• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பூர்வ - ஜென்மம் - episode 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

rekhamuralinathan

புதிய முகம்
Joined
Jan 30, 2020
Messages
14
Reaction score
20
Location
Chennai
தனஞ்செயனுக்கு அப்படி இப்படி என்று ஒரு வாரம் ஆகிவிட்டது. கிளம்புவதற்கு தந்தையிடம் கூறிவிடலாம் என்று நினைத்தான். கூறினால் உடனடியாக பார்த்துபேசிவிடலாம் என்பார். அதனால் தங்கையின் திருமணம் முடியட்டும் பிறகு பார்க்கலாம் என கிளம்ப தயாரானான். கிளம்பியபிறகு ரித்திக்காவிற்கு பேசினான். சென்னை வந்தவுடன் தெரிவிப்பதாகவும் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலின் பெயரை சொல்லி அங்கு சந்திக்க விரும்புவதாகவும் கூறினான். அவளுக்கும் கோபியை தனஞ்செயனுக்கு அறிமுகப்படுத்த ஏற்ற இடம் என்று ஒத்து கொண்டாள்.


ஐந்து நட்சத்திர ஹோட்டல் - Le Royal Meridian

தனஞ்செயன் lawn area வுக்கு அருகிலிருந்த டேபிளை reserve செய்திருந்தான். இடம் அதிக வெளிச்சமும் இல்லாமல் இருட்டும் இல்லாமல் இருந்தது.

ரித்திகாவை எதிர்பார்த்து காத்திருந்தான். அவளும் வந்தாள்.

ஆகாய வண்ண நீலத்தில் இளம் பிங்க் நிற கோடுகள் ஆங்காங்கே வேயப்பட்ட சில்க் சாரீ அணிந்திருந்தாள். அணிகலன்கள் அதே நிற கலவையில் களிமண்ணால் செய்யப்பட்டவை. முடியை விரித்து விட்டிருந்தாள். மொத்தத்தில் அந்த இடத்திற்கு ஏற்ற அலங்காரம்.

கூடவே கோபியும் வந்திருந்தான்

அவனும் எவ்வளவோ சொல்லிப்பார்த்துவிட்டான். உடல்நலம் சரியில்லை, அலுவலக வேலை இருக்கிறது என்று. எதையும் அவள் காது கொடுத்து கேட்பதாக இல்லை. வேறு வழியின்றி வந்திருக்கிறான். தனஞ்செயனை பார்க்கும் வரை விட்டால் ஓடிவிடலாம் என்று இருந்தவன். பார்த்த பிறகு எதையும் வெளிக்காட்டிக்கொள்ள விரும்பவில்லை.

தனஞ்செயனுக்கு தனிமையில் அவளோடு பேச வேண்டும். இருவருக்கும் இடையே உள்ள வெற்றிடத்தை போக்கவேண்டும் என்று வந்தவனுக்கு கோபி வந்தது கடுப்பை கிளப்பியது. ரித்திகா கோபிக்கும் தனஞ்செயனுக்கும் பரஸ்பரம் அறிமுகம் செய்து வைத்தாள். உணவு பட்டியலை பார்த்து தேவையானவற்றை ஆர்டர் செய்தனர். உணவும் வந்தது. உண்ணவும் ஆரம்பித்தனர். யாரும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. ரித்திகாவே ஆரம்பித்தாள் அந்த ஹோட்டல் பற்றியும் அதனுடைய வரலாறு பற்றியும்.

தனஞ்செயனுக்கு தாங்க முடியாத கோபம். ஊரிலிருந்து இத்தனை கிலோமீட்டர் பயணம் செய்து இவ்வளவு பெரிய ஹோட்டலில் தேடி பிடித்து பதிந்தது இந்த கதையை கேட்கவா என்று இருந்தது. சட்டென்று எழுந்து இப்போது வந்துவிடுவதாக சொல்லி சென்றான். Corridor இல் கொஞ்ச நேரம் உலவி கொண்டிருந்துவிட்டு அங்கு இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து அவர்கள் இருவரையும் பார்க்க ஆரம்பித்தான்.

அவர்கள் இருவரும் சிரித்து பேசிக்கொண்டு சாப்பிட்டனர். தான் அங்கு இருக்கும் வரை அவர்களிடம் இருந்த அமைதி இப்போது இல்லை. அதை பார்த்து ரித்திகா இப்படி தன்னுடன் எப்போது பேசுவாள். இப்போது கோபம் மறைந்து ஏக்கம் பிறந்தது. எழுந்து சென்று அவர்களுடன் அமர்ந்தான். மறுபடி அமைதி நிலவியது. கோபி தனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வரவும் அவர்களிடம் சொல்லிக்கொண்டு எழுந்து சென்றான்.


தனஞ்செயன் நேரடியாகவே கேட்டான். ரித்திகா என்னை உனக்கு பிடித்திருக்கிறதா. ரித்திகா சொன்னாள் இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது உண்மையை சொன்னால் நீங்களும் நானும் ஒருவரை பற்றி ஒருவர் பேசியது கிடையாது. பேசும் சந்தர்ப்பமும் ஏற்படவில்லை. ஆனால் உங்களை பார்க்கும்போது, உங்களுடன் பேசும்போது ஏற்கனவே பழகிய உணர்வு, உங்களை தவிர வேறு யாரையும் வாழ்க்கை துணையாக நினைக்கவும் முடியவில்லை. ஆனால் உங்களுடைய பொது வாழ்க்கை நமக்கான வாழ்வை வாழவிடுமா என தெரியவில்லை என்றாள்.

அவள் பேசுவதை கேட்டதும் அவன் மனம் உற்சாகமும் அதே நேரம் யோசனையிலும் ஆழ்ந்தது. அவள் சொல்வது தவறில்லையே.

ரித்திகா மேலும் சொன்னாள். எது எப்படி இருந்தாலும் உங்களை தவிர வேறு ஒருவருடன் என் வாழ்க்கை பயணிக்க முடியாது என்றாள். அவனுக்கு புரிந்தது குறை தன் பக்கம் தான். நிவர்த்தி செய்யவேண்டும் என்று.
கோபி வந்தான். உணவு உண்டு விட்டனர். இருவரும் கொஞ்சம் சீரியசாக பேசுவது போல் தெரிந்தது. உடனே தான் காரில் வெயிட் பண்ணுவதாக சொல்லிவிட்டு சென்றான். தனஞ்செயன் தான் எடுத்துவந்த புடவையை தயங்கி தயங்கி கொடுத்தான். தங்கையின் நிச்சயத்திற்கு புடவை எடுக்கும் அவளுக்கும் எடுத்ததாக கூறினான். அவளும் பெற்று கொண்டாள். புடவையும் அழகாக இருந்தது. சாக்லேட் நிறத்தில் மிதமான ஜரிகை அலங்காரத்துடன்.

இருவரும் கிளம்பினர். வெளியே வந்து வழியனுப்ப வேண்டும் என்று மனது துடித்தாலும் சூழ்நிலை தடுத்தது. அவன் வெளியே வந்ததும் ஹோட்டல் சிப்பந்தி ஓடி வந்து காரை பார்க்கிங்கில் இருந்து எடுத்து வர சென்றான்.ரித்திகா வந்து கோபியின் காரில் ஏறிக்கொண்டாள். புடவையை கோபியிடம் காண்பித்தாள். அவனும் பேருக்கு பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்றான். சிறிது நேரம் இருவரும் பேசவில்லை. அவரவர் உலகில் உலவி கொண்டிருந்தனர்.

கோபியே ஆரம்பித்தான். என்ன முடிவெடுத்தீர்கள் என்று. கேள்வியே அபத்தமாகத்தான் பட்டது. புடவை வாங்கிக்கொடுத்து இருக்கிறான். இவளும் மகிழ்ச்சியாக வாங்கி வந்திருக்கிறாள். இருந்தாலும் கேட்டான்.அவளும் அவனிடம் பேசியதை அப்படியே சொன்னாள். அதற்கு பிறகு இருவரும் இந்த விஷயத்தை பற்றி பேசவில்லை. நாளை chief பார்க்கப்போவதாக முடிவு செய்திருந்தனர். ரித்திகா வீடுவந்ததும் இறங்கி கொண்டாள். தாயிடம் தான் வெளியே சாப்பிட்டுவிட்டு வந்ததாக கூறிவிட்டு மாடியிலிருந்து தன் அறைக்கு சென்றாள்.
 




Advertisements

Latest Episodes

Advertisements

Top