு அணல் பார்வையை வீசியவர் மீண்டும் வேறு பக்கம் திரும்பி கொண்டார். (கோபமாக இருக்கிறாராம்.)

அதைக் கண்டு முகத்தை பாவமாக வைத்தவன்

"ம்ச்...நானும் உங்ககூட வரலாம்னு நினைச்சேன்...நான் வர்றது புடிக்கல போல...நான் கெளம்பறேன் "

என்று எழ எத்தனிக்க ...அவன் கூறிய செய்தியில் ஆனந்த அதிர்ச்சியடைந்தவர்அவன் கையை பிடித்து"கௌதம் கண்ணா நீயும் வரியா?"

என ஆர்ப்பரிக்க ..அவரது மகிழ்ச்சியை கண்டு விளையாட்டை கைவிட்டவன்

"ஆமா அஞ்சு டார்லிங்... நானும் வரேன்..இப்போ ஹேப்பியா."


அதில் மகிழ்ந்தவர் அவனை வம்பிழுக்கும் எண்ணத்தோடு, அவனை தான்டி யோசனையாக பார்த்தவர் அவனை மீண்டும் பார்க்க

" இப்ப என்ன?"


"இல்ல உன் ட்ரெஸ் எதுவும் எடுத்து வரலயா? அதான் அங்க வந்து கோவணத்த கட்டிப்பியோன்னு பார்த்தேன்"


" என்ன கோவணமா? அந்த ட்ரெஸ் எங்க கிடைக்கும், அங்க அதான் போட்டுக்கனுமா?"


என பல கேள்விகளை முன்வைக்க அவனை அந்த கோலத்தில் நினைத்து பார்த்தவர் வாய்விட்டு சிரித்தார்.


அவர் சிரிப்பதை வைத்து ஏதோ விவகாரமான விசயம் போல என நினைத்தவன்...வெகு நாளைக்கு பின்னான அவரது புன்னகையில் தானும் மகிழ்ந்தவன் , அப்போதுதான் ஞாபகம் வந்தவனாக தன் பின்னால் வந்த பி.ஏ. ராகேஷ் எங்கே என தேடினான்.


ராகேஷ் இவனின் அந்தரங்க செயலாளர். மூன்று வருடங்களாக அந்த பணியை சீரும், சிறப்புமாக செம்மையான திட்டுகளோடு செய்து வருகிறான். கிட்டத்தட்ட கௌதமின் வயதுதான் அவனுக்கும். அவன் இருக்குமிடம் தானாகவே கலகலப்பாக மாறிவிடும்.


ராகேஷ் எங்கே என தேடிய கௌதமின் கண்களில் வெளிநாட்டு பெண்மனியுடன் கடலை வேகவைத்துக் கொண்டிருந்தவனே பட்டான்.


அதை கண்டு கடுப்பானவன் ஒரு நிமிஷம் அஞ்சு என வேகநடைகளால் அவனிடத்தை நெருங்கியவன் பல்லைக் கடித்துக் கொண்டு அவன் தோள்களில் தட்ட அதை கண்டுகொள்ளாமல் தன் கடலை வறுக்கும் பணியில் மும்முரமாக இருந்தவனை

"ராகேஷ்"

என்ற அழுத்தமான அழைப்பில்

"ஐயோ!! பாஸ்"

என திடுக்கிட்டு திரும்பியவன்.கண்ணில் கொலைவெறியோடு நின்றிருந்த கௌதமை கண்டதும் தன் கடலை வியாபாரத்தை கைவிட்டவனாக,

"பாஸ் இங்க என்ன பண்றீங்க...பாட்டிமா மேடத்தை பாத்துட்டீங்களா? இல்லையா? என்ன பாஸ் இவ்ளோ கேர்லெஸ்ஸா இருக்கீங்க ?


என மூச்சு விடாமல் படபடத்தவனிடம்...அவங்கள பார்த்து அரைமணி நேரமாகுது.... என பல்லைக்கடித்தவன் அவனையும் அங்கிருந்த வெளிநாட்டு பெண்மணியையும் சுட்டிக் காட்டி


"சார் இங்க என்ன பண்றீங்க?"

என கிண்டலாக வினவ சில நொடிகள் திருதிருவென முழித்தவன்

"இன்க்ரெடிபிள் இந்தியா" பாஸ்

"வாட்"

அதான் பாஸ் சுற்றுலாக்கு வர பயணிகளுக்கு நம்மாள முடிந்த உதவிய செய்யனும் ...என சுற்றுலாத்துறையை பற்றி ஏதேதோ உளறி கிண்டி கிளறி மூடினான்.


அவன் என்ன கூறினான் என்று அவனை கேட்டால் அவனுக்கே தெரியாது. அவனது பதிலில் பல்லை கடித்துக்கொண்டு

" வாய்ல நல்லா வசந்தமா வருது..பாட்டி இருக்காங்களேன்னு பார்க்கிறேன், இதுக்கும் மேல எதாவது உளறி வச்ச சீட்டு கிழிஞ்சிடும் ஜாக்கிரதை!" என அடிக்குரலில் சீறினான்.அதைக் கேட்டு

" ஐயோ! பாஸ் எனக்கு இருக்கறது ஒரே சீட்டு அதை கிழிச்சிட்டா நான் என்ன பண்ணுவேன்"


என பின்னால் கையை வைத்து மறைத்தவனை கண்டு கடுப்பானவன்


"டேய் கைய எடுடா முன்ன.. நான் சொன்னது உன் வேலைய."

"ஸ்ஸப்பா இதுவா" என ஆசுவாசமடைந்தவன்

"அதுக்குதான் நானும் வெய்ட் பண்றேன் வேற எதாவது வேலை கிடைச்சதும் நானே போயிட போறேன், இல்லைனா ராகேஷ் ராகேஷ்னு கத்தியே என் காதை கே காதா மாத்திடுவாறு..." என முணுமுணுத்தவனை கண்டு


"அங்க என்ன சத்தம் "

"நோ..பாஸ் இனிமே உங்க பேச்சை தட்டாம கேக்கனும்னு எனக்கு நானே சொல்லிகிட்டேன்" என பல்லை காட்டியவனிடம்..

"சொல்லு ஆனா செஞ்சிடாத... லக்கேஜ் எங்க மேன்"


"இதோ பாஸ்" என்று இழுத்த வேகத்தில் கௌதமின் காலிலேயே இடிக்க

" ஓ.. காட் "என காலை பிடித்தவன் அவனை முறைக்க, அவனது முறைப்பில் பயந்தவன் "பாட்டிமா" என்றவாறு அஞ்சுகம் பாட்டியை நோக்கி சென்றான்.


அஞ்சுகம் பாட்டி ராகேஷை தன் சொந்த பேரனாகவே பாசமாக நடத்துவார். யாருமில்லாத அவனும் இந்த இரு கிளிகளின் கூட்டில் சேர்ந்து கொண்டான்.


அதனால் தான் இந்த பயணத்தில் அவனையும் இனைத்து கொண்டான் கௌதம். இதுவரை அவன் செய்த சேட்டைகளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தவர் அவன் அருகில் வரவும்


"வாப்பா ராகேஷ் ..எங்க இப்பலாம் வீட்டு பக்கம் வரவே மாட்டிக்கற" அன நலம் விசாரிக்க


"என்ன பண்றது பாட்டிமா, என் பாஸ் அப்ப்படி..அதான் நான் இப்ப்படி" என சோகமாக கூறியவனின் காதை பிடித்து திருகியவர்

"படவா என் பேரனை பற்றி என்கிட்டயே கிண்டல் பன்றயா!!"


"ஆஆஆ...விடுங்க பாட்டிமா வலிக்குது. "

என அஞ்சுகம் பாட்டியின் சிரிப்போடும், ராகேஷ் அவரிடம் வம்பிழுத்துக்கொண்டும், கௌதமிடம் திட்டுகளை வாங்கி கொண்டும் அந்த விமான பயணம் இனிதே தொடங்கியது.
 
Last edited:
#4
:D :p :D
உங்களுடைய "நாங்கலாம்
அப்பவே அப்படி"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
கார்த்திகா மனோகரன் டியர்
 
Last edited:

Sponsored

Advertisements

Top