Vetriyaa Tholviyaa - Chapter 3 - Part 2

#1
Chapter 3 - Part 2 continues:

“இதுவே லேட்டுன்னு நான் நினைக்கிறேன்.” என்று சொன்னது தான்.
“என்ன ரஜினி ஏதாவது பிரச்சனையா….?” என்று பதட்டத்துடன் கேட்கும் கணவரை சமாதானம் படுத்தும் வகையாக.
“ஏங்க பையன் வயசு ஏறுது. அதை சொன்னா….தேவையில்லாம பேசிட்டு.” என்று தன் மனைவி சொன்ன பிறகு தான் சாருகேஷூக்கு நிம்மதி வந்தது.
“நான் பயந்துட்டேன் ரஜினி. அம்மா இல்லாத பையன் தப்பா போயிட்டான்னு ஊரு சொல்ல கூடாது பாரு….?அதான். அவன் கிட்ட கேட்டுட்டு பொண்ணு பார்த்துடலாம்.” என்று வாக்குறுதி வழங்கிய கணவனை நினைத்து தலையில் அடித்துக் கொள்ளலாம் என்ற நினைப்பை அடக்கியவராய்.
“அவன் கிட்ட கேட்டா வேண்டாமுன்னு தான் சொல்வான். நாம தான் பார்த்து முடிக்கனும்.” என்று சொல்லி தான் சாருகேஷ் மும்முறமாக மகனின் திருமண வேட்டையில் இறங்கியது.
அப்படி தான் செல்லம்மாவை பார்த்ததும் பிடித்து போய் அவள் தாத்தாவிடம் பெண் கேட்டு அவமானப்பட்டதும்.
சாருகேஷ் வந்ததும் தன் மனையிடம் அதை பற்றி சொல்லி வருத்தப்பட்டாலும் “மனிஷூக்கு தெரியவேண்டாம் ரஜினி. இளம் ரத்தம்லே ஏதாவது பண்ணிட போறான்.” இது தான் சாருகேஷ்.
வெங்கடபூபதி அவமானப் படுத்திய போது அப்போது வருந்தினாலும் அதை பெரியது படுத்தாமல் விட்டு விட்டார்.
ரஜினி பாய்க்கு ஒன்று தான் விளங்கவில்லை. இதை பற்றி தானும் சொல்லாது தன் கணவரும் சொல்லாது மனிஷூக்கு எப்படி தெரிய வந்தது என்று.
படுக்க சென்ற மனிஷ் பேரை பாரு செல்லம்மாவா செல்லம்மா….இவளுக்கு நாம் செய்ததும் அதிகம். அவள் அண்ணன் படுத்து இருப்பதும் அதிகம் என்ற நினைவோடு தூக்கம் தழுவியது என்றால்….
தூங்காது விழித்திருக்கும் தன் அண்ணாவை பார்த்திருந்த செல்லம்மா. சஞ்சய் கைய் பற்றி….. “ எதை நினைத்தும் மனசை போட்டு குழப்பிக்காதே அண்ணா. எல்லாம் சரியாயிடும்.” என்ற தங்கையின் ஆறுதலில் திடுக்கிட்டு போய்.
“எதை நினைக்காதேன்னு சொல்ற….?” என்று பதட்டத்துடன் வினவ.
“அந்த கேசு விஷயமா தான் அண்ணா.” என்று தன் தங்கை சொன்ன உடன் தான் கொஞ்சம் நிம்மதி அடைந்தான்.
தன்னிலை அடைந்ததும் தன் நண்பனிடம் பேசிய முதல் வார்த்தை “செல்லம்மாவுக்கு அனைத்தும் தெரியுமா…..?” என்பதே….
தன் அண்ணன் குணம் அறிந்து செல்லாம்மா சுகனிடம் முதலிலேயே சொன்னது போல்.
“அந்த கோல்டன் ஹவுஸ் கேசு போட்டு இருப்பதை தவிர வேறு எதுவும் சொல்லலே….” என்று தன் முகம் பார்க்காது சொன்ன வார்த்தையைய் நம்பினாலும்.
தன் தங்கை இப்படி சொன்னதும் சஞ்சய் அதிர்ந்து தான் போனான். பின் தன் நண்பன் சொன்னதையே சொன்னதும் தான் செல்லம்மா முகத்தையே பார்க்க முடிந்தது சஞ்சய்யால்.
தன் தங்கை தன்னையே பார்த்திருப்பதை பார்த்து “நினைக்கல செல்லம்.” என்றவன்.
பின் “ இரண்டு நாளு இங்கேயே இருக்கியே….இன்று வீட்டுக்கு போயிட்டு வாயேன். அது வரை சுகன் பார்த்துப்பான்.” என்று எவ்வளவு சொல்லியும் கேளாது.
“எல்லாம் எனக்கு தெரியும் . என்னை பத்தியோ….இல்லை வேறு எதை பத்தியோ… யோசிக்காது தூங்குங்க. இது மாதிரி எல்லாத்துக்கும் கவலை பட்டு தான் இங்கு வந்து படுத்து இருக்கிங்க.
எது வந்தாலும் பார்த்துடனும் என்ற தைரியம் வேண்டாமா….? இப்போ இந்த தொழிலுக்கு வந்தவன் நம்மலை என்ன செய்துட முடியும்.
நம்மல மாதிரி தானே அவனும். அவன் எப்படி நம்மை சாச்சானோ அது மாதிரி சாய்க்க பிளான் செய்யிறதை விட்டுட்டு இப்படி சோர்ந்துடுவியா…..? நீ இப்படி படுத்து இருப்பது வீட்டுக்கு தெரிஞ்சா….” என்று சொல்லி முடிக்க வில்லை.
“வேண்டாம் பாப்பா சொல்லாதே…..கஷ்டப்படுவாங்க.” அவன் சொல்ல.
“ஆமாம் வேதனை தான் படுவாங்க” என்று தன் அண்ணனிடம் சொல்லியவள். மனதுக்குள் தங்கள் வளர்ப்பை நினைத்து வேதனை படுவாங்க. என்று முனக.
“என்ன பாப்பா…..” என்று கேட்டதுக்கு.
“ஒன்னும் இல்லேன்னா…..” என்று மழுப்பி விட்டு படுத்தவளுக்கு தூக்கம் தான் கிட்ட வருவேனா என்று அடம் பிடித்து நின்றது.
அடுத்து இரண்டு நாளிலேயே வீட்டுக்கு போகலாம் என்று மருத்துவர் சொல்லி கூட செல்லம்மா ஒரு வாரம் மருத்துவமனையில் வாசம் முடிந்த பின் தான் வீட்டுக்கே தன் அண்ணனோடு வந்தாள்.
அதன் பின் கூட பாராம்பரியம் தங்கநகை மாளிகைக்கு அனுப்பாது காலேஜ் நேரம் தவிர கடை மூடும் நேரம் வரை கடையே தன் இருப்பிடமாக ஆக்கி கொண்ட செல்லம்மா நேரம் தவறாது வேலையாளை அழைத்து அண்ணாவை பற்றி விசாரிக்கவும் தவரவில்லை.
சுகன் செல்லம்மாவின் முகத்தில் இருக்கும் சோர்வை பார்த்து.”நீ வீட்டுக்கு போ பாப்பா நான் பார்த்துக்குறேன்.” என்று எப்போதும் சஞ்சயின் வலது கைய்யாக செயல் பட்ட சுகன் எவ்வளவோ சொல்லி கூட கேட்காது.
“பரவாயில்லை அண்ணா. நானும் வேலை கத்துக்கனும் தானே….?” வேலை கற்கவே வருகிறேன் என்று சொன்னாலும்...அவள் செயல் அனைத்தும் வேறு ஏதோ ஒன்றை எடுத்துக் கூறுவது போலவே இருந்தது சுகனுக்கு.
அதற்க்கு ஏற்றார் போல் ஒரு மாதம் சென்ற நிலையில் சுகன் செல்லம்மாவிடம். “கொல்கத்தாவில் அனைத்து நகை வியாரிகளின் சந்திப்பு அடுத்த வாரத்தில் உள்ளது. அதற்க்கு சஞ்சய் போக தேவையில்லை நானே போய் வருகிறேன்.” என்றதும்.
“ நீங்க வேன்டாம் அண்ணா. நானே போறேன்.” என்று சொல்லியவளை சந்தேகமாக பார்த்த சுகன்.
“ஏன்…..?” என்ற கேள்விக்கு.
“இங்கு தனியா நான் எப்படி சமாளிப்பது அண்ணா. அங்குன்னா எல்லோரும் பேசுவாங்க நான் பாட்டுக்கு கேட்டுட்டு வந்துடுவேன்.” என்று சொல்லியவளை இன்னும் சந்தேக கண்ணுடன் பார்த்த சுகன்.
“ உனக்கு ஒன்னும் தெரியலே….?இதை என்னை நம்ப சொல்ற…..? நீ சொல்வது மீன் குட்டிக்கு நீச்சல் தெரியலேன்னு சொல்றது போல இருக்கு.” என்று சொல்லியவன்.
பின் “வேண்டாம் பாப்பா நீ எதுக்கு போக வேண்டும் என்று நினைக்கிறேன்னு எனக்கு தெரியும். வேண்டாம் அவன்….” என்று இழுத்து நிறுத்தியதும்.
“என்ன அவன் ஒரு மாதிரி அது தானே…..? அதோடு நம்ம கடைக்கு வந்த பொண்ணோட நிஜப்பெயர் மீனலோச்சனி. அவள் மனிஷோட பர்சனல் செகரெட்ரி. ஆபிசுக்கு மட்டும் இல்லாது அனைத்துக்கும் அவள் அவனுக்கு பர்சனல் சரியான்ணா….?” என்று கேட்டு தன் புருவத்தை உயர்த்தியவளை பார்த்து அதிசயத்து தான் போனான் சுகன்.
 
#10
Hi mam

மீன் குஞ்சுக்கு நீந்தக்கற்றுக்கொடுக்கவேண்டுமா,செல்லம்மா எல்லாவற்றையும் இலகுவாக கையாண்டு பதிலடி கொடுக்கவேண்டுமென்று நினைக்கிறார் போல,அதற்காகத்தான் கொல்கத்தா தான் போக்கும் என்று நினைக்கின்றரா,அங்கே அந்த சந்திப்பில் மனிஷ் செல்லம்மா சந்திப்பு இடம்பெறுமல்லவா ,அப்போது யார் யாரை மிரட்டப்போகின்றார்கள் என்று பார்க்க ஆவலுடன் உள்ளேன்.மிகவிரைவாக உங்களின் அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன் mam.

நன்றி
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top