• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

❤️MPK 16❤️

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Dhiya suramu

இணை அமைச்சர்
Author
Joined
Oct 19, 2022
Messages
950
Reaction score
1,290
Location
Banglore
eiJGM8914752.jpg

வணக்கம் தோழமைகளே,


இதோ 'மனம் பறித்த காரிகையே - 16'


படிச்சிட்டு கண்டிப்பா மறக்காம உங்களோட கருத்துகளை பகிர்ந்துக்கோங்க...


போன எபிக்கு 'லைட்ஸ் அண்ட் கமெண்ட்ஸ்' மூலம் நீங்க கொடுத்த அன்புக்கும் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🙏.


Happy reading😀📖

Ram's bedroom
IMG_20240429_110300.jpg
 




Dhiya suramu

இணை அமைச்சர்
Author
Joined
Oct 19, 2022
Messages
950
Reaction score
1,290
Location
Banglore
மனம்❤️16

“எல்லாரும் உட்காருங்க நான் பரிமாறேன்.” என்ற குணவதியை தடுத்த, சந்தியாவும் சாத்வியும் அவர்கள் பரிமாறுவதாக கூற,

“யாரும் பரிமாற வேணாம் அவங்க அவங்களுக்கு என்ன வேணுமோ அத நாமலே எடுத்து போட்டுக்கலாம் எல்லாரும் உட்காருங்க.” என ரத்தினசாமி கூறவும் அனைவருமே அமர்ந்தார்கள்.

அவரவருக்கு வேண்டியதை தட்டில் எடுத்து போட்டுக்கொண்டு அவரவர் இடத்தில் அமர்ந்து கொண்டார்கள்.

பின் மெதுவாக வரலட்சுமி தான் பேச துவங்கினார்.

“என்ன அஜ்ஜு ரெண்டு நாள் சந்தியா வீட்ல எப்படி போச்சு?” என வரலட்சுமி வினவ,

“நல்லா போச்சு அத்தை.” எனத் தன் மனைவியை கள்ள பார்வை பார்த்து வைத்தான் அர்ஜுன்.

அதில் சந்தியாவின் முகம் செம்மையுறப் பக்கத்தில் இருந்த சாத்வி,

“அண்ணி மூஞ்சி ரொம்ப ரெட் ஆகுது கண்ட்ரோல் கண்ட்ரோல்.” என எச்சரிக்கை,

சாத்வியின் அருகில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ராம்க்கு அது நன்றாகவே கேட்டது தன் மனைவியின் கிண்டல் பேச்சை நினைத்து தனக்குள்ளே சிரித்துக் கொண்டான்.

“உங்களுக்கு எப்படிப்பா போச்சு?” என ரத்தினசாமி கேட்க,

“ஆங் நல்ல போச்சு மாமா.” என்றான் ராம்.

“சாத்வி சந்தியா உங்க அத்தைங்க அவங்க பங்குக்கு நிறைய சொல்லி இருப்பாங்க. என்னோட பங்குக்கு நானும் சொல்லிக்கிறேன். இனிமே இது உங்க வீடு உங்களுக்கு என்ன வேணும்னாலும் யாரை வேணும்னாலும் கேட்கலாம். ரெண்டு குடும்பமும் எந்த அளவுக்கு ஒத்துமையா இருக்குன்றது உங்களுக்கு முதல் நாளே புரிஞ்சிருக்கும். இந்த ஒத்துமை என்னைக்கும் நிலைச்சி இருக்கணும். அது உங்க கையில தான் இருக்கு.” என ரத்தினசாமி கூற,

“கண்டிப்பா ப்பா இந்த ஒத்துமைய நாங்க என்னைக்கும் காப்பாத்துவோம் என்ன அண்ணி?” என ரத்தினசாமியிடம் ஆரம்பித்து சந்தியாவிடம் முடித்தாள் சாத்வி.

“ஆமா மாமா கண்டிப்பா அந்த ஒத்துமைய காப்பாத்துவோம் மாமா.” என சந்தியாவும் உறுதி கொடுக்க, அவருக்கு சந்தோஷமானது.

“அந்த ஒற்றுமை சமையலையே தெரியுது எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு எது யார் செஞ்சது?” என குணவதி கேட்க,

“பைனாப்பிள் கேசரி, அவியல், வத்த குழம்பு, வறுவல், தயிர் தாளிப்பு இதுதெல்லாம் சாத்விமா செஞ்சது. மத்ததெல்லாம் நான்.” என்றாள் சந்தியா.

“எல்லாமே ரொம்ப நல்லா இருக்குமா.” என பெரியவர்கள் அனைவரும் இருவரையும் பாராட்டினார்கள்.

சந்தியாவின் சமையலை ஏற்கனவே சாப்பிட்டு இருக்கிறான் ராம். தன் மனைவியின் சமையலை இதுதான் முதல் முறை சாப்பிடுகிறான். உண்மையிலேயே இவ்வளவு சுவையாக சமைப்பாள் என்றவன் எதிர்பார்க்கவில்லை. அங்கிருந்து அந்த மூன்று நாளும் சமையல் அறை பக்கம் கூட அவளை விடவில்லை அவள் தாய். எனவே, இவளுக்கு சமைக்க தெரியும் என்பதே இவனுக்கு அதிர்ச்சி என்றால் இவ்வளவு அற்புதமாக சமைப்பது அவனுக்கு ஆச்சரியமாக தான் இருந்தது.

“ராம்க்கு ஏத்த மாதிரி ஸ்வீட் செமையா பண்ணி இருக்கிற சாத்விமா.” என பாராட்டினார் குணவதி.

‘ஓ!அவருக்கு ஸ்வீட்னா ரொம்ப பிடிக்குமா.’ எனக் குறித்துக் கொண்டாள் அவள்.

ராமையும் அர்ஜுனையும் ரத்தினசாமி அழைக்க, நிமிர்ந்து அவரை பார்த்தார்கள் இருவரும்.

“உங்க நாலு பேருக்கும் பாலிக்கு டிக்கெட் ரெடி பண்ணியாச்சு. நாலு பேரும் நாளைக்கே ரெடியா இருங்க.” எனத் தகவல் கொடுத்தார் அவர்.

சந்தியா சாத்வியின் பாஸ்போர்ட் எல்லாம் முன்பே அவர்களின் பெற்றோரிடம் வாங்கி அனைத்தும் தயார் செய்திருந்தார் ரத்தினசாமி.

“இல்ல மாமா ரெண்டு பேருமே ஆபீஸ்க்கு போகலனா நல்லா இருக்காது அர்ஜுன் சந்தி போயிட்டு வரட்டும் நான் ஆபீஸ் பாத்துக்கறேன்.” என்றான் ராம்.

“எப்படி ஆச்சு இந்த ட்ரிப்புக்கு ராம் அண்ணாவை சம்மதிக்க வைங்க அப்பதான் அவங்களுக்குள்ள ஒரு நெருக்கம் வரும்.” என மெசேஜ் டைப் செய்து விட்டு அஜ்ஜுக்கு அதை பார்க்க சொல்லி, கண் காட்டினாள் சந்தியா.

அதைப் படித்தவுடன் அவளுக்கு கண்கள் மூடித் திறந்து சம்மதித்தவன் தன் தந்தையைப் பார்த்தான்.

“அவங்க வரலைன்னா நாங்களும் போலப்பா.” என்றான் அர்ஜுன் பட்டென,

“ஆமா மாமா அவங்க வரலைன்னா நாங்களும் போகல.” என சந்தியாவும் சேர்ந்து கொண்டாள்.

“அஜ்ஜு உனக்கு தெரியாதது இல்ல ஆபீஸ்ல ரெண்டு பேருமே இல்லன்னா எப்படிடா நீங்க போயிட்டு வாங்கடா.” என்றவனின் பேச்சில் நீங்க மட்டும் போகளேன் என்ற கெஞ்சில் இருந்தது.

“உங்களுக்கு முன்னாடி அந்த ஆபிஸ்ஸ பார்த்துட்டு இருந்தவன் நானு, அதெல்லாம் ஒரு வாரத்துக்கு எனக்கு பாத்துக்க தெரியும் நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க.” என அழுத்தமாக ரத்தினசாமி கூறவும் அனைவரும் வாய் மூடி கொண்டார்கள்.

அவன் சாத்வியை திரும்பி பார்க்க, அவள் எதுவும் சொல்லாமல் அமைதியாக அவனைப் பார்த்தாள்.

“டோன்ட் வோரி லேட் மீ டேக் கேர் ஆப் எவேரிதிங் நீ ஒழுங்கா சாப்டு.” என அவளுக்கு மெசேஜ் போட்டு அவளுக்கு கண்காட்டினான் ராம்.

அவளும் அதை பார்த்துவிட்டு, அவனுக்கு விழி மூடி திறந்து ஒழுங்காக சாப்பிட்டாள்.

சிறியவர்களின் இந்த மௌன பாஷை பெரியவர்கள் பார்க்காமல் இல்லை. இருந்தும் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். அவர்களுக்கு முகத்தைப் பார்த்தாலே தெரியாதா குடும்ப வாழ்க்கையை யார் துவங்கியிருக்கிறார்கள் யார் இன்னும் துவங்காமல் இருக்கிறார்கள் என்று. முக்கியமாக ராம் சாத்விக்காக தான் இந்த பயணமே. பெரியவர்களின் யோசனைப்படி சிறியவர்கள் அங்கே தங்கள் வாழ்க்கையை தொடங்குவார்களா?

உணவு முடிந்த பின் அவரவர் அவரவர் அறைக்கு சென்றார்கள். அறைக்குள் வந்தவுடன் அவசர அவசரமாக உடையை மாற்றிக்கொண்டு சமையலில் இறங்கி விட்டாள் சாத்வி. இப்பொழுதுதான் நிதானமாக அந்த அறையை ஆராய்ந்தாள் அவள்.

அதை இரண்டு பிரிவாக பிரித்து இருந்தார்கள் வெளியே வரவேற்பறை அதனுள் படுக்கையறை வரவேற்பறைக்கு வெளியே ஒரு பெரிய கதவு. அதற்கு நம்பர் லாக் பொருத்தப்பட்டிருந்தது. அந்த லாக்கின் நம்பரை இங்கே வருவதற்கு முன்பே அவளிடம் கூறி விட்டான் ராம்.

வரவேற்புரையில் ஒரு பெரிய சோபா, டிவி, மியூசிக் சிஸ்டம் என இருந்தது.

வெளியே வரவேற்பதிலேயே இரண்டு அறை கதவுகள் இருந்தது. அதை திறந்து போனால் ஒன்று உடை மாற்றுவதற்கு அங்கேதான் கப்போர்ட் இருந்தது. இவளுக்கு துணி வைக்க, புதிதாக ஒரு கப்போர்ட் செய்திருந்தார்கள். அதன்பின் அவளுக்கு தேவையான ஒப்பனை கண்ணாடியும் புதிதாக வீற்றிருந்தது. அங்கே தான் அவள் எடுத்து வந்த பெட்டிகள் அப்படியே இருந்தது. அங்கேயே குளியலறை இருந்தது. அதில் ரெஃப்ரெஷ் ஆகி அப்பொழுதைக்கு தேவையான உடையை மட்டும் பெட்டியில் இருந்து எடுத்த அணிந்து, கீழே சமைக்க சென்றிருந்தாள்.

அதன் அருகே இருந்த மற்றொரு அறையை ஆபீஸ் ரூம்மாக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தான் ராம்.

அதற்கு உள்ளே படுக்கையறை இப்பொழுதுதான் முதல் முதல் படுக்கை அறைக்குள் நுழைகிறாள். பார்ப்பதற்கு மிகவும் அமைதியாக நீலமும் பிரவுனும் கலந்து இருந்தது அந்த அறை. மேலே சீலிங்கில் ஒரு பெரிய லைட்டும் அதன் அருகிலேயே ஒரு நாலு டியூப் போல தொங்கும் லைட்டும் தொங்கிக் கொண்டிருந்தது. பார்க்க அழகாகவே இருந்தது அது. சுவரில் அழகாக டிசைன் செய்யப்பட்டிருந்தது. படுக்கையின் அருகிலேயே இரண்டு தொங்கும் ஊஞ்சல்.

“ஐ!ஊஞ்சல்” என ஆசையாய் சென்று அவள் ஊஞ்சலில் ஏறினாள்.

“பிடிச்சிருக்கா?” எனத் திடீரேன கேட்ட குரலில் திடுக்கிட்டாள் அவள்.

“எதுக்கு பயம் நம்ம ரூம்ல என்னை தவிர வேற யாரும் வர மாட்டாங்க. நம்ம வீட்டு ஆளுங்க வந்தா கூட ஹால்ல தான் உக்காந்து பேசுவாங்க. சோ நம்ம ரெண்டு பேர தவிர வேற யாரும் இந்த கும்க்கு வர மாட்டாங்க. இனி வீட்டு ஆளுக்க ஹால்க்கு கூட வரமாட்டாங்க எதுவா இருந்தாலும் கீழ பேசறதோட சரி.” என அவளை அமைதிப்படுத்தினான்.

“ஏன் இனிமே யாரும் வர மாட்டாங்க?” என முக்கியமான சந்தேகத்தை கேட்டாள் அவள்.

“ஏன்னா இத்தனை நாள் நான் பேச்சிலர் சோ எல்லாரும் வருவாங்க. இனி ஃபேமிலி மேன் ஆக்கிடாங்களே, அதனால கல்யாணத்துக்கு முன்னாடியே கூப்பிட்டு இனி நாங்க யாரும் ரூம் பக்கம் வர மாட்டோம் சொல்லிட்டாங்க.” என்றான் சிரித்துக் கொண்டே,

“ஃபேமிலி மேன் பெட்ரூம்குள்ள யாரும் வரக்கூடாதோ?”

“அப்படி எதுவும் ரூல்ஸ் எல்லாம் இல்ல அவங்களுக்கு என்னமோ நம்ம கொஞ்சி குலவிக்குவோம்னு நினைச்சுட்டுச் சொல்லி இருக்காங்க.” என்றான்.

“என்ன?” என விழித்தாள் அவள்.

அவன் இது நாள் வரை இப்படி எல்லாம் பேசியது இல்லையே அதனால் அவன் சாதாரணமாக பேசியது கூட அவளுக்கு பதட்டமாக இருந்தது.

“ஒண்ணும்மில்ல சரி சொல்லு அந்த ஊஞ்சல் உனக்கு பிடிச்சிருக்கா?” என மீண்டும் முதலில் கேட்ட கேள்வியை கேட்டான்.

“ரொம்ப” என பெரிதாக கைகளை விரித்து காட்டினாள் அவள். பின் சுதாரித்தவள், “எனக்காகவா?” என்றாள்.

“ஆமா முதல் நாள் சொன்னேன்ல உனக்கு ஊஞ்சல் எல்லாம் ரொம்ப பிடிக்கும்னு அதான் அடுத்த நாளே மாமிகிட்ட சொல்லி இங்க ஊஞ்சல் மாட்ட சொன்னேன். ஆக்சுவலி அங்க நம்ம வீட்ல இருக்க மாதிரி பெரிய ஊஞ்சல் தான் ஆர்டர் பண்ணுது பட் நான் கொஞ்சம் கஷ்டமஸ்டா கேட்டு இருந்தனா அது வரத்துக்கு லேட் ஆகும்னு சொன்னாங்க. சோ அதுவரைக்கும் இந்த ஊஞ்சல் போட்டு இருக்கு.” என அவன் கூறவும் இவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது தனக்கு பிடிக்கும் என்று செய்திருக்கிறானே என நெகிழ்ச்சியாகவும் இருந்தது.

அருகே இருந்த மற்றொரு தொங்கும் ஊஞ்சலில் வந்து அமர்ந்துக் கொண்டான் ராம்.

“ஆமா பாலி வரதுல உங்களுக்கு இஷ்டம் இல்லையோ?” என வினாவினாள் சாத்வி

“உனக்கு விருப்பம் இருக்காதுன்னு நினைச்சேன்.”

“ஏன் அப்படி?”

“இல்ல அதுக்குள்ள ஹனிமூன் அது இதுன்னு…”

“அங்க போனா ஹனிமூன் தான் கொண்டாடணுமா என்ன ஏன் சுத்தி பாக்க கூடாதா?”

“தாராளமா சுத்தி பார்க்கலாமே. சாரி உன்னை கேட்காமல் அப்படியே அப்போஸ் பண்ணுது தப்புதான். இனி எந்த முடிவு எடுத்தாலும் உன்கிட்ட கலந்துகிட்டே சொல்றேன் சரியா.” என அவளுக்கு அதில் விருப்பம் இருந்தது தெரிந்து மன்னிப்பு கூறினான் அவன்.

‘குணாம்மா சொன்னது போல் தவறு என தெரிந்தால் சட்டனை புரிந்து கொள்ளும் ரகம் தான்’ என நினைத்துக் கொண்டாள் அவள்.

“சாரி எல்லாம் தேவையில்லாத வார்த்தை. எனக்காக தான யோசிங்க அதுல ஒன்னும் தப்பில்லை. நல்லவேளை அஜ்ஜு அண்ணா நம்ம இல்லனா போக மாட்டோம்னு கலாட்டா பண்ணாரு இல்லன்னா நீங்க ஒத்துக்கொண்டு வந்து இருக்க மாட்டீங்க இல்ல.”

“அப்படிலாம் இல்ல உனக்கு போகணும்ன்றது எனக்கு தெரிஞ்சி இருந்துச்சுன்னா கண்டிப்பா ஓகே சொல்லி இருப்பேன். இப்ப கூட அஜ்ஜு சொன்னதுக்காக ஒத்துக்கல நீ எதுவும் அப்போஸ் பண்ணாம ஆர்வமா மூஞ்சிய வைச்சுட்டு இருக்கவே உனக்கும் அது பிடிச்சிருக்குன்றது புரிஞ்சுச்சு அதனாலதான் அமைதி ஆயிட்டேன்.”

“ஓ!”

“அப்புறம் உனக்கு இவ்ளோ நல்ல சமைக்க தெரியும்னு எனக்கு தெரியாது. ஐ அம் எ ஸ்வீட் டூத்(எனக்கு இனிப்பு ரொம்ப பிடிக்கும்) உன்னோட அந்த பைனாப்பிள் கேசரி செம்மையா இருந்துச்சு. தயிரில் கூட பழகலாம் போட்டு இருந்தது சாப்பிட ஸ்வீட்டா இருந்துச்சு. ஐ ரியல்லி லவட் இட். அது மட்டும் இல்ல நீ செஞ்ச எல்லாமே ரொம்பவே நல்லா இருந்துச்சு.” என ரசித்து சொன்னான் அவன்.

“தேங்க்ஸ் சின்ன வயசுல இருந்தே அம்மா கூட சேர்ந்து கொஞ்சம் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுவேன் அப்படியே கத்துக்கிட்டது தான்.” என்றாள் அவள்.

மேலும் தொடர்ந்து, “ஆமா உங்களுக்கு என்னலாம் சாப்பிடப் பிடிக்கும்.”

“எல்லாமே நல்லா சாப்பிடுவேன் மோஸ்ட்டா வெச் அதிகமா ப்ரிப்பேர் பண்ணுவ. நான்-வெஜ் அந்த அளவுக்கு பிடிச்சு எடுத்துக்க மாட்டேன். சாம்பாரும் உருளைக்கிழங்கு ஃப்ரை. ரசம் வெண்டைக்காய் ஃப்ரை, கார குழம்புக்கு கூட்டு இல்ல அப்பளம் ஆனா இன்னைக்கு நீ செஞ்ச அவியல் செமையா இருந்துச்சு இனி காரக்குழம்புக்கு அதுவும் என்னோட காம்பினேஷன். மோர்குழம்பு வாழைக்காய் ஃப்ரை இப்படி அந்தந்த குழம்புக்கு அந்தந்த காம்பினேஷன் ரொம்ப பிடிக்கும்.” என அவன் கொடுத்த பெரிய லிஸ்ட்டை மனதில் குறித்துக் கொண்டாள் சாத்வி.

“சரி நாளைக்கே கிளம்பனும் போல சோ டிரஸ் எல்லாம் எடுத்து வை.”

“உங்களுக்கு என்ன டிரஸ் எல்லாம் எடுத்து வைக்கட்டும்?”

“என்னக்கா? அது நானே பேக் பண்ணிக்கிறேன்.” எனக் கூறியதோடு இல்லாமல் அவள் இருக்கும் போது அவளிடம் “இது ஓகேவா? அது ஓகேவா?” எனக் கேட்டு அவன் பேக்கிங்கை முடித்தான்.

“எனக்கும் பேக் பண்ண ஹெல்ப் பண்றீங்களா? எப்பவும் அம்மா தான் பேக் பண்ணுவாங்க.” எனத் தயக்கமாக கேட்டவளை செல்லமாய் முறைத்தவன்,

“இதுக்கெல்லாம் இப்படி தயங்கித் தயங்கி கேக்க கூடாது நீ எனக்கு ஹெல்ப் பண்ண நான் உனக்கு ஹெல்ப் பண்ண மாட்டேனா சரி வா போய் நம்ம பேக் பண்ணலாம்.” என எழுந்தவர்கள் அவள் இங்கே எடுத்து வந்திருந்த பெட்டிகளை பிரித்து அப்படியே அவளுடைய கபோர்டையும் அடுக்க ஆரம்பித்தார்கள்.

இவள் அனைத்தையும் ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுக்க, அவன் அழகாக அடுக்கி வைத்தான். சாரீ உள்ளே பிளவுஸ் வைத்து சாரீகள் ஒருபுறமும் பாவாடை ஒருபுறமும் என ஒரு கப்போர்ட் முழுக்க அதை அடுக்கினான். பின் சுடிதார் செட்டுடன் இருப்பதை ஒருபுறமும், லெக்கின்ஸ் ஒருபுறமும், வெறும் டாப்ஸ் மட்டும் இருப்பதை ஒருபுறமும், சாட் குர்த்திஸ் அனைத்தும் ஒருபுறமும், மாடர்ன் டிரஸ்கள் ஒருபுறமும் என அழகாக தனித்தனியாக அடிக்கினான் அப்படியே எது எது அந்த ட்ரிப்புக்கு போடுவது போல் அவனுக்கு தோன்றுகிறதோ அதை எல்லாம் தனியாக எடுத்து வைத்தான்.

அதன்பின் அவள் நீடிய துணியையும் அவளையும் மாறி மாறி முழித்துக் கொண்டு பார்த்து இருந்தான் ராம்.

அப்பொழுதுதான் அவனிடம் எந்த எதிர்வினையும் இல்லாததால் நிமிர்ந்து அவனையும் தான் தன் கையில் இருந்த துணியையும் பார்த்தாள்.

‘கொஞ்சம் ஓவரா தான் போயிட்டோமோ?’ எனத் தனது கையில் இருந்த உள்ளாடையை பார்க்க,

“சாரி” என அவள் கையை இறக்க போக, அதனை நிறுத்தி அதை வாங்கிக் கொண்டான்.

பின், அதற்கும் ஒரு இடம் ஒதுக்கி அடுக்க ஆரம்பித்தான்.

இதை சாதாரண போல பார்த்துக் கொள்ள அவன்பட்டபாடு இவளுக்கு நன்றாகவே தெரிந்தது. லேசாக ஆடிய அவன் கை விரல்களை பார்த்து தனக்குள் சிரித்துக் கொண்டாள் சாத்வி.

மனம் கொள்ளை போகுமா…
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top