• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி பாகம் இரண்டு 45..2'

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
Vow!
What a meaning full & Exact Review (Max Readers think like so)
Really Dev Anna Has deserved it(y)(y)(y)(y)(y)(y)(y)(y)...
We are All Expecting the Same thing from you " Come Soon"..
Neenga Neraiya Ezhuthanum Na....
நான் அசைக்கற ஆணி இனி ஒண்ணுமே இல்லீங்க தம்பி..
எழுதறது தான் இனி என் வேலை..
 
Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
மொதல்ல என் மனமார்ந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன் கவிம்மா.. எழுதற எங்கிட்ட இருக்கறது வார்த்தைகள் மட்டுமே ! ஆனால்,உங்களுடைய மனப் பூர்வமா ஆழ்ந்து அலசிய விமர்சனத்திற்குப் பதில் சொல்ல என்னிடம் சக்தி வாய்ந்த வார்த்தைகள் இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன்..

"நன்றிங்க"..
......................
இந்த விசயத்துக்கு வருவோம்.. ஒரு சிலருக்கு ஒண்ணப் பத்தி எத்தனையோ சொல்லணும்னு மனசுல இருக்கும்..அதை எழுத்துல குடுக்க வரைல வார்த்தைகளே வழக்கற்றுப் போன தடுமாற்றம் வரும்..அவங்களையே நேர்ல பாத்தா அந்த விசயம் பத்தி அக்கு வேற,ஆணி வேறையா அரை நாளுக்கு மூச்சு விடாம அலசுவாங்க..

சொல்லணும்னு ஆசை தான்..ஆனா ஏதோ ஒரு தயக்கம்..தப்பாயிடுமோன்னு பயம்..சொல்லாம போறதுக்கும் மனசில்ல..கடைசீல எதுக்கு வம்புன்னு பொத்தாம் பொதுவா சூப்பர்ப், நைஸ்னு ஒத்த வார்த்தைல முடிச்சுட்டுப் போயிடுவாங்க..அந்த வார்த்தைல நிச்சயமா ஓராயிரம் விசயம் இருக்குன்னு நாம நம்பலாம்.. எனக்கும் அதுக்குப் பதிலா நன்றியச் சொல்றதத் தவிர வேற வார்த்தைங்க கெடைக்காது.. அது ஒத்தச் சொல்லுல ஓராயிரம் விசயப் பரிமாற்றம் !

"வட்டார வழக்கு"..
=≠=============
வட்டார வழக்குல எழுதலாம்னு எனக்குத் துணிச்சலக் குடுத்தவர் கரிசல் மண்ணின் பிதாமகன் ஐயா கி.ராஜ நாரயணன் அவர்கள் ! மொத மொதல்ல அவரோட "கோபல்ல கிராமம்"நாவலப் படிச்சுட்டு அன்னிக்கு நான் தூங்கவே இல்ல..என்னப் பொறுத்த வரைக்கும் நல்ல கதை,நல்ல சினிமாங்கறது..அது முடிஞ்ச பின்னும் மனசப் பிசையறது தான் ! படிச்சு, பாத்து முடிச்ச பின்னாலயும் ஒரு பத்து நிமிசமாவது அதப் பத்தி யோசிக்க வெக்கணும்..அந்த வகை நாவல் கோபல்ல கிராமம்..

நாவல்ல பல எடங்ள்ல பல வார்த்தைங்க புதுசா இருந்தாலும் கதை புரிஞ்சு அசர வெச்சுது..காரணம் தான் சந்திச்ச மனிதர்களப் பத்தி அவங்க பாஷைலயே எழுதினது தான்..அதுல இருந்த உண்மைக்காகவே அது உயர்வானது..உண்மையின் சக்தி அப்படி !

என் கதையின் மாந்தர்களும் நான் சந்திச்சவங்க.. எல்லாருமே கொங்கு வட்டாரத்தச் சேந்தவங்க.. அவங்க பேசினதும் வட்டார வழக்குல தான்..பெருந்துறையே கதைக் களம்னு முடிவானதும் பேச்சும் வட்டார வழக்கானது..அது எனக்குச் சுலபமானதும் கூட ! எனக்கு எது சுலபமா வருதோ அதச் செய்யறது நல்லது.. ஏன்னா,அதச் சிறப்பாச் செய்ய முடியும்யுங்கறது என் நம்பிக்கை..

உத்துக் கவனிச்சீங்கன்னா என் எழுத்தே கலந்து கட்டுன ஒண்ணு தான்..காதல் நீலாம்பரின்னு பேரு தானே தவிர அதுல கொஞ்சலோ,டூயட்டோ இல்ல.. தத்துவ விசாரணைகள் பெருசா நடக்கும்.. உறவுகளப் பத்தின விவாதங்கள் அப்பப்ப வரும்..உணர்ச்சிகளப் பத்தி ஒம்பது பக்கம் அலசுவாங்க..சீரியஸா யோசிக்கைல தடார்னு கொஞ்சம் நகைச்சுவை வரும்..சிரிச்சுட்டிருக்கைல சோகம் மூஞ்சில அறையும்..அழலாம்னு கண்ணச் சுருக்கைல ட்விஸ்ட் வந்து அத விரிய வெக்கும்..அமானுஷ்யம் நானும் இருக்கேன்னு கையசைக்கும்..சஸ்பென்ஸ் தன் பங்குக்குக் கண்ணடிக்கும்..கடைசியா ஆக்சன் ரத்தத்தத் தெறிக்க விடும்..இதெல்லாம் எதுவுமே என் திட்டப்படி வந்ததல்ல..போற போக்குல அமைஞ்சது...எல்லாமே உங்க எல்லாரோட கமெட்ணட்ஸ்னால தான் !

கதைல,கமெண்ட்ஸ்ல பாத்தீங்கன்னாலும் ஒண்ணுல பேச்சு நடைல இருந்தா அடுத்தது கவிதை நடைக்குப் போயிடும்..கதைல காதல்னு வந்துட்டாலே கவிதை நடைக்கு என் எழுத்து தாவறத நீங்க கவனிச்சிருக்கலாம்..இது என்னையறியாம அமைஞ்சது..எழுதும் போது திட்டமிட்டு அமைக்கல.. இப்ப நாவல முழுசாப் படிக்கைல எம் மனசுல பட்ட என் எழுத்தப் பத்தின கணிப்புகள்..

என் எழுத்து நடையே கலந்து கட்டின ஒண்ணு தான்.. என்னப் பாதிச்ச ஜெயகாந்தன்,தி,ஜானகி ராமன்,கி.ராஜ நாராயணன் தேவன்,கொத்தமங்கலம் சுப்பு, சாண்டில்யன்,சுஜாதா, பால குமாரன்,ஜிம் கார்பெட் (கானக வர்ணிப்பில் இவர் கில்லி !)..எல்லாரையும் கலந்து கட்டி அடிச்ச புரூட்ஸ் ஜூஸ் தான் "தேவா"...

கதம்பச் சாதம்னு நான் ஒண்ணச் சாப்பிடுவேன்.. சாப்பாடு,சாம்பார்,ரசம்,தயிர்னு எல்லாத்தையும் கலந்து பிணைஞ்சு அதுக்குப் பொரியல சைடு டிஷ்ஷா எடுத்துக்குவேன்..அது ஒரு விதமான டேஸ்டா இருக்கும்...தேவாவும் கதம்பச் சாதமே !
 
Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
காதல் நீலாம்பரி எந்த வகை நாவல்னா மத்தவங்களால மட்டுமில்லீங்க..என்னாலயும் இனம் பிரிச்சுச் சொல்ல முடியாது..அது ஒரு நாவல்..அவ்வளவு தான் !

பெண்மை..
....................

நான பல எடங்கள்ல சொல்லி இருக்கேன்..பெண்கள் பற்றிய ஆச்சரியமும்,தேடலும் எனக்கு என் அம்மாவிலிருந்து தொடங்கியது..இத்தனை வருச வாழ்வானுபவத்துல முழுக்கக் கெட்டவளை,வாழவே தகுதியில்லாத ஒரு பெண்ணை இது வரை நான் சந்திக்கவே இல்லை..

ஒரு சின்ன உதாரணம் ! எனக்கு மேல் மட்டத்திலிருந்து அடி மட்டம் வரை எல்லா உறவுகளிலும் பெண்கள் உண்டு..சத்திய மங்கலம் கொளத்தூரில் மலை வாசிகளோடு 15நாள் தங்கியிருக்கிறேன்.. பெருந்துறை வாய்க்கால் மேடு நரிக் குறவர் குடியிருப்பில் ஒரு மாதம் தங்கி அவர்கள் வாழ்வியலைத் தேடியிருக்கிறேன்.. பெருந்துறை புது பேருந்து நிலையத்தில் பிச்சையெடுக்கும் பாப்பாம்மாவைக் கண்டால் கட்டிங்குக்குக் காசும்,சுருட்டும் வாங்கிக் கொடுத்துப் அஞ்சு நிமிசம் பேசாமல் வர மாட்டேன்..முக நூலுக்கு வந்த பின் டாக்டர்,வக்கீல்,இஞ்சீனியர் என மெத்தப் படித்தவர்களுடன் நட்பானேன்..

விதங்கள் வேறு படாமலே தவிர நேரிலோ,போனிலோ பேச்சைத் துவங்கியவுடன் அவர்களின் முதல் கேள்வியே "சாப்டீங்களா?"என்பதாகத் தான் இருக்கும்.. அதுவே தாய்மையின் அம்சம் ! (பெருந்துறை பிச்சைக்கார பாப்பம்மா..."மவராசரே ! நல்லா இருக்கீங்களா..சாப்டீங்களா?வேளா வேளைக்கு கொஞ்சமாவது கொலைய நனைச்சுக்கணும் சாமி")
இப்பவும்..எப்பவும் சொல்வேன் கவிம்மா ! பெண்மையில் மிஞ்சி,எஞ்சி நிற்பது தாய்மை மட்டுமே !

ரெண்டாம் பாகத்துல மனுவ எப்படிக் கொண்டு வர முடியும் கவிம்மா?அருக்காணி அம்மா சாவுக்கப்புறம் பிளாஸ் பேக்கா சித்ர மாலா கதைய கந்தசாமி சொல்றார்..இதுக்குள்ள மனுவ நொழைச்சா பிச்சுக்கிட்டுத் தனியாத் தெரியும்..ரெண்டாவது சித்ர மாலா கேரக்டர் பலவீனப் படும்..பிளாஸ் பேக்குக்கு அப்புறம் மனு ஏறக்குறைய கோமா.. அவங்க ஆஸ்பிடலுக்குப் போனதும் கதை இருநூறு சதவிகிதம் ஆக்சன்ல எறங்கிடுது..சங்கர் படம் மாதிரி கிளைமாக்ஸ்க்கு முன்ன ஒரு "ரண்டக்க ரண்டக்க'' வெக்கலாம்னா ஒட்டாதே?

சக்தி..!!அதுல நானும் உண்டு.. என் காதல்,குடி,புகை, கோபம்,முரட்டுத்தனம்..அவ்வளவே ! மத்தபடி அவனப் பாராட்டி நீங்க சொன்ன குணங்கள் எல்லாம் நான் இப்படி இருந்திருந்தா நல்லா இருந்திருக்குமேங்கற என் ஏக்கங்களே !சக்தியில் நானும் உண்டு..ஆனாவ், சக்தி நானல்ல !

ரொமான்ஸப் பொறுத்த வரைக்கும்.. சக்தி மனுவோட காதலையோ,சித்ர மாலோவோட வெளிப் படையான அழைப்பையோ அவன் மறுக்கும் போது எந்த எடத்துல அதக் கொண்டு வர முடியும் சொல்லுங்க?ஒரு சிலர் ரொமான்ஸ் இல்லேன்னு சொல்லியும் என்னால அதத் திணிக்க முடியல..கதைப் போக்கு என் கையை கட்டி விட்டது..

என் இரு அத்தியாயங்களுக்கு 'வயது வந்தோர்க்கு மட்டும்'முத்திரை குத்தப் பட்டது எனக்குச் சங்கடம் தான் ! அப்போதே வெளியேற நினைத்ததும் உண்டு.. விஜி மேடமும்,*** தங்கங்களும் இது வரை வாசித்தவர்களுக்காகவாவது அங்கு மேலும் அதைத் தொடர வேண்டும்னு சொன்னதால் கதை முழுமை பெற்றது..

அவங்க எனக்கு வெத்தலை,பாக்கு வச்சுக் கூப்பிடல.. நானா வந்தேன்..அப்ப அவங்க கண்டிசன்ஸ்க்கு ஒத்துக்கிட்டுத் தான் ஆகணும்..அந்த முத்திரைக்குப் பின்னாலயும் கதை தொடரப் பட்டது உங்களுக்காக !

காதலையும்,காமத்தையும் நேசிப்பவன்..கட்டுப் பாடுகள் அற்ற வாழ்வைக் கடந்தவன் தான் நான் ! ,ஆனால்,என் மனதில் காமம் வக்கிரமாக ஒரு நாளும் அனுமதித்தில்லை..மனசுல பட்டதத் துளியும் தயங்காம எழுதறவன் தான் நான் ! ஆனா, எழுத்தாளனுக்கு கண்ணுக்குத் தெரியாத லட்சமணன் எல்லைக் கோடு இருக்கறதா நம்பறவன் ! தவறுகளையே வாழ்வாகக் கொண்டவன் தான் நான் ! ஆனால்,என் எழுத்தால் ஒருவர் மனதில் தவறான எண்ணங்கள் ஏற்ப் பட்டது நிரூபணமானால் அதோடு எழுத்துக்கே தலை முழுகுவேன்..

என்னால நெருக்கடில எழுத முடியாது கவிம்மா.. அதனால தான் ஜனவரில வேட்டைக்காரன முடிச்சுட்டு பிப்ரவரி 14ல விழி ஈர்ப்பு விசைய வேற சைட்ல தொடங்கறேன்..

கடைசியா..

இந்த சில மாதங்கள் நான் எழுதல..என் பழைய நினைவுகளோடு,அண்ணந் தங்கையா,தோழமையுடன் உங்களோடு வாழ்ந்தேன் என்பதே மறுக்க முடியாத உண்மை என ஒப்புக் கொண்டு..

நகைச்சுவைங்கற பேர்ல உங்க யார் மனசையாவது கமெண்ட்ல புண் படுத்தியிருந்தா மனமார மன்னிப்பை வேண்டி அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்த்துடன்..

நன்றி...நன்றி..நன்றி !
 
Last edited:

kavitha28

மண்டலாதிபதி
Joined
Jan 24, 2018
Messages
415
Reaction score
683
Location
chennai

neenga yaar manadhaiyum pun paduthula......u were awesome thru out.....so , chilll bro.....
and manu----avala ,antha charactera miss seithenu thaan sonnen, because she is matured n lovely.....i know that she could not get a space in the 2nd part.....and romance is nice like a thendral ....and no part in the story get a space for ''randakka randakka''...and there is no need for it bro......the story is complete...it is superb.......
and vazhaku patri neenga sonna vilakkam yaavum naan feel seithathu thaan...athai sonnaal innum comment perusa pogumnu short panniten.....yes ,i felt a kalavaiyaaana styles in ur writing.....and loved it.....
i ll wait n read ur work,when u post it.....take rest n come back with a bang......
 
emily

மண்டலாதிபதி
Joined
Jul 3, 2018
Messages
255
Reaction score
594
Location
Walayar
February 14th new novel thodangu pothu yentha sitlanu yengla thedi pidithu thayavu seithu sollavum.nanga unga arumaiyana, pasthukkuriya padamalarkal allava ????????
 
நன்றி கவிம்மா..
 
நிச்சயமாங்க அக்கா..
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top