• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode NNN -10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,164
Reaction score
4,668
Location
Coimbatore
ஹாய் பிரண்ட்ஸ் 🌺🌺
கதையை படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க பிரண்ட்ஸ் 🌺🌺🌺🌺

10

“ ஐயா!”

சுமதியின் குரல் நடுங்கியது.

“ நான் நம்ப மாட்டேன்!” உறுதியாக அவள் மறுத்தாலும் உள்ளம் நடுங்கிக் கொண்டுதான் இருந்தது..

அவள் கொண்டு வந்து வைத்த சாதத்தை அண்டங்காக்கை உண்ணும் பொருட்டு வந்து உட்கார்ந்தது .

அதை விரட்ட அவள் அதன் பக்கம் திரும்பிய போது,

“ உன் முன்னோர்களுக்கு நீ நியாயம் செய்யவில்லை. அதனாலே தான் உன் முன் ஜென்மத்தில் உறவினர் இன்றி போனதோடு அகால மரணம் அடைந்தாய்.

இப்பிறவியில் பெற்ற தாயை பேணி பாதுக்காத்தாய். அதுவே உனக்கு நல்ல குடும்பத்தை தந்தது.

ஒவ்வொருவரின் நன்மைக்கும் தீமைக்கும் அவர்கள் இப்பிறவியிலோ முற்பிறவியிலோ செய்த வினைகள் காரணமாகும்.

உன் புண்ணிய பலன்கள் முடிந்தது. இனி நீ உன் கர்ம வினைக்கு ஆட்படுவாய்.

காகம் முன்னோர்களாக கருதப்படுகிறது”

அடுத்து அவர் என்ன சொல்லி இருப்பாரோ? அதற்குள் அந்த காகம் பறந்து விட்டது.

அது தன் இனத்தவர்கள் யாரையும் கூவி அழைக்கவில்லை. அதுவே ஆச்சர்யமாக இருந்தது.

“ இதை ஒரு பசுமட்டுக்கு வை. சாப்பிடுகிறதா பார்ப்போம்”

சித்தர் சொன்னதில் அதிர்ந்து “ ஏன் ஐயா? “

“ உன் கையால் இதுவரை பிறத்தியாருக்கு நீ உணவிட்டதில்லை.
அப்படி உணவிட்டு இருந்தால் அந்தப் புண்ணியம் உன் குடும்பத்தை காப்பாற்றி இருக்கும்.

அதற்காகத்தான் உன்னிடம் பிச்சை கேட்டு வந்தேன்.
இதுவரை நீ பிச்சை இட வில்லை.

நீ கொண்டு வந்த உணவை காகம் முகர்ந்து விட்டது. அதை நான் உண்ண மாட்டேன்.

காகமும் அதை உண்ணவில்லை. இனி பசுமாட்டிற்கு அதையோ வேறு புதிய உணவையோ உன் கையால் கொடுத்து பசு மாடு அதை உண்டால் உன் குடும்பம் மீளும்.

இன்னும் நம்பவில்லையா?

இந்த உணவு புதிய பானையில் புதிய அரிசியில் சந்தியா காலத்தில் சமைக்கப்பட்டது. சரிதானே? “

அவர் சொன்னதும் வியப்புன் உச்சிக்கே சென்றாள் சுமதி. அவர் சொன்னது உண்மைதான்.

புதிதாக அந்த குக்கரை வாங்கி இருந்தாள். அரிசியும் புதிய மூட்டையை இன்று பிரித்து சமைத்து இருந்தாள்.

மாலை நேரம்தான் சமைத்தாள். இன்று இரவு சாதம் வேண்டும் என்று ராஜா சொன்னதால் செய்து இருந்தாள்.

“ இப்போ என்ன செய்யணும் ஐயா? “

“ பசுமட்டுக்கு இந்த உணவை வைத்து விட்டு வா. அது சாப்பிட்டதா என்றும் சொல். மற்றது பிறகு”

சுமதி ஆஷாவிடம் சொல்லி வீட்டின் தலை வாசல் கதவை பூட்டிவிட்டு சித்தரிடம் சொல்லி அவரையும் அழைத்துக் கொண்டு அதே தெருவில் இருந்த பால்காரர் வீட்டுக்கு சென்று அதை வைக்க சொல்ல,

“ மாட்டுக்கு உடம்பு சரி இல்லை. ரெண்டு மூணு நாளா சாப்பாடு சாப்பிடுறதில்லை. ஆமா இவர் யார் அக்கா?“ என்றார் சித்தரை பார்த்து அவர்.

“ இவர் கோவில்ல தெரிஞ்சவர். சரி வர்றேன் “

என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் சுமதி.

“ இதுக்கு என்ன அர்த்தம்? “

“ நீ கொடுத்தாலும் இனி அன்னதானம் ஏற்கப்பாடாது. “

“ நாளைக்கு வேற பசுமட்டுக்கு இல்ல காகத்துக்கு படையல் போட்டு கொடுக்கலாமா? “

சுமதி கேட்க,

“ இன்று தான் அம்மா விசேஷம். “

“ என்ன விசேஷம் ஐயா? “

“ முன் ஜென்மத்தில் இன்று உன் இறந்த நாள் “

சற்று திட்டுக்கிட்டாலும், “இதனால் என்ன பலன் ஐயா?”

“ உன் ஆத்மா உயிர் கொண்டு இருந்தாலும் அதை யாரும் ஆற்றுப் படுத்தபடவில்லை. இது ஒரு குறையாக அது சுற்றத் தொடங்கி விட்டது.

உனக்கு நீயே பிண்டம் வைத்து அது ஏற்றுக் கொள்ளப் பட்டால் ஒரு கதை. இல்லை என்றால் வைக்க வேண்டியவர்கள் வைக்க வேண்டி வரும் “

அவர் சொன்னதில் கோபம்தான் வந்தது சுமதிக்கு.

“ நானே இங்கே உயிரோட இருக்கேன். என் ஆத்மா தனியா எப்படி சுத்தும்? “

அதற்கு சிரித்தார் சித்தர்.

“ உறங்கும் போதும் நீ உயிரோடுதான் இருக்கிறாய். உன் நினைவில் கனவில் எங்கேங்கோ சென்று வருகிறாய். யார் யாரையெல்லாமோ காண்கிறாய். உரையாடுகிறாய். அங்கேல்லாம் நிஜமாகவே நீ இருப்பதாக உணர்கிறாய். அப்போது உன் ஆத்மா எங்கே இருக்கிறது? “

“ஐயா?”

“ உன் ஆத்மா உனக்குள் இருந்தாலும் அது ஏக்கத்தில் இருக்கிறது. அதனால் தான் உன் கையால் உயிரினங்களுக்கு உணவிடச் சொன்னேன் தாயே!”

“ இதுவரை எந்த பிறத்தியாருக்கும் நான் உணவிட்டதே இல்லையா அய்யா? “

“இல்லை. நீ உணவிட்டவர்கள் உன் உறவினர்கள், நண்பர்கள் தான். பிற ஜீவங்களுக்கு நீ பசியாற்றவில்லை.

சென்ற வருடம் குருவிகளுக்கு தண்ணீரும் தீவனமும் இதே நாளில் வைத்தாய்.

ஆனால் அதை உன் கணவன் தூக்கி எரிந்து விட்டான்.

உன் வீட்டில் பூனை ஒன்று உண்டு. அதற்கும் நீ உன் கையால் உணவளித்ததில்லை. உன் மகள்தான் பராமரிக்கிறாள். “

சித்தர் சொல்ல வியப்புடன் சிறிது பயமும் வந்தது சுமதிக்கு.

கூடவே சிறிது சந்தேகமும் வந்தது. ‘ இவரை எந்த அளவு நம்பலாம்? சில விஷயங்கள் சரியாக இருந்தாலும் முழுவதும் எப்படி நம்புவது?’

அவள் எண்ணவோட்டம் தெரிந்தோ என்னவோ சிரித்தார் சித்தர்.

“ என்னை நீ நம்ப வேண்டாம் தாயே. நடப்பவை நடந்தே தீரும்!”

சொல்லிவிட்டு அவர் கிளம்பத் தொடங்க சுமதி நிதானித்தாள்.

“ ஐயா எனக்கு தெளிவை ஏற்படுத்திவிட்டு செல்லுங்கள் ஐயா “

“இரண்டு வெற்றிலையும் பாக்கும் வைத்துக் கேள். சொல்கிறேன் “

சுமதி வீட்டுக்குள் ஓடிப் போய் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து இருந்த வெற்றிலை பாக்கை ய எடுத்து வந்தாள்.

சென்ற வாரம் வாங்கி வந்தது.

ராஜா அசைவம் சாப்பிட்டு விட்டு வெற்றிலை போடுவான். அதனால் வீட்டில் வெற்றிலை இருக்கும்.

வெற்றிலையை அவருக்கு வைத்துக் கொடுத்துவிட்டு “சொல்லுங்கள் ஐயா “ என்றாள்.

வெற்றிலையை வாயில் குத்தப்பிக் கொண்டே அவர் சொல்லலானார்.

முன் ஜென்மத்தில் நடந்த கதைகளை சொல்லிக்கொண்டே வந்தார்.

ஒரு ஊகம் இருந்தாலும் தான் முன் ஜென்மத்திலும் சிறப்பாக வாழ்ந்து இருப்போம் என்று அவள் நினைக்க, ‘ வயதான நிராதாரவான மூத்தாட்டி ‘ என்று அவளைக்கு குறித்து சித்தர் சொல்ல வயிறு கலங்கிப் போனாள் சுமதி.

பின்னர் அவளை காஞ்சனா கொன்றதாக சொல்லவும் விழிகள் தெரித்துவிடும் போல் ஆனது சுமதிக்கு.

இறுதி வரை கேட்டு முடித்தவள் அங்கேயே மயங்கி விழுந்தாள்.

சித்தர் அவ்விடம் விட்டு அகன்றார்.

கவிதைப் புத்தகம் படித்துக் கொண்டு இருந்த ஆஷாவை அவள் வளர்க்கும் மியாவ் குட்டி காலில் பிராண்டியது.

புத்தகத்தை மூடி வைத்து விட்டு அந்த மியாவ் குட்டியை அள்ளிக் கொண்டாள் ஆஷா.

மியாவ் அவளை இழுக்க, ‘ என்னவாயிருக்கும்? ‘ என்று யோசித்தபடியே அது போன திக்கில் வந்தவள் மயங்கிக் கிடந்த தாயைக் கண்டாள்.

பதறித் துடித்த ஆஷா செய்வது அறியாமல் நின்றது ஒரு நிமிடமோ அரை நிமிடமோ இருக்கலாம்.

அடுத்து அவள் உடனடியாக செய்தது பூபதிக்கு அலைபேசியில் அழைத்ததைத்தான்.

ஒரு அவசரத்திற்கு இருக்கட்டும் என்று சுமதிதான் அதைப் பதிந்து வைக்கச் சொல்லி இருந்தாள்.

ஆஷா அழைத்ததும்

“ சின்னக் கண்மணிக்குள்ளே வந்த செல்லக் கண்மணி
எந்தன் சின்னக் கண்மணி “- என்று பாடிய அலைபேசியை அதிசயமும் ஆச்சர்யமுமாக பார்த்த பூபதியின் கை ஆசையுடன் அழைப்பை ஏற்றது.

அந்தப் பாட்டு அவளுக்கு மட்டும் தான் ரிங்க் டோனாக வைத்து இருந்தான்.

“ ஹலோ. சொல்லு கண்மணி “

அவன் பேசிய எதையும் கேட்காமல் அவன் குரலில் தெரிந்த பெருங்காதலையும் உணராத ஆஷா,

“ அம்மா…. அம்மா மயங்கி விழுந்துட்டாங்க. வெளிய வா. எங்க வீட்டு வாசல்கிட்ட தான் இருக்காங்க. உடனே வா! “

என கிட்டத்தட்ட கதறினாள்.

பூபதி சட்டென நிதானத்திற்கு வந்தான். விஷயத்தை உடனே அன்னைக்கு சொல்லிக்கிட்டு கொண்டே வீட்டு வாசல் படிகளை கடந்து வெளியே வந்தவன் வேக வேகமாக ஆஷா வீட்டுக்கு ஓடினான்.

பின் தொடர்ந்து வந்த ஸ்ரீயும் வீராவும் ‘பரவாயில்லை. பையன் பொறுப்பாகத்தான் இருக்கான் ‘ என்பதாகப் பார்த்துக்கொண்டாலும், ‘ இந்த விஷயதை தங்களுக்கு முதலி சொல்லாமல் இவனுக்கு ஏன் ஆஷா சொன்னாள்?’ என்றும் சிந்தனை செய்தார்கள்.

****************************************************

பூபதி தன் அலைபேசியை ஆவலாகப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

சுமதி மயங்கி விழுந்த போது ஆரம்பித்தது, அதன்பின் ஆஷா அவனுக்கு அடிக்கடி போன் செய்தாள். சுமதி விஷயமாகத்தான்.

ராஜா சுமதி சொன்ன கதையை நம்பவில்லை.

அவன் மீதும் சற்று விலகல் வந்தது சுமதிக்கு.

மகள் மீது பாசம் இருந்தாலும் குழப்பம் அதை மிஞ்சியது.
ஆகவே மகளிடம் முகம் திருப்பலானாள் சுமதி.

இதில் மனதில் அடி வாங்கிய ஆஷா தந்தையை நாட அதுவும் சுமதிக்கு பிடிக்கவில்லை.

முன் ஜென்மத்தில் அவன் காதலியாக நினைத்து பார்க்கவே முடியவில்லை சுமதிக்கு.

தன் மீது உயிராக இருக்கும் தன் மகளா முற்பிறவியில் தன்னைக் கொன்றாள்?

மீண்டும் காஞ்சனா புகைப்படத்தை எடுத்து வைத்துப் பார்த்த்தாள் சுமதி.

எதுவுமே நினைவு வரவில்லை அவளுக்கு.

ராஜாவிடம் தன்னுடைய முன் ஜென்ம கதையை மட்டும் சொல்லி இருந்தாள் சுமதி.

அதைக் கண்டு கொள்ளாத அவன் தனது வேலையில் நேரம் காலம் இன்றி அலைந்தான்.

ஆக இப்போது வீட்டில் தன்னை ஒதுக்கப்பட்டவளாக உணரத் தொடங்கி இருந்தாள் ஆஷா.

இதற்குத்தான் முன் ஜென்மமும் பின்ஜென்மமும் மனிதனுக்கு சொல்லப்படவில்லை. அதை அறிந்தால் நிகழ் காலம் நரகமாகிவிடும்.

இப்படித்தான் சரோவுக்கு எதிர்காலம் சொல்லப்பட்டது.

அதில் அவர் அறிந்து கொண்டது அடுத்த ஜென்ம நிகழ்வுகளை.

அதில் முக்கியத்துவம் எதுவும் இல்லை என்று அவர் நினைத்தார் .

கடைசி காலம் வரை நிம்மதியாக இருந்தார்.

உயிர் விடும் சமயம் கணவன் நினைவு வந்தது.

அவரின் அதிகபட்ச ஆசை கோவில் என்று அவரே நினைத்து இருக்க, கடைசி நொடியில் அவர் தன் கணவனுடன் இருக்கும் பாக்கியம் வேண்டினார்.

அதன் படி இப்போது இருக்கிறாரா என்றால் தெரியவில்லை.

பூபதிதான் ஆண்டி என்றால் ஆஷாதான் காஞ்சனா என்றால் சரோ எங்கே?

சுமதி இதை எண்ணி மிகவும் குழம்பி போனாள் .

விளைவு? சென்ற பிறவிக்கும் இப்போதய பிறவிக்கும் தொடர்பு இல்லை என்று எண்ணாமல் மகளை சற்று தள்ளி நிறுத்தினாள்.

ஆஷா வேறு வழி இன்றி வீரா குடும்பத்திடம் மன ஆறுதலுக்கு பேச ஆரம்பிக்க வீராவும் ஸ்ரீயும் வேலை காரணமாக ஆஷாவுக்கு முழு நேர கவனம் செலுத்த இயலவில்லை.

மாட்டினான் பூபதி!

இப்போதெல்லாம் அடிக்கடி அவனுக்கு அழைக்கிறாள் ஆஷா.

அவனும் இப்போது உல்லாசமாக சுற்றுகிறான்.

அதில்தான் இன்று இன்னமும் அவள் போன் அழைப்பு வரவில்லையே என்று பார்த்துக் கொண்டு இருக்கிறான்.

.

Nirmala senthilkumar

அமைச்சர்
Joined
Jan 25, 2022
Messages
2,574
Reaction score
6,858
Location
Salem

Nirmala vandhachu 😍😍😍
 
Nirmala senthilkumar

அமைச்சர்
Joined
Jan 25, 2022
Messages
2,574
Reaction score
6,858
Location
Salem
வெல்கம் அக்கா ♥♥♥♥♥
கதையை படித்து விட்டு சொல்லுங்க அக்கா🌹🌹🌹
Bending vachachu ma
Complete pannittu varen
Konjama busy athan ma
Amma oorukku poittangha vettu velai plus sargery nala intha heat romba kastama irrukku
Read panna ve mudiyalai ma
Sry onnume sollala intha story kku
Read pannittu varen 🤗🤗🤗
 
Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,164
Reaction score
4,668
Location
Coimbatore
Bending vachachu ma
Complete pannittu varen
Konjama busy athan ma
Amma oorukku poittangha vettu velai plus sargery nala intha heat romba kastama irrukku
Read panna ve mudiyalai ma
Sry onnume sollala intha story kku
Read pannittu varen 🤗🤗🤗
Take care ka ♥

இந்த எபி என் சொந்த கருத்து வருது.அதான் கேட்டேன் ka🤩
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top