THIRUMANA MALARGAL THARUVAYA - 3

Manjula Saravanan

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
இனிய வணக்கம் தோழிகளே....:love::love::love:
போன அத்யாயத்துக்கு நீங்க குடுத்த பார்வைக்கும்....likes மற்றும் comments கும்....நன்றியோ நன்றி....ரத்தங்களே.....(y):love::giggle::giggle::giggle:
நம்ம மீனாட்சி-மாறானுக்கு நீங்க தரும் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றி....சகா's....:love::love:
இப்போ மூன்றாவது அத்யாயம் இங்க மலர்ந்திருக்கு.....இவங்கள படிச்சிட்டு உங்க கருத்துகளையும்....மறக்காம உங்க விமர்சனத்தையும்....பகிர்ந்துக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறான்.....:love::love::whistle:


அத்யாயம் - 3

அவிநாசி - கோவை நெடுஞ்சாலையில் சீறி பாய்ந்துக் கொண்டிருந்தது அந்த வெள்ளை நிற வெர்னா 1.6 VTVT.....
சாலையில் அதன் வேகத்தையும்....மற்ற வாகனங்களை அது கடந்து செல்லும் விதத்தையும் காட்சிப்படுத்துகையில் சற்று பயமாகத்தான் இருந்தது....

ஆனால் அந்த காரில் பயனப்பட்ட இலசுகளுக்கோ......இது எதைப் பற்றியும் கவலை இல்லை போலும்.....ஆனந்தக் கூச்சல்லோடு சென்றுக் கொண்டிருந்தனர்....

"யா...ஹூ..... பென்..டாஸ்..டிக்....மீனாட்சி.... இன்னும் வேகமா....போடி..." ஆம் அந்த காரை அத்துணை வேகமாகவும்...லாவகமாகவும் ஓட்டுவது சாட்ச்சாத் மீனாட்சியே தான்....
ட்ரைவர் சீட்றிக்கு பின் பக்கம் அமர்ந்திருந்த அபிராமிதான் இவ்வாறு கூறினால்....அவள் பக்கத்தில் மீனாட்சியின் நண்பிகள்... அஞ்சலி,பூர்ணிமா மற்றும் சுஜி....முன் சீட்டின் மறுபக்கத்தில் சுஜியின் தம்பி ரகு....

"காதுலயே கத்தாதே அபி....அப்ரோம் முன்னால போரவங்க நிலைமைக்கு நான் பொறுப்பில்ல.....பா... சொல்லிட்டேன்.."

"யே.... ஏண்டி ஆரவள்ளி சூரவள்ளி கணக்கா பேசுரே.....கொஞ்சம் எண்ஜாய் பன்ன விடு ....."

"சுஜிகா....நீங்க நடத்துங்க நடத்துங்க....நாங்க தான் மொட்ட பசங்க.....வெட்டியா கார் ஓட்டறோம்...உங்களுக்கு என்னப்பா....."
என்று ராகம் இழுத்தாள் மீனாட்சி....
"கண்ணு சந்தடி சாக்குல நீ என்ன... ஓட்டாத கண்ணு.....ரோட்ட பாத்து ஓட்டு..."

"அவ்ளோ தானே....இப்போ பாருங்க....."என்று கூறிவிட்டு தனக்கு முன்னாள் சென்ற வாகனங்களை எல்லாம்....வரிசையா தாண்டினால்.....மீனாட்சி...

காலையில் நடந்த அலப்பறைக்குப் பிறகு அனைவரும் பரபரப்பாக கோவை செல்ல ஆயுத்தமாயினர்...வடிவேலனின் தங்கை வசுந்தராவின்


வீடும் பின்புறமே அமைந்திருந்ததால் சுஜி,வசு,ரகு ஆகிய மூவரும் அங்கு வந்துவிட்டனர் ...சுஜியின் அப்பா பரமேஸ்வரன் இதர கல்யாண வேலைகளை கவனிக்க அங்கேயே தேங்கினார்....

"ஹலோ...யே... எலி...எங்க ஆன்ட்டிட குடு... உங்க ஆன்ட்டி பேசனுமாம்......"

"வணக்கங்க....நான் செண்பா பேசறேன்....இன்னைக்கு சுஜி கல்யாணத்துக்கு டிரஸ் எடுக்க போறோம்....நம்ம பூர்ணி, அஞ்சலியா அனுப்பிவச்சிங்கனா... புள்ளைங்க சேந்தே ஒரே மாதிரி எடுத்துப்பாங்க...."

"அதுக்குக்கென்ன தாராளமா அழைச்சிட்டு போங்க....ரெண்டையும் அங்க வர சொல்லட்டா??..."

"இல்லபா... போறவழில நாங்க கூப்டுக்குறோம்...."என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்தார்....

விரல் சப்பும் காலத்திலிருந்தே மீனாட்சியும் அவள் இரு நண்பிகளும் இணைப்பிரியா தோழிகள்....அஞ்சலியை விட பூரணி ஒன்றரறை வயது மூத்தவளாய் இருப்பினும் இருவரும் ஒன்றாகவே பள்ளியில் சேர்க்கப்பட்டனர்....

வேலனும்,பூர்ணியின் தந்தையும் ஒரே வரிசையில் நின்று தான் பிள்ளைகளுக்கு பள்ளியில் சீட்டு வாங்கினார்கள்....அன்றிலிருந்தே தொடங்கிய இவர்கள் பிணைப்பு....இன்று வேரூன்றி ஆலமரமாய் நிற்கின்றது.... நாட்கள் செல்ல செல்ல....மீனா இல்லாமல் மற்ற இருவர் வீட்டில் நிகழ்ச்சிகள் இல்லை அதே போல மீனா வீட்டில் இவர்கள் இல்லாமல் நிகழ்ச்சிகள் இல்லை என்ற நிலைக்கு மாறிப்போனது....

ஒரு முறை பார்த்தால் மறுமுறை பார்க்கத்துண்டும் விதமாக அன்று.....அழகான ஆகாயநீல நிற முழுக்கை அனார்கழி வகை சுடிதாரில்...பிஷ்டைலிட்ட அடர்ந்த கூந்தலை முன்னே விட்டிருந்தாள் மீனாட்சி....

சிறிது நேரத்தில் அங்கே தயராய் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அருகே அனைவரும் கூடினர்....
வேலன், செண்பா, வசுந்ரா மற்றும் இரண்டு உறவு கார பெண்கள் கொண்ட படை முன்னால் நின்றிருந்த போர்ட்(ford)டில் அமர அதை வேலன் இயக்கவேண்டும் என்றும்...மற்ற மூன்று கன்னிகளும் பின்னே நின்றிருந்த வெர்னாவில் ரகுவுடன் வரவேண்டும் என்று முடிவானது....

சகாக்கள் இருவரையும் அழைத்துச் சென்றமையால்... ரகுவின் கார் பின்தங்கி விட்டது....சாலையில் தந்தையின் வாகனம் முன்னே சென்றுவிட்டது என்பதை போனின் மூலம் உறுதி படுத்திக்கொண்டு....

"WALTER வண்டி தான் கரைய கடந்திடுச்சே..... இன்னும் என்ன நீயே ஓட்டிட்டு இருக்க....தாவுபா...தாவு.....நான் ஓட்டரேன்...இனி நீங்க வந்தா மட்டும் போதும்..."

இதை கேட்ட ரகு...பின்னிருந்த ஒரு ஜோடி கண்களின் மிரட்சியை பார்த்துவிட்டு...

"இன்னைக்கு வேண்டாம்....மீனாட்சி.... சொன்னாகேளு....இணைக்கு தான் நாங்கலாம் நல்ல சோறு சாப்ட்ருக்கோம்....நீ பண்ணிவைக்கும் வேலையால எங்க முதளுக்கே மோசம் வரவைக்காத...."


"தம்பி...தம்பி....இந்த வாழைப்பழம் யாருக்கிட்ட வழுக்கி வில பாக்குதுன்னு எனக்கு நல்லா தெரியும் தம்பி....நீ கம்முனு வந்தா விடுவேன்....இல்ல...இங்கேயே சொல்லிடுவேன்...பூர்ர்..."
அதற்குள்....அவள் வாயை பொத்தி...


"எம்மா....மங்கம்மா... உண்மையாலுமே முதளுக்கு மோசம் பனிடுவ போலயே...வா வந்துதொலை...."
என்று கூறிவிட்டு தன் இருப்பிடத்தை மாற்றி கொள்ள
'அது...'என்று கூறி....தானும் மாறினால்....

அவன் மட்டும் என்ன செய்வான்.....வேலன் மறுத்து விட்ட விசயத்தை மீனாட்சி மிகவும் ஆசைகொண்டால் என்பதற்காக அவன் தானே ரகசியமாய் கார் ஓட்ட கத்துக்கொண்டுதான்.....இன்று அது அவன் பூர்ணி மேல் கோண்ட தன அன்பிற்கே ஆப்பு வைக்கிறது. மீனாட்சியும் இதை கண்டுகொண்டுவிட்டால்...அன்றிலிருந்து அவனை பூரணியை வைத்து களாய்ப்பாள்.....

"மீனா....கவனமா... ஓட்டனும்...ரோட்டயே தெரிக்க விட்ற அளவுக்கு ஓட்டக்கூடாது....."

"கமான்....ரகுவரா...இப்போ போகும் அதே கோவைக்கு தான் நாங்க டெய்லி காலேஜ்க்கு போறோம்...இந்த ரோட்ட தான் நாலு வர்ஷமா யூஸ் போன்றோம்...இந்த மாதிரி ட்ரிப் எத்தன போயிருக்கோம்....தென் வாட்....."

இதோடு பேச்சுகள் முடிந்து அனைவரும் மீனாட்சியின் கார் பயணத்திரிக்குல் சிக்குண்டனர்....சிறுது நேரத்தில் ரகு உட்பட அங்கு எல்லோர்க்கும் மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது....பாவம் பூர்ணியை தவிர....
 

Manjula Saravanan

SM Exclusive
Author
SM Exclusive Author
#2
"SNM EXPORTERS" ...

தான் சரிபார்க்க வேண்டிய கோப்பை ஆராய்ந்து கொண்டிருந்தான் மாறன் அதில் ஏதோ விளக்கம் தேவைப்பட....தன் PA வை அழைத்தான்...

"Excuse me...பாஸ்..."

"Ya.. get in... ben"

Benjamin என்ற பெயர் தாங்கியை கொண்ட அந்த ஐரோபியன் உள்ளே நுழைந்தான்....

"காருண்யா கெமிக்கல்ஸ் இன்னும் நமக்கு ராமெட்டீரியல்ஸ் குடுத்ததுக்கான சூரிட்டிகோட் தரவில்லையே ben....என்ன ஆச்சு..."

"அவங்க இணைக்கு மெயில் பன்னிடுவாங்க பாஸ்...நான் நேத்தே நோட்டிபை பன்னிட்டேன்..."

"குட் ben..... இன்னைக்கு ஆப்டெர்நூன் செஷன் நீ பார்த்துக்கோ....எக்ஸ்ட்ராக்ட் எனக்கு மெயில் பன்னிடு....ஐ ஹாவ் எ பேம்மிலி மீட் டூடே..."

"சூர்...பாஸ்...நான் அப்படியே பன்னிட்ரேன்..."

"ஹ்ம்ம்...தென் பைன் யு கேன் மூவ் நவ்..."
என்ற மாறன் கையிலிருந்த கோப்பில் கவனம் செலுத்தினான்...

"பாஸ்...யூ லுக் எக்ஸ்ட்ரா வைபி... டுடே...."
ஒரே நொடி சொன்னவன் கண்களை சந்தித்துவிட்டு மீண்டும் தன் வேளையில் திரும்பிவிட்டான் மாறன்....இதற்கு மேல் எதிர்பார்க்க ben என்ன முட்டாளா....அதுவே பெரிது என கருதி அங்கிருந்து அகன்று விட்டான்....

தன் பொறுப்பை முடிப்பதற்கும் கயல் குறுந்தகவல் வருவதற்கும் சரியாக இருந்தது....

'RMKV - Brooke fields' அண்ணா be there by 11.30'

இதை பார்த்தற்கு அடையாளமாக ஒரு done emoji மட்டும் அனுப்பிவிட்டு புறப்பட்டான்....இங்கிருந்து அவன் செல்வதற்கு நேரம் சரியாக இருக்கும் என்ற கணிப்பில்...அதே நேரம் மீனாட்சி கோவையின் எல்லையில் புகுந்திருந்த வேலை....மேகம் மறைத்து மாறி பெய்யத் தொடங்கி விட்டது....
மீனாட்சிக்கு சொல்லவா வேண்டும்....double dammakka தான்....பறந்தாடும் மயிலின் மந்தகாசம் அவளை குடிக்கொண்டது.....என்றும் இல்லாதளவிற்கு மனதில் எல்லையில்லா மகிழ்ச்சி...

செண்பா இவர்களுக்கு போன் செய்யது வரசொன்ன இடமும் அதே ... 'RMKV -brooke fields'தான்என்பதால்....இப்பொழுது மீனாட்சியின் காரும் அங்கேயே பயன்பட்டது...

பொதுவாக அந்த மழையில் சாலை நெரிசலை கடந்து செல்வதற்குள் வெறுத்துவிடும்...ஆனால் கோவை மாநகரத்தின் மழை நெரிசல் அத்தகைய அவதியை ஏற்படுத்த வில்லை.....

இரு உள்ளங்களும்இடத்தை நெருங்க நெருங்க மழை வழுக்கத் தொடங்கியது.....

"அண்ணா ....எங்க வரிங்க...."

"பக்கம் வந்துட்டேன் கயல்....டிராபிக் ஒன்னும் பண்ண முடில மா...இப்போ கிளியர் ஆகிடுச்சு ....ஹார்ட்லி 10 மினிட்ஸ் அங்க இருப்பேன்..."

"கொஞ்சம் சீக்கிரம் அண்ணா....பட் சேப்பா வாங்க...."

"யா....கயல்...நான் பத்துக்கரேன்"
என்று கூறிவிட்டு ஓடிக்கொண்டே காரின் கதவு ஜன்னல் வழியா மலையின் வேகத்தை பார்த்து விட்டு...ரோட்டின் மீது கண்களை திருப்பிய...அந்த நொடி..

'க்கீ.... ரீ ரீ ச் ச் ச்.....'என்ற சத்தத்தோடு....பிரேக்கில் காலை வைத்திருந்தான்.....

அவன் முன்னாள் தட்டுத்தடுமாறிய படி...நீல நிற ஆடையில்தன் கரங்களால் இறுக்கமாக காதுகளை மூடி... கண்கள் மட்டும் தெரியும் விதமாக துப்பட்டாவை தலைக்கு சுற்றி....அந்த கார்விழியில் பயம் தெறிய நின்றிருந்தால் அந்த யுவதி.....

மால்லை நேருங்கிய நேரம் மீனாட்சிக்கு நனையவேண்டும் என்ற உந்துதல் மேலோங்க....சற்று தள்ளி காரை நிருத்திவிட்டு தான் நடந்து வருவதாக கூறினால்....

"விளையாட இது நேரம் இல்ல....மீனாட்சி....நீ எங்கன்னு கேட்டா நாங்க என்ன சொல்லுவோம்...."

"ரகு.... plz...plz.... என்னமோ எனக்கு நனைஞ்சே ஆகணும்னு தோணுது....நீங்க பார்க் பண்ணிட்டு வரத்துக்குள்ள நான் அங்க இருப்பேன்...."

"மழை வந்தா...எங்க பேச்ச கேக்கவாபோர....எதுக்கும் ஷால்ல முகத்தை முடிக்கோ....வழியில் அப்பா பார்த்துட போராரு....நேரா மால் பிரன்ட் கேட்கு வந்திடு...."

"ஆத்தி... பூர்ணி....நீதாண்டி என்....உற்ற நண்பி.....நம்பிடா...."

அவள் கூறியதை போல் போட்டுக்க கொண்டு மழையில் இறங்கி விட்டாள்....ஆனந்தமாய் இருந்தது அவளுக்கு...
அந்த வேலையில்.... அநிச்சயாய் Mr. Unknownனை நினையாமல் இருக்க முடியவில்லை....

'ஹே...யூ....எங்க இருக்கீங்க நீங்க...
நான் மனசுல நினைக்கிறது உங்களுக்கு கேட்குமா....
நான் உங்களை நினைக்கும் இந்த நேரம்...நீங்க என்னை பத்தி யோசிச்சாச்சும் பார்ப்பிகங்ளா....
என்னை நனைக்கும் மழை உங்களையும் நனைக்குதா....'

இப்படி நினைத்துக்கொண்ட பின் தானே தனது அசட்டுத்தனத்தை நினைத்து சிரித்துக்கொண்டே சாலையை கடக்க எண்ணி தாண்டுகையில்....

‘க்கீ.... ரீ ரீ ச் ச் ச்.....'என்ற பேரொலியோடு தனக்கு வெகு அருகாமையில்....அந்த கார் பிரேக் போட்டு நின்றிருந்தது....


மாறன்....ஸ்தம்பித்தது உண்மை தான்....ஆனால் விரைவிலேயே...சுயநினைவுக்கு வந்துவிட்டான்....அந்த நொடி படபடவென காரைவிட்டிரங்கி அவளை நோக்கி வந்தான்.....


இங்கே நம் விதி பயனோ....கை தட்டி சிரித்தான்.....
'மீனாட்சி....இதோ வந்து விட்டான்....
உன்னை நனைக்கும் மழை அவனையும் நனைக்கிறது....
உன்னை யோசித்துதான் அவனும் உன் அருகில் வருகிறான்....'

அருகே வந்த மாறன் முதலில் விசாரித்தது அவள் நலனை தான்....அப்பொழுது இருவறும் ஒருவரை ஒருவர் பார்க்கும் நிலையில் இல்லை...

"ஆர் யூ... ஓகே....அடி ஏதாச்சும் பற்றுச்சா....கேன் யூ ஹியர் மீ....மேம்..."
அவளிடத்தில் எந்த பதிலும் இல்லை....அவள் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீள வில்லை போலும்....

இவன் தொடர்ந்து 'மேம்.. மேம்...'
என்க அங்கு பதில் வந்தால் தானே...ஒரு வேலை காது கேட்காதோ...என்று எண்ணி...

காதுகளில் அவள் வைத்திருந்த கையை லேசாக தொட...அந்த நொடி தன்னுள் மின்சாரம் பாய்வதை அவளால் நன்கு உணர முடிந்தது....
சட்டென்று தன் விழிகளை நிமிர்ந்து அவனை பார்க்க அவனும் அவள் கண்களை தான் பார்த்தான்....

அந்த தேன் நிறம் ஓடிய கருவிழி என்ன செய்தி சொல்கிறது....அவன் அறியவில்லை....ஆனால்.... மாறனை பார்த்த மீனாட்சியால்....அவளை ஒரு நிலை படுத்த இயலவில்லை.... சுற்றம் மறந்த நிலையில் இருக்க முதலில் பேசியது மாறன் தான்....
அவள் தன்னை பார்த்தவுடன் கைகளை மீட்டுக்கொண்டவன்...

"இஸ் எவிரித்திங் பைன்... அண்ட் ஐயம் எக்ஸ்ட்ரீம்லி...சாரி....நான் கவனிக்காம வந்துட்டேன்..."

"மேம்..."

ஐயோ மீனாட்சி உனக்கு என்ன ஆச்சு....
வாய்குள்ள கம் உத்துன மாதிரி பேச வரமாட்டிங்குதே....முருக...இது என சோதனை....அதற்குள் அங்கு அனைவரும் கூடி விட...அவனோ...

"உங்க கூட யாராச்சும் வந்திர்காங்களா....அவங்கள கால் பண்ணி வர சொல்றிங்களா...."

இதை கேட்ட நொடி WALTER வேலனின் கனல் பறக்கும் முகம் கண் முன் தோன்ற.....இதுவரை இருந்த எல்லா உணர்வும் தெறித்து ஓடி விட்டது....உடனே வாயைதிறந்து...

"நோ..நோ...ஐயம்...பைன்...நான் பார்த்துக்கரேன்...."

இதை கேட்டவன் ஒரு முறை அவள் கண்களை ஆழமாக பார்த்துவிட்டு...பின்பு..

"ஹ்ம்ம்...ஓகே...ஐயம் சாரி அகைன்..."

"தட்ஸ் ஓகே...தப்பு என் பேர்லயும் இருக்கு....நானும் கார கவனிக்களை...."

இதற்கு மேல் அங்கு பேச ஏதும் இருக்கவில்லை மூன்று பெண்கள் அவளை ஆக்ரமித்து கொண்டு நலன் விசாரிக்க...இவளும்...அவர்களுக்கு பதில் அழித்துக் கொண்டிருந்தால்.... இருவரும் முழுமையாக நனைந்திருந்தனர்....
அவன் காரை நோக்கி விரைந்தான்....டேஷ் போர்டில் இருந்த போனில் கயல் அழைப்பதாக வர...வேகமாக உள்ளே அமர்ந்தவன்....

"ஓ காட்.....,"
"சொல்லு கயல்...."

"அண்ணா....எங்கணா இருக்கீங்க இன்னும் எவ்ளோ நேரம்..."

"பார்க்கிங் உள்ள வந்துட்டேன் கயல்....5 மோர் மினிட்ஸ்..."
என்று கூறி விட்டு....ஏற்கனவே தான் வந்திருந்த பார்க்கிங் சோனில் காரை நிறுத்தி விட்டு விடுவிடுவென உள்ளே புகுந்தான்....அவன் நினைவில் அந்த கண்கள் மட்டுமே தோன்றின....

இங்கு மீனாட்சியின் நிலையோ...அந்த நிலையிலும் தன்னுள் தோன்றிய அந்த மின்சாரம் ஏன்...என்ற கேள்வி...அந்த கூட்டத்தை விட்டு நகர்த்த போதும் இதே நினைவு தான்....கால்கள் தானாக மால்லை அடைந்தது....அங்கு...அவளை இன்னும் காணாது ஐவரும் தவித்துக் கொண்டிருந்தனர்.....
 
Last edited:

Sponsored

Latest Episodes

Advertisements

Top