• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Ennai Verodu Saithaval(ne)..!!! Epi - 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,932
Location
Thirunelveli
ஹாய்... ஹலோ... மக்களே..!!

சாரிப்பா ரொம்ப லேட் ஆகிட்டு... என்னை வேரோடு சாய்த்தவளே(னே)..!! எபி 15 கொண்டு வந்துட்டேன்.. படிங்க.. படிச்சு லைக், கமெண்ட்ஸ் பண்ணுங்க... இதுவரை படித்து கமெண்ட்ஸ் சொல்லுற எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி மக்களே.. லவ் யூ ஆல்:love::love:..... நாளைக்கு அடுத்த எபியுடன் வருகிறேன்.... சைட்க்கு வந்தே ரொம்ப நாள் ஆனமாதிரி பீல் ஆகுது.:confused::confused:.. லக்ஷ்மியின் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என்று இந்த கட்டத்தை பார்த்து கெஸ் பண்ணுங்க.:D:D... சரியா சொல்லுறவங்களுக்கு..? என்ன தரலாம் அதையும் நீங்களே சொல்லுங்க:love::love::love:.... அதுக்குள்ள நான் அடுத்த எபி ரெடி பண்ணுறேன் டாட்டா;););)... பிக் வரும் எபியில் போடுறேன்...

வேர் – 15

“ ஒ.. ஒண்ணும் இல்ல “ எனதடுமாற்றத்துடன் கூடிய வெட்கத்துடன் இனியாள் கூற..

அப்பொழுது தான் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த லக்ஷ்மி இனியாள் போனில் பேசுவதைக் கண்டு “ யார்கிட்ட இவா இப்படி பேசிகிட்டு இருக்கா..? “ என யோசித்து அவள் கையில் இருந்த ரிசீவரை வாங்கிய லக்ஷ்மி காதில் வைக்க...

“ சரி மேல வா பொண்டாட்டி..!!” என வெற்றி குறும்பாக கூறவும்..

வெகுண்டெழுந்த லக்ஷ்மி அடுத்த நிமிடம் இடிஎன இனியாள் கன்னத்தில் தன் கரத்தை இறக்கினார்...

“ பளார்“ என்ற குரல் கேட்டு தன் அறையை விட்டு வெளியில் பதறியடித்து வெற்றி வெளியில் வர..

ரிசீவரைகையில் வைத்திருந்த லக்ஷ்மி ருத்ரமூர்த்தியாக இனியாளை முறைத்து நின்றார்...

“ அத்தை அது “ என தடுமாற்றத்துடன் கூற..

“ யாரு.. யாருக்குடி அத்தை... இதுக்கு தான் தலைப்பாட அடிச்சுகிட்டேன் இப்படி அனாதைகளை எல்லாம்நடு வீட்டுல கொண்டு வைக்காதீங்கனு யாராவது கேட்டாங்களா..? ”

என்னமோ உலகத்தில இல்லாத மாதிரி உங்களை வீட்டுல கொண்டு வச்சாங்க இப்போ பாரு தாராதரம் இல்லாதவ எல்லாம் நடுவீட்டுல வந்து குடுமபத்துல ஒருத்தியாக வந்து நிற்குற நிலையில் இருக்கு “ என கூறி மீண்டும் அவளை அடிக்க வர..

“ ம்மா... எதுக்கும்மா இப்படி பண்ணுற... நான் அவளை தான் கல்யாணம் பண்ணுவேன்.. நீங்க இப்படி பண்ணுறது எனக்கு பிடிக்கலை “ எனஅவரை தடுக்க வெற்றி வர..

அதிர்ந்த லக்ஷ்மி “ டேய் வெற்றி... பெத்த அம்மாவை விட அவ உனக்கு முக்கியமா போயிட்டாளா.. அப்படி என்னடா செய்து உன்னை இந்த கழுதை மயக்குனா ..? “ என அவளை ஒரு மாதிரியாக பார்த்து முகத்தை சுழித்து...

“ இதுக்கு தான் கண்ட கண்ட கழுதைகளையும் வீட்டுக்குள்ள சேர்க்க வேண்டாம்ன்னு சொன்னேன்... வேலைகாரர்களுக்குஎன்று ஒரு தரம், தகுதிஇருக்கு.., அது.. அது.. இடத்துல இருக்கணும்... அது தான் எல்லாருக்கும் நல்லது...

வேலைகாரர்களுக்கு இடம் கொடுத்தா.. நடு வீட்டுலயே குடியும், குடித்தனமுமாஇருக்க ஆரம்பிச்சுருவாங்க... இந்த நாய்களை மாதிரி... இவளுக்குஎன் பையன் கேட்குதோ... இனி ஒரு நிமிஷம் கூட வீட்டுல இருக்க கூடாது வெளிய போடி “ என கூறி அவளை இழுத்துக் கொண்டு வெளியில் செல்ல...

இங்கு நடப்பதை பார்த்துக் கொண்டு இருந்த கங்கா, அவுட்ஹவுஸ் நோக்கி செல்ல “ இதழி வீட்டுல பெரும் சண்டை நடக்குது... உன் அக்காவை பெரியம்மா அடிச்சுட்டாங்க..?“ என பதட்டத்துடன் கூற...

பதறிய இதழி வீட்டை விட்டு வெளியில் வர, “ இதழி நானும் வாரேன் “ என கூறி மணியம்மாளும்அவள் கூடவே சென்றார்..

“ ம்ம்மா... நீங்க பேசுறது எதுவும் சரி இல்லை... அவ ஒன்னும் என்னை மயக்கல... நான் தான் அவளை மயக்குனேன்.. அவளை சொல்லுறது எல்லாம் என்னை சொல்லுற மாதிரி... முதல்ல மனுசங்களுக்கு மரியாதை கொடுத்து பழகுங்க...

இவ்வளவு வயசாகுதே கொஞ்சமாவது திருந்துங்கம்மா... கொஞ்சமாவது அந்த துருபுடிச்ச அறிவை யூஸ் பண்ணுங்க... அவா உங்களை என்ன பண்ணுனா.? அவளுக்கு என்னதகுதி இல்லை.. உங்களை விட, எல்லா தகுதியும் இருக்கு.. நீங்களே இந்த வீட்டுக்கு வாக்கப்பட்டு வரும் போது, இவா வரதுக்கு என்ன.. இவளை தான்நான் கட்டுவேன்.. இவ தான் இந்த வீட்டு மருமகள் உங்களால என்ன முடியுமோ அதை பண்ணுங்க.. இப்போஇனியை விடுங்க “ என அவர் கையில் இருந்து இனியாளை மீட்க

இத்தனை நேரம் வெற்றி பேசிய பேச்சில் அதிர்ந்து நின்ற அவர் “ என் மகனை எதிரா திருப்பிவிட்டுலல..?? “ எனஆக்ரோசமாக கேட்டு அவளை வாசல் பக்கமாக தள்ளி விட...

வெளியில்அப்பொழுது தான் அவுட்ஹௌசில் இருந்து வந்த மணியம்மாள் மேலே இனியாள் தடுமாறி விழ.. அதை எதிர் பார்க்காத மணியம்மாளும் அவள் கூடவே விழுந்தார்......

அருகில் கிடந்த கல்லில் மணியம்மாளின் தலை பயங்கரமாக மோத வழியும் ரத்தத்துடன் அப்படியே விழ..,

“ பாட்டிஈஈ“ என அலறிய இதழி அவரை நோக்கி ஓடி வர..

“ இனி“ என்றபடி வெற்றியும் ஓடி வர..,

லக்ஷ்மிஅவர்களைஅப்படியே அசையாமல் பார்த்திருந்தார்..

மணியம்மாளை மடியில் ஏந்திய இதழி “ பாட்டி.. பாட்டி.. எழுந்திரு பாட்டி... “ என அவரின் கன்னத்தை தட்டி கதற..

மெதுவாக கண்ணை திறந்த மணியமாள்அவளைப் பார்க்க...அந்த நேரம் வெளியில் சென்ற கண்ணழகி வர..,

இவர்கள் நிலையை கண்டு “ என்ன ஆச்சு.. யாருக்கு என்ன ஆச்சு “ என பதறிஅருகில் வர..

அவரை நோக்கி பார்வையை திரும்பிய மணி“ ஒரே ஒரு பார்வை “ மட்டும் பார்த்து அப்படியேமயங்கினார்...

அந்த பார்வை “ உன்னை நம்பி தானே நான் வந்தேன்.. இப்பொழுது பார் இவர்களின் நிலையை “ என கேட்பதாக இருக்க..

ஒரு நிமிடம் அதிர்ந்த கண்ணழகி “ டேய்.. வெற்றி காரை எடுடா“ என கூறி வேலைகாரர்களை வைத்து மணியம்மாளை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு செல்ல அதற்கு முன் தன் மூச்சை நிறுத்தி இருந்தார் மணியம்மாள்...

அப்படியே அமர்ந்துவிட்டார் கண்ணழகிஅவர் கண் முன் மணியம்மாள் பார்த்த பார்வையே நின்றது...

அடுத்த சில மணி நேரத்தில் நாராயணன், சக்தி இருவரும் கிளம்பிவீட்டை நோக்கி வர.., இனியாள், இதழி இருவருக்கும் வாழ்கையை அழிந்த உணர்வு..

மணியம்மாள் இருக்கும் வரை, “ எந்தகவலையும் இல்லாமல் இருந்தனர்... எல்லாரையும் விட நன்கு பார்த்துக் கொண்டார்... லக்ஷ்மியின் குற்றசாட்டில் இருந்து காக்கும் தெய்வம் அவர்... அரண்மனையில் வேலை செய்கிறார்.. எங்களுக்கென்று ஒரு வேலை, ஒரு உறவு, ஒரு குடும்பம் என்று இருந்தது ஆனால் இப்பொழுதோ ஏதும் இல்லாத லக்ஷ்மி கூறியதுப் போல அனாதையாகி விட்டோம் “ இனிஎங்கு செல்வது.. எங்களை யார் பார்த்துக் கொள்வது “ என யோசிக்க

“ யம்மாடி“ என ஓடி வந்த நாராயணன் அவர்களை அணைத்துக் கொண்டார்...மணியம்மாளின் இறப்பு யாருமே எதிர் பார்க்காத நிகழ்வு... சக்தி ஓரமாக நின்று இதழியை தான் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்... இனியாள் சொல்லவே வேண்டாம் “ தன் தகுதியை அறிந்தும், அளவுக்கு அதிகமாக ஆசைபட்டு எல்லாம் எல்லாம் அழிந்து விட்டது “என அப்படியே கலங்கி நின்றிருந்தாள்....

அடுத்த இரண்டு நாளில் மணியம்மாளின் காரியம் முடிந்து நிலைமை கொஞ்சம் மாற...

நடந்ததை அப்பொழுது தான் கேட்டு அறிந்தார் கண்ணழகி... லக்ஷ்மியை ஒரு பார்வை பார்த்த அவர் நேராக இனி, இதழியை நோக்கி சென்றார்...

நாராயணனோ ஒரு படி மேல் போய் தன் மனைவியை அறைந்திருந்தார். “ அப்பா.. என்ன பண்ணுறீங்க “ என தடுக்க வந்த சக்தியை தன் பார்வையால் தடுத்து நிறுத்திய அவர் தானும் அவுட்ஹவுஸ் சென்றார்..

சக்தி செய்வதறியாமல் அப்படியே நின்றிருந்தான்... “ அவன் எண்ணியது என்ன நடப்பது என்ன..? யார் மேல் தவறு என்று அவனுக்கே தெரியவில்லை.. ஆனால் ஒரு உயிர் போய் விட்டதை அவனால் தாங்க முடியவில்லை... லக்ஷ்மியை பார்த்து முறைத்து விட்டு தன் அறைக்கு சென்றான்..

எல்லாரும் அவரை ஒதுக்குவதை கண்ட லக்ஷ்மிக்கு மீண்டும் அந்த இருவர் மேலும் கோபம் வளர்ந்தது “ இவங்க ரெண்டு பேரும் தான் எல்லாத்துக்கும்காரணம் “ என மீண்டும் இருவர் மேலும் வன்மம் வளர்த்தார் மனதில் “ உங்களை வீட்டை விட்டு விரட்டாமல் இருக்க மாட்டேன் “ என சூளுரைத்துக் கொண்டார்...

அந்த நேரம் கூட யாருக்கும் இருவரும் இந்த வீட்டின் வாரிசு தான் என கூற மனம் வரவில்லை... அப்படி கூறி இருந்தால் ஒருவேளை லக்ஷ்மி மனம் மாறி இருப்பாரோ.? கண்டிப்பாக மாட்டார்..?

வெற்றி தன் அறையை விட்டு வெளியில் வரவே இல்ல... அவனுக்கு யாரையும் பார்க்க பிடிக்கவில்லை... “ எல்லாம் தன்னால் தான் “ என கலங்கி இருந்தான்..

இனியாள் – இதழினி இருவரும் “ தங்களால் வீட்டில் இனி பிரச்சனை வேண்டாம்“ என எண்ணி அடுத்த ஒரு வாரத்தில் வீட்டை விட்டு கிளம்ப அவர்கள் கூடவே கண்ணழகியும் கிளம்ப..

“ பாட்டி நீங்க எங்க வாறீங்க.. எங்களால இனியும் பிரச்சனை வேண்டாம்.. நாங்க ஏதாவது ஹாஸ்டலில் தங்கி எங்க வாழ்கையை பார்க்கிறோம் “ என கூற..

“ என் வாரிசுகள்... வீட்டை விட்டு வெளியில் போனால், நாங்க இங்க இருந்து என்னத்துக்கு “ என நாராயணன் கேட்க..

அதிர்ந்து விழித்த இருவரும் “ மாமா.. சத்தமா பேசாதீங்க.. இது கூட அத்தை காதுக்கு கேட்டா வீணா பிரச்சனை தான் வரும் “ எனஅவர் கூறுவதை சரியாக கவனிக்காமல் கூற...

“ அவளை விடும்மா.. நீங்க இந்த வீடு வாரிசு தான்... என்னோட பொண்ணு பசங்க தான் நீங்க... மணி தான் இந்த உண்மை யாருக்கும் தெரியவேண்டாம்... நீங்க வீட்டுல வேலைகாரர்கள் பேத்தியாவே வளரட்டும்னு சொன்னா அதனால் தான் நான் கூறவில்லை “ என கூறி கண்ணழகி அணைத்துக் கொள்ள..

அப்படியேஅதிர்ச்சியாகஇருவரும் அவர்களை பார்த்துநிற்க“ என்னம்மா யோசிக்குறீங்க “ என கேட்க..

“ வேண்டாம் பாட்டி நாங்க எங்கையாவது போறோம்.. இப்போ நாங்க வீட்டின் வாரிசுன்னு அங்க வந்தா அத்தை சும்மா இருக்கமாட்டாங்க... மாமாவை மயக்க வந்திருகோம்னு சொல்லி அசிங்க படுத்துவாங்க “ என கூறி இனியாள் அழ..

இருவராலும் கண்கொண்டு அவர்களை பார்க்க முடியவில்லை.... “ நீங்க வாங்க “ என கூறிய கண்ணழகி இருவரையும் இரு கையில் அழைத்துக் கொண்டு அரண்மனைக்குள் நுழைந்தார்..

இனியாளோ தயங்கி வெளியில் நிற்க “ வாங்க“ என அதட்டி வீட்டில் அழைக்க..

“ அவங்க வீட்டில் வந்தால் நான் இங்கு இருக்க மாட்டேன் “ என மீண்டும் லக்ஷ்மி போர் கொடி தூக்க..

அவரை ஒரு பார்வை பார்த்த கண்ணழகி வீட்டின் உள் அழைத்து சென்று தன் அறைக்கு அருகில் உள்ள அறையில் தங்க வைத்தார்...

அவரைமுறைத்த லக்ஷ்மி ஏதும் கூறாமல் தன் அறைக்கு சென்றார்..மனதிலோ“ எப்படியும் இங்க தான இருக்க போறீங்க.. அப்போ கவனிச்சுகிறேன் உங்களை...... ஒரு வேலைக்காரிக்கு இருக்கும் மரியாதை கூட இந்த வீட்டு மருமகளுக்கு இல்லை “ என அவர் மனது சாடிக் கொண்டு இருந்தது.....

அடுத்த ஒரு வாரத்தில் மீண்டும் சக்தி மும்பை விட்ட வேலையை தொடர செல்ல.. வெற்றியோ கொஞ்சம் கொஞ்சமாக அவன் கூட்டில் இருந்து வெளியில் வந்தான்.. ஆனாலும் இனியாளை காணும் நேரம் மனதில் குற்றஉணர்ச்சி வந்துப் போக... அவர்களை கல்லூரிக்கு அழைத்து செல்லும் பொறுப்பை அவன் ஏற்றுக் கொண்டான்...

இதழி எத்தனையோ மறுத்து கூற... போன் போட்டு சக்திக்கு அழைக்க “ இந்தகுட்டிமாமாவுக்காக நீ போ “ என்பதை தவிர அவன் ஏதும் பேசாமல் அழைப்பை நிறுத்த மறுபேச்சில்லாமல் அவன் கூடவே கிளம்பி சென்றனர்...

இதை எல்லாம் லக்ஷ்மி ஒரு முறைப்புடனே பார்த்துக் கொண்டு இருந்தார்.. ஆனாலும் சமயம் கிடைக்கும் நேரம் எல்லாம் அவர்களை வேலைகாரர்களாக நடத்த தவறவும் இல்லை...
 




Last edited:

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,932
Location
Thirunelveli
இனியாள் முழுமூச்சாக படிப்பில் இறங்க.. அதுவரை அவள் வெற்றி என்று ஒருவன் அங்கு இருப்பதாக அவள் கண்களுக்கு தெரியவில்லை... ஆனால் தினமும் அவன் தான் அழைத்து வருவான், அழைத்து செல்வான்...அவளுக்காக அவளின் படிப்பை எண்ணி அவனும் அவளுக்காக காத்திருந்தான்...

இதழி படிப்பில் அத்தனை ஆர்வமில்லாமல் இருப்பதை கண்ட வெற்றி, சக்தியிடம் கூற சிறிது யோசித்த அவன் “ அவளுக்கு ஏதாவது மைண்ட் டைவர்ட் ஆகுற மாதிரி வேலை கொடு “ என கூறி சிறிது யோசித்த அவன்

“ வெற்றி, நம்மகன்ஸ்ட்ரக்ஷன் ஹோம் பிளான் அவள் கையில் கொடுத்து அதை ட்ரா பண்ணி, சிஸ்டம்லட்ரா பண்ண சொல்லு, அவள் ஹோம் டேக்ரேஷன்கிராப்ட் வொர்க் நல்லா செய்வா... அதையும் செய்ய சொல்லு நாம நம்ம ஆபிஸ்ல இதையும் சேர்த்துக்கலாம்... நான் சொன்னேன்னு சொல்லி செய்ய சொல்லு “ என கூறி அழைப்பை நிறுத்தினான் அவன்... அவள் தனியாக இருந்தால் கண்டதையும் யோசிப்பாள் என எண்ணியே சக்தி இத்தனையும் செய்தான்...

அவன் கூறியதுப் போல் இதழியும் அவளுக்கு பிடித்த வேலையை செய்ய ஆரம்பித்தாள்.. அதிலும் கூடவே ஏதாவது செய்து வீட்டை நிறைக்க அதை கண்ட லக்ஷ்மியும் முகத்தை சுழிக்க தங்கள் அறையில் நிறைக்க ஆரம்பித்தாள்...

அதிலும் சக்திகென்று பல செய்து அதை வெற்றி வாட்சப்பில் அவனுக்கு அனுப்பி “ குட்டிமாமாஎப்படி“ எனகேட்க வேறு செய்வாள்... இவள் செயல் சக்திக்கு மகிழ்ச்சியளிக்க தன்வேலையை சீக்கிரமே முடித்து இங்கு வந்தும் விட்டான்... இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் இதழிக்கு எப்பொழுது வேலை வைத்துக் கொண்டே தான் இருப்பான் சக்தி.. அதிலும் முகத்தை எப்பொழுதும் கடுவன் போலவே வைத்துக் கொள்வான்... “ தான் கொஞ்சம் இளகினாலும் மீண்டும் குட்டிமாமா உன்னை தான் கட்டிக்குவேன் “ என சொல்லக்கூடாதே என்ற பயத்தில்...

இப்படியே நாட்கள் கழிய அன்று எல்லாரும் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டுக் கொண்டு இருக்க.. இதழியும், இனியாளும்பரிமாற எல்லாரும் இருந்து சாப்பிட.. அதை கண்ட நாராயணன்“ யம்மாடி நீங்களும் இருந்து சாப்பிடுங்க... கங்கா பாத்துப்பா “ என கூறி சமயலறை நோக்கி“ கங்கா“ என குரல் கொடுக்க..

“ வந்துட்டேன் ஐய்யா “ என கூறிக் கொண்டே ஓடி வந்த கங்கா பரிமாற ஆரம்பிக்க..

இனியாளும், இதழியும் அமர அதை கண்ட லக்ஷ்மி “ ஏய் “ என குரல் கொடுக்க..

இருவரும் அதிர்ந்து விழிக்க “ வெற்றி அருகில் நின்ற இனியாள் கையை பிடித்து அமரவைக்க “ அவனை பார்த்துக் கொண்டே அவள் இருக்கையில் அமர...

சக்தி இதழியை அப்படியே பார்த்து நின்றான்.. தன் தாய் முன்னால் அவளிடம் பேசவும் முடியவில்லை.. தான் அவளுக்கு சாதகமாக பேசினால் மீண்டும் அவர்கள் மேல் வெறுப்பு தான் வரும் “ என எண்ணிய சக்தி அவளை அப்படியே பார்த்து அமர்ந்திருந்தான்...

“ யம்மாடி இதழி.. நீ உட்காரு “ என கூறி அவளை நாராயணன் அமரவைக்க... லக்ஷ்மியை பார்த்துக் கொண்டே அவள் அமர்ந்து தன் தட்டில் வைத்திருந்த இட்டிலியில் கை வைக்க.. அப்பொழுது தான் சக்தியும் மீண்டும் தன் உணவில் கையை வைத்தான்...

“ ஏய்.. எழுந்திருடி.. நான்அத்தனை தூரம் சொல்லுறேன் ஒரு மரியாதை இல்லாமல் இருக்க.... வேலைகார கழுதைகள் எல்லாம் எனக்கு சரிசமமா இருந்து சாப்டணுமா..? “ என கேட்டுக் கொண்டே அவளின் தட்டை பிடித்து இழுக்க...

அதற்குமேல் தாக்கு பிடிக்க முடியாத இதழி அழுதுக் கொண்டே தன் அறைக்கு செல்ல.. அதை கண்ட சக்திவேலுக்கு மனது பாரமாக அவனும் “ ச்சை“ என்று இடத்தை விட்டு எழுந்து தன் அறைக்கு சென்றான்...

அவன் செல்லவும் “ பாருங்கடி உங்களால என் மகனும் சாப்பிடாம போறான்“ என அதற்கும் கத்திய லக்ஷ்மி இனியாளை முறைக்க..

வெகுண்டெழுந்த வெற்றி “ ம்மா.. உனக்கு இப்போ என்ன பிரச்சனை.. இவங்க இங்க இருந்து சாப்பிட கூடாது அது தான..? “ என கேட்டு “ வா இனி “ என அவளை கையை பிடித்து அழைத்துக் கொண்டு தட்டையும் கையில் தூக்கிக் கொண்டு அவர் அறைக்கு சென்றான்..

செல்லும் போது “ இனிமேல் இவா இங்க சாப்பிட மாட்டா.. என் ரூம்ல, என் கூடவே சாப்பிட்டுக் கொள்வாள்.. கங்கா சூடா இட்லி கொண்டு வா “ என போகிற போக்கில் சொல்லிக் கொண்டு போக....

அப்படியே முகம் கறுக்க நின்றிருந்தார்லக்ஷ்மி அவரை பார்த்த நாராயணன் “ இந்த அவமானம் தேவையா உனக்கு “ என்பதாக பார்க்க முகத்தை சுழித்த அவர் தன் அறைக்கு செல்ல...

“ கங்கா சக்திக்கும், இதழிக்கும்சாப்பாடு கொண்டு கொடு “ என கூறி நாராயணனும்இடத்தை விட்டு எழ...

சாப்பாட்டை எடுத்து இதழி அறைக்கு செல்ல “ வேண்டாம் கங்கா நான் அப்புறம் சாப்பிட்டு கொள்கிறேன் “ என திருப்பி இதழி அனுப்பிவிட..,

நேராக சக்தி அறைக்கு செல்ல “ இதழி சாப்பிடாளா..?” என சக்தி கேட்க..

“ இல்லைய்யா.. வெற்றிய்யா இனியை அழைச்சுட்டு அவங்க ரூம் போய்ட்டாங்க.. இதழி சாப்டல “ என கூறி தட்டை அவன் முன் வைத்து வெளியில் வர..

தட்டை எடுத்து இதழி அறைக்கு வந்த சக்தி, மெதுவாக கதவை தட்ட.. அவள் திறக்கவே இல்லை …

" பிளீஸ் இதழி கதவை திற " என கூறி கதவை தட்ட…

மெதுவாக கதவை திறந்த அவள் கட்டிலில் அமர்ந்து அவளின் பாட்டி போடோவையே பார்த்துக் கொண்டு இருந்த இதழி அவன் கண்ணில் பட.. அவளின் முகத்தையை பார்த்திருந்தான்... கண்ணீர் வழிந்துக் கொண்டிருக்க அதை கூட துடைக்காமல் அவளின் பாட்டி போட்டோவையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.. மனதில் " பாட்டி நீ மட்டும் உயிருடன் இருந்தால் ஒரு வாய் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டிருப்போமா.? " என கண்ணீருடன் கேட்டுக் கொண்டு இருந்தாள்..

“ இதழி“ என மெதுவாக அழைக்க..

அவனை நோக்கி ஒரு நொடி பார்த்த இதழி மீண்டும் போட்டோ பக்கம் முகத்தை திருப்ப..

அவள் அருகில் மெதுவாக அமர்ந்த சக்தி.., அவளின் கண்ணீரை துடைத்து விட்டு “ இதழி சாப்பிடு “ என மெதுவாக கூற..

“ ஏன்... குட்டிமாமா சாப்டணும்... உங்க அம்மா அவ்ளோ பேசும் போது நீங்க அமைதியா இருந்துட்டு… இப்போ எதுக்கு மாமா இங்க வந்து சாப்பிட சொல்லுறீங்க.... எனக்கு வேண்டாம்... எனக்கும் ஒரு மனசு இருக்கு மாமா... அவங்க பேசுறதை எல்லாம் கேட்டுட்டு அவங்க வீட்டுலயே சாப்பிட நான் ஒன்னும் உங்க அம்மா சொல்லுற மாதிரி நாய் இல்ல “ என அவனை பார்த்துக் கொண்டே கூற..

“ ஏன் இதழி இப்படி எல்லாம் பேசுற... உன் குட்டிமாமா சொன்னா கேட்கமாட்டியா..? இப்போ சாப்பிடு “ என கூறி தட்டை அவள் பக்கம் நீட்ட…

“ எதுக்கு கேட்கணும்.. அங்க அத்தனை பேர் முன்னாடியும் இருந்து உங்க அம்மா பேசும் போது அமைதியா தானே இருந்தீங்க.. இப்போ மட்டும் என்ன... இன்னும் ஒரு வருஷம் எங்களை சகித்துகோங்க... நாங்க படிப்பை முடித்து விடுவோம்... எங்களை படிக்க வைத்ததிற்க்காக இந்த வீட்டுல வேலைகாரர்களாக இன்னும் ஒரு வருஷம் இருக்கிறோம்.. இப்போ தயவு செய்து இந்த சாப்பாட்டை எடுத்துகிட்டு வெளியில் போங்க” என கூறி வாசல் பக்கம் கையை நீட்ட..

“ என்ன இதழி இப்படி பேசுற... இது வேற யார் வீடும் கிடையாது.. உனக்கு உரிமை உள்ள வீடு…. நீ எங்கையும் போக வேண்டாம்… போகவும் விடமாட்டேன் “ என கூற..

“ ஏன் மாமா போகவிடமாட்ட... வெற்றி மாமா, மாதிரி என்னையும் கல்யாணம் பண்ணிக்கிட்டு உன் கூடவே வச்சுக்க போறியா “ என கேட்டு அவனை பார்க்க..

அவளை அழுத்தமாக பார்த்த அவன் “ பசித்தா சாப்பிடு “ என கூறி அப்படியே வெளியில் சென்றான்...

அவன் செல்லவும் “ எனக்கு தெரியும் மாமா.. உன் அம்மா சம்மதம் இல்லாமல் நீ வாயை திறக்க மாட்டான்னு எனக்கு நல்லாவே தெரியும் “ என கூறி சோக புன்னைகை புரிந்து அப்படியே கட்டிலில் சாய்ந்துக் கொண்டாள்...

“ வீட்டுல என்ன பிரச்சனை ஓடுது.. அது எதுவும் நினைக்காம மீண்டும் பிரச்சனையை இழுக்க நினைகுறாளே “ என வருத்தமாக எண்ணிய சக்தி சாப்பிடமலே வேறு உடை மாற்றிக் கொண்டு வெளியில் சென்றான்..

அப்பொழுது தான் வெளியில் சென்ற கண்ணழகி காரில் வந்து இறங்க வீடு அமைதியாக இருப்பதை கண்டு மெதுவாக வீட்டை நோக்கி வந்தார்... அவரும் மிகவும் தளர்ந்துவிட்டார்.. அவரின் கம்பீர நடை கூட மாறிவிட்டது... வீட்டின் அமைதியை கண்டு பேசாமல் தன் அறைக்குள் சென்று மறைந்தார்.. அவர் வந்த சத்தம் கேட்டு எழுந்த இதழினி சிரித்த முகத்துடன் அவருக்கான உணவை எடுத்து செல்ல “ சாப்டியா கண்ணு “ என கேட்டுக் கொண்டே கோவிலுக்கு சென்று வந்ததால் கையில் உள்ள விபூதியை அவளுக்கு வைத்து விட்டு, அவர் சாப்பிட அமர..,

“ ஆமா பாட்டி சாப்ட்டேன் “ என கூறி அவர் அருகில் அமர்ந்துக் கொண்டாள் இதழினி...

" அக்கா எங்க " என

" ஆமா.. அக்கா எங்க சாப்பிட்டாளா தெரிலையே..வெற்றி மாமா அவளை கவனித்துக் கொள்வார் " என எண்ணி " அக்கா மாடில துணிகாய போட போனா பாட்டி “ என கூற.. அவளை ஒரு நொடி கூர்மையாக பார்த்த அவர் சாப்பாட்டில் கவனமானார்...

வேலை இல்லாத நேரத்தில் டீ கப்பில் பெயிண்ட் செய்து தன் நேரத்தை கழிக்க.. அவளுக்கு தேவையானது எல்லாம் சக்தி, வெற்றி வாங்கி குவித்தனர்.... " இது என்ன இவ்ளோ அழகான கப் யார் எப்போ வாங்குனா .? " எண்ணிய லட்சுமி " ஏய் கங்கா " என அழைக்க..

" என்னம்மா " என அவள் வர..

" இந்த கப் யார் வாங்குனது.. பெயிண்டிங் ரொம்ப அழகா இருக்கு " என அந்த கப்பை கையில் வைத்து ரசித்து கொண்டே கூற...

" இதழி செய்தாம்மா " என சிரித்துக் கொண்டே கூறி அவள் செல்ல

" அவள் செய்தாளா..? " ஆச்சரியமாக எண்ணி அவர் அறைக்கு சென்று விட்டார்.. ஆனால் சிறிது நேரத்தில் வந்து அந்த கப்பை கையில் எடுப்பதுப் போல் எடுத்து கையில் இருந்து தவறியதுப் போல் கீழே போட்டு உடைத்து ஓன்று அறியாததுப் போல் செல்ல இதை எல்லாம் அமைதியாக கங்கா பார்த்துக் கொண்டு நின்றாள்... இப்படி அவள் செய்யும் எல்லாவற்றையும் அவர் வெற்றிகரமாக உடைக்க.. அவளும் செய்துக் கொண்டே தான் இருந்தாள்..

அவளுக்கு தேவையான எல்லாம் சக்தி வாங்குவதைக் கண்ட லட்சுமி " டேய் ஏண்டா இப்படி அவளுகளுக்கு செலவு பண்ணுற " என கேட்க...

" ம்மா.. இது நம்ம கன்ஸ்ட்ஷனுக்கு ஆர்டர் குடுக்க வரும் கஸ்டமருக்கு குடுத்தா.. அவங்களும் வீட்டை டெக்ரேட் பண்ண வாங்குவாங்க " என கூறி அவர் வாயை அடைக்க அமைதியாக சென்றார்...

இப்படியாக லச்சுவின் கோபமுகத்தை கண்டும் காணாமல் இதழி - இனி இருவரும் தங்கள் மூன்றாம் வருட காலேஜ் படிப்பை முடிக்க... வீட்டுக்கு மூத்த மருமகள் என நித்யாவை அழைத்து வந்தார் லட்சுமி....

அவரின் இந்த தீடிர் முடிவைக் கண்டு சக்தி உட்பட அனைவரும் அதிர்ச்சியில் நிற்க.. இதழி " இதை நான் எதிர் பார்த்தேன் " என்னும் விதமாக சக்தியை பார்த்து முறைத்து நின்றாள்....

வேர் அதிர்ச்சியில் நிற்கிறது :oops::oops::oops:...

 




Keerthi Elango

மண்டலாதிபதி
Joined
Jul 25, 2018
Messages
225
Reaction score
294
Location
Karur
Nice UD... Pavam rendu sisters um.....Ini ku Kuda vetri kuda irukan but Lips than rmba paavam...sakthi ammava eithu pesuvana...???waiting eagerly...come soon
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top