• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Mr.Perfect-Mrs.Faulty-Final epi

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bhavya

அமைச்சர்
Joined
Feb 27, 2019
Messages
1,305
Reaction score
4,767
Location
Thanjavur
ஹாய் பிரெண்ட்ஸ்

இதோ கதையின் கடைசி அத்தியாயம்....இதுவரை என்னோடு பயணித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.



மதிய உணவிற்கு அனைவரும் டைனிங் டேபிள் முன் அமர்ந்திருந்தனர்.சந்தியாவை கைப்பிடித்து மெதுவாக அழைத்து வந்து அமர்த்தினார் லலிதா.அவரின் வேகமான முன்னேற்றம் எல்லோருக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது.மகள் உயிரோடு இருக்கிறாள் என்பதே அவருக்கு ஜீவ மருந்தானாது.மீதி அவளின் அன்பான கவனிப்பினால் முழு ஆரோக்கியத்தை அடைந்து விட்டார்.


தட்டின் முன் அமர்ந்த சந்தியா மகளைக் காணாமல்,


"அண்ணி நிநியதி...எங்க?இஇன்னுமா ஷாப்பிங்ங் முமுடிஞ்சு வரலல"


அவர் கேள்வி அனைவரின் மனதில் சஞ்சலத்தை உண்டாக்கியது.முதுகலை படிப்பில் இருந்த வித்யா கல்லூரி முடிந்து வீடு திரும்பியிருந்தவள் தன் போனில் நியதிக்கு டயல் செய்தாள்.ஸ்விட்ச்டு ஆஃப் என்றது அது.


"என்னடி வித்யா போன் போகலையா?"என்றார் லலிதா மகளிடம்.


"சுவிட்ச்டு ஆஃப் வருதுமா..."


"என்ன அப்படியா சொல்லுது?இந்த பொண்ணு ஏன் இப்படி பண்றா....போயி மூணு மணி நேரம் ஆச்சு... இன்னும் வரல...போனையும் அணைச்சு வச்சுருக்கா..வித்யா அண்ணாக்கு போன் பண்ணு...அவன் வரும் போது அவளையும் அழைச்சுக்கிட்டு வரட்டும்..."


"சரிமா"என்று அண்ணனின் போனிற்கு அடித்தாள் வித்யா.


"சமர்த்!நாளைனைக்கு ப்ரோக்ராம் நிச்சயம் தானா? கொஞ்சம் டைம் கொடுக்கலாமோன்னு தோணுது..."என்றான் ஆதித்யா.


"எனக்கும் அப்படித்தான் தோணுது..."என்று ஒத்து ஊதினான் வினோத்.


அதுவரை மவுனமாக இருந்த சமர்த்,


"இன்னும் எத்தனை நாளைக்கு காத்திருக்கிறது....இதே லேட்டு.... இனியும் தள்ளிப் போட்றதா இல்ல... தீர்மானம் பண்ணது போல நாளைனைக்கு எல்லாம் நடக்கும்..இதுல எந்த மாற்றமும் இல்லை.."என்ற சமர்த்தின் படபடப்பான பேச்சில் பக்கென சிரித்துவிட்டனர் ஆதியும் வினுவும்.


"என்னங்கடா சிரிப்பு..."


"தலக்கு அவசரம் தாங்கமுடியால இல்லடா வினு...."


"ம்..பின்ன ரொம்பபப நாளாச்சு...இல்ல... இன்னும் எவ்வளோ நாள் காக்கறது....உப்பில்லா பத்தியக்காரன் ஊறுகாய பாத்தானானு எவ்ளோ நாள் இருக்கிறது...இல்ல மாப்பி"


"டேய் உங்கள..."என்று அவர்களை நோக்கி அவன் எழுந்த போது அவன் போன் மணியடித்து அவனை அழைத்தது.ஆன் செய்து காதில் வைத்தவனின் முகம் கோபமாக மாறியது.


"எப்போ..?"


"முந்தானேத்து...."


"உடனே ஏன் இன்ஃபாம் பண்ணல...?"அவன் கோபக் குரலில் எதிரில் இருந்த வினுவும் ஆதியும் திடுக்கிட்டனர்.


"சாரி சார்...அஃபிஷியலா இப்ப தான் இன்ஃபர்மேஷன் வந்துது...நாங்க சர்சிங் ஸ்டார்ட் பண்ணிட்டோம்..."


"ஓகே...இன்னிக்கே ஃபுல் டீடெயில்ஸ் வரணும்...பி க்விக்"என்று அவன் பேசும் போதே தங்கையின் கால் திரையில் தெரியவும் முதல் காலை கட் செய்து தங்கையின் காலை எடுத்தான்.


"சொல்லுடா...என்ன விஷயம்?"


"அண்ணா..!நியதி ஷாப்பிங் போயி ரொம்ப நேரம் ஆச்சு...போனும் ஸ்விட்ச் ஆஃப் வருது... எனக்கு ஏனோ பயமா இருக்கு...நீ கொஞ்சம் பாக்குறியா?"


தங்கையின் தகவலில் அதிர்ந்தான் சமர்த்.முதலில் வந்த தகவலையும் தங்கை கூறியதையும் சேர்த்து பார்த்தவனின் இதயம் ஒரு கணம் துடிக்க மறந்தது.தன் பதட்டத்தை கடினப்பட்டு அடக்கியவன்


"வித்யா!பயப்படாதே அவளுக்கு ஒண்ணும் ஆகாது...போன் சார்ஜ் பண்ண மறந்திருப்பா.... நீங்க லேடிஸ் ஷாப்பிங் போனா சீக்கிரம் வந்திடுவீங்களா...!நா இப்ப ஆபிஸ்லேந்து கிளம்பிட்டேன் அவளை அழைச்சிட்டு வரேன்...வீட்ல சொல்லிடு..."அவள் பயந்து விடக் கூடாது என உண்மையைக் கூறாமல் மறைத்தான்.ஒருவேளை நியதி இன்னும் ஷாப்பிங்கிலேயே இருந்தால்? ஆனால் அவள் அதற்கு அவ்வளவு நேரம் செலவிடுவதில்லை என்பது அவன் அறிந்ததே.அவன் போனை அணைத்ததும் வினுவும் ஆதியும்


"என்ன ஆச்சு சமர்த்?முதல்ல போன் பண்ணது யாரு? நியதிக்கு என்ன?"


"மாப்பி!நியதி எங்க?வீட்டேலந்து தானே போன் வந்துது?"


"முதல்ல கிளம்புங்க...வழியிலேயே எல்லாம் சொல்றேன்.."என்றபடி அவசரமாக சென்றவனை பின்பற்றினர் அவர்கள்.


அவன் விவரித்தைக் கேட்டு அவர்களும் பதறிவிட்டனர்.கலங்கிய அவனை அவளுக்கு ஏதும் ஆகாது என தைரியம் கூறினர்.


திறக்க முடியாமல் அழுத்திய இமைகளை கடினப்பட்டுத் திறந்த நியதிக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை.வாயில் கசப்பும் வயிற்று பிரட்டலும் தலை கனப்பதும் அவளால் தாள முடியாததாக இருந்தது.


அவள் எழுவதற்கே காத்திருந்தார் போல அவளருகே வந்து நின்றது ஒரு உருவம்.கலங்கிய கண்களை அழுத்தி மூடித் திறந்தவள் அது யார் என அறிய முயன்றாள்.


"ஸேட் டூ ஸி யூ அகைன் மிஸஸ் நியதி சமர்த்...கடல்ல மீனுக்கு இரையாவேன்னு பாத்தா அன்றிருந்த மேனி அழியாம திரும்பி வந்திருக்கே....ஆனா இந்த தடவை மிஸ் ஆகாது...பரலோகத்துக்கு உன்ன இன்னிக்கே பேக் பண்ணிட்றேன்... இந்த தடவ உன்ன மட்டுமில்ல உன்னை தேடி வர உன் ஆசை கணவனையும் சேர்த்தே பேக் பண்றேன்...காதல் ஜோடிய பிரிக்க கூடாது பாரு..."என்று கொக்கரித்தது வேறு யாருமில்லை அவர்கள் பிரிவுக்கு காரணமான சுரேஷே தான்.


சமர்த்தும் அவன் காதலியும் அணைப்பில் இருந்ததைக் கண்டதும் நெஞ்சை அழுத்திய துக்கத்தோடு தான் ரோட்டில் நடந்த போது அருகில் வந்த வேனுள் யாரோ தன்னை இழுத்ததும் தன் மூக்கில் மருந்து நெடி வீசிய துணியை அழுத்தியது வரை நினைவுக்கு வந்து விட்டது அவளுக்கு.எதிரில் நின்ற அந்த ராட்சதனே தன்னை கடத்தியிருக்க வேண்டும் என்று உணர்ந்தாள்.ஆனால் அவன் கூறியது போல் தன்னை தேடி வந்து சமர்த்தும் இவனிடம் சிக்கிக் கொண்டால்?....ஆனால் திரும்பி வந்த காதலியை விட்டு குடும்பத்திற்காக மணந்த தன்னை தேடி அவன் ஏன் வரப் போகிறான்?!! ஆனால் குடும்பத்திற்காக எது வேண்டுமானாலும் செய்பவன் இப்போதும் அவர்களுக்காக தன்னைத் தேடி வருவான்...


"அவர்கிட்ட வாங்கின அடியெல்லாம் மறந்துப் போச்சா? இப்பவும் ஒண்ணும் கெட்டு போகல...என்னை விட்டுடு...உன் மனைவி குழந்தை முகத்துக்காக உன்னை விடச் சொல்றேன்...இல்ல அரெஸ்ட் ஆகறதுக்கு முன்னாடி அரை உயிர் தான் உனக்கு இருக்கும்..."


"ஹாஹாஹா...யாரு உன் புருஷன் என்னை அரை உயிர் பண்ணிடுவானா!...இந்த எல்லைல காலை வச்ச உடனேயே அவன் உயிர் உடம்ப விட்டு எடுத்துடுவேன்...ஆனா உன் பொணத்தை பார்த்து அவன் கதறத நான் பாத்து ரசிக்கனும்...அதுனால அதுவரைக்கும் அவன் உயிரோட இருக்கனும்....முதல் பலி நீதான்..."என்றபடி தன் கையிலிருந்த துப்பாக்கியை அவள் நெற்றிக்கு குறிப் பார்த்து அவன் சுடப் போனா போது 'டூமில்ல்ல்ல்.....'என தோட்டா ஒன்று பறந்து வந்து அவன் கையைத் துளைத்து அவன் கையிலிருந்த துப்பாக்கி தூரச் சென்று விழுந்தது.


தோட்டா வந்த இடத்தில் நான்கைந்து போலீஸ் ஆதித்யா வினோத்தோடு நின்றிருந்தான் சமர்த்.கையில் ரத்தம் சொட்ட விழுந்த சுரேஷோடு அவன் கூட்டாளி இரண்டு பேரையும் போலீஸார் இழுத்து சென்றனர்.


நியதியின் கட்டுக்களை ஆதியும் வினுவும் அவிழ்த்தனர்.மெதுவாக எழுந்து நின்ற நியதியை எலும்பு நொறுங்கி விடும்படி இறுக அணைத்துக் கொண்டான் சமர்த்.


அவனின் இறுகிய அணைப்பில் பொய்யில்லை.காதல் கணவனின் அணைப்பாகவே இருந்தது அது.ஆனால் அவன் ஆபிஸ் அறையில் அவள் கண்டது கேட்டது எல்லாம் எப்படி பொய்யாக முடியும்.அதற்கெல்லாம் ஏதேனும் விளக்கம் இருக்கக் கூடுமோவென துடித்தது அவளின் காதல் மனம்.


"ப்ரணதி!இது என்ன தலைல கட்டு?அந்த படுபாவி அடிச்சானா?"என்றான் வினோத் கோபத்தோடு.


கேள்வி கேட்ட வினோத்தை விசித்திரமாகப் பார்வையிட்ட நியதிக்கு அவனை பற்றிய நினைவுகளை இழுக்க முயன்ற போது அவள் தலை விண்ணென்று தெறித்தது....தாங்க முடியாத வலியில் கண்கள் சொருக மயங்கி விழுந்தாள் நியதி.
அவள் நிலத்தில் விழுமுன் அவளைத் தாங்கிப் பிடித்தான் சமர்த்.



நியதி கண்விழித்த போது பழையதும் புதியதுமான நினைவுகள் அனைத்தும் வரிசையாக அவளுக்கு நினைவுக்கு வந்துவிட்டது.ஆனால் சமர்த்தைப் பற்றி எந்த முடிவுக்கும் வர முடியவில்லை அவளால்.தான் நினைவில்லாமல் இருந்த போது அவன் தன்னிடம் நெருக்கமாகவே நடந்தததும் நேற்று முன்னாள் காதலியை அணைத்தும் என இருவேறு நினைவுகள் அவளை கூர்ப் போட்டன.அப்போது தான் சில நாட்கள் எங்காவது சென்று விட்டால் என்ன என்று தோன்றியது அவளுக்கு.மெதுவாக அவள் கீழிறங்கி வந்து போது தன் குடும்பம் முழுவதும் ஹாலில் நிறைந்திருப்பதைக் கண்டு கண்கள் கலங்கியது அவளுக்கு.அவர்களை மீண்டும் பிரியப் போவது அவள் இதயத்தை கத்தியால் திருகியது போல் வலித்தது.ஆனால் சமர்த்தின் இந்த இரட்டை தோற்றம் தன்னால் அவன் எதிரே இருக்க முடியது என்று திண்ணமாகத் தோன்றியது.


அவளை கண்டதும் எல்லோர் முகமும் சந்தோஷத்தில் விகசித்தது.அனைவரையும் ஒரு முறை கண் நிறைய பார்த்தவள் நேராக வினோத்திடம் சென்று நின்றாள்.


"வினோத்!நான் இன்னிக்கு நைட் டார்ஜிலிங் போகலாம்னு நினைக்கிறேன்... டிக்கெட் புக் பண்றியா?"


அவள் பேச்சில் அங்கிருந்த அனைவரும் திடுக்கிட்டனர்.


"எதுக்கு இப்போ டார்ஜிலிங்?"


"வேண்டாம்... எல்லாம் அப்புறம் போலாம்.."


"டார்ஜிலிங்ல என்ன வச்சிருக்கு இப்போ?"


"ப்ரணதி!இப்போ அங்க நம்மது எதுவுமே இல்லையேடா... எதுக்கு அங்கே போகனும்கறே?"


"எனக்கு போகனும்...புக் பண்றியா இல்லையா?"


ஏதோ பதிலளிக்க வந்த வினோத்தை கைக்காட்டி தடுத்த சமர்த்,


"போலாம்.... நாளைனைக்கு எங்க கிராமத்துல ஒரு விசேஷம் இருக்கு...அது முடிஞ்சதும் நீ தாராளமா டார்ஜிலிங் போலாம்..."என்று அவன் கூறியதும் அவள் இதயம் தாள முடியாத வலியில் துடித்தது.


தன்னை போவென்று விட்டான் என்று எண்ணி எண்ணி இரவெல்லாம் கண்ணீர் வடித்தாள்.மறுநாள் காலையே குடும்பம் முழுவதும் கிராமத்திற்கு சென்றனர்.வந்தது முதல் பின்கட்டில் இருந்த ஊஞ்சலிலேயே கழித்தாள் அவள்.


சாயங்காலம் அனைவரும் மறுநாள் விசேஷத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை கவனிக்க கோயிலிற்கும் டவுனிற்கும் என்று சென்று விட்டனர்.மெதுவாக பாட்டி மரகதவல்லியின் அறையை திறந்த நியதி உள்ளே சென்று அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தாள்.


அன்று கிராமத்திற்கு வந்ததும் சாகும் தறுவாயிலிருந்த பாட்டி சமர்த்தை தனக்கு தாலிக் கட்டச் சொன்னத்தையும் நினைவுக் கூர்ந்தவள்
 




Last edited:

Bhavya

அமைச்சர்
Joined
Feb 27, 2019
Messages
1,305
Reaction score
4,767
Location
Thanjavur
பாட்டி.......!"என்று ஹோவென அழுதுக் கொண்டு அங்கேயே கால் மடிந்து அமர்ந்து விட்டாள்.


அங்கே வாயிலில் அவளையே நீர் பொழியும் கண்களோடு பார்த்திருந்த உருவத்தை அவள் கவனிக்கவில்லை.


மறுநாள் உணர்வற்ற பொம்மை போல் நித்திலா சித்தி கொடுத்த அழகிய அரக்கு வண்ண பட்டுப் புடவையில் தயாரானவள் அவர் அணியக் கொடுத்த நகைகளை அணிந்து வந்தவளுக்கு நெருக்க கட்டிய மல்லிகை மலர் சரத்தை இருபுறமும் வழியுமாறு சூடிவிட்டாள்.தேவதையாக இருந்தவளுக்கு திருஷ்டி கழித்தாள் அவள்.


நூறு படிகள் கொண்ட சிறிய குன்றில் இருந்தது வண்டார்குழலி சமேத வன்னீஸ்வரர் திருக்கோயில்.அவர்கள் குடும்பத்திற்கு அவரே குலதெய்வம்.அவர்கள் வீட்டின் எல்லா விசேஷமும் அங்கே தான் நடந்துக் கொண்டு வந்தது.


இன்றும் சொந்தம் பந்தம் நண்பர்கள் என கூட்டம் நிரம்பி இருந்தது அங்கே.கோயிலுக்கு வரும் வரை கொலு பொம்மையாக இருந்த நியதி அங்கே வந்திருந்த கூட்டத்தைக் கண்டு தன்னிலை அடைந்து விழிவிரித்தாள்.


'இது என்ன இவ்ளோ கூட்டம்?என்ன விசேஷம் இன்னிக்கு....?'என்று தனக்குள்ளையே ஆராய்ந்தவளை கோயிலின் பக்க கதவு வழியாக உள்ளே அழைத்துச் சென்றனர் நித்திலாவும் வித்யாவும்.


அங்கே பூமாலை ஒன்றை இவள் கழுத்தில் அவர்கள் அணிவிக்கவும் திடுக்கிட்டாள் அவள்.


"இது என்ன? எதுக்கு இந்த மாலை?...இப்ப சொல்ல போறீங்களா?இல்லையா?""


"எல்லாம் மண்டபத்துக்கு உள்ளே போனா தன்னால தெரியும்..."என்று இருவரும் அவள் இருபுறமும் பிடித்துக் கொண்டு மண்டபத்தின் உள்ளே அழைத்துச் சென்றனர்.அங்கே பட்டு வேட்டி சட்டையில் கழுத்தில் மலர் மாலை அலங்கரிக்க ஐயர் கூறும் மந்திரிங்களை கூறியவாறு இருந்தான் சமர்த்.அதைக் கண்ட நியதி பேசாமடந்தையானாள்.அவளை அழைத்து வந்து அவனருகே அமர்த்தினர்.


நான்கு சுவர் உள்ளே பாட்டியின் வற்புறுத்தலுக்காக நடந்த திருமணம் இன்று சுற்றமும் உறவும் நட்பும் ஊரும் அட்சதை தூவி வாழ்த்த பாட்டியின் அதே தங்க தாலியைக் கட்டி இனிதாக நடந்தேறியது.


அழகாக அலங்கரித்த முதல் இரவு அறைக்குள் நுழைந்த சமர்த் மனைவியைக் காணாமல் அறை கதவை தாளிட்டு அறையை ஒட்டிய பால்கனியில் நிலவை வெறுத்தவாறு அழகின் இலக்கணமாக நின்ற மனைவியின் எழிலில் ஒரு கணம் மூச்சடைத்துப் போனான்.


திரும்பி பாராமலே கணவனின் வரவை உள்ளுணர்வால் அறிந்தாள் அவனின் காதல் கண்மணி.ஆனால் மனதில் இன்னும் உறுத்தும் கேள்விகளால் அவனை திரும்பியும் பார்க்கவில்லை.அவள் அருகில் நெருங்கியவன் அவளின் தோளை மென்மையாகத் தொட்டான்.நெருப்பு பட்டது போல் விலகி நின்றாள் பெண்ணவள்.


"நிதி..!"என்ற அவன் அழைப்பில் விழி விரிய அவனைத் திரும்பிப் பார்த்தாள்.


"எப்படி தெரியும்...?"


"எனக்கு முந்தானாளே தெரியும்....சுரேஷ் கிட்ட நீ பேசும் போதே நாங்க வந்திட்டோம்...அவன் தப்பு அவன் வாயாலையே வரட்டும்னு நாங்க மறைஞ்சு இருந்தோம்....இப்ப நீ சொல்லு நினைவு வந்தும் ஏன் சொல்லல?"


ஏதும் பேசாமல் மவுனமாக இருந்தாள் பாவை.தன்னவளின் தோளைப் பிடித்து தன் புறம் திருப்பியவன்,


"சொல்லு...ஏன் சொல்லாம மறைச்ச?நிதி!இப்போ சொல்லப் போறியா?இல்லயா?"என்று அவள் தோளை பிடித்து உலுக்கினான்.


"எத சொல்லனும்?...ம்....ஏத சொல்லனும்...?காதலியை கட்டிப் புடிச்சிட்டு நின்னத பாத்தனே அதையா?கவலப்படாதே மாத்த முடியாதது எதுவுமே இல்லேன்னு ஆறுதல் சொன்னதையா?இல்ல உங்கள விட்டு போன தப்புக்கு இப்படி ஆயிடுச்சுன்னு வருத்தப்பட்டாளே அதையா?எத சொல்ல சொல்றீங்க...இவ்வளவு ஆனப்புறமும் குடும்பத்துக்காக பிடிக்காத என்ன கல்யாணம் பண்ணியிருக்கீங்களே அத சொல்லட்டுமா..?"


அவள் ஒவ்வொரு பேச்சும் முள்ளாக மாறி அவன் இதயத்தை துளைத்தது.


"ஒட்டு கேக்றவங்க நல்லத கேக்கறதில்லேன்னு உனக்கு தெரியாதா?எங்க முதல் பாதி பேச்சையும் கேக்கல மறுபாதி பேச்சையும் கேக்கல... அரைகுறையா கேட்டு முடிவுக்கு வரது தப்பு......நா காலேஜ் டேஸ்ல ஹிமாவ விரும்பறதா நினைச்சது நிஜம்...ஆனா அது ஈர்ப்பு...நம்ப கல்யாணம் என்னிக்கு நடந்ததோ அன்னிக்கே அவளை மனசுலேந்து தூக்கி எறிஞ்சிட்டேன்...அத சொல்ல போன அன்னிக்கு அவ அப்பா சொல்ற பையனை கல்யாணம் பண்ணிக்க போறதா சொன்னா...நல்லதா போச்சுன்னு குட் பை சொல்லிட்டு வந்திட்டேன்... அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா நீ என் மனசுல குடியேறின....இது தான் நிஜமான காதல்னு உணர்ந்தேன்...அதுவும் நீ காணாம போன அன்னிக்கு...செத்துடலாம்னு இருந்தது...ரெண்டு இழப்ப நம்ம குடும்பம் தாங்காதுன்னு எப்படியோ உயிர் வாழ்ந்தேன்...மறுபடி நீ கெடைச்ச போது எனக்கு மறுஜென்மம் கிடைச்ச மாதிரி உணர்ந்தேன்...என் நினைவே இல்லைன்னாலும் உன் கண்ணுல எனக்கான காதலை பாத்து அவ்ளோ சந்தோஷப்பட்டேன்.....ஹிமா புருஷன் ரொம்ப கெட்டவனாம்... எல்லா கெட்டப் பழக்கமும் இருக்காம்...இத்தனை நாள் அவனோட போராடி இப்பதான் டைவர்ஸ் ஆச்சாம்.... எதேச்சையா ஆபிஸ் வாசல்ல என்ன பாத்து ரெண்டு வார்த்தை பேசி சாரி கேக்கதான் வந்தா...வருத்ததுல தெரியாம தான் தோள்ல சாஞ்சா...இதே நினைச்சு வருத்தப்படாம வேற வாழ்க்கை அமைச்சுக்கோ...மாத்த முடியாதது எதுவும் இல்லேன்னு சொன்னேன்...முழுசா எங்க பேச்ச கேக்கம என்னை தப்பா நினைச்சிட்டே இல்ல..."என்று கண்களில் கண்ணீர் வழிய திரும்பி நின்றான் சமர்த்.


ஐய்யோ என்றானது அவளுக்கு.முழுவதுமாக அறிந்துக் கொள்ளாமல் அரைகுறையாக எதையோ கண்டும் கேட்டும் அவனை தவறாக நினைத்தை எண்ணி தன்னையே வெறுத்தாள்.தன் சந்தேகத்தால் அவன் மனதை உடைத்த தானே அதை சரி செய்ய வேண்டும்.என்ன செய்வது என கலங்கியவள் பின் பழைய நியதியாக தைரியமாக அவன் அருகில் சென்று பின்னிருந்து அவனை அணைத்துக் கொண்டாள்.தன்னவளின் தீண்டல் உயிர் வரை இனித்தது.ஆனால் தன் காதலை அவள் உணரவேயில்லை என்ற வலி அவனை அதை காட்ட முடியாமல் தடுத்தது.தன் தீண்டல் அவனிடம் எந்த மாற்றமும் தரவில்லை என்று உணர்ந்த நியதி


"சமர்த்...ஐம் ரியலி சாரி...நிஜம் தெரியாம என்னென்னவோ பேசிட்டேன்...ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுங்க"


" "


"சமர்த் ப்ளீஸ்...என்னை மன்னிச்சிடுங்க...நா இனிமே உங்கள சந்தேகமே படமாட்டேன்..."


" "


"சமர்த்...என்னை பாருங்க...மன்னிச்சிட்டேனு சொல்ல போறீங்களா?இல்லையா?"


" "


"டேய் யூகே!மன்னிச்சிட்டேனு சொல்லப் போறியா?இல்லையா?


அவள் அடாவடியில் திடுக்கிட்டு திரும்பியவனை பாவமான முகத்தோடு


"ப்ளீஸ்....."என்றாள்.


அவள் பாவனையில் தன்னை மீறி சிரித்தவன் அவளை இழுத்து அணைத்தான்.


"என்னடி மரியாதை குறையுது...புருஷனையே டா போட்றியா....உன்ன!"என்று அவள் இதழ்களை சிறை செய்தான்.


ஊடலில் தொடங்கிய அவர்கள் சொந்தம் இனி என்றும் கூடலில் இனிதே தொடரட்டும் என நாமும் அவர்களை வாழ்த்தி விடைபெறுவோம்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top